அறிமுகம்
இசைநாடகக் கலைஞர், நாடக செயற்பாட்டாளர், சாரணர் ஆணையாளர் உளவியலாளர், உதவிக்கல்விப்பணிப்பாளர், என பல்வேறு செயற்பாட்டு ஆளுமையுடைய சங்கரப்பிள்ளை கிருபானந் தன் அவர்கள் யாழ்ப்பாணமாவட்டத்தின் வளம் பொருந்தியதாகவும் இலக்கிய ரீதியில் தடம்பதித்ததுமாகிய மாவிட்டபுரம் சாய்யுடைப் பகுதியிலே 1966-01-24ஆம் திகிதி கந்தப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்களுக்கும் கந்தையா செல்லம்மா அவர்களது கனிஸ்ட (கடைசி) புதல்வனாக பிறந்தார். இவரது சகோதரர்கள் “சர்வஜீவதயாபரி, சிவானந்தராஜா, தயானந்தன்” என்பவர் விளங்குகின்றனர். பெற்றோர் இட்டபெயர் “கிருபானந்தன்” இருந்த போதிலும் கிருபா என்னும் அடையாளப்பெயர் அனைவர் மனங்களிலும் நிலைத்திருக்கும் ஒன்றாகும்.
கல்வியும் தொழிலும்
தனது ஆரம்பக் கல்வி முதற்கொண்டு க.பொ.த சாதாரண பரீட்சை வரை 1971 முதல் 1980 வரை கொல்லங்கலட்டி சைவ வித்தியாசாலை யில் பயின்றார். அதன் பின் தனது உயர்தரக் கல்வியினை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கற்றார். இக்கல்லூரியிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கத் தெரிவான இவர் சமூகவியல் பாடத்தில் சிறப்பு தேர்ச்சியில் கற்று முதல் வகுப்பில் (1st class) சிறப்புக்கலைமாணியாக வெளியேறினார். 1996 இலிருந்து 1999 ஜனவரி வரை மூன்று வருட காலமாக விரிவுரையாளராக பணியாற்றினார்.
1999.1.2 முதல் ஆசிரியர் நியமனத்தினைப்பெற்று நாடக ஆசிரியராக வும் அதே நேரம் உளவளத்துணையாளராகவும் பணியாற்றினார். 2001ஆம் ஆண்டுகளில் முழு நேர இணைப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார். இக்காலகட்டத்தில் அருணோதயாக் கல்லூரியின் மாணவர் களுக்கான வழிகாட்டலும் ஆலோசகருமாகத் திகழ்ந்தார். 2012களில் வடமாகாணக் கல்வி அமைச்சின்கீழ் உளவளத்துணையாளராகவும் வளவாளராகவும் பணியாற்றினார். 2014 களில் வழிகாமம் கல்வி வலியத்தின் “தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தராகப் பணி புரிந் தார். 2016.6.6லிருந்து இன்று வரை முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப் பாளராகவும், அழகியல் பாட உதவிக் கல்விப்பணிப்பாளராக 2018ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்டு சிறப்பான வழியில் கடமையாற்றி 2026-01-23ஆம் நாளன்று அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்;.
திருமண பந்தத்தில் இணைவு
அளவெட்டி செட்டிச்சோலையினைச் சேர்ந்த வைத்தியலிங்கம் தம்பதியரின்; கனிஷ்ட புத்திரி கமலராணி அவர்களை 1999.12.09 ஆம் நாளன்று கரம்பிடித்தார். இவரது மணவாட்டி மல்லாகம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியரும் சிரேஷ்ட உளவளத் துணையாளரும் பயிற்றுவிப்பாளரும் ஆவார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைச் செல்வங்கள். மூத்தவர் மகள் தசாங்கி.இரண்டாவது மகன் வினுஜன். பிள்ளைச் செல்வங்கள் கல்வியில் உயர்நிலையில் வாழ்கின்றனர்.
