Wednesday, July 30

திருநாவுக்கரசு, கந்தையா – புங்குடுதீவு, குறிகட்டுவான் சமூகசேவை.

0

அறிமுகம்
புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனாக 1939-03-01ஆம் நாள் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை தனது ஊரிலேயே ஆரம்பித்தார். இவர் தனது சிறிய தந்தையான சார்ஜன் அம்பலவாணருடன் வளர்ந்து வந்தமையால் அவர் வேலை செய்த இடங்களெல்லாம் சென்று கல்வி கற்றுப் பலமொழி ஆற்றலைப் பெற்றார். இவர் வாழ்ந்த காலமானது எழுச்சிக் காலமாக இருந்தமையால் தமிழரசுக் கட்சியின் இளைஞர் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினராகி கிராமத்து இளம் சிறார்களை நல்வழிப்படுத்தினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970களில் சர்வோதய சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட திருநா அவர்கள் அதன் தலைவர் ஆரியரத்னாவின் துணையுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நெறிப்படுத்தினார். வட இலங்கை சர்வோதய அமைப்பை 1972ஆம் ஆண்டு புங்குடுதீவில் நிறுவி சமூகத்தொண்டுகள், இலக்கியத்தொண்டுகள், ஆன்மிகத் தொண்டுகள் எனப் பல வழிகளிலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூல மந்திரத்தின் வழி நின்று சமூக சேவையினை எப்படி செய்யவேண்டும் என்பதனை பலருக்கும் புரிய வைத்து சேவையின் உச்சம் தொட்டவர்;. தீவகத்தின் பிதாமகர் எனக் குறிப்பிடும் அளவிற்கு தீவக மக்களது இதயத்தினை வென்றவர். வெறும் சொல்லால் அல்லாது செயலால் மக்களது துயரங்களை தீர்ப்பதற்கு தன்னை மெழுகாய் உருக்கி முன்னின்றுழைத்தவர். இத்தகையோரது வாழ்க்கை வரலாற்றினை ஏனையோரும் கற்றறிந்து கொள்வதால் தாமும் தம்மை நல்வழியில் செல்லவதற்கான பாதையினை வகுத்துக்கொள்ளமுடியும்.
நம்மிடையே செயல்வீரர்களாக பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களது செயலும் பணியும் தமிழ் மண்ணை என்றும் எப்போதும் வாழ வைத்துக்கொண்டிருக்கும். இத்தகையோரை முன்னுகுதாரணமாகக் கொண்டு எம் இளையோர் தமது வாழ்க்கைப் பயணத்தினை முன்னிறுத்த வேண்டும். இவை எமக்கான கற்றறிந்த பாடங்களாகும்.
சமூகத்தொண்டனாய் திருநா அவர்கள்
‘செய் அல்லது செத்தமடி’ என்ற பதத்தினை எம்முன் வைத்து இத்தேசத்தின் மிகச் சிறந்த தொண்டர்களை உருவாக்கியவர். அவர் உருவாக்கிய சேவைக்கும் தொண்டுக்கும் பல்துறை களிலிமுள்ள சேவை நலன்களிலும் அவர் தொண்டர்கள் வடமாநிலம் முதல் வெளிநாடு வரை ஓர் நீண்ட பட்டியலை உருவாக்கியுள்ளது. இருப்பினும் சர்வோதயப் பணிக;டாக நெடுந்தீவு தொடக்கம் மன்னார் வரையுள்ள சுமார் 23 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள ஆயிரக் கணக்கான கிராமங்களை சுயநிர்ணய சேவையில் வழிகாட்டி வளர்த்துள்ளார். 1987ஆம் ஆண்டிலிருந்து சேமிப்புத்திட்ட ரீதியாக ஒவ்வொரு மனிதனும் தான் தனது என்ற மரபுமுறை வாழ்க்கை அமைய ஊக்குவித்தவர். குடும்பம் என்ற சிறுவட்டத்தில் இருந்தவர் களையெல்லாம் கூட்டு வாழ்க்கை வாழப் பயிற்சி அளித்து உள்ளவன் இல்லாதவன் என்ற வர்க்க பேதங்களையும், சடங்குகள் கிரியை முறைகளையும் கிராம மக்களின் பண்பாட்டினடியாக கட்டியெழுப்பப்பாடுபட்டவர். ஆரசியல் பொருளா தார நெருக்கடிகளிலும் இயற்கை அனர்த்தங்களின்போதும் மக்களின் சீர்குலைந்த வாழ்வை தெய்வ நம்பிக்கையுடனும் தற்துணிவுடனம் இன்முக்துடன் நின்று பொதுநல அமைப்புக;டாக மக்கள் குறை தீர்ப்பதில் தோளோடு தோள் நின்று பணியாற்றினார்.
