Saturday, April 5

கம்பீரக்குரலோன் குணலிங்கம், வல்லிபுரம்

0

அறிமுகம்

சிறந்த நாடகக் கலைஞரும், பேச்சாளருமான வல்லிபுரம் குணலிங்கமவர்கள் வீர வசனநடைப் பேச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர். தாயகக்கனவோடு பயனித்த கலைஞர்களோடு தாயகத்தை நேசித்து ஒன்றித்துக் கலையலகில் பயணம் செய்தவர். தந்தையார் வழிவந்த பாரம்பரியக் கலைஞனாக கலைவாழ்வில் தன்னை அர்ப்பணித்துப் பணிசெய்த மாபெரும் கலைஞன்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் வடபால் அமைந்துள்ள நெய்தலும் விவசாயமும் ஆன்மீகமும் தழைத்தோங்கும் நிலமாகிய மயிலிட்டி என்னும் கிராமத்தில் நாடகக் கலைவல்லவரான வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினருக்கு 3வது மகனாக திரு.வல்லிபுரம் குணலிங்கம் 1950.10.26ஆம் நாள் பிறந்தார். 1956ஆம் ஆண்டு தனது ஆரம்பக் கல்வியை காங்கேசன்துறை அமெரிக்க மிஷன் ஆரம்பப் பாடசாலையிலும். தனது உயர் கல்வியை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் கல்விகற்றவர். பாடசாலைக் காலத்தில் இவருக்க கற்பித்த ஆசிரியர்களது வழிகாட்டுதலில் கலைத்துறையில் தடம்பதிக்கலானார்

அவரது தந்தையான சின்னர் வல்லி ஒரு இலங்கையின் பல்துறை நாடகக் கலைஞன். அதனால் சிறுவயதிலிருந்து தந்தையின் நாடகக் கலை மீது நாட்டமுடையவராக வளரலாயினார். 1957ஆம் ஆண்டு 1வது இசைநாடகத் தினை அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் ஆரம்பித்து அனைத்துப் பாடசாலை இசைநாடகப் போட்டிகளிலும் பங்குபற்றி சிறந்த பேச்சாள ராகவும்,; கட்டுரை, கவிதை, இசைப்பாடல் போன்ற போட்டிகளிலும் பங்குபற்றி மாவட்ட மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுப் பல தங்கப் பதக்கங்களைப் பெற்ற பெருமைக்குரியவர்.

அதன் பின்பு 1966ஆம் ஆண்டு கல்வி பொதுசாதரண பரீட்சையி;ல் சித்திபெற்று, தனது உயர் கல்வியை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் பயின்றார். அந்தவேளையில் திரு. குணலிங்கத்திற்கு கிடைத்த அருமைக்கும் பெரும் மதிப்புக்கும் உரிய ஆசிரியர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். அவரின் வழி நடையில் பாடசாலை பேச்சுபோட்டிகள், நாடகப் போட்டிகள் போன்ற அனைத்துப் போட்டிகளிலும் பங்குபற்றி அனைத்துப் போட்டிகளிலும் 1வது இடத்தினைப் பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொள்ளும் சிறந்த மாணவனாக திரு.வல்லி குணலிங்கம் விளங்கினார், அதன் பின் கல்வி உயர்தரபரீட்சையில் சித்திபெற்று. பாடசாலை பழைய மாணவர் சமுகத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட இளங்கலைஞர் மன்ற உறுப்பினராகவும் திகழ்ந்தார்.

 வெளிவாரியாக சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். பாடசாலை மட்டத்திலான மற்றும் மாகாண, தேசிய மட்டங்களில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, நாடகம் போன்ற போட்டிகளில் பங்குகொண்டு பல தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். மயிலிட்டி இலங்கேஸ்வரன் நாடக மன்றத்தினை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். காங்கேசன்துறை இளம்தமிழர் மன்றம்,மாவை முத்தமிழ் கலாமன்றம், கட்டுவன் பாலர்ஞானோதயா நாடகமன்றம், ஏழாலை முத்தமிழ் நாடக மன்றம், மயிலிட்டி இலங்கேஸ்வரன் நாடக மன்றம் போன்ற கலை மன்றங்களினால் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் வில்லன் பாத்திரங்களை ஏற்று நடித்துப் புகழ் பெற்றவர். இவருக்குப் புகழ்பெற்றுக்கொடுத்த பாத்திரங்களாக துரியோதனன், புலித்தேவன், அசுவத்தாமன், காக்கைவன்னி யன், சாணக்கியன், யகாங்கீர், கட்டப்பொம்மன், மல்லிசேனன், அந்திராசி, காஸ்கா, துட்டகாமினி, காசியப்பன், சூரபத்மன், அறுகையன், கடுங்கோன் ஆகியன வற்றினைக் குறிப்பிடலாம்.  கலையரசு சொர்ணலிங்கம், ஆங்கிலப் பேராசிரியர் ஒதெல்லே சோமசுந்தரம், தங்கம்மா அப்பாக்குட்டி போன்ற பெரியார்களுடன் இணைந்து கலைப் பயணங்கள் மற்றும் கல்விப்பயணங் களை மேற்கொண்டவர். வீரகேசரி, தினகரன், ஈழகேசரி போன்ற பத்திரிகை கள் நடத்திய போட்டிகளில் பங்குகொண்டு பல தங்கப்பதக்கங்களைப் பரிசாகப்பெற்றவர்.