பயிற்சிகளில் கிருபா
நமசிவாய தேசிகரிடம் பண்ணிசை வகுப்பு பாடத்தினை இரண்டாம் மூன்றாம் வருடத்தில் கற்றமை. இதன்போது பாடலில் விருப்பம் ஏற்ப்பட்டமை ஆயினும் அன்றைய கால கட்டத்தில் சங்கீதம் படிப்பது என்பது பெண்கள் மாத்திரமே என்பதனால் தான் ஒரு ஆண் மகன் சங்கீதம் கற்க்கச் செல்லும் போது சகபாடிகளினால் நக்கலடிக்கப்பட்டு அவ் வகுப்பிற்கே வெட்கத்தினால் கற்க போகாமல் இருந்தார். இது தான் கிருபாவினது முதலாவது கலை ஈர்ப்பு. அதிலிருந்து எப்படியாவது நடிக்க வேண்டும் எனும் அவாவிற்குத் தள்ளப்பட்டதாகவும் கீரிமலை அறநெறிப் பாடசாலைப் போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டி யமை கலை வாழ்வின் உந்துதலாய் அமைந்தது. விழாக்கள், நிகழ்வுகளில் சிறியளவில் நாடகத்தில் ஈடுபடலானார். சாரணர் பயிற்சி, மாவை மத்திய சனசமூக நிலையத்தில் நாடகம் பழகிய அனுபவம். வ.வயிரவப்பிள்ளை இலக்கிய நாடக வல்லவர் கற்பித வாத நடிப்பில் பயிற்ச்சி பெற்றமை. சோலைக்குயில் அவைக்காற்றுக் கழகத்துடன் இணைந்து சமூக நாடகத்திற்கான பயிற்சி பெற்றமை யும் வடஇலங்கை சங்கீத சபை பரீட்சைக்கு ஆயத்தம் செய்தமையும்; கலாவித்தகர் பட்டம் பெறுவதற்கு இக்கழகத்தினது நாடகப் பயிற்ச்சிப் பட்டறை பெரிதும் உதவியது.
பல்கலைக்கழக காலத்தில் பேராசிரியர். இ.பாலசுந்தரம் அவர்களது நாட்டார் வழக்காற்றியல் கழகத்தில் இணைந்து சத்தியவான் சாவித்திரியில் முதலாவது பாத்திரமாக ஜமகிங்கிதராக நடித்தார். குழந்தை சண்முகலிங்கம், சிதம்பரநாதன், ரதிதரன்; ஆகியோர் களுடைய நாடகப் பயிற்சி பட்டறையில் நாடகம் பயின்றமை மற்றும் ரதிதரன், ஜெயரஞ்சினி அவர்களுடைய பரீட்சை நாடகங்களில் நடித்த பயிற்சியும் உண்டு.
பல்கலைக்கழக கலைவாரத்தில் நடித்த அனுபவங்களோடு, விரிவுரை யாளராகிய காலத்தில் 1997இல்; கலாநிதி க. ரதிதரன் எழுதிய “கானலிலே ஒரு கப்படா காண்டம்.” நாடகத்தை பல்கலைக்கழக ஊழியர் தினத்தன்று நெறியாள்கை செய்து அரங்கேற்றினார்.
லண்டன் யுனிவர்சிட்டி பேராசிரியர் தொம்சன் அவர்களது பிரயோக அரங்கப் பயிற்சிகள்; பத்து நாள்கள்;; பங்கு பற்றியமை.
தொழில்சார் பயிற்சி
உளவளத் துணையாளருக்கான பயிற்சி பெற்றமை சாந்திகம் 1993 தொடக்கம் 1994 வரை
2007 – 2009களில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இந்தியாவில் உளவளத்துணை உயர் பயிற்சி மற்றும் மது போதைக்கான சிகிச்சை முறைக்கான பயிற்சியை பெற்றமை
1997 சிறுவர் பாதுகாப்பு நிதியத்தினால் பயிற்சி பெற்றமை
2001-2006 சிறுவர் உரிமைகள் விழிப்புணர்வு செயற்பாட்டு வளவாள ராக மாவட்ட சிறுவர் கண்காணிப்பக் குழு உறுப்பினராகவும் தெரிவாகிப் பயிற்சி பெற்றார்.
