வைத்திய கலாநிதி சி.அ.இராசையா அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் என்னும் இடத்தில் இடத்தில் 1910-04-13ஆம் நாள் பிறந்தவர். இவர் 1948 – 1967 வரையான காலத்தில் யாழ்ப்பாணம் லங்கா ஆயள்வேதக் கல்லூரியின் அதிபராகவும், 1952-1967வரையான காலத்தில் இலங்கை சித்தாயுள்வேத வைத்திய சங்கத்தின் உப தலைவராகவும், 1965-1967வரையான காலத்தில் ஆயள்வேதக் கல்லூரி வைத்தியசாலை அங்கத்தவராகவும், 1965-1967வரையான காலத்தில் அரசினர் ஆயள்வேதக் கல்லூரியின் பரிசோதகராகவும், ‘வைத்தியன்’ சஞ்சிகை யின் ஆரம்பமுதலாவது பதிப்பாசிரியராகவும் பணியாற்றி சேவைகள் புரிந்த இவ்வைத்தியர்; 1967-04-01ஆம் நாளன்று இறைவனடி சேர்ந்தார்.

