Sunday, June 16

தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

0

மகாஜனக் கல்லூரி அர்ப்பணிப்புகள், தன்னலமற்ற சேவைகள், தியாகங்கள், தீர்க்க தரிசனங்கள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பெட்டக மாகும். மகாஜனக் கல்லூரியின் வரலாறு பாவலர் தெ..துரையப்பா பிள்ளை அவர்களோடு ஆரம்பமாகிறது. பாவலர் அவர்கள் 1910ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 14 ஆம் நாள் (24.10.1910) தெல்லிப்பளையில் உள்ள தனது வீட்டில் மகாஜன ஆங்கில உயர்நிலைப் பள்ளியை ஆரம்பித்தார்.

தெல்லிப்பளை அமெரிக்கமிஷன் பாடசாலையில் தலைமை ஆசிரியராகக் (Head Master) கடமையாற்றிய பாவலர் திரு.தெ..துரையப்பாபிள்ளை அவர்கள் அதிலிருந்து விலகி இந்துப்பண்பாட்டுடன் ஆங்கிலக்கல்வியை பெறவிரும் பிய மாணவர்களுக்கு வசதியாக இப்பாடசாலையை நிறுவி, தானே ஆசிரிய ராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் கடமையாற்றிய அமெரிக்கமிஷன் பாடசாலையைச் சேர்ந்த திரு.நா.சங்கரப் பிள்ளை, திரு..இலங்கைநாயகம் ஆகிய ஆசிரியர்களும் அதிலிருந்து விலகி பாவலர் அவர்களுடன் இணைந்து கொண்டனர். 1911இல் சின்னப்பா அவர்கள் மாணவனாக இணைந்து கொண்டார். திரு..கந்தையா அவர்கள் 1912 இலிருந்து பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களுடன் (1942 வரை) இணைந்து செயற்பட்டார்.

பாவலர் தான் ஆரம்பித்த பள்ளியை, 1912ஆம் ஆண்டு ஆவணி மாதம் அருகில் இருந்த அம்பனைக் கிராமத்தில் உள்ள தனது சீதனக்காணிக்கு நல்லுள்ளம் கொண்டோரின் உதவியோடு மாற்றினார். 1914 இல் மகாஜனாவை உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக பதிவதற்கு சட்ட நிரூபண சபை உறுப்பினர் சேர்..கனகசபை அவர்கள் முயற்சி எடுத்தார். ஆனால் அப்போதைய கல்வி அதிகாரி திரு ஹாவாட் அவர்கள் அதற்கு இணங்க மறுத்து விட்டார். 1914 இல் திரு.கா.சின்னப்பா அவர்கள் மகாஜன ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இணைந்து கொண்டார். பாவலர் தெ..துரையப்பாபிள்ளை அவர்களது முயற்சியால் அம்பனை, கொல்லங் கலட்டி, அளவெட்டி, இளவாலை, மாவிட்டபுரம், கருகம்பனை, விழிசிட்டி, கீரிமலை, பன்னாலை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, மல்லாகம், கட்டு வன், ஏழாலை போன்ற பூர்வீகக் கிராமங்கள் விழிப்புணர்வைப் பெற்றன. 1916இல் பொதுத்தேர்வுகளுக்கு தோற்றும் அனுமதி பாடசாலைக்கு வழங்கப் பட்டது. தேர்வில் சிறந்த பெறுபேறுகளும் கிடைத்தன. கிராமப்புற மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்தவர் பாவலர் அவர்கள். 1918இல் பெரு மழை  காரணமாக பாடசாலைக் கட்டடம் தரைமட்ட மாகியது. மீண்டும் சில காலம் பாவலரது வீட்டிலே பாடசாலை நடைபெற்றது. இக்காலப் பகுதியில் E.L.S.C வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1919 இல் ரீ வடிவில் பாடசாலைக் கட்டடம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து 1919 இல் அரச உதவி கிடைக்கும் வரை தனது செலவிலேயே கல்லூரியை நடத்தி வந்தார். ஏற்கனவே பாடசாலையை அரச உதவி பெறும் பாடசாலையாக மாற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் பல, தோல்வியில் முடிந்து பின் 1919 இலேயே அது சாத்தியமாயிற்று.

பாவலர் அவர்கள் எப்போதும் தமிழ்ப்பண்பாட்டு ஆடைகளையே அணிவதுண்டு. இவரது கம்பீரமான தோற்றமும் நிர்வாகத்தி றனும் அர்ப்பணிப்புமிகு சேவையும் மகாஜன சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால் அனைவரும் கற்றிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். 1921இல் பாவலரின் மகன் ஜயரத்தினம் அவர்கள் இப்பள்ளியில் 3ஆம் வகுப்பில் மாணவனாக இணைந்து கொண்டார்.

பாவலர் மகன் ஜயரத்தினம் அவர்கள் 1924இல் கல்வித்திணைக் களம் நடத்திய E.S.L.C  தேர்வில் முதற் பிரிவில் தேறினார்.

இப்பள்ளியில் கற்ற மாணவர்கள் அரசினர் பரீட்சைக்குத் தோற்றி சான்றிதழ் கள் பெறமுடியாமையால் யாழ்ப்பாணத்தில் உள்ள கல்விமான்களைக் கொண்ட பரீட்சைக் குழு ஒன்றை பாவலர் அவர்கள் தற்துணிவின் அடிப்படை யில் அமைத்துக் கொண்டார். அப்பரீட்சைக் குழுவில் விக்டோரியாக் கல்லூரி அதிபர் சைவப்பெரியார் திரு.எஸ்.சிவபாதசுந்தரம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் திரு.பு.சிவராவ், இராமநாதன் கல்லூரி உப அதிபர் திரு.சீ.கே.சுவாமிநாதன், அச்சோவான் கல்லூரி (சென்.ஜோன்ஸ் கல்லூரி) உப அதிபர் T.H.குறோசெற் போன்ற அறிஞர்கள் இடம்பெற்றிருந்தனர். இக்குழு வினரே அக்காலத்தில் பரீட்சைகளை நடத்தி சான்றிதழ்களை வழங்கியிருந்த னர். அச்சான்றிதழ்கள் மிகப்பெறுமதி வாய்ந்தனவாக இருந்தன.

சிறுவர்கள் தமது ஆரம்பக் கல்வியை நீண்ட தூரங்களுக்குச் சென்று கற்க வேண்டியிருந்ததால் பல இடர்களைச் சந்தித்தார்கள். இதை உணர்ந்த பாவலர் அவர்கள் 1926 ஆம் ஆண்டு  மகாஜன ஆங்கில உயர் நிலைப் பள்ளியின் அருகே சரஸ்வதி வித்தியாசாலை என்ற ஆரம்பப் பாடசாலையை நிறுவி னார். இவ் ஆரம்பப் பாடசாலை 1928 ஆம் ஆண்டு அரசின் அங்கீகாரத்தைப் பெற்றது.

12.10.1872 இல் அவதரித்த பாவலர் திரு.தெ..துரையப்பாபிள்ளை அவர்கள் 19 ஆண்டுகள் அதிபர் பணியை ஆற்றி 24.06.1929 இல் இயற்கை எய்தினார். பாவலர் அவர்கள் சிறந்த கவிஞர் மட்டுமல்லாது கவிதைப் பொருளுக்கேற்ப வாழ்ந்து காட்டியவராவார். எட்டயபுரக் கவி பாரதி ஒரு தேசியக்கவி என்றால் தெல்லிப்பழைக் கவி ஒரு சுதேசியக்கவி என்பர்.

பாவலரின் மறைவுக்குப் பின்னர் 25.06.1929 இல் இப்பள்ளியில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றிய திரு.கா.சின்னப்பா அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றார். பாவலர் அவர்களின் உயர்நிலை ஆலோசனைக் குழுவில் திரு.கா.சின்னப்பா, திரு..கந்தையா, திரு.சி.தம்பு ஆகியோர் இடம்பெற்றி ருந்தனர். 1927ஆம் ஆண்டு இடம்பெற்ற திரு.கா.சின்னப்பா அவர்களின்  திருமணத்தைத் தொடர்ந்து பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் திரு. கா.சின்னப்பா அவர்களின் சகலனாக மாறியிருந்தார். பாவலர் அவர்கள் அமரத்துவம் அடைந்த ஆனி மாதம் 24ஆம் திகதியை பாவலர் நினைவு தினமாகவும் பரிசளிப்புத்தினமாகவும் அதிபர் திரு.கா.சின்னப்பா அவர்க ளால் கொண்டாடப்பட்டது. இது இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. 1930இல் அதிகார் சின்னையா, லோட்டன், துரையப்பா ஆகிய மூன்று இல்லங்கள் பாடசாலையில் செயற்பட்டன. சின்னப்பா அவர்களின் காலப் பகுதிலேயே திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்கள் மகாஜன ஆங்கில உயர் நிலைப்பள்ளியில் – 1930இல் இலண்டன் மற்றிக்குலேசன் தேர்வில் சித்தி பெற்று 27.04.1932இல் ஆசிரியராக இணைந்து கொண்டார். 1935இல் திரு.கா.சின்னப்பா அவர்களின் தலைமையில் பள்ளியின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டதுஇதன்போது ஆசிரியர் திரு.தெ.து.ஜயரத்தினம் அவர் கள்  மகாஜனன் மலரின் முதலாவது ஆசிரியராக இருந்ததோடு அதை வெள்ளிவிழா மலராக வெளியிடவும் ஆவன செய்தார். விளையாட்டுக் குழுத் தலைவராவும் (POG), உதைபந்தாட்டப் பயிற்றுவிப்பாளராகவும், 1936 இல் சாரணர் இயக்கத்தை முதன் முதலில் உருவாக்கி வழிப்படுத்தியவராகவும் திரு.தெ.து ஜயரத்தினம் அவர்கள் இருந்துள்ளார்.

1941 இல் அதிபர் திரு.கா.சின்னப்பா அவர்கள் நவீன விஞ்ஞானக் கல்வி கற்பிக்கும் பாடசாலையாக மகாஜன உயர்நிலைப் பள்ளியை மாற்றி அமைத்தார். இவர் பொறுப்பேற்கும் போது 160 ஆகக் காணப்பட்ட மாணவர் தொகை இவரது காலத்தில் 300 ஆக உயர்ந்தது. 1943இல் பெண்களும் கல்வி கற்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இவ்வாண்டில் சிரேஷ்ட பாடசாலைத் தராதர வகுப்பில் விஞ்ஞான பாடங்கள் கற்பிக்கப்பட்டன. 1943இல் ஆசிரியர் தெ.து ஜயரத்தினம் அவர்கள் கலைமாணி (B.A) தேர்வில் தோற்றி இரண்டாம் பிரிவில் சித்தி பெற்றதையிட்டு பாடசாலைக்கு அரைநாள் விடுமுறை கிடைத்தது. இதே ஆண்டில் முதல்பெண் ஆசிரியராக செல்வி இராஜமலர் சின்னையா (திருமதி.இராஜமலர் கந்தையா) அவர்கள் நியமிக்கப் பட்டிருந்தார். 1944இல் சிரேஷ்ட பாடசாலைத் தராதர விஞ்ஞானப் பிரிவில் 15 மாணவர்கள் தோற்றி 12 மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர்.

திரு.தெ.து ஜயரத்தினம் அவர்கள் ஆசிரியராக இருக்கும் போதே – 24.06.1944 இல், நிறுவியவர் நினைவுநாள் விழாத் தலைவர் திரு .ஜே.வி.செல்லையா அவர்களின் (.நீ.எம்.) பாவலர் துரையப்பாபிள்ளையின் புதல்வராகிய திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்கள், திரு.கா.சின்னப்பா அவர்களின் பின் அதிபராக பதவி ஏற்க இருக்கிறார் என்ற செய்தி கேட்டு நான் மகிழ்வடை கிறேன் என்றஆசியையும் வாழ்த்தையும் முன்கூட்டியே பெற்றுக் கொண்டார். இத்தோடு கல்வி நிலையமொன்றின் நிர்வாகத்தைப் பொறுப் பேற்று நடத்தக் கூடிய தகுதி பெற்ற பயிற்றப்பட்ட பட்டதாரியான இளைஞர் ஒருவர் ஆசிரியராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என மகாஜனன் இதழில் அதிபர் திரு கா.சின்னப்பா அவர்களின் எழுத்துருப் பதிவோடு இரட்டிப்பான வாழ்த்தையும் ஆசியையும் பெற்றுக்கொண்டார். இந்த ஆசிகளே திரு.தெ.து ஜயரத்தினம் அவர்களை பின்னைய அதிபர் வாழ்வின் உச்சிக்கே கொண்டு சென்றது.

பாவலரைப் போலவே திரு.கா.சின்னப்பா அவர்களும் ஓர் இலக்கிய வாதியாகக் காணப்பட்டார். பாவலரது குடும்ப உறவும் பாவலர் மீது கொண்டிருந்த அபார மதிப்பும் அயராத உழைப்பும் மகாஜன ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிந்தன. 25.06.1929 தொடக்கம் 19.05.1945 வரை 16 ஆண்டுகள் திரு.கா.சின்னப்பா அவர்கள் அதிபராகக் கடமையாற்றி 17.07.1945 இல் அமரரானார்.

அதிபர் திரு.கா.சின்னப்பா அவர்களைத் தொடர்ந்து திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்கள் 20.05.1945இல் அதிபராகக் கடமை ஏற்றார். 1932 ஆம் ஆண்டு தொடக்கம் 13 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் சிறந்த அதிபராக செயற்பட வழிவகுத்தது. இவர் பதவி ஏற்ற ஆண்டிலேயே இலவசக்கல்வியும் ஆரம்பமாகியது. அதிபர் ஜயரத்தினம் அவர்களது திட்டமிடலும் நடைமுறைப்படுத்தலும் கல்வி உலகில் மகாஜனாவை இலங்கையின் முதல் தர கல்லூரிகளில் ஒன்றாக மிளிரவைத்தது. இவரது காலப்பகுதியே மகாஜனாவின் பொற்காலம் எனப்பட்டது.

அதிபர் தெ.து. ஜயரத்தினம் அவர்களது காலத்தில் காணிகள் வாங்கப்பட்டன. கட்டடங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. நவீன ஆய்வுகூடங்கள் நிறுவப் பட்டன. தொழில்முன்னிலைப் பாடங்களுக்கான விசேட வகுப்பறைகள் அமைக்கப் பட்டன. நூலகம் அமைக்கப்பட்டது. மைதானம், தேநீர்ச்சாலை, புத்தகசாலை என்பன அமைக்கப்பட்டன. கோயில் அமைக்கப்பட்டது. சிறந்த பரீட்சைப் பெறுபேறுகள் கிடைத்தன. விளையாட்டுப் போட்டிகளில் முதலிடங் கள் கிடைத்தன. சமய, நாடகப் போட்டிகளில் முதலிடம் கிடைத்தன. இவற்றால் மகாஜனா இலங்கையிலுள்ள தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாகியது. இந்நிலையை அடைவதற்காக அதிபர் தன்னை முழுமையாக அர்ப்பணித் திருந்தார்.

1945இல் மகாஜன உயர்நிலைப்பள்ளி மகாஜனக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1946 இல் மகாஜனக் கல்லூரியின் உனை நீ அறி (Know thyself) என்ற மகுடவாசகமும், கல்லூரி இலச்சினையும் அறிமுகப்படுத்தப் பட்டன. இதே ஆண்டில் கல்லூரியின் வடக்குப் புறத்தில் இருந்த கிணறு மூடப்பட்டு அதிபரின் இல்லத்திற்கென இடப்பட்டிருந்த அத்திவாரம் அழிக்கப்பட்டு கல்லூரிக்கான விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. 1946இல் முதல் தடவையாக JSSA  நடத்திய காற்பந்தாட்டப் போட்டியில் பாட சாலை அணி பங்குபற்றியது. வசதிக் கட்டணங்கள் மூலம் பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல் பாடங்களை கற்பிப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதே ஆண்டில் கொழும்பு பழைய மாணவர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப் பட்டது. 01.04.1947 இல் சரஸ்வதி வித்தியாலயம் என்ற ஆரம்பப் பாடசாலை 61 மாணவர்களுடனும் 54 மாணவிகளுடனும் மகாஜனக் கல்லூரியுடன் இணைக் கப்பட்டது. அன்றிலிருந்து இப்பாடசாலை இளங்குழந்தைகளின் (kindergarden) வகுப்பு முதல் பல்கலைக்கழக பிரவேச வகுப்பு வரை நடை பெற்றது. 1947 இல் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை பணியில் இணைத்துக் கொள்வதற்காக அதிபர் திரு.தெ.து. ஜயரத்தினம் அவர்கள் இந்தியாவிற்கு சென்றிருந்தார். இதன்படி முதற்குழுவினர் இதே ஆண்டு மே மாதம் வருகை தந்தனர். மகாஜன விளையாட்டுப் பிரிவு யாழ்ப்பாணப் பாடசாலைகளின் விளையாட்டுச் சங்கத்தில் JSSA  பதிவு செய்யப்பட்டது. இக்கல்லூரி இரண்டாந் தரப்பாடசாலையாக (Grade– 2) தரமுயர்த்தப்பட்டது. 1948இல் உயர்தர விஞ்ஞான வகுப்புகள் (HSC) ஆரம்ப மாகின.  1949இல் முதல் தர பாடசாலையாக (Grade– 1) தரமுயர்த்தப்பட்டது. இக்காலப் பகுதியில் மாணவர் தொகை 1000 ஆகவும் ஆசிரியர் தொகை 45 ஆகவும் காணப்பட்டது.

