அறிமுகம்
நாடகக் கலைஞன், கூத்துக் கலைஞன், இசைநாடகக் கலைஞன், இசைக் கலைஞன், பாடகர், வில்லிசைக் கலைஞர், நாடகப் பிரதியாக்குனர், நாடக நெறியாளர். நூடக இசையமைப்பாளர், நாடக ஆசிரியர் என்ற பல்பரிமாணத் தன்மையில் பயணித்து வருகின்ற அல்பிரெட் றொபெட் விஜயகுமார் 1961-06-15ஆம் நாள் பிறந்தவர். யுhழ்ப்பாணம் இளவாலையில் வாழ்ந்து வரும் இவர் மருதங்கேணி தாழையடி என்னும் இடத்தில் பாரம்பரிய நாடகக் கலைக்குடும்பத்தில் பிறந்தவர்.
கூத்து இசைநாடகம் நவீனநாடகம் என நாடகத்தின் பல்வேறு கூறுகளி;ல் ஆளுமைமிக்க கலைஞன் அல்பிரெட் றொபெட் விஜயகுமார் அவர்கள.; விஜயன் என்று கலையுலகில் அறியப்படும் இவர் நடிப்பு, நெறியாள்கை இசையமைப்பு, பக்கவாத்தியம் ஒப்பனை, பாடல் என்னும் பல்பரிமாணம் கொண்டு கலைத்துவம் மிக்ககலைஞராக வாழ்ந்து வருகின்றார். தீவிர நாடக ஈடுபாடுகளுக்கு மத்தியில் 250 வரையான பாடல்களை இசையமைத்து வெளியிட்ட பெருமகன் திருமறைக் காலாமன்றத்தால் புடம்போடப்பட்ட திருப்பாடகன. கலைஞன், இசைஞன் போன்ற இவர் பெற்றுகொண்ட விருதுகளுக்கு பொருத்தமான விஜயன் மாஸ்டர் இளவாலை திருமறைக்கலாமன்றத்தின் பொறுப்பு வாய்ந்த கலைஞனாக திகழ்கின்றார். தாளையடியைசேர்ந்த இவரது தந்தையார் பேதுருபிள்ளை அல்பிரெட் ஒரு கூத்துக்கலைஞன்.
இளவளை புனிதகென்றியரசர் பாடசாலை பண்டதரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை இரனைப்பாலை மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராக பணிபுரிந்து அண்மையில் ஓய்வுபெற்றார்.
இளவாலை புனித கென்றியரசர் பாடசாலையில் நாடகப் பேராசன் P.யு.ஊ ஆனந்தராஜா அவர்களிடம் நாடகம் பயின்றவர்.. அகில இலங்கை ரீதியான நாடகபோட்டியில் பங்குபற்றுவதற்காக ஆசிரியர் நெறியாள்கை செய்த ஷேக்ஸ்பியரின் மக்பெத் நாடகத்தில் நடித்தார். ஆரம்பத்தில் கள்ளன், பாங்கொக் போன்ற சிறிய பாத்திரங்கள் ஏற்ற இவரின் நடிப்பாற்றலை பார்த்த ஆங்கில விரிவுரையாளர் சேமசுந்தரம் அவர்கள் நாடகத்தின் பிரதான பாத்திரமான ‘மாக்பெத்’ ஆக இவரை நடிக்கவைத்தார். இந்நாடகம் போட்டியில் முதற் பரிசைபெற்றது இவ்வாறு பாடசலை மேடையேற்றிய ஓதெல்லோ, யூலியசீசர், வெனிஸ் நகர வணிகன் ஆகிய நாடகங்களிலும் பிரதான பாத்திரங்களேற்று கலைஞர் சிறப்புசெய்தார்.
