Saturday, October 5

கலாபூஷணம் திரு. மாரிமுத்து சீவரத்தினம்

0

­அறிமுகம்

மாரிமுத்து இலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனாக 1943ஆம் ஆண்டு கோண்டாவில் எனும் இடத்தில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை  கோண்டாவில் பரம்சோதி வித்தியாசாலையில் பயின்று உயர் கல்வியை யாழப்பாணம்; பரமேஸ்வராக் கல்லூரியில் க. பொ. த. சாதாரணதரம் வரை பயின்றார். தனது 24வது வயதில் அரச சேவையில் இணைந்து இவர் நாடகத்துறையில் தடம் பதித்த கலைஞனாக முகிழ்த்தெழுந்தார். கோண்டாவில் ஸ்ரீவாகீஸ்வரி சனசமூக நிலையத்தின் தலைவராகவும், செயலாளராகவும் நாடக மன்றத்தின் பொறுப்பாளராகவும் பல தடவைகள் பணியாற்றியுள்ள இவர் கோண்டாவில் சாமுண்டாதேவி சமேத  ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத் தலைவராகவும், ஏழாலை ஸ்ரீ  முருகன் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராகவும் சமூக சேவைகளில் ஈடுபட்டவர்.

தனது 34வது வயதில் ஏழாலை  தம்பு சின்னப்புவின் மகள்  மகேஸ்வரியை திருமணம் செய்து ஐந்து பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்கள் அனைவரையும் கல்வியில் உயர வைத்து அரசதுறைகளில் வேலைவாய்ப் பினையும் பெற்றுக்கொடுத்து தன் கடமையினை இனைதே நிறைவேற்றியவர். சத்தியபாலினி நுண்கலைத்துறையிலும், பிரபாலினி முகாமைத்துவத்துறை யிலும், சிவசுதன் கணிதத்துறையிலும், சஜீந்திரன்    முகாமைத்துவத்துறையிலும்  திவாகரன் கணிதத்துறையிலும் மிளிர்வதுடன் இன்று லண்டனில் வாழ்ந்து வருகின்றார்.

நாடகக் கலைஞனாக ஜீவரட்ணம்.

தனது 18வது வயதில் நாடக உலகில் கால் பதித்து இற்றைவரை 62 வருடங்கள் கலைச்சேவையைப் செய்து வரும் இக்கலைஞன் 81 வயதை கண்டவர். இற்றைக்கும் நடிகனாக, கொழும்பு  மக்கள் களரி நாடக மன்றத்தில்  பராக்கிரம நிரியெல்ல அவர்களது நெறியாள்கையில் குழந்தை மா. சண்முகலிங்கத்தின் மொழி பெயர்ப்பில் உருவாகிய வெண்கட்டி வட்டம் நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர். தென்மாகாணம் முதல் வடமாகாணம் உட்பட இந்நாடகம்  22 தடவைகள் மேடையேறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அலாவுதீன் (சரித்திர நாடகம்) இந்நாடகம்  2000 தடவைகளுக்குமேல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேடையேறியது. இதனை எழுதித் தயாரித்து நெறிப்படுத்தி நடித்தது  இந்நாடகத்தின் நான்காவது  மேடையேற்றத்தில் கலையரசன் என்ற சிறப்புப்  பட்டம் கிடைத்தது.  இதன் 50வது பொன்விழா   யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அன்நாள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருவாளர் ஏ.ஏ.யோசெப் அவர்களது தலைமையிலும் இருநூறாவது மேடையேற்றம் நடிகமணி  வீ.வீ. வைரமுத்து தலைமையிலும் மேடையேற்றப் பட்டது. இந்நாடகம் 1980ஆம் ஆண்டு அகில இலங்கையிலேயே முதன் முதலாக வீடியோவில் என்னால் நெறிப்படுத்தி படமாக்கப்பட்டது. இதில் நடிகைகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நடிகைகளான  ஸ்ரீதேவி, ஜெயதேவி (கொழும்பு) இவர்கள் நடித்தவர்கள்.   யாழ் மாவட்டக் கலாசாரப் பேரவையின்  அனுசரனையுடன் 1985-1986ஆம் ஆண்டு யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நாடகமும் அரங்கியலும் பயிற்சி நெறி தொடர்பில் சனி, ஞாயிறு விடுமுறை தினறங்களில் நடைபெற்ற வகுப்புகளில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் ஆர்வத்துடன் பயின்றவர். 

இவருடைய கதைவசனத்தில் உருவாகிய தியாகத்தீ (சமூக நாடகம்) 67 தடவைகள் மேடையேறியது. எனது நெறியாள்;கையில்  உருவாகிய அலாவுதீன் (சரித்திர நாடகம்) என்தங்கை (சமூக நாடகம்) முடியும் என்றால் (சமூக நாடகம்) கல்லறை கண்ட காதலர்கள் (சரித்திர நாடகம்) பூதத்தம்பி (இசைநாடகம்) 36 தடவைகள் மேடையேறியது.