1950இல் அதிபர் திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்கள் கல்லூரி வளர்ச்சிக்கான நிதியை திரட்டுவதற்காக இந்தியா சென்று திரைப்பட நடிகர்களை (சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி போன்றோரை) அழைத்து வந்திருந்தார். 1951இல் கல்லூரிக்கீதம், கொடிக்கீதம் என்பன வித்துவான் நா.சிவபாதசுந்தரம் அவர்களால் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தன. இதே ஆண்டில் முதல் பொறியியல் மாணவன் அப்பாத்துரை வேல்சாமி (அளவெட்டி) பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார். 1952 மே 5 இல் சபாஸ் முதலியார் நாடகம் யாழ். நகர மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது. 1952 இல் கல்லூரிக்கு வடக்கே இருந்த காணி வாங்கப்பட்டு விளையாட்டிடம் விரிவாக்கப்பட்டது. 1952 மே 10 இல் புதிய நவீன பௌதீக ஆய்வுகூடம், அதிபர் அவர்கள் தலைiயில் இலங்கைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட பீடாதிபதி, பேராசிரியர் A.W.மயில் வாகனம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 19.05.1952 இல் இலக்கிய மன்றம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 22.11.1952 இல் பி. 7.00 (சனிக்கிழமை) மணியளவில் கவிஞரும் யோகியுமான ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்தார். இவரை அதிபர் ஜயரத்தினம் அவர்கள் மாலையிட்டு வரவேற்றார். பனை மரத்தில் குடைந்து எடுக்கப்பட்ட பேழையி னுள் கல்லூரி மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் காணிக்கையான அன்புப் பாமாலையை வைத்து அவருக்கு வழங்கினார்கள்.

1952ஆம் ஆண்டு பல்கலைக்கழக விஞ்ஞானத்துறைக்கு திரு.S.I. சத்தியோ சாதம் அவர்களும் கலைத்துறைக்கு திரு.கே.நல்லைநாதன், திரு..குமார  தேவன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்லூரிக் கீதம், கொடிக்கீதம் இயற்றிய நா.சிவபாதசுந்தரம் அவர்கள் கொழும்பில் நடைபெற்ற சாகித்திய விழாவில் கௌரவிக்கப்பட்டார். பன்மொழிப்புலவர் திரு.தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் 03.12.1952(புதன்)இல் கல்லூரி மண்டபத்தில் அதிபர் திரு.தெ.து. ஜயரத்தினம் தலைமையில் அரியதொரு சொற்பொழிவினை ஆற்றினார். 08.12.1952 இல் அதிபர் தலைமையில் நாவலர் திருநாள் கொண்டாடப்பட்டது. 1953இல் புதிய நவீன இரசாயன ஆய்வுகூடம் திறக்கப்பட்டது. 11.06.1953இல் உயர்திரு குன்றக்குடி அடிகளார் (திருவண்ணாமலை ஆதீனம், மகாசன்னி தானம், அருணாசல தேசிக சுவாமிகள்) கல்லூரிக்கு வருகை தந்தார்.

1953இல் பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சையில் .வைரவமூர்த்தி (பொறியி யல் பீடம்), சு.பாஸ்கரலிங்கம் (கலைப்பீடம்), என்.வேஸ்வரா (கலைப்பீடம்), முருகையா (கலைப்பீடம்) ஆகியோர் சித்திபெற்றனர். காந்தீயக் கொள்கை களை தமிழ்நாட்டில் பரப்பி வந்த சர்வோதய ஆசிரியர் திரு.ரா.இராமசாமி அதிபர் ஜயரத்தினம் காலத்தில் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இக்கல்லூரியை நாடிவர ஆரம்பித்ததனால் 1954 இல் கொல்லங்கலட்டி வீதியிலுள்ள கனக ராஜர் வளவில் அமைந்த வீட்டில் மாணவர் தங்குவிடுதி ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. ஆரம்பத்தில் 6 மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்தனர். விடுதியின் முதற் காப்பாளராக வித்துவான் நா.சிவபாதசுந்தரம் அவர்கள் பணிபுரிந்தார். இக்காலப்பகுதியில் அதிபர் திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்களை கவலைக் குள்ளாக்கிய அவரது தாயார் திருமதி தையல்நாயகம் துரையப்பாபிள்ளை அவர்களின் அமரத்துவம் 01.03.1954 இல் இடம்பெற்றது. இதே ஆண்டில் கல்லூரி வளர்ச்சி நிதி திரட்டுவதற்காக களியாட்ட விழா ஒன்று யாழ் முற்றவெளிப் பகுதியில் நடத்தப்பட்டது. இக்களியாட்ட விழாவை (Carnival) அப்போதைய கல்வி அமைச்சர் A.D.பண்டா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இவ்விழா 17.03.1954 தொடக்கம் 11.04.1954 வரை 26 நாள்கள் நடைபெற்றன. நிதி திரட்டுவதற்காக லொத்தர் சீட்டுக்களும் விற்பனைக்கு விடப்பட்டிருந்தன. (1ஆம், 2ஆம் பரிசுப் பொருள்களாக கார்கள்) இதற்கான சீட்டுக்களை விற்பனை செய்வதற்காக அதிபர் திரு.தெ.து. ஜயரத்தினம் அவர்கள் நாடு முழுவதும் சென்று வந்தார். இக்காலப் பகுதியிலேயே மாணவருக்கென விடுதி அமைக்கப்பட்டதோடு கல்லூரி அருகே இருந்த காணியும் வாங்கப்பட்டது. 24.06.1954இல் நிறுவுநர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும் அதிபர் ஜயரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம விருந்தி னராக அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி .சிதம்பரநாதன் செட்டியார் கலந்து சிறப்பித்தார். 1954 இல் மாணவர் தொகை 1014 (720-294) ஆகவும் ஆசிரியர் தொகை 44 ஆகவும் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் H.S.C Union, Parliament of S.S.C  போன்ற மாணவர் அமைப்புகள் செயற்பட்டன. கல்லூரி இல்லங்களாக லோட்டன இல்லம், துரையப்பா இல்லம், அதிகார் சின்னையா இல்லம் ஆகிய மூன்றும் செயற்பட்டன.

1955 இல் பழைய ரீ வடிவக் கட்டடம் இருந்த இடத்தில் துரையப்பாபிள்ளை மண்டபம், நூலகம், அலுவலகம், ஆசிரியரகம் என்பவற்றை உள்ளடக்கிய பொன்விழா நினைவு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1956 இல் உயிரியல் ஆய்வுகூடக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. சிறு தோழிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் கல்லூரிக்கு வடகிழக்கில் புதிய காணி ஒன்று வாங்கப்பட்டது. அதிபர் திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்கள் வட மாகாண ஆசிரியர் சங்கச் செயலாளராக தெரிவு செய்யப்பட்;டார். பொன்விழாக் கட்டடத்திற்காக நிதி திரட்டுவதற்காக அதிபர் அவர்கள் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். திருக்கேதீச்சர ஆலய, அலங்காரத் திருவிழாவில் 1955 இல் 5 ஆம் நாள் பகலும் 1976 இல் மஹோற்சவத்தில் 5ஆம் நாள் பகலும், 1957 இல் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய 17ஆம் திருவிழாவும் கல்லூரியின் பெயரால் தொடங்கப் பட்டன. 1957 பெப்ரவரியில் அதிபர் மலேசியாவிலிருந்து நாடு திரும்பினார். இவ்வாண்டு ஜீலை 11இல் அதிபர் அவர்களின் 25 வருட ஆசிரிய சேவையின் பூர்த்தியினை முன்னிட்டு வெள்ளிவிழாக் கொண்டாடப்பட்டது. இதே ஆண்டில் விடுதிக்கான இல்லமொன்றும் 5 வகுப்பறைகளும் அமைக்கப்பட்டன. உடற் பயிற்சிப் போட்டியிலும் பாடசாலை வெற்றி பெற்றது.

1958இல் புதிய காணி வாங்கப்பட்டு விளையாட்டு மைதானம் மறுசீரமைக்கப் பட்டது. மனையி யல், கைவினை, மரவேலை போன்ற தொழில் முன்னிலைப் பாடங்களுக்கான பிரத்தியேக வகுப்பறைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டதோடு நடனத்திற்கான கலைக்கூடமும் நிறுவப்பட்டது. தொழில் முன்னிலைப் பாடங்களை அறிமுகப்படுத்துவதில் மகாஜனா முன்னோடி யாகக் காணப்பட்டது. தொழில் முன்னிலைப் பாடங்களில் தும்புவேலை, நெசவு வேலை, வனைதல் வேலை போன்றனவும் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தன.

1959இல் திறந்தவெளி அரங்கை மத்தியில் கொண்டு இருபுறங்களிலும் வகுப்பறைகளைக் கொண்ட மேற்குப்புறக் கட்டடத்தொகுதி அமைக்கப் பட்டது. இதே ஆண்டில் அதிபர் திரு.தெ.து ஜயரத்தினம் அவர்கள் யாழ்ப் பாணம் சைவ பரிபாலனசபையின் இணைச் செயலாளராக பதவி ஏற்றார்.

1960இல் கல்லூரிப் பொன்விழா கொண்டாடப்பட்டதோடு பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. துரையப்பாபிள்ளை நினைவு மண்டபத்தை உள்ளடக்கிய பொன்விழா நினைவு மாடிக்கட்டடம் இலங்கைப் பல்கலைக்கழக துணை வேந்தர் சேர்.நிக்கொலஸ் ஆட்டிகலே அவர்களால் 25.06.1960 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதே ஆண்டில் பாவலர் தே.து.துரையப்பாபிள்ளை அவர்க ளின் இலக்கியப்படைப்புக்கள் தொகுக்கப்பட்டு சிந்தனைச் சோலை என்ற நூலாக அதிபர் ஜயரத்தினம் அவர்களால் வெளியிடப்பட்டது. கல்லூரி ஆலயத் தில் சிவகாமி சமேத ஆனந்த நடராஜப்பெருமானின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாட்டில் தனியார் பாடசாலைமுறை அகற்றப் பட்டது. அரசாங்கம், உதவிநன்கொடை பெறும் பாடசாலைகளைப் பொறுப்பேற்றது. பாடசாலைகள் கல்விப்பணிப்பாளரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப் பட்டன. தனியார் பாடசாலை முறைமை இருந்த காலத்தில் கல்லூரியின் முகாமையாளர்களாக திரு.S.K.லோட்டன், திரு.அதிகார் எஸ்.சின்னையா, திரு.சீ.அருளம்பலம், திரு.ஆர்.நடேசபிள்ளை ஆகியோர் பணியாற்றினார்.

1961இல் மகாஜனக் கல்லூரி அதி உயர் தர (Super Grade)  பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. பாரிய கல்விக்கண்காட்சி ஒன்று அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இதற்கு பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்திருந்தனர். 1962 பெப்ரவரி 1இல் மக்கள் உடைமையாக இருந்த மகாஜனக் கல்லூரி நாட்டினது உடைமையானது. இதே ஆண்டில் ரோக்கியோவில் (யப்பான்) நடைபெற்ற ஆசிய சாரணர் விழாவிற்கு எமது மாணவர் மூவர் இலங்கைப் பேராளர்களாகச் சென்றனர். 6 சாரணர்கள் ஜனாதிபதி விருது பெற்றனர். குருளைச்சாரணர் இயக்கம் உருவாக்கப்பட்டது. அதிபர் ஜயரத்தினம் அவர்கள் யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

1963இல் மகாஜன மாணவிகள் அனைத்திலங்கைப் பாடசாலைகளுக் கிடையிலான உடற்பயிற் சிப் போட்டியில் முதலிடம் பெற்று தேசாதிபதியிடம் வெற்றிக் கிண்ணம் பெற்றனர். கிறீசில் நடைபெற்ற சாரணிய இயக்கத்தின் பதினோராவது அனைத்துலக விழாவில் (ஜம்போறி) எமது கல்லூரி சாரணர் ஆசிரியர் சீ.எஸ். சுப்பிரமணியமும் சாரணர் மு.விஷ்ணுபாலாவும் கலந்து கொண்டனர். இக்காலப் பகுதியில் 38 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்கள். இதில் 10 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப் பட்டனர். மருத்துவத்துறைத் தெரிவிலும் பல்கலைக்கழகத் தெரிவிலும் யாழ் மாவட்டத்தில் எமது கல்லூரியே முதன்மை பெற்றது.

1964இல் அனைத்திலங்கை அதிபர்கள் மாநாட்டு செயலாளராக அதிபர் திரு.தெ.து ஜயரத்தினம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு 1966 வரை பதவி வகித்தார். அரசு எமது கல்லூரிக்கு இரண்டு வகுப்பறைகளை நன்கொடை யாக அளித்தது. 1965 இல் இருந்து கல்லூரி, இலங்கை கலைக்கழகம் நடத்திய அனைத்திலங்கை பாடசாலை நாடகப்போட்டியில் 5 ஆண்டுகள் தொடர்ந்து முதலிடம் பெற்றது. (1969இல் கழகம் போட்டியை நிறுத்தும் வரை) இதற்கு பின்னின்று உழைத்தவர் ஆசிரியர் திரு.செ.கதிரேசர்பிள்ளை ஆவர். இதே காலப்பகுதியில் கொக்கி அணியின் கனிஷ்ட, சிரேஷ்ட பிரிவுகள் யாழ் மாவட்ட போட்டியில் முதலிடம் பெற்றன. 1965இல் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவத்துறைக்கு  7 மாணவர்களும், பொறியியல் துறைக்கு 4 மாணவர் களும் தெரிவு செய்யப்பட்டனர். பாடசாலை கொக்கி அணிக்கு திரு.எம்.வாம தேவராஜா தலைவராக தெரிவானார். நான்கு சாரணர் மாணவர்கள் ஜனாதிபதி விருது பெற்றனர்.

1966இல் எமது கல்லூரி மாணவர்களைக் கொண்டு இந்தியா சென்ற அனைத் திலங்கை மாணவர் கொக்கி அணிக்குப் பொறுப்பாளராக அதிபர் அவர்கள் இருந்தார். இக்காலப் பகுதியில் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவராக அதிபர் திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு அமரராகும் வரை தொடர்ந்து தலைவராக இருந்துள் ளார். 1966 (உ/த) பரீட்சைப் பெறுபேறுகளின்படி 1967இல் பல்கலைக் கழகத்திற்கு கலைப்பீடம் – 1, விஞ்ஞானம் – 5, மருத்துவ பீடம் – 12, பொறியியல் – 1, விவசாயம் – 1 என்ற எண்ணிக்கையில் தெரிவு செய்யப்பட்டனர். மருத்துவ பீடத்திற்கு மாணவர்களை அனுப்பிய விடயத்தில் எமது கல்லூரி யாழ் மாவட்டத்தில் முதலாவது இடத்தையும் இலங்கையில் இரண்டாவது இடத்தை யும் பெற்றது.

