1901-07-20 ஆம் நாள் ஊர்காவற்றுறையில் பிறந்தவர். 1950 முதல் யாழ்ப்பாணத் திருச்சபையைப் பொறுப்பேற்று 1972 வரை மறை வாழ்வில் பல்வேறு புனரமைப்புகளுக்கும் சுதேச மயப்படுத்தலுக் கும், மறை மாவட்ட திருப்பணியாளர்களின் உருவாக்கத்திற்கும் ஏற்றதொரு தலைவனாகத் திகழ்ந்தவர். முரண்பாடுகள் நிறைந்த சிக்கலானதோர் காலத்திலும் ஆயராக விளங்கியவர். 1972-07-14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.