பிறர் நெறியாள்கையில் இவர்; நடித்த நாடகங்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நாடகங்களாக  மட்டக்களப்பை சேர்ந்த கே.கே. மதிவதனனின் காதலே வாழி (சரித்திர நாடகம்) எஸ்.கே. நாகராசாவின் நெறியாள்கையில் அன்னையின் ஆணை (சரித்திர நாடகம்) ரீ.செல்வரத்தினம் நெறியாள்கையில் சுமைதாங்கி (சமூக நாடகம்) குழந்தை மா. சண்முகலிங்கம் அவர்களது மொழிபெயர்ப்பில் ஆர் . மகேஸ்வரி நெறியாள்கையில் சக்கமி (யப்பானிய சரித்திர நாடகம்), கலாநிதி மௌனகுருவின் நெறியாள்கையில் மகாகவி உருத்திரமூர்த்தியின் புதிய தொருவீடு, அரசையாவின் நெறியாள்கையில் குழந்தை மா. சுண்முகலிங்கத்தின் பாஞ்சாலி சபதம்எஸ்.கே. நாகராசாவின் நெறியாள்கையில் விதியின் பயணம்ருசாந்தனின் நெறியாள்கையில் பாதை மாறிய பயணங்கள், 1968இல்  பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையினால் நடத்தப்பட்ட நாடகப்போட்டிக்கும்  1969இல் பளை பிரதேச செயலகத்திலும்  நடத்தப்பட்ட கலைவிழா நாடகப்போட்டியிலும் மத்தியஸ்தராக கடமையாற்றி தனது நாடகப் புலமையின் அனுபவங்களை அதிகரித்தார்.

என் கலை வாழ்வில் நடிகமணி வீ.வீ. வைரமுத்துவின் வாரிசுகளாகிய வயாவிளான் மார்க்கண்டு, இணுவில்  கனகரத்தினம், சுன்னாகம் தைரியநாதன், அரியாலை செல்வரத் தினம், கலைமகிழ்வான் பாலசிங்கம், அருந்தவநாதன் மற்றும் யஸ்ரின் தைரியநாதன், ஸ்ரீதேவி ஜெயதேவி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராசா மற்றும் மலையக கலைஞர்கள் சிங்களக் கலைஞர்கள் போன்ற நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்களோடு நடித்த ஒரு கலைஞன் மாத்திரமல்ல வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய சகல மாவட்டங்களிலும் அரங்க வரலாற்றில் தடம் பதித்தவர். 

வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச செயலகத்தின் கலாசார அதிகார சபையின் செயலாளராகவும், கலாசாரப்பேரவையின் பொருளாளராகவும் பணியாற்றி வருகின்றார். யாழ் மாவட்டக் கலாசாரப் பேரவையின் நிர்வாக உறுப்பினராகவும் யாழ் மாவட்ட கலாசார அதிகார சபையின் நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றியவர். தன்னுடைய வாழ்நாளில் சமூகப் பணிகளில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக செயற்பட்டு வருவதனை மகிழ்வோடு கூறிக்கொள்ளும் இக்கலைஞன் எண்பது வயதினைக் கடந்தும் நாடகக் கலையில் நடிகனாக இன்றும் பங்கெடுத்து வாழ்ந்து வருவது பெருமைக்குரியதொன்றாகும்.

ஜீவரட்ணம் எழுதி; தயாரித்து நெறிப்படுத்தி நடித்த  நாடகங்கள்

01) பணம் (சமூக நாடகம்) 3 தடவைகள் மேடையேறியது.

02) தியாகத்தீ (சமூக நாடகம்) 67 தடவைகள் மேடையேறியது.

03) அலாவுதீன் (சரித்திர நாடகம்); 2000 தடவைகளுக்குமேல் மேடையேறியது.

04) முடியும் முயன்றால் (சமூக நாடகம்) 3 தடவைகள் மேடையேறியது.

05) என்தங்கை (சமூக நாடகம்) 2 தடவைகள் மேடையேறியது.

06) குமணன் (சரித்திர நாடகம்) 3 தடவைகள் மேடையேறியது.

07) பூதத்தம்பி (இசைநாடகம்) 36 தடவைகள் மேடையேறியது 

08) கல்லறை கண்ட காதலர் (சரித்திர நாடகம்) 2 தடவைகள் மேடையேறியது

பிறர் நெறியாள்கையில் நடித்த நாடகங்கள்

மட்டக்களப்பை சேர்ந்த கே.கே. மதிவதனனின் நெறியாள்கையில் காதலே நீ வாழி (சரித்திர நாடகம்) இதில் கதாநாயகியாக நடித்தவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப் பாளரான அமரர் ரேலங்கி செல்வராசா ஆவார்.