2001 தொடக்கம் 2006 சாந்திக நிலையம் யாழ் பல்கலைக்கழக புறநிலை படிப்புகள் அலகு புவுணு ஜெர்மன் தொழில்நுட்ப கூட்டுத்தாபனம் முதன்மை உளவளத்துணைப் பயிற்றுவிப்பாளராகத் தொழிற்;பட்டமை.
2003 – 2005 ஏஐஏழு பாதிக்கப்பட்டவர்களின் குரல் குழுவினர் உடைய “சம்பவ விவரிப்பு சிகிச்சை முறை” (மானவழுவிற்க்கான சிகிச்சை களில் ஒன்று) பயிற்சியினூடாக சம்பவ விபரிப்பு சிகிச்சையாளராகப் பணியாற்றியமை.
2003ஆம் ஆண்டு நட்புதவியாளருக்கான பயிற்சியில் வளவாளர் வடகிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு. சுனாமி தாக்காத்தை எதிர் கொள்ளல் அதிலிருந்து விடுவித்தல் பணிகளில் பணியாற்றியமை
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் டென்மார்க் செஞ்சிலுவைச் சங்கம் இரண்டு இணைப்புடனும் பணியாற்றியமை. கைநூல்கள்.
சின்னச் சின்ன பிள்ளைகள் கைநூல் தயாரிப்பாளர் வளவாளராகப் பணியாற்றியமை. நட்புதவியாளர் கைநூல், சிறுவர் உளநலம் கைநூல் வளவாளர்,
வாழ்வு மலர ஈ.எஸ்.ரி பிரதம ஆசிரியர்,
உள்ளக்கமலம் – ஆசிரியர் வளவாளர்,
சுனாமியில் சிந்திய சித்திரங்கள் – ஆசிரியர் வளவாளர்;,
தேசிய சமூக அபிவிருத்தி நிறவனம் என்.ஐ.எச்.டி
2012 உளவளத்துணை டிப்ளமோ பயிற்சி பெற்றமை.
முன் பள்ளி ஆசிரியருக்கான கைநூலாகிய விளையாடுவோம் கற்போம் கைநூல் எழுத்தாளரும் வளவாளரும்
பெற்றோருக்கான வழிகாட்டல்கள் கைநூல் – எழுத்தாளரும் வளவாளரும்.
கொரோனா விழிப்பணர்வு கைநூல் – எழுத்தாளரும் வளவாளருமாவார்.
கிருபானந்தனும் நாடகமும்
மாவை தச்சன்காடு ஞான பைரவர் கோயில் அதற்கான களத்தினை அமைத்துக் கொடுத்தது. தரம் ஆறு படித்துக்கொண்டிருந்த காலத்தில்; வி.வி. வைரமுத்து அவர்கள் ஹார்மோனியம் வாசிக்க வில்லுப் பாட்டிசைத்து முதல் கலைப்பயணம் ஆரம்பமாகியது. வில்லுப்பாட்டு மேதை வடிவேல் ஐயா அவர்களது காரிலே மடியிலிருந்து கிளானை வைரவர் கோயிலுக்குச் செல்லும் பாதை காடடிய போது தந்தையார் கூறிய வார்த்தை “நீ ஒரு கலைஞனின் மடியில் இருந்து வந்திருக்கி றாய் எனவே நிச்சயம் கலைஞனாவாய்” எனும் வார்த்தைத் தூண்டுதல்கள் மற்றும் வி.வி. வைரமுத்துவின் இசை நாடகங்களை பார்த்து மனதில் பதிய வைத்துக் கொண்டமை இவருக்கு நாடகத்தில் மிகுந்த ஆர்வம் ஏற்படுவதற்குக் காரணமாயிற்று.
நடிகராக
முதலாவதாக அகமம் புறமும் என்ற நாடகத்தின் அடித்தளம் அதன் பின் பாடசாலையில் இலக்கிய நாடகம் தரம் ஐந்து படிக்கும் போது நடித்தமை. “பாசத்தின் பரிசு” அதிலே விஸ்வநாதனுக்கு நடித்தமை. சக்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில் ஜமனாக வந்தமை (இது வசனம் நாடகமாகும்.) கோவலன் கண்ணகி வில்லுப்பாட்டு, தேசிய இளைஞர் சேவை மன்றம் மேம்பாட்டு போட்டியிலே மார்த்தாண்டியர் நாடகம் கவிதை நாடகம் பாடசாலை யூனியன் கல்லூரி மாணவர் மன்றத்தினால் உயர்தரம் கல்வி கற்கும் போது நகைச்சுவை நாடகம் நடித்தமை.
