1800 ஆண்டுகளிற்கு முன்னர் தற்போது ஆலயம் அமைக்கப்பட்டுள்ள இடமானது காடாகவே காட்சியளித்தது. சேனைப்பயிர்ச்செய்கையின் பொருட்டு இக்காட்டினை வெட் டியழித்தபோது ஒரு நெல்லி மரத்தின் கீழ் ஒரு வேல் பளபளத்தபடி இருந்ததனை மீசாலை வாசியான தம்பர் என்பவர் கண்ணுற்று உடனடியாகவே அவ்வேலைச் சுற்றி தடியினாலும் ஓலையினாலும் சிறு ஆலயத்தினை அமைத்து பூசை வழிபாடுகளை நடத்தி வந்தார்.காட்டின் மத்தியில் நெல்லி மரத்தின்கீழ் இப்புனிதவேல் காணப்பட்டமையினால் இவ்வாலயம் காட்டுவளவு நெல்லியடி கந்தசுவாமி கோயில் என அழைக்கப்படலானார். 2012-06-01 ஆம் நாள்மஹா கும்பாபிN~கம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு வருடத்திலும் ஆடி அமாவாசையைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு ஆடிமாதத்தில் வரும் ச~;டி திதியில் ஆரம்பித்து மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.