மாதாந்தம் கிராம மாநாடுகளை நடத்தி மக்களின் குறைகளையும் தேவைகளை யும் அறிந்து திட்டங்களை வகுத்து சொல்லைச் செயலாக்கிச் செயலைச் சொல்லுபவர். பொதுவாக எங்கு நல்லது இருக்கின்றதோ அங்கு நற்பணி செய்வார். இந்தியாவிலுள்ள பலதிறமை வாய்ந்த அமைப்புகள், நிறுவனங்கள் என்பவற்றின் பயிற்சிகள் மூலம் எமக்கு அறிமுகப்படுத்தியும் பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பியும் அறிவுத்தேடல்கள் மூலம் எம்மையும் மண்ணையும் வளப்படுத்தியவர்.
மேலும் கிராமக் கழகங்கள், சிரமதானசேனை, தமிழ்ச்சங்கம், குடும்பக்கழகம் போன்ற அமைப்புகளை ஒவ்வொரு கிராம மக்கிளிடையேயும் உருவாக்கி அவற்றி னூடாக குறித்த பிரதேசங்களிலோ அல்லது கிராமங்களிலோ நடைமுறைப் படுத் தும் வகையில் 1992ஆம் ஆண்டை திட்ட ஆண்டாகப் பிரகடனப்படுத்தி உறுதியான அமைப்புகள் பலவற்றினை உருவாக்கினார். கிராம விழாக்கள் மூலம் மனிதநேய அற ஒழுக்கச் சிந்தனைகளை வளர்க்கவும் இன்றைய சமூகத்தை நல்நெறிவழிச் செல்லவும் தூண்டுதலாக அமைந்தவர். குறிப்பாக ஒளவையார் அருளிச்செய்த நீதிநூற் பாடல்களையும், வள்ளுவரின் திருக்குறள் போன்ற அற நூல்களையும் மாணவ சமூகத்திற்கு மனனப் போட்டிகளுக்கூடாக உணரச் செய்தவர்.
பிடியரிசிப் பிரார்த்தனை செய்து அறங்கள் பெருகவும் தர்மம் பூக்கவும் வளம் பெருகவும் வழிகாட்டியதோடு ஆலயங்களில் அன்னதான நிகழ்வுகளையும் கோமாதா பூசைகளும் சிறப்பாக நடைபெறுவதற்கு காலாய் அமைந்தவர். 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவக இடப்பெயர்வு பாரியளவு சரிவினை ஏற்படுத்தியது
யுhத்திரைகளையும் நற்சிந்தனை முற்றோதல் நிகழ்வுகளையும் வருடந்தோறும் நடத்தி வந்ததுடன் பக்தர்கள் பணியாக நல்லூர் கந்தன் வழிபாட்டாளர் நலன்சேவைப் பந்தல், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பொங்கல் பிரசாதப் பந்தல் சேவை, மாதந்தோறும் மறவன்புலவு செல்வ முத்துமாரி அம்மன் கோமாத பூசை, சாவகச்சேரி வாரிவளவு ஈஸ்வரர் ஆலய சிரமதானம், கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகைக்குளம் அம்மன் கங்கைப் பொங்கல் என்பவற்றினை இடப்பெயர்வு காலத்திலும் கைவிடாது நடத்தியவர். 1995 யாழ்ப்பாண இடப்பெயர்வும், 1996 தென்மராட்சி இடப்பெயர்வும் சேவைக்குத் தடைகளாக அமைந்த போதிலும் தளராது அவற்றை பகெ;கல்லாக்கி 1997ஆம் ஆண்டு மீண்டும் புதிய வடிவத்தில் பணிசெய்யத் தொடங்கினார். 1998ஆம் ஆண்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் கைகொடுக்கும் பொறுப்பை ஏற்று சைக்கிள் கடன் திட்டம், நகைத்திட்டம், சிறுவர் சேமிப்புச் சேவைத்திட்டம், சாதாரண சேமிப்புத் திட்டம், பசுவிற்குத் தீனி வழங்கும் திட்டம், புனரமைப்பு புனர்நிர்மாணத்திட்டம் என எண்ணிலடங்காத பணிகளையும் திட்டங்களையும் இரவுபகலாக சிந்தித்து உருவாக்கி வெற்றி கண்ட மாமேதை.