சோலைக்குயில் அவைக்களத்தில்
குருவி கூவ மறந்ததோ
மலையும் மடப்பனையும்
ஆசிரியர் தினத்திற்கான நாடகம்
சோ பத்மநாதனின் கவிதை நாடக ஆற்றுகை
கண்களை புணர்வு பெண்கள் விடுதலை தொடர்பான விழிப்புணர்வு நாடகங்கள்
அண்மை காலம் கொரோனா விழிப்புணர்வு சார்ந்த நாடகம் கல்வியின் முழக்கம்
பல்கலைக்கழகம் நாட்டார் வழக்கியற் கழகத்தின் ஊடான கலைப்பயணம்
சத்தியவான் சாவித்திரி கிங்கிதர், தூய்மைச்சேனன், சுமாலி, யமன் எனும் பாத்திரங்களை ஏற்று நடித்தமை.
காத்தவராயன் கூத்து – குடிமக்கள், நாரதர், சிவன், வைசுரராசன், வேடன், கழுவேறி பாத்திரங்களை ஏற்று நடித்தமை
அரிச்சந்திர மயான காண்டம் – அயலாத்துப்பிள்ளைகள், சத்தியகீர்த்தி
2001 ஆளுநர் விருதிற்க்கான போட்டி – வடக்கு மாகாணம்; இரண்டாம் இடம்
கோவலன் கண்ணகியில் – பாண்டிய மன்னனின் பாத்திரத்தை ஏற்று நடித்தமை
ஞானசௌங்கரி நாடகத்திலே – தர்மராக நடித்தமை (ஞானசுந்தரியின் தந்தை)
வள்ளி திருமணம் – நம்பிராசன், வேடன் போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடத்மை
பல்கலைக்கழக சிறப்புகலைமாணவர்களுக்கான பரீட்சை நாடகங்;களில் நடித்தமை
கலாநிதி க. ரதிதரன் அவர்களது நெறியாள்கையில் நடித்த நாடகங்கள்.
உடைந்த வட்டங்கள்
அந்த வழி
ஆத்மாவின் முனகல்
மலநீக்கம்
சங்கிலியன்
ஜெயரஞ்சனி அவர்களது நெறியாள்கையில் நடித்த நாடகங்கள்.
மூளாத்தீ
சமூகவியல் சமூக நாடகம்
வேள்வித்தீ நாடகத் தயாரிப்பில் குழந்தை சண்முகலிங்கம் அவர்களது நாடக எழுத்துருவிற்கான தகவலகளைச்; சேகரித்துக் கொடுத்தமை.
நீ செய்த நாடகமே – தகவல்களைத் திரட்டுவதில் உதவியாளராகச் செயல்பட்டமை.
வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையினால் உத்தியோதர்களைக் கொண்டு போதைக்குரிய விழிப்புணர்வு நாடகங்கள் செய்தமை.
சுகவாழ்வு நிலையத்தின் ஊடாக உளவளத்துணை ஆற்றுப்படுத்தல் நாடகங்களை நடத்தியமை.
பெண்விடுதலை தொடர்பான நாடகம் நிலவு நாடகத்தில் நடித்தமை.
1997களில் நாடகம்
உடுவில் மகளிர் கல்லூரி
உடுவில் மகளிர் கல்லூரியிலே சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் (அதிபரின் ஊடாக) பிள்ளைகளுக்கான அரங்க முறைகளின் ஊடாக உள ஆற்றுப்படுத்தலில் சிறுவர் நாடகத்தை அரங்கேற்றியமை. அதிலே உம்மாண்டி விளையாட்டு நாடகமானது புதிய வடிவிலே காணப்பட்ட சிறுவர் நாடகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
சாகுந்தலை இலக்கிய நாடக நெறியாள்கை வடக்கு மாகாணம் முதலாம் இடம் தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்ல நாட்டுச் சூழல் வாய்ப்பளிக்காத காரணத்தினால் கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது.
