பெரிய கந்தையா வைத்தியர் என பொது மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட இவ்வைத்தியர் யாழ்ப்பாணம் கந்தர்மடம் என்னும் இடத்தில் பிரபவ ஆண்டான 1896ஆம் ஆண்டு பிறந்தார். கஸ்தூரி வேலுப்பிள்ளை என்பவரிடம் வைத்தியத்தினைப் பயின்று அவரையே தனது குருவாக்கொண்டு வாழ்ந்தவர். தனது சிறந்த வைத்திய மாணவனாக பொ.செல்லையா என்பவரை உருவாக்கினார். சித்தாயுள் வேத வைத்தித்தில் அரும்பணியாற்றிய இவ்வைத்தியர் துன்மதி ஆண்டான 1920;ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

