யாழ்ப்பாணம் – மூளாய் என்ற இடத்தில் 1945 ஆம் ஆண்டு பிறந்து கோண்டாவிலில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மேதையான இவருடைய நாதஸ்வர வாசிப்பானது ஸ்வர சுத்தமும், இலயசுத்த மும், விவகாரமும் பிரகாசங்கதிகளும் நிறைந்த சுகமுடைய வாசிப்பாக அமைந்திருக்கு மென அன்பர்களாலும், ரசிகர்களாலும் வியந்து பேசப்பட்டமை கண்கூடு. கோயில் கிரியைகளிலும் சரி, இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் சரி இராகங்களை உரிய முறைப்படி வாசிக்கும் பழக்கமுடையவர். இவருடைய கலைச்சேவைக்காக நாதஸ்வர சக்கரவர்த்தி, நாதகலாநிதி, இசைஞானகலாநிதி, நாதஸ்வர இசைமணி, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “கலாபூ|ஷணம்” போன்ற பல விருதுகள் வழங்கப்பெற்று பாராட்டப்பட்டவர். 2008.09.10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.