“தாயகம்”, சந்தை வீதி, உடுப்பிட்டி என்ற இடத்தில் 1928.19.11 ஆம் நாள் பிறந்தவர். பண்ணிசை, சங்கீதம் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் ஆற்றலுடையவர். தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர் ஆய்வும், தமிழ் மொழியின் மாட்சியும் பரந்த பண்பாடும், பொது அறிவு ,விநாயகர் அகவல் தெளிவுரை ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். பண்ணிசையில் P.A.S. இராசசேகரன் ஓதுவார், திருமருகல் சோமசுந்தரம். சங்கீதத்துறையில் இசைமணி காய பாலச்சந்திரன், சங்கீத வித்துவான் ஊரிக்காடு எஸ். நடராஜா ஆகியோரிடம் பயின்றவர். சைவப் புலவர், பண்ணிசைமணி, கலைஞானகேசரி, கலாபூஷணம், ஞானபண்டித ஆய்வரசு போன்ற பட்டங்கள் இவருடைய கலைச் சேவைக்காகக் கிடைக்கப்பெற்ற கௌரவங்களாகும். 18.08.2007 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.