1967இல் அதிபர் திரு.தெ.து ஜயரத்தினம் அவர்கள் வடமாகாண அதிபர் சங்கத் தலைவராகவும் சமாதான நீதவானாகவும் (JP) தெரிவு செய்யப்பட்டிருந் தார். அதிபர் சமாதான நீதிவானாக தெரிவு செய்யப்பட்டமையைப் பாராட்டி 31.10.1967இல் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் பழைய மாணவர் சங்கத் தினரும் ஆசிரியர் சங்கத்தினரும் கௌரவிப்பு விழா ஒன்றைச் செய்ததுடன் தேநீர் விருந்தும் அளித்திருந்தார்கள். மேற்படி விழாவிற்குத் தலைமை வகித்த திரு.கு.பாலசிங்கம் அவர்கள் அதிபர் திரு.தெ.து ஜயரத்தினம் அவர்களை மகாஜன சிற்பி எனக் கூறியமை குறிப்பிடத்தக்கது. இக்காலப் பகுதியில் எமது முதலாம் பிரிவு (First Eleven)  உதைபந்தாட்ட அணியினர் யாழ் மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப் பட்டனர். தொடர்ந்து 8 ஆண்டுகள் யாழ் மாவட்ட சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர். இவ் வெற்றிக்கு பின்னால் திரு T.P.பத்மநாதன் அவர்கள் இருந்தார். இக்காலப் பகுதியில் சின்னப்பா இல்லம், அதிகார் சின்னையா இல்லம், துரையப்பா இல்லம், அருளம்பலம் இல்லம் ஆகியவை செயற்பட்டன.

1968இல் 3 இலட்ச ரூபா செலவில் நிறுவத் திட்டமிடப்பட்டிருந்த வைர விழா நினைவு மண்டபத்திற்கு நிதி திரட்டும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 14.03.1968 இல் வெள்ளவத்தை ராஜ் நகைச்சுவை நாடக மன்றத்தின் ஊர் சிரிக்கிறது என்ற நாடகம் மேடை ஏற்றப்பட்டது. இதற்கான நுழைவாயில் சீட்டுக்களை ஆசிரியரும் மாணவரும் வீடு வீடாகச் சென்று விற்பனை செய்திருந்தனர். இந்நாடக மேடை ஏற்றல் நிகழ்வில் பிரதமவிருந்தினராக சா.ஜே.வே. செல்வ நாயகம் அவர்கள் கலந்து கொண்டார். 1968 இல் யாழ் மாவட்ட மட்டத்தில் முதன்முறையாக எமது பாடசாலையின் உதைபந்தாட்ட மூன்று குழுக்களும் வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டன. 1968இல் விஜயதசமி விழா அன்று நல்லை ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகள் கல்லூரிக்கு வருகை தந்து கதாப்பிரசங்கம் செய்தார்கள். இதே ஆண்டு காரைக்குடியைச் சேர்ந்த பேரறிஞரும் சைவசித்தாந்த விற்பன்னருமான ஸ்ரீமத்புருதேசிகர் கல்லூரிக்கு விஜயம் செய்து அரிய சொற்பொழிவு ஆற்றினார். தமிழ் மன்றத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப் பட்டது. 1968 இல் பல்கலைக்கழக அனுமதிக்கு மருத்துவம் – 7, மிருகவைத் தியம்-4, உயிரியல் விஞ்ஞானம் -9, பொறியியல்– 10. பௌதீகவிஞ்ஞானம்– 6, கட்டுப்பெத்த பொறியியல் கல்லூரி– 3 Junior University college-1 என்ற எண்ணிக்கையில் தெரிவாகினர்.

24.06.1969 இல் நிறுவியவர் நினைவுநாளும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு.தெ.து ஜயரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தேசிய திட்டமிடல் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் Dr..கணேசலிங்கம் (MSc,Ph.D) அவர்கள் கலந்து கொண்டார். இக்காலப் பகுதியில் மாணவர் தொகை 1523 ஆகவும் ஆசிரியர் தொகை 64 ஆகவும் காணப்பட்டது. 12.02.1969இல் இந்தோனேசியாவில் புதைபொருள் ஆராய்ச் சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட கபால விநாயகர் விக்கிரகம் மகாஜனக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு எல்லோரும் காணும் பாக்கியம் கிடைத்தது. 1969இல் பல்கலைகழக அனுமதிக்கு மருத்துவம் – 5, பல்வைத்தியம் – 1, பொறியியல் – 2, மிருகவைத்தியம் – 1, பௌதீக விஞ்ஞானம் – 2 என்ற எண்ணிக்கையில் தெரிவாகினர். இவ்வாண்டில் வைரவிழா நினைவுக் கட்டடத்திற்கான அடிக்கல் திரு.சு.திருஞானசம்பந்தர் அவர்களால் நாட்டப் பட்டது. இவ்வாண்டில் பழைய மாணவர்களான திருவாளர்கள் .பாஸ்கரலிங் கம், செ.சுப்பிரமணியம், ஜி.சற்குணம், .வைரவமூர்த்தி, கி.கிருபாமூர்த்தி, எஸ்.கந்தையா, பொ.சிவநாதன், செல்வி. .கந்தையா ஆகியோர் அரசாங்க உபகாரச் சம்பளத்தில் கல்வி கற்க வெளிநாடு சென்றனர். 1969 இல் தேசிய ரீதியில் சிறந்த உதைபந்தாட்ட வீரர்களாக எஸ்.வடிவேஸ்வரன், கே.மோகன் ராம், எஸ்.இராஜரட்ணம் ஆகியோரும் மெய்வல்லுநராக எஸ்.சிவராஜாவும் மைல் ஓட்டத்தில் கே.கந்தையாவும் தெரிவாகினார்கள். யாழ் ஹொக்கி சங்கம் நடத்திய சீனியர், யூனியர் பிரிவுகள் இரண்டிலும் எமது அணி முதலிடம் பெற்று சம்பியன்களாயின.

1970 இல் கல்லூரி வைரவிழா அதிபர் திரு.தெ.து.ஜயரத்தினம் தலைமையில் கொண்டாடப்பட்டது. களியாட்ட விழாவும் கல்விக் கண்காட்சியும் இடம் பெற்றன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய அனைத்திலங்கை விஞ்ஞான அறிவுப் போட்டியில் எமது மாணவர் முதலிடம் பெற்றனர். அதிபர் திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்கள் சாரணர் இயக்கத்தின் வளர்;ச்சிக்காக அரும்பணியாற்றிய ஒப்பற்ற சேவையாளர்களுக்கு வழங்கப்படும் விருதினை தேசாதிபதியின் சார்பில், அரசாங்க அதிபரிடமிருந்து பெற்றார். இவ்வாண் டில் அகில இலங்கை பாடசாலை ஹொக்கி அணியில் உறுப்பினராக, பின் தலைவராக திரு.சு.மகேந்திரன் தெரிவு செய்யப்பட்;டார். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு துர்க்கா துரந்தரி என்னும் பட்டத்தை அதிபர் திரு.திரு.தெ.து ஜயரத்தினம் அவர்கள் வழங்கிக் கௌரவித்திருந்தார்கள். கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் அதிபர் ஜயரத்தினம் இருந்துள் ளார். இவரது காலத்திலேயே ஓலைக்கொட்டில்கள், ஓட்டுக்கூடங்களாக மாறின. ஒவ்வொரு செங்கட்டிகளும் திரு.தெ.து ஜயரத்தினத்தின் கதை சொல்லும் என நினைவுப் பேருரையாற்ற வந்த அறிஞர் ஒருவர் குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1921இல் மாணவனாகவும் 1932இல் ஆசிரியராகம் 1945இல் அதிபராகவும் இணைந்து கொண்ட திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்கள் 13 ஆண்டுகள் ஆசிரியராகவும் 25 ஆண்டுகள் அதிபகராக வும் பணியாற்றி கல்வி அமைச்சின் புதிய விதிகளின்படி 31.12.1970இல் இளைப்பாறினார். 1945இல் அதிபர் பொறுப்பை ஏற்கும் போது கல்லூரியில் 400 மாணவர்களும் 15 ஆசிரியரும் இருந்தார்கள். இவர் 1970இல் ஓய்வு பெறும் போது கல்லூரியில் மாணவர் தொகை 1800 ஆகவும் ஆசிரியர் தொகை 64 ஆகவும் காணப்;பட்டது. இந்த வளர்ச்சி பின்னாளில் இவரை நவ மகாஜன சிற்பி என அழைக்கப்படுவதற்கு காரணமாயிற்று. இவரது காலத்திலேயே மகாஜனா அதீத வளர்ச்சியைக் கண்டிருந்தது.

ஏறத்தாழ 50 ஆண்டுகளை கல்லூரியிலேயே கழித்த மகான் ஓய்வு பெற்ற பின்னர் தெல்லிப்பளை கல்வி நிலையத்தை ஆரம்பித்து தொடர்ந்தும் கல்விப் பணியாற்றினார். 15.10.19.13இல் பிறந்த இவர் 29.10.1979 இல் அமரரானார். இவரது பூதவுடல் 01.11.1976இல் அக்கினியுடன் சங்கமமாகியது.

திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து துணை அதிபராகக் கடமை ஆற்றிய திரு.மா.மகாதேவன் அவர்கள் 01.01.1971 முதல் கல்லூரியின் அதிபரானார். கலைப்பட்டதாரியான இவர் ஜரோப்பிய வரலாற்றை உயரிய பல ஆங்கில நூல்களை ஆதாரமாகக் கொண்டு சிறந்த முறையில் கற்பிப்பார் என இவரிடம் கல்வி கற்ற கல்லூரியின் பழைய மாணவனும் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியருமான எஸ்.சந்திரசேகரம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். 1971 இல் முதலாம் பிரிவு (First Eleven)  உதைபந்தாட்ட அணியினர் அனைத்திலங்கை உதைபந்தாட்ட சங்கம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று சேர் ஜோன் ராபட் வெற்றிக் கேடயம் பெற்றனர்.

அதிபர் திரு.மா.மகாதேவன் அவர்களைத் தொடர்ந்து திரு.பொ..குமாரசாமி அவர்கள் 06.06.1972 இல் அதிபர் பொறுப்பை ஏற்றார். இவர் அதே ஆண்டில் புலமைப் பரிசில் பெற்று இங்கிலாந்திற்குச் சென்றார். செல்வன் சிவானந்தராசா அகில இலங்கை உதைபந்தாட்டக் குழுவில் அங்கத்துவம் பெற்றார். இக்காலப்பகுதியில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய திரு..இராமசாமி அவர்கள் கல்லூரியின் அதிபர் கடமையை ஏற்று அதிபர் கடமையை அர்ப்பணிப்போடு செய்தார். எந்த ஒரு வேலையையும் அழகாக வும் நேர்த்தியாகவும் செய்யக் கூடியவராக இருந்தார். கல்லூரிப் பொன்விழாக் கட்டடம் (துரையப்பாபிள்ளை மண்டபம், அலுவலகம், நூலகம், ஆசிரியரகம்) அழகும் அமைப்பும் பெறுவதற்கு திரு.ஆஇராமசாமி அவர்களின் ஆலோசனையும் உழைப்பும் பெரிதும் உதவியிருந்தன.

தனது கடமைக்காலத்தில் கல்லூரிக்கு நேரகாலத்துடன் வருவதும் லீவுகள் எடுக்காதிருப்பதும் வகுப்புகளுக்கு உரிய நேரத்திற்கு செல்வதும் அதிபர் திரு..இராமசாமி அவர்களுடைய பண்பாக இருந்தது. மாணவர்கள் ஒழுங்குக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்தினார். பாடசாலைப் புறவேலைகளிலும் கூடிய அக்கறை செலுத்தி னார். இவர் ஒரு சிறந்த ஆங்கில ஆசானாகவும், ஆங்கில மொழி, ஆங்கில இலக்கியம் என்பவற்றை கற்பிப்பதில் வல்லுநராகவும் இருந்துள்ளார். கல்லூரியை நன்கு திறம்பட நிர்வகித்ததுடன் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களின் பிறந்த தின நூற்றாண்டு விழாவை 3 நாள்கள் கல்லூரியில் வெகு சிறப்பாகக் கொண்டாடியிருந்தார்.

அதிபர் திரு..இராமசாமி அவர்களை அடுத்து 10.07.1973இல் அளவெட்டியைச் சேர்ந்த திரு.சு.சுப்பிரமணியம் அவர்கள் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவரது காலத்தில் வைரவிழா நினைவுக் கட்டடம் தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளித்தன. இக்கட்டடத்திற்கான கல்வி அமைச்சின் அங்கீகாரம் கிடைத்தது. கட்டடத்தை பெற்றோர் ஆசிரியர் சங்கமே நிறுவுவதற்கான அமைச்சின் அங்கீகாரமும் கிடைத்திருந்தது. இந்த அங்கீகாரங்கள் கட்டட வேலை தொடங்குவதற்கு பொருத்தமாய் அமைந்தன. இலங்கை உதைபந்தாட்ட அணியில் செல்வன் .மனோறஞ்சன் இடம் பிடித்தார். செல்வன். .ஜெயபாலன் அகில இலங்கை ரீதியில் 1500 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றார். 1974 இல் செல்வன் சு.ஜெயராஜா உதைபந்தாட்ட இலங்கைக் குழுவில் இடம்பிடித்தார்.

அதிபர் திரு.சு.சுப்பிரமணியம் அவர்களை அடுத்து கல்லூரியில் பல வருடங்களாக  ஆசிரியப்பணி புரிந்த திரு.பொ.கனகசபாபதி அவர்கள் 25.05.1976இல் அதிபராகப் பொறுப் பேற்றுக் கொண்டார். இவர் ஒரு விலங்கியல் பாட ஆசிரியராக இருந்துள்ளார். இவரை ஒரு விலங்கியல் அறிவுமலை என இவரது மாணவி திருமதி கோகிலா மகேந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அதிபர் திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்களுக்கு பின்பு வந்த அதிபர்கள் எல்லாம் தொடர்ச்சியான சேவையினை வழங்க முடியாத நிலை இருந்தது. இது கல்லூரியின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதிபர் திரு.பொ.கனகசபாபதி அவர்கள் பொறுப்பை ஏற்றதிலிருந்து கல்லூரியின் தனித்துவம் பேணப்பட்டது. மீண்டும் கல்லூரியை நாட்டில் தரம் வாய்ந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்கவைத்த பெருமை இவரையே சாரும். 1976இல் பாவலர் மண்டபத்தில் எமது நவமகாஜன சிற்பியின் படம் திரைநீக்கம் செய்யப் பட்டது. கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

1977இல் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பரதநாட்டியம், பல்லியம் (ழுசஉhநளவசய) போட்டி களில் மகாஜனக் கல்லூரி முதலாம் இடங்களைப் பெற்றதுடன், பல்லியம் நிகழ்ச்சி கண்டிப் பெரஹராவில் நிகழ்த்தப்பட்டது. இலங்கை இளைஞர் ஹொக்கி அணியில் திரு.இராசநாயகம் றொகான் இடம்பிடித்தார். ஜயரத்தினம் இல்லம் 5 ஆவதாக சேர்க்கப்பட்டது.

கல்லூரியில் நீண்டகாலம் உப அதிபராகப் பணி செய்தவரும் கல்லூரியின் அபிவிருத்திக்கு அதிபருடன் இணைந்து பணியாற்றிவருமான திரு ..கிருஷ்ணபிள்ளை அவர்கள் வைரவிழா மண்டபத்திற்கு ஜயரத்தினம் நினைவு கூடம் எனப் பெயரிட்டு அவரது சேவையைக் கௌரவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்திருந்தார். அத்தீர்மானம் எல்லோராலும் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அம்மண்டபம் இன்றுவரை ஜயரத்தினம் மண்டபம் என்றே அழைக்கப்படுகின்றது.

கல்லூரிக் கீதத்திலும் மாண்புறு மகனாம் மகாஜன சிற்பி ஜயரத்தினம் பணி நினைவோம் என்ற அடி இணைக்கப்பட்டது.

