பயற்றம் பணியாரம் என்பது பாசிப்பயறு, தேங்காய், வெல்லம் மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய யாழ்ப்பாண மக்களின் இனிப்புப் பலகாரம். இது பெரும்பாலும் தீபாவளி, பண்டிகைகள் மற்றும் விசேடங்களுக்கு தயார் செய்யப்படுகிறது. ஆரோக்கியமான, புரதச்சத்து நிறைந்த, எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் சுவையான சிற்றுண்டி இதுவாகும். திருமணம், பூப்புனித நீராட்டுச் சடங்கு, புதுமனைப்புகுவிழா போன்ற மங்கல வைபவங்களிலும்; இப்பலகாரத்தின் வகிபாகம் இன்றியமையாதது.


