1941.06.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். திருமறைக் கலாமன்றத்தின் ஆரம்ப காலத்திலிருந்து இறக்கும் வரை அம்மன்றத்தின் அத்தனை செயற்பாடு களிலும் பங்கேற்ற கலைஞன். இசை நாடகம், கூத்து, நாடகம், விவரணத் திரைப்படம் எனப் பலவாறான கலைச் செயற்பாடுகளையுடைய இவருக்கு திருமறைக் கலாமன்றம் ‘கலைஞானபூசன்’ என்ற விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. 2008.02.17 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.