சோழ மன்னர் காலம், யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் என்வற்றுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது.1680 ஆம் ஆண்டு காலத்தில் சைவப் பாரம்பரியம்மிக்க வீரகத்தி சிதம்பரநாதன் என்பவரது கனவில் உமையம்மாள் காட்சி கொடுத்தற்கமைவாக பிரப்பம் பற்றைகளை வெட்டித்துப்பரவு செய்த வேளையில் போர்த்துக்கீசரால் இடித்தழிக்கப்பட்ட பழைய கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அம்பாள் ஆலயம்பிரதி~;டை செய்யப்பட்டது.கோயில் அமைக்கப்பட்ட நிலம் பத்தினி சீமா என அழைக்கப்படலாயிற்று. 1870 ஆம் ஆண்டு கோயிலை புனருத்தாரணம் செய்து சிவன்கோயிலாக மாற்றம் செய்யப்பட வேண்டுமென்ற ஆர்வமேலீட்டால் 1876-1877 காலப் பகுதியில் பூதத்தம்பிசிற்றம்பலம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகளைத் தொடர்ந்து சிவன்கோயிலாக வழிபடலாயிற்று. சிவனுடைய மகோற்சவமானது ஆனி உத்தரமன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் பத்துத்தினங்களும் அம்மனது வாசல் திருவிழாவானது ஆடிப்பூரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் பத்துத்தினங்களும் நடைபெறுவது வழக்கம்.