1978இல் கல்லூரி மிக வேகமாக வளர்ச்சியடைந்ததுடன் 2355 மாணவர்களை யும் 76 ஆசிரியர்களையும் கொண்டு விளங்கியது. இதே ஆண்டில் பாடசாலை விடுதியின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. 05.05.1978 இல் வைரவிழா நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இதனை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத் தலைவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் திறந்து வைத்தார். ஜயரத்தினம் ஞாபகார்த்த மண்டபம் இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மேதகு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. ஜயரத்தினம் அவர்களது வெண்கல உருவச்சிலையை வடபிராந்திய கல்விப் பணிப்பாளர் திரு..மாணிக்கவாசகர் அவர்கள் திறந்து வைத்தார். 1978 இல் கல்லூரி விடுதியின் வெள்ளி விழாக்கொண்டாடப்பட்டது. இக்காலப்பகுதியில் விடுதி யில் 120 மாணவர்கள் இருந்தனர். விடுதிக்காப்பாளர்களாக திருவாளர் கள் நா.சிவபாதசுந்தரம், .நாகேஸ்வரன், சு.ஐயாத்துரை, வே.கந்தையா, சி.கதிர்காமதம்பி, நன்னித்தம்பி, .செல்வகுணச்சந்திரன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர். திரு..கனகராசா அவர்களும் விடுதிக்கு புதிய கட்டடம் அமைத்துத் தந்தார். 1978இல் உதைபந்து முதலாம் பிரிவு தேசிய போட்டியில் முதலிடம் பெற்று சிங்கர் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.

1979இல் இருந்து ஜயரத்தினம் தினமும் கனிஷ்ட பிரிவு பரிசளிப்பு விழாவும் ஒக்டோபர் – 29இற்கு மாற்றப்பட்டு கொண்டாடப்படலாயிற்று. அதிபர் திரு.பொ.கனகசபாபதி அவர்களது காலத்தில் கல்லூரி எல்லாத்துறைகளிலும் பிரகாசித்திருந்தது. இலங்கையின் எல்லாப் பாகத்திலிருந்தும் வருவோர் கற்கக்கூடிய சூழலைக் கொண்ட ஒரு பாடசாலையாக இக்கல்லூரி இருந்தது.

அதிபர் கனகசபாபதி அவர்களை அடுத்து மகாஜனக் கல்லூரி பழைய மாணவராகிய பிரம்மஸ்ரீ. மு. இரத்தினேஸ்வரஜயர் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார். இவர் அளவையியலும் விஞ்ஞானமுறையும் என்ற பாடத்தையும் ஆங்கில பாடத்தையும் கற்பித்த ஆசான் ஆவார். பல்தரப்பட்ட அறிவும் தருக்கவியல் தொடர்புடைய பேச்சும் கொண்ட இவர் எதனையும் பெரிதுபடுத்தாத இயல்பும் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கும் தன்மையும் பிரச்சினைகளை இலகுபடுத்தும் இயல்பும் நேர்மையும் பாடசாலை நிர்வாகத்தை சுமுகமாக செயற்படவைத்தது.

அதிபர் திரு இரத்தினேஸ்வரஜயர் அவர்களைத் தொடர்ந்து தெல்லிப்பளை யைச் சார்ந்த சைவப்பாரம்பரியத்தைக் கொண்ட திரு..சோமசுந்தரம் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சைவப்பாரம்பரியம் மிக்க மகாஜனக் கல்லூரிக்கு பொருத்தமானவராக இருந்தார்.

அதிபர் திரு சோமசுந்தரம் அவர்களை அடுத்து திரு ரீ.சண்முகசுந்தரம் அவர்கள் 01.07.1980 இல் அதிபராகக் கடமையை ஏற்றுக் கொண்டார். இவர் தசம் என்னும் புனைப்பெயரால் அழைக்கப்பட்டிருந்தார். இவர் தமிழ், வரலாறு ஆகிய பாடங்களைப் போதிப்பவராக இருந்தார். கல்லூரியில் மாணவர் மன்றங்களின் மூலம் கையெழுத்துச் சஞ்சிகைகள் வெளிவர வழிகாட்டியாக இருந்துள்ளார். மகாஜன மாணவரின் முதற் சிறுகதைத் தொகுப்பான இளம் முல்லை வெளிவருவதற்கு அதிபர் திரு ரீ சண்முக சுந்தரம் அவர்களின் முயற்சி பக்கபலமாக இருந்தது. இதை அடுத்து மாணவர்களது இவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியா னது. புதிசு என்ற சஞ்சிகையும் வெளியிடப்பட்டிருந்தது. இவரது காலத்தில் தமிழ் இலக்கிய பாரம்பரியம் ஒன்று மகாஜனாவில் மேலோங்கியிருந்தது. அதிபர். திரு.ரி.சண்முகசுந்தரம் அவர்கள் சமயம், தமிழ் இலக்கியம், வரலாறு, ஆங்கிலம் போன்ற பல துறைகளிலும் அனுபவம் வாய்ந்த ஒருவராக காணப்பட்டார். அவரது பன்முகத் தன்மையான ஆளுமையின் தாக்கம் மாணவர்களின் மீதும் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. கல்லூரியில் தமிழ், சமய கலாசாரத்தை பேணி வளர்த்த பெருமைக்குரியவர். இக்காலப் பகுதியில் கல்லூரி கலை கலாசார மேம்பாட்டிலும் சைவ ஆசாரங்களைப் பேணலிலும் மகாஜனாவின் பெயர் எங்கும் ஒலித்தவண்ணம் இருந்தது. ஆசிரியமணி பன்னாலை .விநாயகரத்தினம் அவர்கள் சிவநெறிக்கழகம் என்ற அமைப்பின் மூலம் பண்ணிசை, பிரசங்கம், பூமாலை கட்டுதல், கோலம் போடுதல், ஆலயத்தொண்டுகள், சிரமதானம், தலயாத்திரை என பல்வேறு பொதுப்ணிகளை மேற்கொண்டு மகாஜன சமூகத்திற்கு மட்டுமன்றி முழுசைவ சமூகத்திற்குமே வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

மகாஜன ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் தொடக்கி வைத்த இலக்கிய மரபு மஹாகவி து.உருத்திரமூர்த்தி, .செ.முருகானந்தம், ..கந்தசாமி, சேரன், ஆதவன், புராந்தகன், இளவாலை விஜேந்திரன், மாவை நித்தியானந்தன், .ரவி, பாலசூரியன், ஊர்வசி, ஒளவை, கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை, புலவர் .பார்வதிநாதசிவம், வித்துவான் நா.சிவபாத சுந்தரம், எழுத்தாளர் கோகிலா மகேந்திரன், .உமாமகேஸ்வரன்.. என தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் இவர்களது படைப்புகள் இடம்பெறும் வரை மகாஜனாவின் பெயர் நிலைத்திருக்கும்.

அதிபர் திரு..சண்முகசுந்தரம் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்ற பின்னர் மகாஜன சிற்பி ஜயரத்தினம் அவர்களால் மகாஜனாவுக்கென 01.01.1958இல் தேர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர் திரு.வே.கந்தையா அவர்கள் 01.03.1984 தொடக்கம் இக்கல்லூரியில் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் இக்கல்லூரியில் சின்னப்பா அவர்களிடமும் ஜயரத்தினம் அவர்களிடமும் கல்வி கற்ற ஒரு பழைய மாணவர் ஆவார். இவர் இக்கல்லூரி யில் 1976 இலிருந்து பகுதித்தலைவராகவும் பின் பிரதி அதிபராகவும் பணியாற்றியிருந்தார். இவர் ஆங்கில வர்த்தகப் பாடங்களை போதிப்பதில் வல்லவராகவும், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராக வும் ((POG)  கல்லூரியின் மாணவ விடுதி மேற்பார்வையாளராகவும் இருந்த தோடு தட்டச்சு, சுருக்கெழுத்து, புக்கீப்பிங் என்பவற்றின் பயிற்றுவிப் பாளராகவும் கடமையாற்றியவர். எல்லா விளையாட்டுக்களையும் பயிற்றுவிப்பதில் திறன் வாய்ந்தவராகவும் காணப்பட்டார். யோகாசனம், சைவசித்தாந்தம் போன்ற வற்றில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் கல்லூரி மாணவர்கள் சமய பழக்கவழக்கங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக விளங்குவதற்கு காரணமாக அமைந்தார்.

அதிபர் கந்தையா அவர்களை அடுத்து கல்லூரிப் பழைய மாணவனும் கல்லூரியில் ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் கடமையாற்றிய திரு..நாகராசா அவர்கள் 04.12.1985இல் அதிபராகக் கடமை ஏற்றார். அதிபர் ஜயரத்தினம் அவர்களை அடுத்து கல்லூரியில் நீண்டகாலம் அதிபராகக் கடமையாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றவர் இவரே. 1987 இல் O.S.A -UK உருவாக்கப்பட்டது. 1989இல் அகில இலங்கை ரீதியில் 100 மீற்றர் ஓட்டத்தில் செல்வி தில்லானா சுமங்கலியா 1ஆம் இடத்தைப் பெற்றார். இதே ஆண்டில் O.S.A -Canada  உருவாக்கப்பட்டது.

1990இல் அகில இலங்கை ரீதியில் சகல வசதிகளும் கொண்ட பாடசாலை யாகத் தரமுயர்த் தப்பட்டுள்ள 100 பாடசாலைகளில் மகாஜனாவும் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டது. வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 3 பாடசாலை களில் எமது பாடசாலை முதலிடம் பெற்றது. இந்து கலாசார அமைச்சு நடத்திய பேச்சு, கட்டுரை, பண்ணிசை போட்டிகளில் எமது பாடசாலை 6 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டது.

அதிபர் திரு..நாகராசா அவர்கள் மிகவும் இக்கட்டானதொரு காலத்தில் அதிபராகக் கடமையாறற்pயவர். உள்நாட்டுக் குழப்பங்களால் கல்லூரி நிர்வாகத்தில் பலதரப்புகளதும் தலையீடுகள் நிறையவே இருந்தன. இவை பொதுவாக பாடசாலைக் கல்வி முறையை பெரிதும் பாதிப்பனவாகவே இருந்தன. இத்தகைய கவால்களுக்கு மத்தியில் கல்லூரியை திறம்பட வழிநடத்தியவர்.

1990இல் யாழ்ப்பாணப் பிரதேசம் பெரும்பாலும் அமைதியின்றியும் போர்ச்சூழல் கொண்டதாயும் காணப்பட்டது. குறிப்பாக வலிகாமம் வடக்கு பிரதேசம் முற்றாக இடம்பெயர்ந்திருந்தது. இதற்கு மகாஜனக் கல்லூரியும் முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. கல்லூரி தனது சொந்த இடத்தினை விட்டு இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இடம்பெயர்ந்த நிலையில் முதலில் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியிலும் பின்பு அருணோதயாக் கல்லூரியிலும் இயங்க வேண்டியதாயிற்று. அதன் பின்னர் இணுவில் மத்திய கல்லூரியில் மாலை நேரப் பாடசாலையாகவும் சமகாலத்தில் உயர்தரப் பிரிவுகள் சில கோண்டாவில் பகுதியில் உள்ள நிரு தனியார் கல்வி நிலையத்திலும் இயங்கி வந்தது. இக்காலகட்டத்தில் அதிபர் திரு .நாகராசா அவர்களின் முயற்சி போற்றுதற்குரியது.

1991 இல் O.S.A -France  உருவாக்கப்பட்டது. இவ்வாண்டில் 4 சாரணர்கள் ஜனாதிபதி விருதினைப் பெற்றனர். நிரந்தரமாக பாடசாலையை ஒரே  இடத்தில் இயக்குவதென்பது அப்போது பெரும் போராட்டமாகவே இருந்தது. மாணவர்களோ தங்கள் பருவத்திற்கேற்ப கல்வியைப் பெற்றிடத்துடித்தார் கள். கல்லூரி எங்கெங்கு இயங்குகின்றதோ அங்கெல்லாம் மாணவர்கள் வருகைதர தவறியதில்லை. மகாஜனக் கல்லூரியை விட்டு பிறிதோர் கல்லூரியில் இணைய மனமின்றிக் காணப்பட்டனர். இதற்கு அதிபரின் அர்ப்பணிப்பும் நிர்வாகத்திறமையும் ஒரு காரணமாக அமைந்த தெனலாம்.

கல்லூரி தற்போதுள்ள அம்பனையில் இருந்து இடம்பெயர்ந்திருந்த பொழுது அதிபர் திரு..நாகராசா அவர்கள் அம்பனைச் சந்தியிலிருந்து கல்லூரி வரை தவழ்ந்து சென்றே முக்கிய ஆவணங்களை எடுத்து வந்து காப்பாற்றினார். பாடசாலைத் தளபாடங்கள் நூல்நிலையத்திலிருந்த நூல்கள், விஞ்ஞான ஆய்வுகூடப் பொருள்கள் யாவற்றையும் அதிபர் அவர்களும், பழையமாணவ னும் ஆசிரியருமான திரு.கணேசலிங்கமும் அலுவலக உதவியாளர் திரு.கனகேஸ்வரனும்  வேறு சில உதவியாளர்களும் லொறிச்சத்தம் கேட்காது லொறியை தள்ளிச்சென்று பின் தவழ்ந்து, தவழ்ந்து பாடசாலைக்குள் புகுந்து மீட்டு வந்தார்கள். இவர்கள் உண்மையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்தே இக்காரியத்தைச் செய்தனர். லொறிகளில் கொண்டு வரப்பட்ட நூல்கள், விஞ்ஞான ஆய்வுகூடப் பொருள்கள் என்பவற்றை உடனடியாகப் பாதுகாக்கும் பொருட்டு அளவெட்டியில் வசித்த மகாஜனக் கல்லூரி ஆசிரியை திருமதி. சௌ. பத்மநாதன் என்பவரின் வீட்டிலும், நூல்களில் ஒரு பகுதியும் அமர்கள் ஜயரத்தினம், துரையப்பாபிள்ளை அவர்களது படங்களும், அளவெட்டியில் உள்ள விழிசிட்டி கா.சுப்பிரமணியம் (முன்னாள் ஆசிரியர்மகாஜனன்) என்பவரது வீட்டிலும் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். அங்கு 3 ஆண்டுகள் பொருள்கள் யாவும் ஒழுங்காக பாதுகாக்கப்பட்டன. இக்காலப்பகுதியில் மருதனார்மடம் சந்திக்கு வடமேற்கு மூலையில் இருந்த வெற்றுக் காணிக்குள் தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு மகாஜன ஏனைய பாடசாலைகள் போல் காலை தொடக்கம் பிற்பகல் வரை இயங்கக்கூடிய ஒரு பாடசாலையாக மீளவும் மாற்றியமைக் கப்பட்டது. பழைய இடத்தில் மகாஜனா எவ்வாறு இயங்கியதோ அதே பொலிவுடன் மீளவும் இயங்க ஆரம்பித்தது. இந்த இடத்தில்தான் அதிபர் திரு..நாகராசா அவர்கள் மகாஜனக் கல்லூரியின் இரண்டாவது ஸ்தாபகராகக் கணிக்கப்பட்டார். அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் மகாஜனன்கள் உள்ளவரை மறக்கப்படமுடீயாதவை. 1992இல் செல்வி.சா.தமிழினி கணிதத் துறையில் 4 எடுத்து யாழ் மாவட்டத்தில் 2ஆம் இடம் பெற்றார்.

மருதனார்மடத்தில் தற்காலிக கொட்டகைகள் அமைப்பதற்கு 6 இலட்சம் ரூபா தேவைப்பட்டது. மாணவர் அமைப்பு கலைவிழா நடத்தி 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சேர்த்துக் கொடுத்தார் கள். இலண்டன் பழைய மாணவர் சங்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அனுப்பியிருந்தார்கள். மிகுதிப்பணத்தை கனடா பழைய மாணவர் சங்கத்தினரும் புனர்வாழ்வுப் பகுதியினரும் கொடுத்து உதவியிருந்தார்கள். இதனால் மருதனார்மடம் சந்திக்கருகில்  52 வகுப்பறைகள் கொண்ட தற்காலிகக் கொட்டகைகளினால் பாடசாலை அமைக்கப்பட்டது. 14.02.1994இல் இருந்து இது இயங்க ஆரம்பித்தது. இப்புதிய பாடசாலையின் அமைப்பு அம்பனையில் இயங்கி வந்த மகாஜனாவின் அமைப்பாகவே இருந்தது. மத்தியில் மைதானம், சுற்றிவர வகுப்பறைகள், முன்பக்கத்தில் அதிபர்காரியாலயம், நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம், பாடசாலை நுழைவாயிலின் நேரே நடராஜர் ஆலயம் யாவும் அமையப்பெற்று புதுப்பொலிவுடன் காட்சியளித்தது. யாழ் மாவட்டத்தில் இது ஒரு சாதனையாகவும் அக்காலத்தில் கருதப்பட்டது.