தனது பதினெட்டாவது வயதில் யாழ்ப்பாணம் நாடக அரங்கக் கல்லுரியில் இனைந்து நவீன நாடகங்கள் பற்றிய பட்டறிவுகளப் பயிற்சி பெற்றார். மோடிவகை ஆட்டங்கள் போன்றவற்றில் புலமை பெற்றார் நாடக ஆசான்களான குழந்தை ம.சண்முகலிங்கம், சி.மௌனகுரு, ஏ.சி.தாசீசயஸ், க.சிதம்பரநாதன், ஆகியோரி டம் அரங்கப் பயிற்சிகளை முழுமையாகப் பெற்றார். நாடக அரங்கக் கல்லூரி மேடையேற்றிய கலாநிதி சி.மௌனகுருவின் ‘சங்காரம்’ நாடகத்தி;ல் வரும் அரக்கர்கள் ஜவரி;ல் ஒருவராக வேடமேற்றார். பேராசிரியர் கலாநிதி சி.மௌனகுரு அவர்களிடம் வடமோடி ஆடல்கள் பயின்றவர்.
யாழ்ப்பாணம் நாடக அரங்கக் கல்லூரி மேடையேற்றிய P.யு.ஊ ஆனந்தராஜாவின் ‘இருட்டினில் குருட்டாட்டம் என்ற நாடகத்திலும் இவர் நடித்திருந்தார். 77;ல் இடம்பெற்ற கலவரத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்நாடகத்தின் கெடுபிடியான சாதியக்காரனாக வேடமேற்ற கலைஞரின் நடிப்பை பத்திரகைகள் பராட்டியமை நினைவு கௌ;ளதக்கது.
இளவாலை புனித கென்றியரசர் பாடசாலை மாணவர்களுக்காக பல நாடகங்களை நெறியாள்கை செய்தார். வாலப்பேத்தைகள், தேடுகிறோம் (அபத்தநாடகம்) ஒளிபிறந்தது, விடியலைதேடி, கோமாளிகள், விதிமதிசதி, ஆகிய நாடகங்களும் ஒற்றுமையே பலம,; முயன்றுபார்போம், போன்ற சிறுவர் நாடகங்களும் இவர் நெறியாள்கை செய்த நாடகங்களிற் சிலவாகும். மேலும் இசைஞானம் மிக்க இவர் ஒன்றேகுலம் ஒருவனை தேவன், பாஞ்சாலிசபதம் ஆகிய வில்லிசையையும் மாணவர்களுக்கு பழக்கி மேடையேற்றினார். இவர் நெறியாள்கை செய்த நாடகங்கள் பலபோட்டிகளி;ல் முதற்பரிசை வென்;றுள்ளன.
பாடசாலை நாடகங்கள் மட்டுமல்லாது கிராமங்களில் பலகிறிஸ்தவ நாடகங்களையும். தயாரித்து மேடையேற்றினார். இவ்வாறு போயிட்டி என்ற ஊரில் பலிக்களம் என்ற திருப்பாடுகளின் காட்சியை மேடையேற்றியபோது அதில் நடித்த கலைஞர் விஜயகுமாரின் ஆற்றலையும் ஆளுமையையும் பார்த்து பாராட்டிய அருட்தந்தை மரியசேவியர் அடிகள் திறுமறைகலாமன்றம் மேற்கொண்ட ‘வடலிக்கூத்தர்’ என்ற புலம் பெயர் தேசங்களுக்கான கலைப்பயணக் குழுவில் இவரை இனைத்துக்கெண்டார்.. கலாமன்றத்தில்; அங்கத்தவர் இல்லாத ஒருவரை முதன் முதலாக தங்கள் குழுவில் இனைக்கும் அளவிற்கு நடிப்பு ஆடல் பாடல் பின்னணி இசை எனபண்முக திறமைமிக்ககலைஞனாக இவர் விளங்கினார்.
