Thursday, July 25

கலைஞானி தம்பையா ராஜகோபாலன். (அப்புக்குட்டி)

3

அறிமுகம்

ஈழத்தின் கலைத்துறை வரலாற்றில் அப்புக்குட்டி ராஜகோபாலன் என்னும் பெயர் எவராலும் மறக்கப்பட முடியாததொன்றாகும். கோமாளிகள் திரைப்படம் ஈழத்துத் திரையுலகில் தனி முத்திரை பதித்ததொன்றாகும். அப்புக்குட்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தமையினால் அவரது பெயருக்கு முன்னால் அப்புக்குட்டி என்ற பெயர் நின்று நிலைக்கலாயிற்று. நடிகனாக, நாடக தயாரிப்பாளனாக, வானொலிக்கலைஞனாக, திரைப்படத்துறையின் ஆளுமையாளனாக பன்முக வகிபாகமுடைய அப்புக்குட்டி அவர்கள் தற்பொழுது புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வருகின்றார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்குப் பகுதியில் ஆனைக்கோட்டை என்னும் இடத்தில் யோகமனை என்ற இல்லத்தில் வாழ்ந்த ஆசிரியர் திலகம் தம்பையா சிவயோகாம்பிகை தம்பதிகளின் நான்காவது புதல்வனாக பத்து சகோதரர்களுடன் 1942-10-04ஆம் நாள் பிறந்தவர்.

 தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் ஆரம்பித்தார். பின்னர் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் உயர்தரம் வரை கற்று கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி;யில் 1960 – 1962 காலப்பகுதியில் தொழில்நுட்பக் கற்கைநெறியில் பயின்று தொழில்நுட்பவியலாளராக வெளியேறி னார். 1963ஆம் ஆண்டு கொழும்பு colonial motors ltd நிறுவனத்தில் இணைந்து வர்த்தக முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகியது எனலாம்.

1974ஆம் நாள் திருமண வாழ்வில் இணைந்து கொண்ட இவர் இரண்டு பெண்பிள்ளைச்; செல்வங்களைப் பெற்று அவர்களையும் கல்வியிலும் வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையில் வாழ வைத்து ஒரு தந்தையின் கடமையினை செவ்வனெ நிறைவேற்றியுள்ளார்.

 உலகறிந்த கலைஞனாக அப்புக்குட்டி ராஜகோபாலன்.

பாடசாலைக் காலத்தில் 9 வயதில்; நாடகத்தினூடாக ஆரம்பித்து கலைத்துறையில் தடம் பதித்த கலைஞனாக பார்போற்றும் கலைஞனாக மேற்கிளம்பினார். கல்லூரி விழாக்களில் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் நடித்து அனுபவங்களை வளர்த்துக் கொண்டார். பாடசாலை, கல்லூரி தவிர்ந்த வெளிவாரியாக கலைமன்றங்களால் குறிப்பாக மற்றும் மானிப்பாய் மறுமலர்ச்சி மன்ற நாடகத் தயாரிப்புகளில் பங்கு கொண்டார். கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால்  1959இல் தயாரிக்கப்பட்ட தேரோட்டிமகன் நாடகத்தில் நடித்ததன் மூலம் நாடகத்தில் புதிய அனுபவங்களைப் பெற்றார். மேலும் மூத்த கலைஞர் அமரர் ஏ. ரகுநாதன் அவர்களுடன் இணைந்து நடித்தார்.

1967 ஆடி 26ஆம் திகதி இலங்கை வானொலியில் கலைஞராக இணைந்தார். இதனூடாக தன்திறமைகளை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டார்.  1967ஆம் ஆண்டிலிருந்து 1995ஆம் ஆண்டு வரை மேடை, வானொலியினூடாக பல்வேறு நாடகங்களைத் தயாரித்துப் புகழ்பெற்றார். அந்த வகையில்———- 

புரோக்கர் கந்தையா.

மஞ்சள் குங்குமம்.

நீ இல்லையேல்

மனித தர்மம்.

சுமதி.

கருப்பும் சிவப்பும்.

றூப்புத்தொரா மஸ்த்தானா

காதல் ஜாக்கிரதை.

கலாட்டா காதல்.

கலையும் கண்ணீரும்.

வானொலித் தொடர்.

சத்தியவான் சாவித்திரி 

காற்றோடு கலந்தது.

விண்வெளியில் கோமாளிகள்

ஆலமரத்தடி வீடு

கிராமத்துக் கனவுகள்.

அரிச்சந்திர மயாணகாண்டம். அமரர் நடிகமணி வி வி வைரமுத்து அவர்களுடன் அயலாத்துப் பிள்ளையாக நடித்துள்ளார்.

இலங்கை வானொலியில் தொடராக ஒலிபரப்பப்பட்ட நாடகங்களில் பங்கு கொண்ட பெருமைக்குரியவர். பின்வரும் தொடர் நாடகங்களில் இணைந்து பங்காற்றிய அனுபவமிக்கவர்.

கோமாளிகள் தொடர்                           –       ஒரு வருடம்.

தணியாத தாகம் தொடர்                    –       ஒரு வருடம்.

இரை தேடும் பறவைகள் தொடர்   –      ஒரு வருடம்.