இந்த தற்காலிக கொட்டகைகளில் 24.06.1994ஆந் திகதி நிறுவியவர் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை தலைவர் பேராசிரியர் .ஆறுமுகம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். நினைவுப் பேருரையை மகாஜன பழைய மாணவனும் மக்கள் வங்கி முகாமை யாளருமான திரு..கோபாலகிருஷ்ணன் அவர்கள் நிகழ்த்தினார். திருமதி செல்வராணி ஆறுமுகம் பரிசில்களை வழங்கிச் சிறப்பித்திருந்தார். பிரதம விருந்தினர் தமது உரையில் இக்குடில் என்னை வரவேற்க யான் என்ன மாதவம் செய்தேன் என்று கூறிய வார்த்தை எல்லோர் மனங்களையும் ஒரு முறை தொட்டுச் சென்றது. இவ்விழாவில் முத்தமிழ் நிகழ்ச்சிகளும், ஆங்கில கவிதை, நாடகங்களும் மிகக்கோலாகலமாக நடைபெற்றன. சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஆசியுரையை வழங்கியிருந்தார். அப்போது கல்லூரியின் மாணவர் தொகை 1816ஆகவும் ஆசிரியர் தொகை 77 ஆகவும் இருந்தமை ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் அதிபர் திரு .நாகராசா அவர்களுக்கு எல்லா மகாஜனன்களும் நன்றி கூறக் கடமைப்பட்டிருந்தனர். இக்காலப்பகுதியில் துர்க்கையம் மன் தேவஸ்தான நிர்வாகபீடம் இராமநாதன் கல்லூரியிலேயே இயங்கியது.

1995 நவம்பர் மாதத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசம் மாத்திரமல்லாமல் முழு வலிகாமப் பிரதேசமும் இடம் பெயர்ந்து தென்மராட்சி, வடமராட்சி, வன்னி போன்ற பகுதிகளுக்கு விரும்பாமலே வற்புறுத்தலின்பேரில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டமை எல்லோரும் அறிந்ததே. மகாஜனக் கல்லூரியும் இடம்பெயர்ந்து மட்டுவில் மகாவித்தியாலத்தில் கிட்டத்தட்ட நான்கு மாத காலம் மிகச் சிரமத்திலேயே இயங்க வேண்டியதாயிற்று. 1996 இல் மீண்டும் வலிகாமம் திரும்பினோம். மாணவர் தொகை 1064 ஆகவும் ஆசிரியர் தொகை 46 ஆகவும் வீழ்ச்சி கண்டது. 1995 இல் 57 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தனர். .பொ. சாதாரண தரப் பெறுபேறும் சிறப்பாக அமைந்திருந்தது. 1996 ஆம் ஆண்டு 117 மாணவர்கள் பல்கலைக்கழகத் தகுதி பெற்றனர். தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 13 மாணவர்கள் சித்தி பெற்றனர். 1996 இலேயே சாரணர் ஆசிரியர் திரு..காராளசிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில் சாரணர் அமைப்பின் வைரவிழா நடைபெற்றது. இதே ஆண்டில் ஆசிரியர் திரு நா.காளிதாசன் அவர்களால் சதுரங்கப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. 1997  இல் நிறுவியவர் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு நாகராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வாண்டில் .பொ. .தரப்பிரிவின் பெறுபேறுகளின் அடிப்படையில் செல்வன்.மா.ரூபவதனன் கலைப்பிரிவில் 4 எடுத்து மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். 1998 இல் 22 ஆண்டுகளுக்கு பின்பு மகாஜனன் மலர் வெளியிடப்பட்டது.

அதிபர் திரு நாகராசா அவர்களின் செயற்பாடுகளை அறிந்து வைத்திருந்த முன்னாள் அதிபர் திரு.பொ.கனகசபாபதி அவர்கள் நாகராசா அதிபரின் காலமும் கல்லூரியின் பொற்காலம் என்று எழுதியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

திரு..நாகராசா அவர்கள் 28.11.1998 இல் இளைப்பாறிய பின்பு இரசாயன வியல் ஆசிரியராக இருந்த திரு.பொ.சுந்தரலிங்கம் அவர்கள் 29.11.1998 இல் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரும் கல்லூரியின் பழைய மாணவராவார். அதிபர் திரு . நாகராசா அவர்கள் தனது கடமைகளை செவ்வனே செய்ய பேருதவி புரிந்தவர் திரு  பொ.சுந்தரலிங்கம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரு பொ. சுந்தரலிங்கம் அதிபராகப் பொறுப் பேற்ற பின்னர் திரு.செ.இராஜகுலேந்திரன் பிரதி அதிபராகக் கடமையாற்றி னார். அளவெட்டியைப் பிறப்பிட மாகக் கொண்ட திரு பொ.சுந்தரலிங்கம் அவர்கள் கிடைக்கும் பணங்களை சிக்கனமாகப் பயன்படுத்திய ஒருவர். பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோரது பின்புலங்களை அறிந்து செயற்பட்டவர். மகாஜனன் மலர் 10.06.1999இல் வெளிவர முயற்சி எடுத்திருந்தார். இதற்கு மலர்க்குழுப் பொறுப்பாசிரியர் விழிசிட்டி திரு.கா.சுப்ரமணியம் அவர்களும் ஆசிரியர் திரு.சு.சயந்தன் (பிரதி அதிபர்) அவர்களும் உறுதுணையாக இருந்தனர்.

நாட்டில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டு சமாதானப் பேச்சுக்கள் தொடர்ந்ததால் நாட்டில் ஓரளவு அமைதி இருந்தது. இக்காலப்பகுதியில் முன்னாள் ஆசிரியர் (மகாஜனன்) திரு..ஸ்ரீபாஸ்கரனின் ஆலோசனையுடன் மிகுந்த சிரமங் களுக்கு மத்தியில் 10 வருட இடப்பெயர்வின் பின்னர் எமது கல்லூரி மீண்டும் அம்பனையில் 15.09.1999 அன்று தொடக்கம் இயங்கத் தொடங்கியது. மகாஜனவின் கல்விப் பாரம்பரியங்களைத் தொடர மீண்டும் வாய்ப்புக் கிட்டியது. மகாஜனாவை நேசித்த திரு.சு.ஸ்ரீபாஸ்கரன் 26.10.1999 இல் காலமானார். இக்காலப்பகுதியில் மாணவர்களும் ஆசிரியர்களும் குறிப்பிட்ட ஒரு பாதை வழியாகவே கல்லூரிக்குச் செல்ல வேண்டியிருந்தது. இராணுவக் காவலரணில் அடையாள அட்டைகளைக் கொடுத்து விட்டு பின் வீடு செல்லும் போது பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. பாடசாலைச் சூழல் மிதிவெடி, கண்ணிவெடி போன்றவற்றால் நிறைந்து காணப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களும் மிகக் கவனமாக நடமாடவேண்டியிருந்தது. 2000, 2001 ஆண்டுகளில் கல்லூரியில் படிப்படியான முன்னேற்றங்கள் காணப்பட்டன. 2001இல் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியுடனான  Battle of the Hero’s வீரர்களின் போர் (துடுப்பாட்டம்) ஆரம்பிக்கப்பட்டது.

UNHCR உதவியுடன் சேதமடைந்த வகுப்பறைகளும் ஜயரத்தினம் மண்டப மும் திறந்தவெளி அரங்கும் திருத்தம் செய்யப்பட்டன. RAAN உதவியுடன் துரையப்பாபிள்ளை மண்டபமும் விஞ்ஞான ஆய்வு கூடமும் திருத்தம் செய்யப்பட்டன. அத்துடன் இருமாடிக் கட்டடத்தில் கீழ்மாடிக் கட்டடம் அமைத்து வகுப்பறைகளாக்கப்பட்டன. பழைய மாணவர் சங்கம் அபிவிருத் திச் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் மாணவர்களுக்கான குடிநீர் வசதி செய்யப்பட்டது. GTZ நிறுவன உதவியுடன் ஆண், பெண்களுக்கான தனித்தனி, வசதிகளுடன் கூடிய இரு மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன. கல்வித் திணைக்கள உதவியுடன் தரம் – 1 இற்கான வகுப்பறை செயற்பாட்டறை விவசாய அலகு ஆகியன கட்டப்பட்டன. கனடா பழைய மாணவர் சங்க நிதியுதவியுடன் ஒரு தொகுதி தளபாடங்கள் செய்யப்பட்டன. கட்டட ஒப்பந்த காரர் திரு..ஆறுமுகநாதன் அவர்கள் ஒரு தொகுதி தளபாடங்களை அன்பளிப்புச் செய்திருந்தார்.

2002இல் ஜயரத்தினம் மண்டபத்தின் கீழ்மாடி வகுப்பறை ஒன்று கல்வித் திணைக்கள உதவியுடன் கணனி அறையாக மாற்றியமைக்கப்பட்டது. கணினி வகுப்புக்களும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்பம் என்னும் பாடமும் ஆரம்பிக்கப்பட்டன. கணினிக் கல்வியைப் போதிப்பதற்கு கொழும்பு பழைய மாணவர் சங்க நிதியுதவியுடன் பழைய மாணவரான திரு..இராஜநாதன் நியமிக்கப்பட்டார்.

கல்லூரிக்கான தேவைகள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்ட போதிலும் பாடசாலைச் சுற்றாடலில் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. பாடசாலைச் சுற்றாடலில் வாழ்ந்த மக்கள் வெவ்வேறு இடங்களில் தற்காலி கமாக தங்கியிருந்தனர். மாணவர்களும் ஆசிரியர்களும் தூர இடங்களி லிருந்து .போ. பஸ் வண்டிகள் மூலம் கல்லூரிக்கு வந்து சென்றனர். பஸ் சேவையும் சீராக இருக்கவில்லை. காலையில் வந்த பஸ்கள் மாலையில் வருவதில்லை. பாடசாலைக்கு வந்த மாணவர்கள் பிற்பகலில் நடந்தே வீடு செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர். அதிபர் திரு பொ.சுந்தரலிங்கம் அவர்களும் பிரதி அதிபர் திரு செ.இராஜகுலேந் திரன் அவர்களும் எடுத்த முயற்சியின் பயனாக பாடசாலைச் சேவைக்கென 5 பஸ் வண்டிகளை போக்குவரத்துச்சபை அனுமதித்திருந்தது. இதனால் மாணவர்கள் உரும் பிராய், பண்டத்தரிப்பு, மானிப்பாய், உடுவில், கொக்குவில், இணுவில், கோண்டாவில், சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன் போன்ற இடங்களிலிருந்து வந்து கல்வி கற்றுச் சென்றனர். பழைய மாணவர்கள் குடும்பமாகவும் குழுக்களாகவும் தனியாகவும் கல்லூரிக்கு வந்து பிரச்சினைகளை நேரே பார்த்தும் அறிந்தும் சென்றனர்.

19.03.2003இல் பழைய மாணவர்களின் சர்வதேச மாநாடு கொழும்புக் கிளைச் சங்கத்தின் அனுசரணையுடன் கொழும்பில் நடத்தப்பட்டது. இதற்கு அதிபர், பிரதி அதிபர், கனிஷ்ட அதிபர் ஆசிரியர்கள் ஆகியோர் சமூகமளித் திருந்தனர். கல்லூரி வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்ததுடன் அத்திட்டங் களை நடைமுறைப்படுத்துவதற்கு பண உதவி செய்வதற்கும் முன்வந்தனர். இதனடிப்படையில் 2003ஆம் ஆண்டு பாவலர் சிலை மீண்டும் புதிதாக நிறுவப்பட்டது. இச்சிலையின் கீழ்ப்பகுதிக்கு மாணவர்கள் (1984) மாபிள்கள் பதித்து அழகுபடுத்தினர். 2003 இல் O.S.A -Germany உருவாக்கப்பட்டது.

NECORD பணிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய உயர் திரு..இலங்காநேசன் அவர்களினது அனுசரணையுடன் கட்டப்பட்ட இருமாடிக்கட்டடம் (எல்வடிவம்) (துரையப்பாபிள்ளை மண்டபத்திற்கு மேற்குப்புறம்பொ.சுந்தரலிங்கம்  தலைமையில் திரு.. இலங்காநேசன் அவர்களால் 24.06.2004 அன்று திறந்து வைக்கப்பட்டது. UNHCR உதவியுடன் குழாய்க்கிணறு, நீர்த்தாங்கி அமைக்கப்பட்டது.

பாவலர் மறைந்த 75ஆம் வருட பவளவிழா 2004 ஆகும். இதையொட்டி பிரான்ஸ் பழைய மாணவர் சங்கம் பவளமல்லி மலரை வெளியிட்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. அதைத் தொடர்ந்து பவளமல்லி  மலரை மகாஜனக் கல்லூரியின் தமிழ் மன்றம் வெளியீடு செய்து கொண்டாடியது. 2005 இல் பாவலர் அவர்களின் சிந்தனைச் சோலை எனும் நூலின் இரண்டாவது பதிப்பினை உலக பழைய மாணவர் சங்கம் 24.06.2005 அன்று வெளியீடு செய்தது. இதை அதிபர் தலைமையில் கல்லூரியிலும் வெளியீடு செய்து கொண்டாடப்பட்டது.

கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு முன்னாள் ஆசிரியரும் கொழும்பு பழைய மாணவர் சங்க போஷகரில் ஒருவருமாகிய திரு..பூ.முருகையா அவர்கள் உயர்தர மாணவர்களுக்கு ஒரு புலமைப்பரிசில் திட்டத்தினை 2005 இல் ஆரம்பித்து வைத்தார். இதனால் ஒவ்வோராண்டும் திறமையுடைய மாணவர்கள் 15 பேர் பயனடைகின்றனர்.

பழைய மாணவர் சங்கக் கிளைகளான கொழும்பு, பாரிஸ், கனடா, லண்டன், விக்டோரியா, சிட்னி என்பன காலத்திற்குக் காலம் கல்லூரியின் தேவைகளை அறிந்து பல வழிகளிலும் உதவி செய்தன. செய்தும் வருகின்றன. பாடசாலை அபிவிருத்திச் சங்கமானது பல அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டதோடு தரம் 1 9 வரையிலான மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்திலும் தமது பங்களிப்பினைச் செய்து வந்துள்ளன. இன்றும் தொடர்கிறது.

அரச சார்பற்ற நிறுவனங்களான UNHCR, GTZ, RAAN, NECORD போன்றனவும் அளவெட்டி, மல்லாகம், தெல்லிப்பழை  .நோ.கூ. சங்கங்களும் பாடசாலை யின் வளர்ச்சிக்கு உதவியிருந்தன.

அரசாங்க மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியுடன் துரையப்பாபிள்ளை மண்டப மேல்மாடி புனரமைப்பு வேலைகள் சுமார் 15 இலட்ச ரூபா செலவில் செய்யப்பட்டு 29.06.2006 இல் தெல்லிப்பளை பிரதேச செயலர் திரு..முரளிதரன், தெல்லிப்பளைக் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு..கைலாசநாதன் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது. இப்புதுப்பிக்கப்பட்ட மண்டபத்தில் நிறுவியவர் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு பொ.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அதிபர் திரு பொ.சுந்தரலிங்கம் அவர்கள் தனது கடமைகளை செவ்வனே செய்து 14.10.2006 இல் ஓய்வு பெற்றார். இக்கட்டான காலகட்டத்தில் கடமையாற்றிய பெருமை அவரையும் சாரும்.

15.10.2006 இல் திருமதி சிவமலர் அனந்தசயனன் அவர்கள் மகாஜனக் கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏற்றார். இவர் மகாஜனக் கல்லூரியின் முதலாவது பெண் அதிபரும் பாடசாலையின் 15 ஆவது அதிபருமாவார். இவர் அளவெட்டிக் கிராமத்தைச் சேர்ந்த சைவப்பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சார்ந்தவர். சிறந்த உயிரியல் ஆசிரியரும் ஆவார்.