யாழ் திருமறைக் கலாமன்றம் 1997, 1998களில் மேற்கொண்ட ‘வடலிக்கூத்தர்’ கலைப்பயணத்தின் மூலமாக பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ,; நெதர்லாந்து, நோர்வே. லண்டன். போன்ற இடங்களுக்குச் சென்ற இவர் அங்கு மேடையேற்றப்பட்ட நாடகங்களில பல்வேறுபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார். ஜெனோவா நாடகத்தில் அரசனாக சத்தியவேள்வி என்ற இசைநாடகத்தில் காலகண்ட தேவராக மற்றும் ஓயாதஅலைகள் எனும் வார்த்தைகளற்ற நாடகத்தி;ல் பலவேடங்களில் தேன்றியும் நடத்திருந்தார். வடலிகூத்தர் 11ல் ‘சோழன் மகன்’ கூத்தில் அரசனாகவும் சாகுந்தலை இசைநாடகத்தில் முனிவராகவும் யோண்சன் எழுதிய இசைவடி விலான குறியீட்டு நாடகமான ‘ஜீவப்பிரயத்தனம்’ இல் பலவேடங்களிலும் கலைஞர் நடித்திருந்தார்
அருட்தந்தையர்கள் நாடகஅரங்;கக் கல்லூரியினர் P.யு.ஊஆனந்தராஜா போன் றோர் மூலம் நாடகபட்டறிவும் அனுபவமும் பெற்ற இக்கலைஞருக்கு இசைநாடகங் கள் தென்மோடிக் கூத்துக்கள் பயிலவும் நடிக்கவும் தீவிர நாடகங்களை நெறி;யாள்கை செய்யவும் கூத்திசைப் பாடல்களை எப்படிப் பாடவேண்டும் எனக் கற்றுக்கொடுத்து யாழ் திருமறைகலாமன்றத்தினால் பட்டை தீட்டப்பட்டவர். இந்த வகையில் தன்னை அடுத்தநிலைக்கு அழைத்துச் சென்றவர்களாக நாடக வித்தகர்கள் அருட்தந்தை மரியசேவியர் அடிகள், பேக்மன் ஜெயராஜா, அ.பாலதாஸ,; பிரான்சிஸ் ஜெனம், கொலின்ஸ் போன்றவர்களிடம் நாடக நுணுக்கங்களை பயின்றவர்.
திருமறைகலாமன்றம் தயாரித்த திருப்பாடுகளின் காட்சிகளான அன்பில் மலர்ந்த அமரகாவியம், பலிக்களம், கால்வரிப்பரணி, சிலுவைச் சுவடு ஆகியவற்றி;ல் கைப்பாஸ் என்ற பாத்திரத்திலும் ‘குருதி கழுவிய குவலயம்’ காட்சியில் பிலாத்தகவும் நடித்த கலைஞர் விஜயகுமார் பின்னாளில் பலிக்களம்;, குருதியேசாட்சி, ஆகிய திருப்படுகளின் காட்சியை மன்றத்துகாக நெறியாள்கை செய்யும் அளவுக்கு உயர்ந்தார். கலாமன்றம் மேடையேற்றிய கூத்துகளான செனகப்பு-அரசன் தேவசகாயம்பிள்ளை-மந்திரிகம்பர் மகன்;-அம்பிகாபதி, சோழன் மகன்-அரசன் அனத்தும் அவரே-யோபுசங்கலியன்-அரசன் பரி;பாடுகளம்-பாரிகுருசபதம்-அரசன் மற்றும் புதுப்புனல்; (வட்டகளரநாடகம்) கொல்லீனும் கெற்றம் (கூத்துரவநாடகம்) ஆகியவற்றிலும் பிரதானபாத்திரங்கள் ஏற்று ஆற்றுகை செய்துள்ளார். மேலும் மன்றத்தின் இசை நாடகங்களான ஞான சௌந்தரியில் அரசனாக சத்தியவான் சாவித்திரியில் சத்தியவனாக ஏழுபிள்ளை நல்ல தங்காளில் அரசனாக இவர் பாடி நடித்துள்ளார். வாழ்வு தந்த வாஸ் போன்ற பல்வேறு நாடகங்களிலும் கலைஞர் பங்கேற்றுள்ளார். திருப்பாடுகளின் காட்சியி;ல் தான் பங்கேற்காத அனைத்து காட்சிகளிலும் பிரதான பாடகராக பங்கேற்பது இவரது சிறப்பு.
இளவாளை திருமறைக் கலாமன்றத்தை ஸ்தாபித்த விஜயகுமார் தற்போது அதன் காப்பாளராக பணிபுர்pந்து வருகிறார். மனவிலங்கு பெண் உரிமை சீதனதேடல் குடும்ப மகி;ழ்வில் மலர்வு போன்ற நாடகங்களையும் சோழன் மகன் கூத்து குழந்தை யேசு என்றவார்தைகற்றநாடகம் என்பவற்றை இளவாலை திருமறைக் காலாமன்றம் மூலம் தயாரித்துமேடையேற்றினார்.
