1940-05-22 ஆம் நாள் அளவெட்டி, யாழ்ப்பாணம் என்ற இடத்தில் பிறந்தவர். ஓவியர், எழுத்தாளர். குறும்பட இயக்குனர். இவர் சிறந்த எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்கதொரு கலை இலக்கியப் படைப்பாளியாகவும், சிறந்த அரசியல் சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும்ஓய்வில்லாமல் எழுதிக் கொண்டிருந் தவர். நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்கள், குறும்படங்கள், முழுநீளப்படங் களின் மூலகர்த்தா. ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவர். இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களால் கலாகீர்த்தி என்ற விருது வழங்கப்பட்ட போது இவர் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தமை குறிப்பிடத்தக்கது. 2006-01-18 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
6.7 நாடகம்