கல்லூரி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையில் அமைந்திருந்ததால் பிரத்தியேக வகுப்புக்களை அதிபர் தனது வீட்டிற்கு முன்னே உள்ள தனது உறவினரது வீட்டை மகாஜனக் கல்லூரி வளாகம் எனப் பெயரிட்டு மாணவர்கள் விரும்பிய நேரங்களில் வசதியாகக் கல்வி பெற ஏற்ற ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். பாடசாலையின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சுவடுகள் என்ற மாதாந்த வெளியீட்டின் மூலம் எல்லோரும் அறியக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தார். 2007 இல் மகாஜனக் கல்லூரி கல்வி அபிவிருத்தி நிதியம் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு கல்வி அமைச்சின் சார்பாக பாராட்டுதல் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. இக் கல்வி அபிவிருத்தி நிதியம் மகாஜனக் கல்லூரி வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகக் கருதப்பட்டது. 24.06.2007 இல் நிறுவியவர் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திருமதி சி.அனந்தசயனன் தலைமையில் இடம் பெற்றது. 1998 இல் விஞ்ஞான மன்றத்தால் டிஸ்கவரி சஞ்சிகை வெளியிடப்பட்டது.

01.09.2008 இல் அதிபர் திருமதி சி.அனந்தசயனன் தலைமையில் மைதானத் திற்கு கிழக்குப் புறமாக உள்ள NECORD அனுசரணையுடனான இருமாடி விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு..விக்னேஸ்வரன் அவர்களால் நாட்டப்பட்டது. பின்னர் இவ் ஆய்வு கூடம் கல்வி அமைச்சர் கௌரவ .டி.சுசில் பிரேமஜயந்த அவர்களால் 09.12.2009 இல் திறந்து வைக்கப்பட்டது.

2010 இல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மண்டபங் கள் மீண்டும் புனரமைப்புச் செய்யப்பட்டன. இந்நூற்றாண்டு விழாவின் பிரதம விருந்தினராக .னு.காமினி சமரநாயக்க அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். இந்நூற்றாண்டு விழாவின் ஞாபகார்த்தமாக 18.06.2010 இல் முத்திரை வெளியீடு ஒன்றும் கல்லூரியில் நடைபெற்றது. இவ் வெளியீட்டினை தபால் தந்தித்தொடர்பு அமைச்சின் பணிப்பாளர் திரு.அசி நேசன் அவர்கள் வெளியிட்டு வைக்க (ரூபா.10) யாழ் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த பேராசரியர் நா.சண்முகலிங்கன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இதே ஆண்டில் 15 வயதின் கீழ் மாணவர்களுக்கான கிரிக்கெட் தொடரில் எமது கல்லூரி மாணவன் ஜெனந்தன் அவர்கள் புதிய சாதனையை நிலைநாட்டினார். அவர் 100 பந்துவீச்சுக்களில் ஆட்டமிழக்காமல் 151 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். எமது கரப்பந்தாட்ட வீராங்கனை மாணவி புகழரசி அவர்கள் இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்கான கரப்பந்தாட்ட அணியின் வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டு ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக வியட்னாம் நாட்டிற்குச் சென்று வந்துள்ளார். இவர் இலங்கைக் கரப்பந்தாட்ட அணிக்காக விளையாடிய முதல் தமிழ் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

மகாஜன சிற்பி ஜயரத்தினம் அவர்களின் துணைவியார் திருமதி. இராணி ரத்தினம் 08.06.2010 இல் அமரத்துவம் அடைந்தார். அதே ஆண்டில் அதிபர் திருமதி. சி.அனந்தசயனன் தலைமையில் 12.10.2010 இல் முன்னாள் அதிபர் அமரர்.ஜயரத்தினம் அவர்களின் சிலை திரைநீக்கம் செய்யப்பட்டதோடு தென்கிழக்கு மூலையில் இருந்த ஆய்வுகூடக் கட்டடம் புனரமைப்புச் செய்யப்பட்டு முன்னாள் அதிபர் சின்னப்பா அவர்களின் ஞாபகார்த்த நூலுகமாக 14.10.2010 இல் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் அதிபர் சின்னப்பா அவர்களின் ஞாபகார்த்த சிலை ஒன்றும் 29.10.2010 இல் திறந்து வைக்கப்பட்டது. 2010 இல் தேசிய பாடசாலைகளுக்கான மெய்வல்லுநர் போட்டியில் செல்வன். தே. மோகுநாத் கோலூன்றிப் பாய்தலில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் பெற்றார். இவ்வாண்டு தேசிய ஆங்கில தினப்போட்டியில் செல்வி . தரண்யா முதலாம் இடம் பெற்றார். அத்துடன் இவர் வடமாகாண ஆளுநர் அவர்களால் தெரிவுசெய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண் டார். மாகாணக்கல்வித் திணைக்கள உதவியுடன் பாடசாலை முழுவதும் மின்வசதியும் ஒலி அமைப்பும் செய்து தரப்பட்டன. இந்த அதிபருடைய காலப்பகுதியில் 07.03.2011 இல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கௌரவ கோத்தபாய ராஜபக்~ அவர்களின் வழிகாட்டலில் மைதானத்திற்கு வடக்கே உள்ள அம்பலவாணர் கந்தையா ஞாபகார்த்த மண்டபத்திற்கான (புதிய மூன்று மாடி) அடிக்கல் நாட்டப்பட்டது. இவரது காலப்பகுதியல் ஆரம்பப்பிரிவு விளையாட்டு முற்றம் அமைக்கப்பட்டது. பெயர் சூட்டப்படாதிருந்த மண்டபங்களுக்கு ராமசாமி மண்டபம், கனகசபாபதி மண்டபம், தம்புமண்டபம், சிவபாதசுந்தரனார் மண்டபம்,சோமசுந்தரம் மண்டபம், நாகராஜா மண்டபம், சுந்தரலிங்கம் மண்டபம், கிருஷ்ணபிள்ளை மண்டபம் என பெயர் சூட்டியிருந்தார். 07.07.2011 இல் அதிபர் சிவமலர் அனந்தசயனன் அவர்கள் ஓய்வு பெற்றார்.

அதிபர் திருமதி அனந்தசயனனை அடுத்து கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய திரு.சு.சயந்தன் அவர்கள் 08.07.2011இல் அதிபர் கடமையை ஏற்றார். இவரது காலப்பகுதியில் 01.08.2011 அன்று திரு.திருமதி ஆறுமுகம் தெய்வானைப்பிள்ளை நினைவாக திரு.திருமதி. தர்மலிங்கம் சிவகௌரி தேவி அவர்கள் கல்லூரியின் தென்மேற்கு மூலையில் இருந்த தமது வீட்டுடன் சேர்ந்த காணியை மகாஜனக் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்தார். இக்காலப்பகுதியிலேயே மைதானம் மண்ணினால் நிரப்பப்பட்டு சீர்செய்யப் பட்டது. 29.10.2011 இல் ஜயரத்தினம் தினமும் பரிசளிப்பு விழாவும் அதிபர் சயந்தன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக திரு. .சிறிகணநாதன் அவர்களும் நினைவுப் பேருரையை ஆற்றுவதற்காக திருமதி.பகீரதி, ஜீவேஸ்வரா, ராசனன் அவர்களும் வருகை தந்தார்கள். திரு.கு.வேல் சிவானந்தன் அவர்கள் மகாஜனக் கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏற்கும் வரை திரு.சு.சயந்தன் அவர்களே அதிபர் கடமையை நிறைவேற்றினார்.

02.11.2011 இல் திரு.கு.வேல்சிவானந்தன் அவர்கள் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் கல்லூரியின் பழைய மாணவரும், இக்கல்லூரியின் 17ஆவது அதிபருமாவார். சிறந்த முறையில் அளவையியலும் விஞ்ஞான முறையும் பாடத்தை கற்பிக்கும் ஆசான். மைதானத்தின் வடக்குப்புறத் தேயுள்ள அம்பலவாணர் கந்தையா ஞாபகார்த்த மண்டபத்தின் (புதிய மூன்று மாடி) திறப்பு விழா அதிபர் திரு.கு.வேல்சிவானந்தன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இக் கட்டடத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கௌரவ கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்தார். இக் கட்டடத்திற்கான ரூபா 25000000 பெறுமதியான நிதியினை தேசமான்ய ஹென்பாலேந்திரா அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

அதிபர் வேல்சிவானந்தன் அவர்கள் கல்லூரியைப் பொறுப்பேற்ற நாளிலிருந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பழைய மாணவர்களை ஒன்று சேர்த்து கல்லூரியின் அனைத்து விடயங்களிலும் பங்குபெறச் செய்தமை போற்றுதற்குரியது. எல்லோரையும் அரவணைத்துச் செயற்படும் பண்பு போற்றத்தக்கது. எந்தக் காரணத்தைக் கொண்டும் முன்வைத்த காலைப் பின்வைக்க மாட்டாதவர்.

12.07.2013இல் மகாஜனன் பேராசிரியர் சேர் சபாரட்ணம் அருட்குமரன் அவர்கள் எலிசபெத் மகாராணியிடம் சேர் பட்டம் பெற்றதையிட்டு அவர் கல்லூரிக்கு அழைக்கப்பட்டு அதிபர் திரு.கு.வேல்சிவானந்தன் அவர்கள் தலைமையில் பாவலர் துரையப்பாபிள்ளை மண்டபத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், வைத்தியர்கள். அவருக்கு கல்வி புகட்டிய முன்னாள் ஆசிரியை, நலன் விரும்பிகள் என பல்லோர் முன்னிலையில் அவருக்கு பாராட்டு நிகழ்வும் கௌரவிப்பும் இடம்பெற்றது.

2013 நவமகாஜன சிற்பி அமரர். தெ.து.ஜயரத்தினம் அவர்களது பிறந்த தின நூற்றாண்டு விழாவிற்கான ஆயத்தப் பணிகள் அதிபர் திரு.கு.வேல் சிவானந்தன் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் நூற்றாண்டு விழாச் சபை ஒன்று 28.04.2013 இல் அமைக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு இந்த நூற்றாண்டு விழாவானது அமரர் ஜயரத்தினம் அவர்களிடம் கற்று கல்லூரியில் முதல்வராய் உள்ள திரு.கு.வேல்சிவானந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறப்பம்சமாகும்.. இந்த இடத்தில் அமரர் ஜயரத்தினம் அவர்களைப் பற்றி Mas.V.Somasundaram  அவர்கள் குறிப்பிட்டவற்றை இங்கே குறிப்பிடுவது சாலப்பொருந்தும். The late Mr.T.T.Jayaratnam was a master planner. All functions at school were well planned……… He was a very good administrator………..’

2013இல் தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் செல்வி..டன்சிகா, செல்வன்.சி.டிலக்சன் ஆகியோர் கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும் செல்வி.ஜெ.அனித்தா கோலூன்றிப் பாய்தலிலும்,ஈட்டி எறிதலிலும் வெள்ளிப் பதக்கங்களையும் செல்வன்..அன்ரனிபிரசாத் கோலூன்றிப் பாய்தலில் வெண்கலப் பதக்கத்தையும் செல்வன்..டினுசன், செல்வன். .லக்ஸ் மன் ஆகியோர் வர்ண விருதுகளையும் பெற்றனர். செல்வி.ஜெ.அனித்தா இவர் அகில இலங்கை கனிஷ்; மெய்வல்லுநர் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். செல்வி.வி.சுசந்திகா பளுதூக்கல் (48 கி.கி) போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். செல்வி.பா.சானு 13 வயதுப் பிரிவில் ஆசிய மட்ட கனிஷ் உதைபந்தாட்ட போட்டியில் தேசிய அணியில் பங்குபற்றி யிருந்தார். 17 வயதுப் பெண்கள் பிரிவினர் கரப்பந்தாட்டப் போட்டியில்  மாகாண மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர். 15 வயதுப் பிரிவு பெண்கள் அணியினர் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர். செல்வன். ஜெ.ஜெனந்தன் சட்டவேலி நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். செல்வி.ஜெ.கலைவாணி தட்டெறிதலில் மாகாண மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். செல்வன்..கருணன் (ஆரம்பப் பிரிவு) திருக்குறள் மனனப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

ஜயரத்தினம் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரியில் கல்விக் கண்காட்சி, மருத்துவ முகாம், கலைஞர் கௌரவிப்பு போன்ற செயற்பாடுகளும் விளையாட்டு, மொழி, சமயம், கலை, படப்பிடிப்பு தொடர் பான போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகள் திறந்த போட்டியாகவும் (வயதுக் கட்டுப்பாடின்றி) மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அமைந்திருந்தன.

வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பணப்பரிசில்கள் வெற்றிக் கேடயங்கள் சான்றிதழ்கள் என்பன 2013 ஐப்பசி 15, 16, 17 ஆகிய தேதிகளில் கல்லூரியில் வைத்து வழங்கப்பட்டதுடன் அதே தேதிகளில் முறையே ஜயரத்தினம் ’‘மகாஜனன்’‘ நினைவுப் பேருரைகளின் தொகுப்பு ஆகிய மூன்று நூல்களும் வெளியிடப்பட்டன.

தேசிய மெய்வல்லுநர் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங் களை பெற்ற வெற்றியாளர்கள் 08.10.2013 அன்று தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் இருந்து மேலைத்தேய வாத்திய இசையுடன் கல்லூரிக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்இவ்விழாவில் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை பிரதிக்கல்விப் பணிப் பாளர் திரு.சத்தியபாலன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அப்போது அதிபர் திரு.கு.வேல்சிவானந்தன் அவர்கள் தலைமையில் கல்லூரி 1523 மாணவர்களுடனும் 71 ஆசிரியர்களுடனும் 5 கல்விசாரா ஊழியர் களுடனும் 19713.62 சதுர மீற்றர் பரப்பளவில் பெரிய விருட்சமாகி மாணவ சமூகத்திற்கு பயனளித்துக் கொண்டிருந்தது

2014.01.27 இல் திரு. மங்களம் மணிசேகரன் (மகாஜனன்) அவர்கள் மகாஜனக் கல்லூரி அதிபர் பொறுப்பை ஏற்றார். இவர் மகாஜனக் கல்லூரியின் 17 ஆவது அதிபர் ஆவார். சைவப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சார்ந்த இவர் சிறந்த இணைந்த கணித ஆசியராவார். இவர் மகாஜன மாதாவின் மடியிலே தவழ்ந்து மாண்புடை மனிதராய் உயர்ந்து மகாஜன அன்னையின் மலர்;ச்சிக்காக அரும்பணியாற்றி வருபவர். இவர் தரம் 6 முதல் இக்கல்லூரியில் கல்வி கற்றதுடன் இக்கல்லூரியின் ஆசானாக, உதவி அதிபராக, பிரதி அதிபராக இருந்து அயராது உழைத்தவர். மகாஜன மாதாவுடன் நீண்டகாலம் தொடர்புற்றிருந்த திரு. மங்களம் மணிசேகரன் அவர்கள் இக்கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏற்றமை கல்லூரி வளர்ச்சியில் ஒரு மைல்கல் ஆகும்.

16.01.2014 இல் கால்கோள் விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. 07.02.2014 இல் அதிபர் திரு. மங்களம் மணிசேகரன் தலைமையில் இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி மிக விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் பிரதம விருந்தினராக திரு.ரீ.தர்மகுலசிங்கம் (மகாஜனன், ழுளுயுஇலண்டன்) அவர்கள் கலந்து சிறப்பித்தார். இவ்வாண்டு எமது கல்லூரிக்கும் ஸ்கந்தவ ரோதயாக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற வீரர்களின் போர் மகாஜனக் கல்லூரி மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 05.06.2014 இல் கல்லூரியின் பெயரால் மேற்கொள்ளப்படும் திருக்கேதீச்சர 5ஆம் நாள் திருவிழாவில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 30.06.2014 இல் நாளைய தினத்தினை வெற்றி கொள்வோம் என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு தெல்லிப்பளைப் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்திப் பிரிவால் முன்னெடுக்கப்பட்டது.

24.06.2014 இல் நிறுவியவர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு.மங்களம் மணிசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ திரு..குருகுலராஜா அவர்களும், விசேட அதிதியாக வலிகாமம் கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.செ.சந்திரராஜா அவர்களும், கௌரவ அதிதிகளாக தெல்லிப்பழைத் துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களும், திருமதி..விமலதாசன் (மகாஜனன்) அவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திரு.அமிர்தலிங்கம் விமலதாசன் (மகாஜனன்) அவர்கள் வலைவாசிகள் (Netizens)  என்ற தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார்.