இளவாளை புனித கென்றியரசர் பாடசாலை ஆசிரியராகப் பணிபுரியும் நாட்களில் குருசபதம், கும்பகர்னன் பரிந்து காட்டிய பாதகம,; மனிதமே புனிதம,; வினை விதைத்தவன,; போன்ற கூத்துகளை நெறியாள்கை செய்து மேடையேற்றினார். வடக்குகிழக்கு மாகாண ரீதியில் விசேட கூத்துபோட்டி அறிமுகம் செய்யப்பட்ட போது இவர் நெறியாள்கை செய்து தயாரித்த ‘நியாயத்தான்’என்ற கூத்து முதற் பரிசை பெற்றுக்கொண்டது. பொதுவாக இந்துகளால் ஆடப்படும் காத்தவராஜன் கூத்து மெட்டில் கிறுஸ்தவ கதைஒன்றை நியாயத்தான் கூத்தாக எழுத்துருவாக்கம் செய்திருந்தார.;
அண்மைகாலங்களில் உடுவில் மகளிர் பாடசாலைக்காகமுற்றிலும் பெண்கள் நடித்ததிருப்படுகளின் காட்சிபுதுக்குடியிருப்பில் 150 கலைஞர்கள் பங்குபற்றிய திருப்படுகளின் காட்சிவட இலங்கை சங்கீத சபையினருக்காக மனிதம் காட்டிய பாதையில் நாடகம் என்பவற்றை மேடையேற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட வலுவிளந்தோர்களுக்காக வவுனியாவில் இயங்கிவரும் ‘வரோட்’அமைப்பின் மூலம் அச்சிறார்களுக்குநாடகம் பாட்டு இசைக்கருவிகள் என்பவற்றில் பயிற்சியளிக்கும் தொண்டு முயற்சிகளை தற்போது செய்துவருகிறார்.
இசைஞானமிக்க பாரம்பரியத்தில் பிறந்த கலைஞன் விஜயகுமார் சிறுவய திலிருந்தே பாடவல்வராக ஆர்மோனியம், ஓகன் போன்ற வாத்தியங்களை சிறப்பாககையாளுபவராக விளங்கி வருகின்றார். இசையமைப்பில் தீவரமாக இயங்கிவரும் கலைஞர் இதுவரை 250 வரயான பாடல்களுக்கு இசையமத்துள்ளார். பெரும்பாலான பாடல்களை இவரேபாடியுள்ளார். இவர் 50புதிய பாடகர்களை அறிமுகம் செய்துள்ளார். ARB புரடக்ஷன் என்ற நிறுவனத்தை ஆரம்பத்து 13 கிறுஸ்தவ பாடல் இறுவெட்டுகளை தயாரித்து வெளியிட்டுள்ளார். பனிப்பூக்கள், உனைநினைத்தேன்தாயே, என்இதயநாதம், நன்றியினால் பாடுகிறேன், என் இசையில் நீ, தாளயம்பதிபூக்கள், படைத்தவன் மடியில்,என் வாழ்வின் ஒளி நீ என்பன அவற்றில் சிலவாகும். புனித கென்றியரசர் உட்பட பல பாடசாலைகளின் பான்ட் வாத்தியப் பயிற்றுனராகத் திகளும் கலைஞர் பலமாணவர்களுக்குஓகன் இசையைகற்பித்துவருகின்றார்.
வட இலங்கை சங்கீத சபையின் ‘சங்கீதகலாவித்தகர்’ யாழ் திருமறை கலாமன்றத்தின் ‘கலைஞானச்செல்வன்’ ‘கலைஞானவித்தகர்’ இளவாலை திருமறைக்கலாமன்றத்தின் ‘கலைஞன்’ பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தின் ‘இசைஞன்’ இலங்கை கிறுஸ்தவ பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ‘தர்மபிரபாஸ்வர’ யாழ் மாநகரசபையின் ‘யாழ்கலைஞன்’ ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.