வர்த்தக நாடகப் போட்டிக்கான நெறியாள்கை பணம் வீக்கம் நாடகத்திளை நெறியாள்கை செய்து கோட்டம், வலையம் என்பதில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டமை.
பிள்ளைகளுக்கு இசை நாடகமான சத்தியவான் சாவித்திரி நாடகத்தினை நெறியாள்கை செய்து அரங்கேற்றியமை. மேலும் ஆங்கில நாடகத்தினை நெறியாள்கை செய்து அரங்கேற்றியமை..
1999காலப்பகுதி களில் நாடகம்
அருணோதயா கல்லூரியில் நாடகங்கள்
பாடசாலை மாணவர்களை கொண்டு சிறுவர் நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.
சுதந்திர கானகம்
உம்மாண்டி விளையாட்டு
என்னோடு விளையாட வர வேண்டாம்.
இயற்க்கையைப் பேணுவோம்.
இசை நாடகம், காத்தவராயன் (சிந்து நடைக்கூத்து) மூன்று வருடம் தொடர்ச்சியாக பெற்ற மாகாணமட்டத்தில் முதலாம் இடத்தினைத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொண்டது.
வர்த்தக போட்டி, ஆங்கிலப் போட்டிகளில் நாடகங்களை முறையாக நெறியாள்கை செய்து அரங்கேற்றியமை.
காவடி – பாரம்பரிய மேம்பாட்டு கழகப் போட்டியில் முதலாம் இடம் பெற்றது. இதில் புல்லாங்குழல் கலைஞர் கிருபானந்தன் அவர்களாளேயே வாசிக்கப்பட்டது.
வில்லிசை, ஆசிரியர்களுடன் இணைந்து பாடிய பாடல்கள், என்பனவும் கலைகளுக்குள் அடங்கும்.
பாடசாலை மாணவர்களை வட இலங்கை சங்கீத சபை நாடகம் அரங்கில் பரீட்சைக்காக தயார்படுத்தியமை.
அழகொல்லைப் பிள்ளையார், கிரிமலைச்சிவன்கோவில், பன்னாகம், தொல்பரம் சிவபூமி முதியோர் இல்லம், என்பவற்றிலே ஒவ்வொரு ஆடி அமாவாசை தினத்தன்றும் மாணவர்களுடைய நாடகம் சிவன் கோவிலிலும் ஆடி அமாவாசைக்கும் சிவராத்திரிக்கு முன்தினமும் இன்று வரை மேடையேற்றப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழகம் ரூபவாகினிகூட்டுத்தாபனம் இணைத்து; 2012ஆம் ஆண்டு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை நடத்தியமை.
தெல்லிப்பளை தமிழ்ச்சங்கம்
தெல்லிப்பளை தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர் நாடகத் துறைக்கான தலைவருமாகிய இவர் இதனூடே இணைந்து பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். அந்தவகையில்,
பத்த நந்தனார்
வள்ளி திருமணம்
சத்தியவான் சாவித்திரி
புதிதாக ஆற்றுகை செய்யப்பட்டு மாருதப்புரவீக வல்லியினுடைய கதையினை வாழ்வு பெற்று வல்லி என்பதாக எழுதி சிந்து நடைக்கூத்து வடிவமாக மேடையேற்றினார்.; இக் கூத்திலே சோழன் என்கின்ற பாத்திரத்தினை ஏற்று நடித்தார்.
அரிச்சந்திர மாயன காண்டம் கொழும்புத்தமிழ் சங்கத்தில் (கொழும்பில்) மேடையேற்றம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தெல்லிபளை முத்தமிழ்க்கலை மன்றம்.
இதன் இயக்குனராக இருந்து
வில்லிசை தீர்க்க சுமங்கலி
வாழ்வு பெற்ற வல்லி
சத்தியவான் மேன்மை
மாவட்டம் திருத்தல வரலாறு என்பவற்றை வில்லப்பாட்டாக அரங்கேற்றியமை. மற்றும் நாடகமாக
அரிச்சந்திர மயான காண்டம்
சத்தியவான் சாவித்திரி
வள்ளி திருமணம் என்பவற்றை அரங்கில் ஏற்றியமை.