2014 இல் ஆசிரியர் தொகை 76 ஆகவும் மாணவர் தொகை ஆரம்பப்பிரிவில் 404 ஆகவும், இடைநிலைப் பிரிவில் 926ஆகவும், உயர்தரப் பிரிவில் 379 ஆகவும் மொத்தம் 1709 ஆக இருந்தது. 04.07.2014 இல் சிவகாமி சமேத ஆனந்த நடராஜப் பெருமானின் ஆனி உத்தர நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 25.07.2014 இல் கல்லூரியின் பெயரால் மேற்கொள்ளப்படும் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய 17ஆம் நாள் பகல் மற்றும் இரவுத் திருவிழா அதிபர் தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

கோட்ட, வலய மட்டப்போட்டி நிகழ்வுகள் மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 25.09.2014 இல் வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 26.09.2014 இல் 93 உயர்தரப் பிரிவு அணி அவுஸ்திரேலியா வாழ் மகாஜனன்கள் இணைந்து பல்லூடகத் தொகுதிகள் (Multi media)  இரண்டினை கல்லூரிக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கணினிக் கூடத்துடன் பல்லூடகத் தொகுதி ஏற்கனவே மகாஜனக் கல்லூரியின் இருந்தாலும் multimedia unit என்ற தனிப்பிரிவு இந்நிகழ்வுடனேயே ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மட்டக் கோலூன்றிப் பாய்தல் விளையாட்டு நிகழ்வில் 3.32அடி உயரம் பாய்ந்து மகாஜனக்கல்லூரி மாணவி செல்வி.ஜெ.அனித்தா 19 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் புதியதொரு சாதனையினை நிலைநாட்டி கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். 2014ஆம் ஆண்டுக்குரிய ஜயரத்தினம் நினைவு தினமும் கனிஷ்ட பரிசளிப்பு விழாவும் கல்லூரி அதிபர் திரு.மங்களம் மணிசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பொறியியலாளர் .சூரியசேகரன் (மகாஜனன்), சிறப்பு விருந்தினர்களாக யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.கவிதா நவகுலம் (மகாஜனன்) அவர்களும், தெல்லிப்பளைக் கோட்டக்கல்வி அலுவலர் திரு..சண்முககுலகுமாரன் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

2014இல் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட சிறுவர் நாடகப் போட்டியில் அன்பிற்காய் எனும் சிறுவர் நாடகமும், ரவர் மண்டபத் திரையரங்கு நடத்திய நாடகப் போட்டியில் அன்பிற்கும் உண்டோ எனும் நாடகமும் மாகாண மட்டத்தில் முதல் இடங்களைப் பெற்றுள்ளன. (இதுவே இறுதிப் போட்டி) இவ்வாண்டு நடைபெற்ற தமிழ் மொழித்தினப் போட்டியில் செல்வி. சு.சோபிகாபிரிவு இலக்கியத் திறனாய்வுப் போட்டியில் இரண்டாமிடத் தைப் பெற்றதுடன் தமிழறிவு வினாவிடை திறந்த போட்டியில் மூன்றாமிடத் தையும் மாகாண மட்டத்தில் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் மாகாண மட்டத்தில் 7 முதல் இடங்களும், 8 இரண்டாமிடங்களும், 10 மூன்றாமிடங்களும் கிடைத்துள்ளதுடன், தேசிய மட்டத்தில் 2 முதல் இடங்களும், இரண்டு இரண்டாமிடங்களும், 1 மூன்றாமிடமும் கிடைத்துள்ளன. அந்த வகையில் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் தேசிய நிலையில் 19 வயது பெண்கள் பிரிவில் 3.32 உயரம் பாய்ந்து செல்வி.ஜெ.அனித்தா, 21 வயது ஆண்கள் பிரிவில் 4.10அடி உயரம் பாய்ந்து செல்வன் P.ரிசோத் ஆகியோர் முதலாம் இடங்களையும், 19 வயது ஆண்கள்; பிரிவில் 3.90அடி உயரம் பாய்ந்து செல்வன்.சி.டிலக்சன், 19 வயது பெண்கள் பிரிவில் 2.50அடி உயரம் பாய்ந்து செல்வி.ளு.டிலானி ஆகியோர் இரண்டாமிடங்களையும் 21 வயது பெண்கள் பிரிவில் 2.62 உயரம் பாய்ந்து செல்வி.ளு.டன்சிகா மூன்றாம் இடத்தையும் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

2014 இல் இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளத்தால் நடத்தப்பட்ட 15ஆவது பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய நிலையில் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது டன் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய உதைபந்தாட்ட வெள்ளிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் 14 வயதுப் பெண்கள் உதைபந்தாட்ட தேசிய அணியில் செல்வி.பா.சாணு, செல்வி.சு.கௌரி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். எமது பாடசாலையைச் சேர்ந்த இரு பெண் உதைபந்தாட்ட வீராங்கனைகள் இலங்கை உதைபந்தாட்ட தேசிய அணிக்குத் தெரிவாகியமை மகாஜனக் கல்லூரியின் பெண்கள் உதைபந்தாட்ட அணியின் திறமைக்குச் சான்று பகர்கின்றது.

2015இல் இருந்து மகாஜனன்களின் ஒன்றுகூடல் நிகழ்வு மகாஜனக் கல்லூரியில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் உலகெங்கும் பரந்து வாழும் மகாஜனன்கள் கலந்து கொள்வதுடன் சாதனையாளர்கள் அச் சாதனையைப் பெற வைத்த பொறுப்பாசிரியர்கள் கௌரவிக்கப்படுவதுடன் மகாஜனவில் ஏலவே கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மகாஜனக் கல்லூரியில் அதிபர் வழிவந்த பழைய மாணவர் சங்க தலைமைத்துவம் அதிபர் மங்களம் மணிசேகரன் அவர்கள் இக்கல்லூரியில் அதிபர் பொறுப்பை ஏற்றதில் இருந்து பழைய மாணவர் சங்க தலைமைத்துவத்தை கல்லூரிக்கு வெளியே உள்ள ஒரு பழைய மாணவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டிருந்தார். இதன்படி முதலில் வைத்தியகலாநிதி.கந்தஞானியார் இளங்கோஞானியார் அவர்கள் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து வைத்தியகலாநிதி ஸ்ரீபவாநந்தராஜா (பிரதிப்பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை) அவர்கள் பழைய மாணவர் சங்க தலைவராக  செயற்பட்டார். இருந்த போதும் வலய மற்றும் மாகாண சுற்றுநிருபங்களை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படவே, பழைய மாணவர் சங்க தலைமைப் பொறுப்பை மீண்டும் கல்லூரி அதிபர் திரு.மங்களம் மணிசேகரன் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.

இவ்வாண்டில் இருந்தே விளையாட்டுத்துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு பயிற்சியின் போது சத்துணவை வழங்குவதற்காக சிட்னி O.S.A குறிப்பிட்டளவு நிதியை ஆண்டுதோறும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத் தக்கது.

2015இல் 225,881.05 இனை பிரான்ஸ் O.S.A  – உதவி தேவைப்படும் மாணவர்களுக்கான நலன்நிதியாக வைப்புச் செய்தது. இந்நிதி உதவிதேவைப்படும் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

04.12.2015இல் மாணவர் மகிழகம் என்ற அமைப்பு முன்னாள் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ ..குருகுலராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இதே ஆண்டு மேற்பிரிவு மாணவர்களுக்கான நூலகம் லண்டன் O.S.A  இன் அனுசரணையுடன் புனரமைக்கப்பட்டதுடன், பழைய மாணவர்களின் உதவியுடன் பல புதிய நூல்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

2015இல் ஆசிரியர் தொகை 70ஆகவும் மாணவர் தொகை ஆரம்பப் பிரிவில் 397 ஆகவும் இடைநிலைப் பிரிவில் 839 ஆகவும் உயர்தரப் பிரிவில் 487 ஆகவும் மொத்தம் 1723 ஆக இருந்தது. இவ்வாண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் மாகாண மட்டத் தில் 6 முதல் இடங்களையும் 7 மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளதுடன் தேசிய மட்டத்தில் கோலூன்றிப் பாய்தலில் 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு இடங்களையும் பெற்றுள்ளனர்.

தேசிய மட்டக் கோலூன்றிப் பாய்தல் விளையாட்டு நிகழ்வில் 4.42அடி உயரம் பாய்ந்து மகாஜனக் கல்லூரி மாணவன் செல்வன்.ளு.டிலக்சன் 19 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் புதிய தொரு சாதனையினை நிலைநாட்டியுள்ளார். அத்துடன் 21 வயது ஆண்கள் பிரிவில் செல்வன். .ரிசோத் 4.00 உயரம் பாய்ந்து தேசிய நிலையில் 1ஆம் இடம் பெற்றுள்ளார். அதேபோல் கோலூன்றிப் பாய்தலில் 19 வயது, 15 வயது பெண்கள் பிரிவில் முறையே 3.20 உயரம் பாய்ந்து செல்வி.ஜெ.அனித்தாவும், 1.49 உயரம் பாய்ந்து செல்வி..ஹரினா வும் தேசிய நிலையில் 2ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

இதேயாண்டு இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளத்தால் நடாத்தப்பட்ட 15வயது பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய நிலையில் 1ஆம் இடம் கிடைத்துள் ளது. அத்துடன் கஜகஸ்தான் மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற ஆசிய உதைபந்தாட்டப் போட்டி மற்றும் தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் 14 வயது தேசிய அணியில் செல்வன்.ஞா.கஜானன், செல்வி.சு.கௌரி (உபதலைவி) செல்வி.சி.தர்மிகா ஆகியோர் இடம்பிடித் திருந்தனர். இலங்கையின் தேசிய அணியில் தமிழ்ப்பெண் மாணவி ஒருவர் அணியின் உபதலைவியாக இருந்தமை எமது கல்லூரிக்கு கிடைத்த ஒரு பெருமையாகும்.

இதேயாண்டு சர்வதேச மட்டத்தில் 10 12 வயதுப் பிரிவு மாணவர்களுக் கிடையே மலேசியா வில் நடத்தப்பட்ட அனைத்துலக மாணவர் முழக்கம் எனும் பட்டிமன்ற நிகழ்வில் தரம் 7 சேர்ந்த செல்வன் .வித்தகன், செல்வி லி.தீபிகா, செல்வி ஜெ.ரேகா ஆகியோர் பங்குபற்றி 3ஆம் இடம் பெற்றுள்ளதுடன் செல்வன்..வித்தகன் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர் எனும் பட்டத்தையும் பெற்றமை கல்லூரிக்கு பெருமை சேர்த்த விடயமாகும்இம்மாணவர்களை மலேசியாவிற்கு அழைத்துச் சென்ற வகையில் ஆசிரியர் திருமதி சாரதா ஜீவானந்தன் மற்றும் ஊவா வெல்லச பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு ரூபவதனன் ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்அத்துடன் அரச நடன விழா போட்டியில் மேற்பிரிவில் செல்வி..லோஜினி மாகாண மட்டத்தில் 3ஆம் இடம் பெற்றுள்ளார்.

2015இல் விஞ்ஞான சங்கத்தால் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் கி.விஷ்ணுகா தங்கப்பதக் கத்தையும் .குகவர்மன் வெண்கலப்பதக்கத் தையும் பெற்றுள்ளனர். இதேயாண்டு இடம்பெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியில் செல்வி.ஸ்ரீ.கபிலா மாகாண மட்டத்தில் தெரிவாகி தேசிய மட்டத்தில் பங்குபற்றினார்.

2015இல் உலகெங்கும் பரந்துவாழும் மகாஜனன்களை உள்ளடக்கிய உலகளாவிய மகாஜனக் கல்லூரிப் பழைய மாணவர் வலையம் (Global Network of Mahajanas (GNM)’  2015 டிசெம்பரில் உருவாக்கப்பட்டது. இந்த வலையத்தில் தெல்லிப்பழைச் தாய்ச் சங்கம் கொழும்பு மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், மகாஜனக் கல்லூரி கல்வி அபிவிருத்தி நிதியம், பிரித்தானிய மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், கனடா மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்அவுஸ்திரேலியா, அவுஸ்திரேலிய மகாஜனன்கள் (மெல்போர்;ன்), பிரான்ஸ் (பரீஸ்) மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆகிய பழைய மாணவர் சங்க அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன. இவ் புN அமைப்பின் மூலம் மகாஜனக் கல்லூரியின் அன்றாட தேவைகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு, திட்டமிடல் மூலம் கல்லூரிக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொடுத்தலில் கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது. அத்துடன் இக்கல்லூரியின் வரலாற்றுப் பொக்கிஷங் களைப் பேணுவதிலும் அவற்றை ஆவணப்படுத்துவ திலும் கல்லூரியின் எதிர்காலம் பற்றி கலந்துரையாடுவதும் அடுத்த 20 வருடத்திற்கான மூலோபாயத் திட்டத்தை (Strategic Plan – Master) வரைவதிலும் இவ் வலைத்தளம் கவனம் செலுத்தி வருகின்றது.

08.01.2016 இல் எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்கள் பதவியேற்று முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பாடசாலை வளாகத்தில் மரம் நடுகை விழா தெல்லிப்பளை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.ளு.சிவபாலன் தலைமையில் இடம்பெற்றது. 19.02.2016 இல் எமது கல்லூரிக்கும் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையில் நடைபெறும் வீரர்களின் போர் மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வடமாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு..ரவீந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கல்லூரியின் விசுவாசியும் மகாஜனக் கல்லூரியின் அபிவிருத்தியில் தூர நோக்கும் கொண்ட திரு..செல்வஸ்கந்தன் அவர்களால் எட்டு லட்சம் ரூபா பெறுமதியு டைய துடுப்பாட்டப் புள்ளிப் பலகை ஒன்று அமைத்துத்தரப்பட்டது.

18.03.2016 இல் சாந்தியகம் நிறுவத்தினரால் யுNNகுசுயுNமு இன்றைய நாளில் ஓர் வரலாறு என்ற தொனிப் பொருளிளலான கண்காட்சி அதிபர் திரு.மங்களம் மணிசேகரன் தலைமையில் இரு நாட்களாக முன்னெடுக்கப் பட்டது. இந் நிகழ்வில் கல்லூரியின் அனைத்து மாணவர்களும் பங்குபற்றி பயன்பெற்றிருந்தனர். 01.04.2016 இல் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளரால் .பொ. உயர்தர தொழில்நுட்பப் பிரிவு எமது கல்லூரியில் ஆரம்ப்பிப் பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

கல்லூரியின் வடகிழக்கு மூலையில் அமைந்திருந்த 6 பரப்புக் கொண்ட காணியை லண்டனில் வசிக்கும் னுச.தேவகுஞ்சரிநாதன் அவர்கள் 31.05.2016 இல் சட்டத்தரணி சிவபாதம் முகதாவில் 1500000 ரூபாவிற்கு எழுதிக்கொள்ளப் பட்டு கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இதில் 3 பரப்பை சின்னத்துரை இரத்தினசிங்கம் கைம்பெண் அம்பிகைபாலதேவியும், 2 பரப்பை சங்கரப் பிள்ளை சந்திரபாலனும் பெண் மதிவேனிலும், ஒரு பரப்புக் காணியை அருணாசலம் சத்தியபவானும் பெண் மோகனாவும் வழங்கியிருந்தனர்.

2016 இல் இருந்து ரு.மு மாணவர் நலன்நிதி மூலம் 30 மாணவர்களுக்கு வருடம் ஒன்றில் மாதம் ரூபா. 1000ஃஸ்ரீ வீதம் நிதியுதவி வழங்கி வருகிறது. அத்துடன் பிரான்ஸ் ழு.ளு.யுயும், 30 மாணவர்களுக்கு வருடம் ஒன்றில் மாதம் 1000 வீதம் பத்து மாதங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியை அண்மித்த மாணவர் களுக்குரிய ஊக்குவிப்பு நிதி ஒன்றினை பிரான்ஸ் OSA வழங்கி வருகிறது.

15.07.2016இல் ஜேர்மனிய பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் யாழ்ப்பாண சாந்தியகத் திற்கு வருகை தந்தபோது பாடசாலைகளில் மாணவர்களுடைய நடத்தைகள் தொடர்பான வேலைத்திட்டங்களை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதனை ஆய்வு செய்யும் முகமாக சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட பாடசாலையாக உளவளநிபுணத்துவ ஆலோசகரான திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களின் பரிந்துரையின் பேரில் எமது பாடசாலையின் மகிழகம் அம்மாணவர்களது ஆய்வுக்குட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்க அமிசமாகும்.

