சித்த வைத்திய கலாநிதி சு.அத்தனாசிரியார் அவர்கள் 1890-05-02ஆம் நாளன்று யாழ்ப்பாணம் சில்லாலை என்னும் இடத்தில் பிறந்தவர். சித்த வைத்திய கலாநிதிகளான அ.பாக்கியநாதர், அ.அல்போன்சிஸ் ஆகிய இருவரையும் தனது மாணவர்களாக இத்துறையில் உருவாக்கினார். அகில இலங்கை சித்தாயுள்வேத சங்த்தின் ஜீவிய கால அங்கத்தவராக தன்னை இணைத்து சித்த வைத்தியப்பணி செய்த இவ்வைத்தியர் 1968-02-29ஆம் நாளன்று இறைவனடி சேர்ந்தார்.

