Friday, July 3

சீனி அரியதரம்

0

சீனி அரியதரம் என்பது பச்சரிசி மா, சீனி, மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து தயாரிக்கப்படும் யாழ்ப்பாணத்தவரின்; பாரம்பரிய இனிப்பு வகைசார்ந்த பலகாரங்களுள் ஒன்றாகும். குறிப்பாக யாழ்ப்பாணத்து வாழ்வில் நடைபெறுகின்ற அத்தனை கொண்டாட்டங்களிலும் இப்பல காரம் முக்கிய இடத்தினை பெற்றுள்ளது. இது மொறுமொறுப்பான வெளிப்புறம் மற்றும் மென்மையான உட்புறத்தைக் கொண்ட, எண்ணெய்யில் சுடக்கூடிய ஒரு தட்டையான இனிப்பு பலகார மாகும். யாழ்ப்பாணத்துச் சைவமக்களது அனைத்து மங்கல காரியங் களிலும் அரிய தரம் எனப்படும் இப்பலகாரமானது மரபும் பாரம்பரியமும் கொண்டமைந் ததாகும். திருமணம், பூப்புனித நீராட்டுச் சடங்கு, புதுமனைப்புகுவிழா போன்ற மங்கல வைபவங்களிலும் அமங்கல வைபவங்களிலும் இப்பலகாரத்தின் வகிபாகம் இன்றியமையாதது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!