மானிப்பாய் கட்டுடை என்னும் இடத்தில் காணப்பபடும் இடிகுண்டு என்றழைக்கப்படும் இக்கிணறு இடியினால் உருவாகியதாக கருதப்படு கின்றது. இடிகிணறு பல நூற்றாணடுகளுக்குமுன் இயற்கையில் உருவானதாக கூறப்படுகின்றது. அதாவது இடி பூமியில் விழுந்ததால் உருவாகியது. இது யாழ் மாவட்டத்தில் காணப்படும் நிலாவரைக்கிணறு போன்ற ஆழமறிய முடியாததாகவும் வற்றாத நீரைக் கொண்டதாகவும் விவசாயிகளுக்கு போதியளவு நீரை பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும் அமைந்துள்ளது. இன்று இப்பிரதேசம் சுற்றுலாப்பயணிகள் பார்வையிடும் இடமாகவும் காணப்படுகின்றது.