சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் யாழ்ப்பாணத்தில் அமைத்து வழிபடப்பட்ட சிவாலயம் போர்த்துக்கீசரின் சைவாலய அழிப்பினால் இவ்வாலயத்தில் குருவாக இருந்தவர் சிவலிங்கப்பெருமானை தனது ஊரான மட்டுவிலிற்கு மாட்டுவண்டிலில் இழுத்து வந்து மட்டுவிலில் உள்ள சிவாலயம் ஒன்றின் திருமஞ்சனக் கிணற்றினுள் போட்டுவிட்டார்.பிற்காலத்தில் மட்டுவில் வன்னியசிங்க முதலியாருடைய கனவில் இறைவன் தோன்றி தன்னை பிரதிஸ்டை செய்யுமாறு பணித்ததற்கிணங்க முதலியாரால் அமைக்கப்பட்ட ஆலயமாக இவ்வாலயம் விளங்குகின்றது.