திருநாவின் திட்டப் பணிகள்
எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி மக்களுக்கான பணிகளை முடுக்கி விட்டவர். தீவகம் மற்றும் யாழ்ப்பணத்திலும் இடம்பெயர்ந்த வேளைகளிலும் தன் பணியை செவ்வனே நிறைவேற்றியவர். பின்வரும் திட்டங்களின் செயற்படுத்துகை திருநா அவர்களின் மக்கள் பணியினை போற்றும். கிராம மட்டத்திலிருந்து உலகை நோக்கியெழும் இலக்குகளை நிர்மாணப் பயிற்சிகள் மூலம் முன்னெடுத்து மனிதகுல மேம்பாட்டிற்கு தன்னை அர்ப்பணித்தவர்.
திருநாவின் பயிற்சித் தளங்கள்
1- ஆதாரக் கல்வியும் பண்பாட்டுப் பழக்கங்களும்.
2- சுகாதாரப் பயிற்சியும் இயற்கையின் உறவும்.
3- ஆதார உணவுகளும் சமையல் பாகங்களும்.
4- உடையும் உடலாரோக்கியமம் சுவாத்தியமும்.
5- குடிசை விசவசாயமும் வான்யிர் வளர்ப்பும்.
6- விலங்கு வேளாண்மையும் உயிர்களுடன் உறவும்.
7- மழைநீர் சேமிப்பும் குடிநீர்ப் பாதுகாப்பும்.
8- குpராமியக் கலைகளும் பாமரர் இசையும்.
9- நூதன சாலையும் தொல்பொருள் சேமிப்பும்.
10- நூலகங்கள் சேவையும் நூல்கள் பாதுகாப்பும்.
11- வானொலி, செய்மதி, தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு, விஞ்ஞானம்.
12- சேமிப்பு, காப்புறுதி, ஓய்வூதியம், வங்கி நலன் சேவைகள்.
13- கடல்வளம், கடலாதிக்கம், கடற’;கரை காத்தல், கடலோடல்.
14- கிராம வீதிகள், நெடுஞ்சாலைகள்-பாதைகள், ஒழுங்கைகள் பாதுகாத்தல்.
15- சிரமதானம், பூமிதாதனம், புத்திதானம், சம்பத்தானம், ஜீவதானம்,
16- ஜீவோதயம், குடும்போதயம், மனிதோதயம்.
17- ஆன்மிகம், அறவாழ்வு, சும்மா இருத்தல், சாந்திசேனை.
18- கிராமோதயம், தேசோதயம்,விஸ்வோதயம் நோக்கி எழுதல்.
19- சமாதனம், சட்டம், தேசவழமை, நீதி பேணல்.
20- கன்னி, மங்கை, விதவை, அனாதைப் பெண்களுக்கான சேவைகள்.
21- பசு வளர்ப்பு, பசுக்காத்தல், பசுவதை ஒழிப்பு.
22- மது ஒழிப்பு, மதுசார உற்பத்தித்தடுப்பு, போதைப்பொருள் மறுப்பு.
23- இயல், இசை, நாடகம் பேசும் தமிழ்ப் பணிகள்.
24- போறியியல், இயந்திரவியல், தொழில்நுட்பவியல், கலைகள் வளர்ப்பு.
25- சுதேசியம், சுயசக்தி, சுயராச்சியம், சுயம்பூரணம்.
26- ஸ்ரீலங்கா தொடக்கம் ஐக்கிய நாடுகள் வரை உலக வலம்.
27- விளையாட்டு, களியாட்டு, உலகாட்டுப் பயிற்சிகள்.
28- சுதேசியத்தொழில்நுட்பங்கள், கிராமியக் கைப்பணிகள்.
29- குடியேற்றங்கள், பூமி மீட்டல்கள், பூமிப்பாதுகாப்புகள்.
30- பசுமை வளர்ப்பு, பசுமைப்பாதுகாப்பு, பசுமை நேசிப்பு.
31- சைவவாழ்வு, சைவஉணவு, சைவச்சங்கம், சைவஉலகு.
32- முதியோர் சேவை, அங்கவீனர் பணிகள், நோயாளர் தொண்டு.
33- யுவர், யுவதி, யுகம், தலைமுறைச்சேமிப்பு.
34- பாதயாத்திரை, தலயாத்திரை, சுற்றுலாப்பயணம், உல்லாசப்பயணம்.
35- குடும்ப நிதியங்கள், கிராமச்சீட்டுக்கள், கைமாற்றுக்கடன்கள், வட்டிக்கடனுத           விகள், கூட்டுறவு நலன்கள்.