எமது கல்லூரி ஆசிரியரான திரு.சி.சுபாஸ்கரனின் முயற்சியாலும் 2016 இல் தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தலில் தொடர் சாதனை படைத்து வந்த செல்வி.ஜெ.அனித்தாவின் திறமையாலும் ரூ.1000000 பெறுமதியான கோலூன்றிப் பாய்தலுக்கான மெத்தைத் தொகுதி ஒன்று கல்லூரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 92 உயர்தர அணி மாணவர்களது முயற்சியால் நடமாடும் கொட்டகை ஒன்று விளையாட்டுத்துறைக்குரிய மெத்தைத் தொகுதியின் பாதுகாப்பிற் கெனவும் கல்லூரியின் ஆலய பயன்பாட்டிற்கும் அமைத்துத் தரப்பட்டது.

26.09.2016 இல் சுகாதார மேம்பாடு சம்பந்தமாக மீளாய்வு செய்வதற்கு அளவெட்டி, மல்லாகம், தெல்லிப்பளை பொது சுகாதார பரிசோதகர் கல்லூரி வளாகத்திற்கு வருகை தந்து நேரடிக் கண்காணிப்பிற்குட்படுத்தி கல்லூரிக்கு 81100 புள்ளிகள் வழங்கியதுடன் நினைவுக்கேடயம் ஒன்றையும் வழங்கியிருந்தமை கல்லூரியின் சுற்றாடல் தூய்மைக்கும் நேர்த்திக்கும் சான்றாகின்றது.

16.09.2016 இல் யாழ்ப்பாண கியூமெடிக்கா சர்வதேச பாடசாலை நிர்வாகத்தினர் எமது கல்லூரிக்கு வருகை தந்து மாதிரி மகிழக நிர்மாணிப் புக்காக எமது மகிழகத்தைப் பார்வையிட்டு நெடுந்தீவு மகாவித்தியால மகிழக அமைப்பிற்கு எமது மகிழகத்தை முன்னோடியாகக் கொண்டிருந் தமை பாடசாலை மகிழக சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. 08.09.2016 இல் மூதூர் கல்வி வலய அதிபர்களின் பாடசாலைத் தரிசிப்பின் போது வலிகாமம் கல்வி வலயத்திலிருந்து மாதிரிக்குத் தெரிவு செய்யப்பட்ட எமது கல்லூரிக்கு 50ற்கு மேற்பட்ட அதிபர்கள் வருகை தந்து பாடசாலையின் சிறப்பான செயற்பாடுகளை பார்வையிட்டு பதிவு செய்துள்ளனர்.

23.10.2016 இல் நடைபெற்ற பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் 25 ஆவது வெள்ளிவிழா நிகழ்வை முன்னிட்டு அவர்களது அழைப்பின் பெயரில் அதிபர் திரு.மங்களம் மணிசேகரன் அவர்கள் பிரதம விருந்தினராக பிரான்ஸ் மண்ணில் கலந்து சிறப்பித்துள்ளார்.

2016இல் ஆசிரியர் தொகை 74 ஆகவும் மாணவர் தொகை ஆரம்பப்பிரிவில் 393 ஆகவும் இடைநிலைப் பிரிவில் 859 ஆகவும் உயர்தரப் பிரிவில் 454 ஆகவும் மொத்தம் 1706 ஆக இருந்தது.

2016இல் நடைபெற்ற தமிழ் மொழித் தினப் போட்டிகளில் சி.வர்ணிகா இலக்கியத்திறனாய்வு பிரிவு ஐஏ இல் தேசிய நிலையில் 1ஆம் இடமும், வி.துஷ்ன்ஜா பிரிவு II வாசிப்பில் மாகாண மட்டத்தில் 1ஆம் இடமும் சி.சிவானுஜன் பிரிவு II பேச்சில் மாகாண மட்டத்தில் 2ஆம் இடமும் பெற்றுள்ளனர்.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் மாகாண மட்டத்தில் 11 முதலிடங்களும் 10 2ஆம் இடங்களும் 4 3ஆம் இடங்களும் கிடைத்துள்ளதுடன் தேசிய மட்டத்தில் 2 முதலிடங்களும் 2 2ஆம் இடங்களும் 3 3ஆம் இடங்களும் கிடைத்துள்ளன. அந்த வகையில் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் 17 வயதுப் பிரிவில் 2.70 உயரம் பாய்ந்து .ஹரினா 1ஆம் இடத்தையும் 21 வயதுப் பிரிவில் 3.30 (புதிய சாதனை) உயரம் பாய்ந்து செல்வி.ஜெ.அனித்தா 1ஆம் இடத்தையும் 20 வயதுப் பிரிவில் 4.30 உயரம் பாய்ந்து சி.டிலக்சன் 2ஆம் இடத்தையும் அதே பிரிவில் 2.80 உயரம் பாய்ந்து சி.டிலானி 2ஆம் இடத்தையும் தேசிய மட்டத்தில் பெற்றுள்ளனர். அத்துடன் 17 வயதுப் பிரிவில் .ஹரினா 1.50 உயரம் பாய்ந்து உயரம் பாய்தலில் 3ஆம் இடத்தையும் 21 வயதுப் பிரிவில் ஜெ.அனித்தா 30.99 தூரத்திற்கு ஈட்டி எறிந்து ஈட்டி எறிதலில் 3ஆம் இடத்தையும் 16.4 செக்கனில் 100 சட்டவேலி நிகழ்வில் 3ஆம் இடத்தையும் தேசிய நிலையில் பெற்றுள்ளனர். அத்துடன் இதே ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் 15வது ஆண்கள் தேசிய அணியில் வி.கஸ்ரோ இடம்பிடித்துள்ளார்.

17.02.2017 இல் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் வீரர்களின் போர் துடுப்பாட்ட நிகழ்;வு இடம்பெற்றது. 16.06.2017 இல் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நிதி ஆலோசகரான திரு பாஸ்கரலிங்கம் அவர்களின் முயற்சியால் வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.செ.சந்திரராஜா முன்னிலையில் மாகாணக்கல்விப் பணிப்பாளரின் நிரல் கல்வி அமைச்சால் ஒதுக்கப்பட்ட நிதியில் 35 இருக்கைகள் கொண்டNP-NC  9835 இலக்கமும் EFEZ 207876 இயந்திர இலக்கமும்,ஆடீ PநுநுயுயுஐகுநுசுழுழுMB PEEAAIFEROO சட்ட இலக்கமும் கொண்ட பேருந்து வண்டி எமது கல்லூரிக்கு வழங்கப்பட்டது. இதே ஆண்டு மகாஜனக் கல்லூரி அபிவிருத்தி நிதியத்தால் பேருந்துக் கொட்டகை ஒன்று அமைத்துத் தரப்பட்டதுடன் லண்டன் பழைய மாணவர் சங்கத்தினர் 490,000/= செலவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தரிப்பிடம் ஒன்றினையும் அமைத்துத் தந்துள்ளனர்.

இதே  ஆண்டு கல்லூரியின் மேற்குப்புறத்தே உள்ள காணி ஒன்று மைதான விஸ்தரிப்பின் பொருட்டு கொள்வனவு செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கல்லூரியின் வடகிழக்கு மூலையில் உள்ள கூரைகள் துடுப்பாட்ட நிகழ்வில் போது சேதமடைவதைத் தவிர்ப்பதற்காக பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டது.

17.07.2017 இல் மத்திய மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர்கள் எமது கல்லூரிக்கு வருகை தந்து பாடசாலை செயற்பாடுகளையும் நிர்வாகக் காட்சிப்படுத்தல் செயற்பாடுகளையும் மகிழக செயற்பாடுகளையும் பார்வையிட்டு பாடசாலையின் அழகிய சுற்றுப்புறச் சூழலை பார்வையிட்ட தில் தாம் பெருமையடைவதாகவும் பாடசாலை மகிழக சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

29.07.2017 இல் உலக மகாஜனன்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றது. 30.07.2017 இல் மகாஜனக் கல்லூரியின் 1வது காங்கேசன்துறை சாரணர் துருப்பின் அமுத விழாவும் பாசறைத் திறப்பு விழாவும் அதிபரும் குருளைச் சாரணத் தலைவருமான திரு..மணிசேகரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காங்கேசன்துறை சாரணர் மாவட்ட ஆணையாளர் திரு.செ.சற்குணராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் முன்னாள் திருகோணமலை மாவட்ட ஆணையாளரும் ஜனாதிபதி சாரணருமான திரு..இராஜரஞ்சன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித் தனர். அன்றைய தினம் மகாஜனக் கல்லூரியின் சாரணர் துருப்பின் அமுதவிழாவும் மலர்வெளியீடும் விருது வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது. இம்மலர் வெளியீடும் விருது வழங்கல் நிகழ்வில் பேடன்பவல் விருதுச் சாரணரும் ஐக்கிய இராட்சியம் பழைய மாணவர் சங்க உறுப்பினருமான திரு.சி.கணேசலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் கல்விவலய திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.சு.தேவமனோகரன் அவர்களும் கனடா பழைய மாணவர் சங்க உபதலைவரும் பேடன்பவல் விருதுச் சாரணருமான திரு..இரவீந்திரன் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு..சௌந்தரராஜன் முன்னாள் மகாஜன இராணிச் சாரணன், ஆணையாளர், தலைமைக் காரியாலயம், இலங்கைச் சங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். 2017 இல் தரம் 1 2 மாணவர் களைக் கொண்ட சிங்கிதி சாரணர் அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது. வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் மகாஜனக் கல்லூரியில் மட்டுமே சிங்கிதி சாரணர் அமைப்பு முதன் முதலில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அரச சிறுவர் நாடக விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வாழ்வதற்கே தேசம் என்ற நாடகமும் அன்பிற்காய் என்ற நாடகமும் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றதுடன் அன்பிற்காய் நாடகம் 20 விருதுகளைப் பெற்று அனைவரது பாராட்டையும் பெற்றது. அத்துடன் இவ்வாண்டு கொழும்பு றோயல் கல்லூரியில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியிலும் தேசிய நிலையில் 2ஆம் இடம் கிடைத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற யப்பான் மற்றும் தெற்காசிய (இலங்கை, பூட்டான், நேபாளம்) தேசிய அணி உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றி இலங்கையின் 16 வயது ஆண்கள் தேசிய அணியில் .தனுஜன் இடம்பிடித் ததுடன் இவர் இதேயாண்டு பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியிலும் சவுதிஅரேபியாவில் நடைபெற்ற ஆசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியிலும் 15 வயது ஆண்கள் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளமை கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.

2018 இல் மகாஜனாவின் உதைபந்தாட்ட சரித்திரம் மீண்டும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. எமது கல்லூரியின் .யக்ஷ்ன் தலைமையிலான 20 வயது ஆண்கள் அணி கல்வியமைச்சினால் நடத்தப்பட்ட அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனாகிச் சரித்திரம் படைத்தது. அணித்தலைவர் .யக்ஷன் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாகவும், அணியின் உபதலைவர் .கனுஜன் சுற்றுப்போட்டியின் தொடர்நாயகனாகவும் தெரிவாகினர். 40 வருடங்களின் பின்னர் இம்முறை மகாஜனக் கல்லூரியின் ஆண்கள் அணி தேசியத்தில் சம்பியனாகியது.

அரசாங்கத்தின் பரிந்துரையினால் அதிபர் விடுதி அமைத்துத் தரப்பட்டது. இந்தக் கட்டட நிர்மாணப்பணிகளை கல்லூரியின் பழைய மாணவரும் பொறியியலாளருமான திரு.சி..உருத்திர லிங்கம் அவர்கள் அமைத்துத் தந்துள்ளார். இவ்வதிபர் விடுதியின் தென்மேற்கு மூலை முகப்பு மதிலினை அமைப்பதற்கு லண்டனில் வசிக்கும் திருமதி.தேவகுஞ்சரிநாதன் அவர்கள் உதவியுள்ளார். 12.02.2018 இல் சமய முறைப்படி கிரியைகள் நிகழ்த்தப்பட்டு கல்லூரிப் பயன்பாட்டிற்காக இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதத்தில் சுற்றுப்புறச் சூழல் தினம் தொடர்பான சுலோகம் ஆக்கல் போட்டி நடத்தப்படுவதுடன் தீபாவளியை முன்னிட்டு சிவபூமியில் மாணவர்களது நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் பழைய மாணவர் சங்கமும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் இணைந்து வருடா வருடம் ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களைக் கௌரவித்து வருகின்றது.

இவ்வாண்டில் கனடா பழைய மாணவர் சங்கத்தால் எமது அதிபர் திரு. .மணிசேகரன் அவர்கள் கனடாவிற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டார்.

பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் 15ஆவது பெண்கள் தேசிய அணியில் ஜெ.ஜெதுன்சிகா, சி.தவப்பிரியா, கு.யோகிதா ஆகியோர் இடம்பிடித்துள்ளது டன் கொழும்பில் நடைபெற்ற ஆசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் 15வயதுப் பெண்கள் தேசிய அணியிலும் இம்மாணவிகள் மூவரும் இடம்பிடித்துள்ளமை கல்லூரியின் உதைபந்தாட்ட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

இலங்கை அரசின் தேசிய கொள்கைக்கமைவாக 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் திட்டத்திற்கமைவாக 2021-01-01ஆம் நாளிலிருந்து தேசிய பாடசாலையாக உள்வாங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகாஜனக் கல்லூரியில் கடமையாற்றிய அதிபர்கள்.

இல       அதிபர்களின் பெயர்கள்         இருந்து                 வரை
01    பாவலர் தெ..துரையப்பாபிள்ளை   1910-10-14       1929-06-24
02    திரு.கா.சின்னப்பா  1929-06-25       1945-05-19
03    திரு.தெ.து.ஜயரத்தினம்; 1945-05-20      1970-12-31
04    திரு.மா.மகாதேவன் 01.01.1971 1972-05-06
05    திரு.பொ..குமாரசாமி   1972-06-06   1973-07-10
06    திரு..இராமசாமி   Letter part of  1979
07    திரு.சு.சுப்பிரமணியம்     1973-07-11   1976-05-24
08    திரு.பொ.கனகசபாபதி    25.05.1976   1979-11-30
09    பிரம்மஸ்ரீ.மு.இரத்தினேஸ்வரஜயர்    1979-12-01   1980-0-30
10    திரு..சோமசுந்தரம்  1980-07-01   1983-06-11
11    திரு ரீ.சண்முகசுந்தரம்;    1983-06-12 1984-07-31
12

திரு.வே.கந்தையா

1984-08-01.   1985-12-03
13    திரு..நாகராசா     1985-12.04.   1998-11-28
14    திரு.பொ.சுந்தரலிங்கம் 1998-11-29   2006-10-14
15 

திருமதி சிவமலர் அனந்தசயனன் 

2006-10-15   2011-07-07
16    திரு.சு.சயந்தன்;      08.07.2011   2011;-10-02
17  

திரு.கு.வேல்சிவானந்தன்

2011;-11-02   2014-01-26
18

திரு.மங்களம் மணிசேகரன்

   2014-01-27   இன்று வரை

இத்தொகுப்பினை  நிறைவேற்றுவதற்கு  மகாஜனாவின் முதல்வர் திருமிகு மங்களம் மணிசேகரன் அவர்களுக்கும் கல்லூரியின் சித்திரபாட ஆசிரியர் திரு தி.பகிரதன் அவர்களுக்கும் யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடத்தினரின் மனமார்ந்த நன்றி.

உலகெங்கும்  பரந்து   வாழும்  மகாஜனன்களுக்கு யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடத் தினரின் அன்பான  வேண்டுகோள்.

யாழ்ப்பாண வாழ்வும் வளமும் சார்ந்த நூற்றாண் டுப் புலமைகளின் தேடல்களை ஆவணப்படுத்தி அடுத்த சந்ததியினருக்கு கையளிக்கும்  தன்னார்வ அமைப்பாக மரபுரிமைகளை ஆவணப்படுத்து வதில் ஆர்வமுடையவர்கள் ஒன்றிணைந்து  இவ் அமைப்பினை உருவாக்கி செயற்பட்டு வருகின் றோம். இவ்வமைப்பின் செயற்பாடுகளை தரமான தாகவும் உறுதிப்பாட்டுனும் செயற்படுத்துவதற்கு  எமக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுகின்றன. எமக்கு உதவக்கூடிய மகாஜனன்களின் ஆதரவுக் கரத்தினை வேண்டி நிற்கின்றோம்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!