முகத்தார் வீடு தொடர்.                         –     ஐந்தரை வருடம்.

இவற்றை விட 500இற்கும் மேலான பிற நாடகங்கள். வானொலியிலும் மேடையிலும் இலங்கையின் பல பாகங்களிலும்  நடித்துப் புகழ்பெற்றுள்ளார். ஈழத்துச் சினிமாவின் ஆத்மாக்களில் ஒருவராக மிளிர்ந்து நிற்கும் அப்புக்குட்டி ராஜகோபாலன் அவர்கள்

கோமாளிகள்.

ஏமாளிகள்

நெஞ்சுக்கு நீதி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். இத்தோடு சகோதர மொழிப் படங்கள் பலவற்றுக்கு பின்னணிக்குரல் கொடுக்கும் வரப்பிரசாதத்தையும் பெற்றார். எல்லாவற்றிற்கும் மேலாக 1983ஆம் ஆண்டு ரூபவாகினி தொலைக் காட்சியில் தொலைக்காட்சிக் கலைஞராக பிரவேசித்துப் பணியாற்றினார்.

காலமிட்டகட்டளையாக வெளிநாடுகளில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் 1989 இல் இருந்து 1995 வரை அறிவிப்பாளர் S.k.rajan அவர்களின் அழைப்பின் பேரில் பிரான்ஸ். சுவிஸ். நோர்வே, யேர்மனி, டென்மார்க், லண்டன, கனடா, நெதர்லாந்து எனப் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் B.H.ADUL HAMEED தலைமையில் கலைப் பயணங்களை மேற்கொண்டார். தொடர்ந்து நாட்டில் நிலவிய உள்நாட்டுக் குழப்பங்களால் தாயகத்தினை விட்டு நிரந்தரமாக 1995ஆம் ஆண்டு தொடக்கம் பிரான்சில் குடியேறி வாழ்ந்து வருகின்றார். 2002 பங்குனி உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகம். அமெரிக்கா. பிரான்சில் கலைச்சேவை. நிகழ்ச்சிக் கட்டுப்பாளராக   TRT  தமிழ் ஒலி ஒளி வானொலி 1997இல் பிரவேசித்தார்.

 வழங்கப்பட்ட கௌரவங்கள்

கலைஞன் வாழும் போதே  பெருமைப்படுத்தும் நமது சமூகத்தில் அப்புக்குட்டி ராஜகோபாலன் அவர்கள் ஈழத்துக் கலைக்காற்றிய பணிகள் சொல்லிடங்காதவை. அதன் பயனை அனுபவித்த கலாரசிகர்கள், நிறுவனங்கள், கலைமன்னறங்கள், புலம்பெயர் அமைப்புகள் என்பன அப்புக்குட்டி அவர்களை பாராட்டிக் கௌரவிப்பதில் பேருவையடைந் தனர். அந்தவகையில் அப்புக்குட்டி அவர்களுக்கு பின்வரும் விருதுகளும் பாராட்டுக்களும் வழங்கப் பட்டமையானது அவர் செய்த கலைச்சேiயின் அர்ப்பணிப்புமிகு பணிக்கு நிதர்சன சாட்சிகளாக அமைகின்றன.

1968 இல் கலா வினோதன்

1969இல் கலாவித்தகன்.

1976 இல் மண்வாசணைக் கலைஞன்.

1977இல் நகைச்சுவை மன்னன்.

1990 இல் கலைகீர்த்தனன். பரிஸ் இலங்கை கலையகம்.

2001 இல் கலைஞானி.

வாழ்நாள் சாதனையாளன். முத்தமிழ் கலா மன்றம் பிரான்ஸ்.

2016இல் ஐபிசிதமிழ். வாழ் நாள் சாதனை விருது.

 கலை பயணத்தில் இணைந்து பயணித்த கலைஞர்கள்

B.H ADUL HAMEED

மரைக்கார்  எஸ். றாமதாஸ்

உப்பாலி செல்வசேகரம்.

அப்ஸ்சராஸ் இசைக்குழு..

 

Share.

3 Comments

 1. Sugendra Devendra on

  நன்றி அண்ணா
  நீங்கள் ஈழத்தின் கலைப்பொக்கிஷம்.
  நான் சிறுவயதில் உங்கள் நகைச்சுவையை
  எங்கள் உடுவில் கற்பகபிள்ளையார் கோவில்
  திருவிழாவில் முதன்முதலாக கண்டுகளித்தேன். அதன்பின்பு இங்கு டென்மார்க்கில் 1990 இல் கண்டுகளித்தேன்
  உங்களை பாராட்டுவதில் பெருமையடைகிறேன். நல்வாழ்த்துகள்
  வாழ்க பல்லாண்டு 🙏
  . வாழ்க பல்லாண்டு🙏

 2. திறமையுள்ள கலைஞர்களை இனங்கண்டு வெளிச்சத்திற்கு வெளிக்கொணரும் பெட்டகத்திற்கு சிறப்பான வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.
  அப்புக்குட்டி இராஜகோபாலின் கலைப்பயணம் நிறையவே உள்ளது. சுவாரஸியம் நிறைந்தது. மகிழ்ச்சி. அவரின் தங்கை என்பதில் பெருமைப் படுகின்றேன்.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!