36- கிராம மட்ட சமய, சமூக, கலை இலக்கிய மன்றங்கள், அரச திணைக்களங்கள், இலாகாக்கள், தன்னார்வத் தொண்டு நிலையங்கள், ஆகியவற்றுடன் இணையம்.
37- பிரதேச, மாவட்ட, தேசிய மட்ட அரச திணைக்களங்கள், இலாக்கள், சபைகள்,             தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகள், அனுபவங்கள், தொழில்                   நுட்பங்கள் பகிர்தல் ஒன்றியம்.
38- ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய சேவைத்திட்டங்கள், உலகளாவிய                 தொண்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், ஆகியவற்றின் செயற்திட்டங்களு            டன் இணைந்து செயலாற்றுதல், பங்குகொள்ளுதல், பகிர்ந்து கொள்ளதல்.
39- அணுவாயுத உற்பத்தி, அணுவாயுதப்போர், இயற்கை அழிப்பு, இனஅழிப்பு,                 ஆக்கிரமிப்பு, சுரண்டல், ஆகியவற்றிற்கு எதிராகப் போராடும் உலக மக்களுடன்        இணைதல், போராடுதல்.
40- தனிமனித வாழ்க்கைச் சுமைகளை சமுதாயக் கடமைகளாகப் பகிர்ந்து                       கொள்ளல், ஏற்றல்.
41- சமுதாயக்கூட்டுறவு, சமூகக்கூட்டுறவு, கிராமக்கூட்டுறவு, வலுவடைதல்,                        கூடிவாழ்தல், பேராசை, சயநலம், போட்டி நீங்கி நிற்றல்.
42- தியானம், யோகாசனம், புலனடக்கம், உடலோம்பல், உளப்பரிமாணக்கலை.
43- மூலிகைத்தோப்பு, தென்னந்தோப்பு, பனந்தோப்பு, தலவிருட்சங்கள், கோட்டம்.
44- சோதிடம், வைத்தியம், வானசாஸ்திரம், பரவெளித்தத்துவம் கற்றல்.
45- சுமாதானம், சட்ட உதவி, நீதிமன்றுக்கு உண்மை விளம்பல்.
46- முயானம், இடுகாடு, மடம், தீர்த்தக்கரை பராமரிப்பு, அபிவிருத்தி.                 ஆயிரம் கிராமங்களின் சேவை நோக்கி வடஇலங்கை சர்வோதயம்          புங்குடுதீவு  1972 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரை மேற்கொண்ட                              நிர்மாணப்பணிகள்
1- பத்தாயிரம் குடும்பங்கள் சர்வோதய சேவையில் இணைக்கப்பட்டன.
2- 25,000 அங்கத்தவர்கள் நிர்மாணத் திட்டங்களில் இணைக்கப்படனர்.
3- 300 கிராமங்கள் நிர்மாணப் பணிக்கு இணைக்கப்பட்டமை.
4- 26 சேவை நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டன.
5- கேரதீவு மாதிரிக் கிராமத் திட்டம்
6- கிளிநொச்சியில் விவசாயப் பயிற்சிப் பண்ணை.
7- மாளிகைத்திடல், ஜெயபுரம் ஆகிய இடங்களில் அகதிகள் புனர்வாழ்வுத்திட்டம்.
8- தலைமன்னாரில் மலையக மக்கள் சேவை நிலையம் ஆரம்பிக்கப்பட்டமை.
9- தீவகத்திற்கான குடிநீர் விநியோகத்திட்டம்.
அமரர் அவர்களின் சிந்hதனையில் உருசவாகி                         செயல்வடிவம் பெற்ற சில பணிகள்
1- அகதிகள் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகள்
2- அங்கவீனர் சேவைத்திட்டங்கள்.
3- ஆன்னதானப் பணிகள்.
4- ஆன்மிகப கலாசாரப் பணிகள்.
5- இயல், இசை, நாடகப் பணிகள்.
6- இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பணிகள்.
7- உயிர் பாதுகாப்புச் சேவை.
8- கடல் நீரைத் தடுத்து பூமியை மீட்கும் திட்டம்.
9- கால்நடை, வளர்ப்பு, பாதுகாப்பு.
10- கிராமங்கள் தோறும் குடிநீர் வழங்கல்.
11- குடும்ப நிதிய சேவைத்திட்டங்கள்.
12- குடும்ப பாதுகாப்பு காப்புறுதித் திட்டங்கள்.
13- குருபூசை வழிபாடுகள்.
14- குளங்கள் வெட்டுதல், புனரமைத்தல்.
15- கோமாதாக்களுக்கு தீன் தானம்.