எஸ்.கே. நாகராசாவின் நெறியாள்கையில் அன்னையின் ஆணை (சரித்திர நாடகம்)

ரீ.செல்வரத்தினம் நெறியாள்கையில் சுமைதாங்கி (சமூக நாடகம்) 

ஆர் . மகேஸ்வரனின்  நெறியாள்கையில் சக்கமி  (சரித்திர நாடகம்)          

கலாநிதி மௌனகுருவின் நெறியாள்கையில்  புதியதொரு வீடு

கே.சந்திரகுலசிங்கத்தின் நெறியாள்கையில் காசியப்பன் சரித்திர நாடகம்      

அரசையாவின் நெறியாள்கையில் குழந்தை மா. சண்முகலிங்கத்தின் பாஞ்சாலி சபதம்.

எஸ்.கே. நாகராசாவின் நெறியாள்கையில் விதியின் பயணம் (சமூக நாடகம்)  

ஆர்மோனிய வித்துவான் சின்னத்துரை நெறியாள்கையில் சத்தியவான் சாவித்திரி இசை நாடகம் பூதத்தம்பி (இசைநாடகம்)

ஜனகலறிய மக்கள் களரி தயாரிப்பில் பராக்கிரம நிரியெல்ல அவர்களது நெறியாள்;கையில்   குழந்தை மா. சண்முகலிங்கம் மொழி பெயர்த்த வெண்கட்டி வட்டம் நாடகத்தில் 2016ஆம் ஆண்டு நடித்தமை.

ஜனகலறிய மக்கள் களரி தயாரிப்பில் லோகநாதனின் நெறியாள்கையில்   குழந்தை மா. சண்முகலிங்கம் மொழி பெயர்ப்பில், அன்பமுதூறும் அயலார் நாடகம்.

செம்முகம் ஆற்றுகை குழு வழங்கும் பராக்கிரம நிரியெல்ல அவர்களது நெறியாள்கையில் கொட்டம் (வேதாளம்) நாடகம்.

கிடைக்கப்பட்ட விருதுகள்

1968ஆம் ஆண்டு

1968ஆம் ஆண்டு கோண்டாவில்  ஸ்ரீ நாராயணா சனசமூக நிலையம் நடத்திய நாடகப் போட்டி – அலாவுதீன் நாடகம் 2ஆம் இடம் மற்றும் சிறந்த நடிகன் விருதாக கலையரசன் என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.  

2001ஆம் ஆண்டு

வடக்கு தமிழ் விவகார அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து  கலைஞானகேசரி கௌரவ விருது வழங்கப்பட்டது.

2004ஆம் ஆண்டு

யாழ் மாவட்ட பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகம் நடத்திய இசை நாடகப் போட்டி (22 நாடகங்கள் பங்குபற்றியது) – பூதத்தம்பி இசைநாடகம் 1ஆம் இடத்தையும், சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டு மரபுக்கலைச்சுடர் என்ற பட்டமும்  வழங்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் விருது வழங்கப்பட்டது.

மானிப்பாய் அருள்முருகன் நிலையத்தால் கௌரவிக்கப்பட்டு கலைஞானச் செல்வன் என்ற பட்டம்  வழங்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு

யாழ் மாநகர சபையால் கௌரவிக்கப்பட்டு யாழ் ஓசை விருது வழங்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு

வடமாகாண சபையின் கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு

அகில இலங்கை தமிழ்த்தின விருது வழங்கும் விழாவில்  யாழ் இந்துக்கலூரி மைதானத்தில் நடைபெற்ற போது (15.10.2017) நாடக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு

அகில இலங்கை தமிழ்த்தின விருது வழங்கும் விழா யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது (15.10.2017) 2017ஆம் ஆண்டு நாடக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

உடுவில் பிரதேச கலாசாரப் பேரவையால் ஞானஏந்தல் விருது வழங்கப்பட்டது.

யாழ் மாவட்ட கலாசாரப் பேரவையால்  யாழ்முத்து விருது வழங்கப்பட்டது.

இக் கலைஞனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து கவிஞர் எதிர்வீரசிங்கம் அவர்கள் கவிதையால் வாழ்த்தி  கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்பது வயதினைக் கடந்த போதிலும் நாடக அரங்கியல்  வாழ்வில் இன்றும் நடித்து வருவது மட்டுமல்லாமல் பலரை அரங்கத்துறையில் ஈடுபடுவதற்கு ஊக்கமளித்து வருகின்ற நாடக ஆளுமை ஜீவரட்ணம் அவர்களது கலைத்துறை சார்ந்த பணிகளை  ஆவணப்படுத்துவதில் யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக் கலைக்கூடம் பெருமையடைகின்றது.

கலைஞர் மனைவியுடன்

 

 

 

 

 

 

 

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!