கிரிமலை சிவன் கோவில், சிவபூமி முதியோர் இல்லம், மாவிட்டபுரம், ஞானவைரவர், ஏ.ரி.எம் நல்லூர், கண்டனன் சீதையில் இராவணன் மிக நீண்ட கால நாடகமாக இது இருந்தமை ஒரு வருடம் ஒத்திகை பார்ப்புடன் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதிலே இராவணன் எனும் பாத்திரத்தினை ஏற்று நடித்திருந்தார்.
நாடக ஆசிரியர் அவர்களால் “அரிச்சந்திரன் மயான காண்டம், வள்ளி திருமணம், காத்தலராயன் கூத்த என்பன கிட்டத்தட்ட 200 தடவைகளுக்கு மேல் மேடை ஏற்பட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
உள ஆற்றுகை சார் நாடகங்கள்.
உம்மாண்டி விளையாட்டு – பயத்தினைப் போக்குவதற்க்கான அரங்கு
உள சிகிச்சை அரங்கு – சைவச் சிறுவர் இல்லத்தில் தனிநபர் உள சிகிச்சை அரங்கு வைத்தியரின் ஆலோசனை வழிகாட்டலுடன் இடம் பெற்றமை. இதில் உள நலப் பிறள்வள்ள பிள்ளைகளைக் கையாளுகின்ற தன்மையம் இடம் பெற்றது.
அரங்க விளையாட்டினூடாக சிகிச்சை – நடத்தை மாற்ற சிகிச்சை சைவச் சிறுவர் இல்லம
பெற்ற விருதுகள்
கலாவித்தகர் பட்டம்
வடஇலங்கை சங்கீத சபை ஆசிரியர் தரமான ஆறாம் தரப் பரீட்சை சித்தியடைந்ததன் பின்னர் வழங்கப்படும் பட்டமாகும்.
நடிகருக்கான விசேட யூரி விருது
இவ் விருது கொழும்பு கலாசார அமைச்சினால் 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கலைமாமணி
இவ் விருதானது யாழ்ப்பாணம் சர்வோதய மண்டபத்தில் தமிழ் நாட்டின் அதியுயர் விருதான இது இந்தியாவின் முன்னாள் முதலமைச்சர் M.G..இராமச்சந்திரன் அவர்களது பிறந்த தினத்தினை யொட்டி கொடுக்கப்படும் விருதாகும். இது இந்தியத் துணைத்தூது வரான நட்ராஜன் அவர்களால் 2016களில் கிடைக்கப்பெற்றது.
கலைச்சுடர்
தெல்லிப்பளைப் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படுகின்ற கலைஞர்களுக்கான இவ் விருதினை 2019இல் பெற்றுக் கொண்டார்.
யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக் கலைக்கூடத்தின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வருகின்ற இக்கலைஞர் காங்கேசன்துறை மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் மாவட்ட ஆணையாளராகவும் பணியாற்றி வரும் இவலருடைய பணிகள் மேலும் மேலும் சிறப்படைந்து கலைவழி சமூகமாற்றத்தினை ஏற்படுத்தும் உன்னத கலைஞனாக வாழ் வாழ்த்துகின்றோம்.
நன்றி.
திருமதி சுரேஸ் செல்வதியம்மா அவர்களின் ஆய்வு முயற்சியால் உருசவாக்கப்பட்ட ஆய்வேட்டுத் தொகுப்பினை அடிப்படையாகக் கொண்டு இப்பதிவு உருவாக்கப்பட்டது. திருமதி சுரேஸ் செல்வதி அம்மா அவர்களுடைய முயற்சியினை பாராட்டுவதுடன் இத்தொகுப் பினை நிறைவேற்றுவதற்கு மனமுவந்து தனது ஆய்வேட்டினை வழங்கிமைக்கும் யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடத் தின் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.






































































