Wednesday, February 5

நடராச இராமலிங்க சுவாமி கோயில் – ஆவரங்கால்

0

ஆவரங்கால் வாழ் இராமநாத உடையார் என்பவரால் நடராசலிங்க சுவாமியினை காசியிலிருந்து கொண்டுவரப்பட்டு ஆலயம் அமைத்ததாகவும் ஆலயத்திற்கு பூஜை,அர்ச்சனை செய்வதற்காக காசி வாழ்குடிகளான கங்காபட்டர் அந்தணர்களும் அழைத்து வரப்பட்டு நித்திய நைமித்திய பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டதாகவும் வரலாற்றுப்பதிவுகள் கூறுகின்றன. யா { 5 ஆவது 82 என்ற பதிவிலக்கத்தினையுடைய இவ்வாலயமானது முழுமையாக புனருத்தாரணம் செய்யப்பட்டு புதுக்கோயிலாக 1982 ஆம் ஆண்டு முதலாவது மஹா கும்பாபிN~கம் நிறைவேறியது. 2003 ஆம் ஆண்டு இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஏழு வாசலுடைய இராஜகோபுரமாக மிளிர்ந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிவனுடைய மகோற்சவமானது ஆனி உத்தரமன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் பத்துத் தினங்களும் அம்மனது வாசல் திருவிழாவானது ஆடிப்பூரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் பத்துத் தினங்களும் நடைபெறுவது வழக்கம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!