ஆசிரியர் தங்கம்மா அப்பாக்குட்டியால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இளங்கலை ஞர் மன்ற தலைவராக மறைந்த பழைய நடேஸ்வரக் கல்லூரி அதிபர் தலைவராகவும் திரு.வல்லிகுணலிங்கம் செயலாளராகவும், மாமனிதர் பொன் கணேசமூர்த்தி அவர்கள் பொருளாளராகவும் பணியாற்றினர். இக்கலைஞர் களது ஒத்துழைப்போடு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினார் வல்லி குணலிங்கம் அவர்கள்.

மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்தின் தமிழத்தினப் போட்டிக்காக வள்ளல் குமணன் என்ற நாடகத்தினை தன் சொந்த உருவாக்கத்தில் தயாரித்து 13 பாடசாலைகள் பங்குபற்றிய நாடகப் போட்டியில் 1வது இடத்தினை பெற்றுக்கொடுத்த பெருமைக்கு உரியவர். இந்நாடகத்தில் தனது மகனான செல்வன். குணலிங்கம் தமிழ்மாறனை மன்னன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தனது கலைத்தொடர்ச்சியினை ஏற்படுத்தினார்.

வீரபாண்டிய கட்டப்பொம்மன்

கந்தன் கருணை

நீலக்கல்,

பாஞ்சாலிசபதம்,

யூலியசீசர்,

மாமன்னன் சங்கிலியன்,

பண்டாரவன்னியன்,

காதலா கடமையா.

மகுடபங்கம்.

ஏனும் தவலம் போன்ற நாடகங்களை தனது சுயஆக்க நாடகங்களாக அமைத்து பல களம்கண்ட கலைஞர்களை ஒருங்கிணைத்து தானே தயாரித்து நடித்து நாடகக்கலைக்கு தன்னை அர்ப்பணித்தார்இவருடைய நாடகவாக்க முறையானது வரலாற்றுப் பாணியில் அமைந்த அடக்கு நடை வசனங்களை பேசி வீராவேசத்துடன் நடிக்கும் மனோரதிய கற்பிதவாத முறையாகும். திரு.வல்லிகுணலிங்கம் அவர்கள் 1987ஆம் ஆண்டு உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் இந்தியாவில் தாஜ்மகால் உருவாகிய வரலாற்றினை தாஜ்மகால் என்ற நாடகமாக எழுதி; அந்;நாடகத்தில் கதாநாயகனாக நடித்து இலங்கையில் பெரும் வரவேற்பினைப் பெற்றார்.

அந்த நாடகத்தின் அறிமுக உரை  பின்வருமாறு அமைந்திருந்தது.

முகல் சாம்ராயத்தின் வரலாற்றுப்பேரேடுகள் பலநூற்ராண்டு பின் நோக்கி நகர்கின்றன,

ஆக்;றா நகரிலே அழியாப் புகழுடன் பல உலக அதிசயங்களில் ஒன்றாக கம்பீரமாக உயர்ந்து நிற்கும் தஜ்மகால் நீவோடு விளையாடுகின்றது.

இது காதல் ராணி முந்தாஜ் தாயுக்காக சாஜகான் மன்னன் ஆக்கிய நினைவு சின்னமா, அல்லது பாரசீகக் கட்டட சிற்பி முந்தாஜ் தன் உயிர் மணி முந்தாஜ்யுக்காகக் கட்டப்பட்ட நினைவுச் சின்னமா?

மாற்ராரும் போற்றும் மாண்புடன் பேராற்றல் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தை தன் குடைக்குள் வைத்த சாஜகான் மன்னன் ஆட்சியிலே ஓர் நாள் என்ற வரிகள் நாடகப் படைப்பின் விறுவிறுப்பை தோற்றுவித்து பாரப்போரை அரங்கினுள் மூழ்கடிக்க வைக்கும் உத்தியாக அமைகிறது.

வழங்கப்பட்ட கௌரவங்களும் விருதுகளும்.

ஆற்றலும் துணிச்சலும் கொண்ட கலைஞனாக குணலிங்கமவர்கள் கலையுலகில் தன்னை அடையாளப்படுத்தினார். இவர் பல்வேறு சமூக, வரலாற்று, கற்பித நாகங்களை தான எழுதி தயாரித்து நடித்தும் நெறிhள்கை செய்தும் கலைப்பணியில் ஈடுபட்டார். இவருடைய இத்தகைய பணிகளைக் கௌரவிக்கும் நோக்கில் கௌரவங்களும் விருதுகளும் வழங்கி பெருமைப் படுத்தப்பட்டார்.

1987ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட தாஜ்மஹால் நாடக அரங்கேற்றத்தின் போது பிரசன்னமாயிருந்த ஈழத்து நவீன நாடகத்தின் தந்தை எனப்போற்றப் படும் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால் கலைக்காவிய நாயகன்  என்ற விருதினை வழங்கி பெருமைப்படுத்தப்பட்டார்.

சிறந்த சொல்லுக்குரிய வள்ளல் 

சிறந்த எழுத்தாளர்

சிறந்த கம்பீரகுரலோன்- (வீரமானபேச்சு) என்பன குறிப்பிடத்தக்கன.

கலைவாழ்வில் உயிரித்துடிப்புடன் தாயகத்தை நேசித்த அற்புதமான இக்கலைஞன் 1989 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!