16- கோயில் திருப்பணிகள்.
17- சத்துணவுத்திட்டம்.
18- சமூகக்காடு வளர்ப்புத் திட்டம்.
19- சித்தி ஆயர்வேத வைத்திய சேவை.
20- சிரமதானம்.
21- சிவபூசைக்கான ஒழுங்குப்பணிகள்.
22- சிறுவர் சேமிப்புத் திட்டங்கள்.
23- சிறுவர் பள்ளிகள்.
24- சுகாதார சேவை.
25- தண்ணீர்ப்பந்தல் சேவை.
26- தாய்சேய் நலன் சேவை.
27- தாயகம் மீளும் மலையக மக்கள் சேவை.
28- தீவக பிரயாணக் கஸ்ரங்களால் வாடும் மக்களுக்கான சத்திரப் பணிகள்.
29- நல்லூர் முருகன் வழிபாட்டாளர் நலன் சேவைப் பந்தல்.
30- நற்பண் மன்றங்கள் உருவாக்கல்.
31- நன்னீர்க் கிணறுகள் கட்டுதல்.
32- நியாயவிலைக் கடைகள்.
33- நீதி நூல்கள் மறுபதிப்புப் பணிகள்.
34- நீதி நூல்கள் முற்றோதல் செய்வித்தல்.
35- நூல்நிலைய உருவாக்கங்கள்.
36- பத்திரிகை வெளியிடுதல் (தீவகம் பத்திரிகை, புங்குடுதீவுக் குரல், சேவை மலர்).
37- பசுப்பண்ணைத்திட்டம்.
38- பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.
39- பறவைகள் சரணாலயம்.
40- பாதயாத்திரைகள் நடத்துதல்.
41- பொதுக் குசினிப் பணிகள்.
42- மயான அபிவிருத்தித் திட்டம்.
43- மரம்நடுகை.
44- மழைநீர்த் தேக்கம்.
45- மாதிரிக் கிராமம் உருவாக்குதல்.
46- முதலுதவி வகுப்புகள் நடத்துதல்.
47- முதியோர் பராமரிப்பு கௌரவிப்புப் பணிகள்.
48- வரட்சி நிவாரணப் பணிகள்.
49- வழிபாட்டாளர் சேவைகள்.
50- வாழ்க்கைப் பயிற்சி நிலையங்கள்.
51- விதவைகள், கைவிடப்பட்ட பெண்களுக்கான சேவைகள்.
52- விவசாயம்.
53- வீட்டுத்தோட்டம்.
54- வெள்ள நிவாரணப் பணிகள்.
அமரர் கந்தையா திருநாவுக்கரசு பற்றிய தகவல்களை உள்ளடக்கிய பிறநூல்கள்.
திரு மலர் தொண்டொன்று தொடர்ந்த காதை.
புங்குடுதீவு கிராம சபையில் நான்கு ஆண்டுகள்.
புங்கடுதீவு வாழ்வும் வளமும்.
வட இலங்கை சர்வோதய அறங்காவலர் சமூகசேவகி பொன்.ஜமுனா சேவை பாராட்டும் பொன்விழா மலர்.
மண்மறவா தொண்டர் திரு
மண்மறவா மனிதர்கள்.

அணையாதீபம்.
நாட்டில் அமைதியும் சமாதானமும் எழுச்சியும் கிராம சுயராச்சியமும் நிலைக்க வேண்டி 1978ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தின் திருக்கார்த்திகை திருநாளிலே தொண்டர் திருநாவுக்கரச அவர்களினால் அணையா விள்கு ஏற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்விளக்கானது 13 வருடங்களாக அறங்காவலர் செல்வி பொன்.ஜமுனாதேவி அவர்ளகல் பராமரிக்கப்பட்டு இற்றை வரை அணையாது அரை நூற்றாண்டு கடந்து ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. தீவக இடப்பெயர்வு, இந்திய ராணுவ காலத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வு மற்றும் யாழ் குடாநாட்டு இடப்பெயர்வு காலங்களில் இவ்விளக்கு அணையாதிருக்க வேண்டுமென்ற உயரிய நோக்கில் அறங்காவலர் செல்வி பொ.ஜமுனாதேவி அம்மையார் அவர்கள் இடம்பெயராது அவ்விடத்திலேயே தங்கியிருந்து சர்வோதய அமைப்பினையும் அணையா தீபத்தினையும் பாதுகாத்து மரபு காத்த பெருந்தகையாளர்.

எண்ணற்ற செயற்திட்டங்களை உருவாக்கி செயற்படுத்திய மகான் 2001-10-03ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!