Thursday, October 3

யாழ்ப்பாண வரலாற்றுப் பின்ணணியும் முக்கியத்துவமும்

அறிமுகம்

யாழ்ப்பாண பிரதேசமானது தனக்கென ஒரு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தினைக் கொண்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது. பல்லினப் பண்பாட்டுக்குரிய சமூகத்தினரை உள்ளடக்கியுள்ள இப் பிரதேசத்தில் அனைத்துப்பண்பாட்டுக் கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய வகையில்பிராந்திய அரசு ஒன்று வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் அவ்வரசு தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே நல்லூரைத் தலைநகராகக்  கொண்ட யாழ்ப்பாண இராச்சியம் என அழைக்கப்பட்டது. இது யாழ்ப்பாணக் குடாநாடு தொடக்கம் வன்னி சிற்றரசுகளையும் உள்ளடக்கியிருந்தது. யாழ்ப்பாண இராசதானி காலத்தில் அதன் அரசியல் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட வன்னி அரசுகளாக மேல்பற்று, செட்டிகுளம் பற்று, பனங்காமப்பற்று, முள்ளியவளைப்பற்று, தென்னமர வாடிபற்று, கருநாவல்பற்று, கரிக்கட்டுமூலைப்பற்று என்பன உள்ளடக் கப்பட்டுக் காணப்பட்டன. கி.பி. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ் அரசின் தோற்றத்துடனேயே  யாழ்ப்பாணம் பல்பரிமாண பௌதீக-பண்பாட்டுக் கட்டமைப்பு கொண்டு தனித்துவமான ஒரு  பிரதேசமாக  வளர்ச்சி பெறத் தொடங்கியிருந்தது,

கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தெளிவாக  அறிந்து கொள்வதற்கான இலக்கிய – தொல்லியல் சான்றுகள் இற்றைவரை மிக அரிதாகவே காணப்படுகின்றன. சிங்கைஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலத்திலிருந்து தமிழ் இலக்கிய – சாசனச் சான்றாதாரங்கள் கிடைத்திருந்தாலும்,  பெருங்கற்கால யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் இங்கு  வாழ்ந்திருந்தனர் என்பதற்கு 1980 ஆம் ஆண்டில் ஆனைக்கோட்டையிலும், காரைநகரிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் பெறப்பட்ட சான்றுகள் ஆதாரமாக அமைந்துள்ளன.

யாழ்ப்பாணம் ஆரம்ப வரலாறு

  கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தெளிவாக  அறிந்து கொள்வதற்கான இலக்கிய – தொல்லியல் சான்றுகள் இற்றைவரை மிக அரிதாகவே காணப்படுகின்றன. சிங்கைஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலத்திலிருந்து தமிழ் இலக்கிய – சாசனச் சான்றாதாரங்கள் கிடைத்திருந்தாலும்,  பெருங்கற்கால யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் இங்கு  வாழ்ந்திருந்தனர் என்பதற்கு 1980 ஆம் ஆண்டில் ஆனைக்கோட்டையிலும், காரைநகரிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் பெறப்பட்ட சான்றுகள் ஆதாரமாக அமைந்துள்ளன.

யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறு பற்றி ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. கி.பி. 17 ஆம் நூற்றாண்டுக்குரியதென்னிந்திய திருமாணிக்குழிக் கல்வெட்டொன்றிலே யாழ்ப்பாணம் என்ற பெயர் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. கி.பி.17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் திருப்புகழில் “யாழ்ப்பாணாயன் பட்டினமேவிய பெருமாளே” எனக் குறிப்பிட்டுள்ள மையைக் காணக்கூடியதாகக் உள்ளது. இதேவேளை சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில் 184ஆம் பாடல் ‘ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்’ என்பவனால் பாடப்பட்டதாக இலக்கியக் குறிப்பகளில் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறு பற்றி ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. கி.பி. 17 ஆம் நூற்றாண்டுக்குரியதென்னிந்திய திருமாணிக்குழிக் கல்வெட்டொன்றிலே யாழ்ப்பாணம் என்ற பெயர் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றது.

   

கி.பி.17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் திருப்புகழில் “யாழ்ப்பாணாயன் பட்டினமேவிய பெருமாளே” எனக் குறிப்பிட்டுள்ள மையைக் காணக்கூடியதாகக் உள்ளது. இதேவேளை சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில் 184ஆம் பாடல் ‘ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்’ என்பவனால் பாடப்பட்டதாக இலக்கியக் குறிப்பகளில் காணப்படுகின்றன.

        ஒல்லாந்தர் காலத்துத் தோம்புப் பதிவிலேயே “யாழ்ப்பாணாயன் பட்டினம்” எனக் குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. அருணகிரிநாதர் வாழ்ந்த காலமும் கி.பி.16 அல்லது 17 ஆம் நூற்றாண்டாரம்பம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் இங்கு  நோக்கத்தக்கது.

       யாழ்ப்பாண வைபவமாலையில் மயில்வாகனப் புலவர் “யாழ்பாடியுடன் இணைத்துக் காட்டப்பட்டுள்ள கதை மரபின் அடியாக யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாற்றை எடுத்துக் காட்டியுள்ளார். “அந்தகக்கவி” என்று அழைக்கப்பட்ட வீரராகவன் என்ற பெயருடையவன் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து தனது யாழ் இசைக்கருவியை வாசித்த திறமையால் அனுராதபுரி மன்னனிடமிருந்து வடபகுதியிலுள்ள மணற்றி என்ற இடத்தை  பரிசாகப் பெற்று யாழ்ப்பாணம் என்ற பெயரையும் இட்டு தன் குடிகளை வருவித்து ஆட்சி நடத்தினான் என மயில்வாகனப்புலவர் குறிப்பிடும் ஐதீகம் நீண்டு செல்கிறது. இம் மணற்றி என்னும் பெயர் இறையனார் அகப்பொருள் உரைச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது இன்று யாழ்ப்பாணத்திலுள்ள பாi~யூர் மற்றும் குருநகர் என அறியப்படும் நகரத்தின் ஒருபகுதியாகும் என அறியக்கிடக்கின்றது. கொழும்புத்துறையில் அமைந்துள்ள வணிகக் களஞ்சியமும் குருநகர்ப் பகுதியில் அமைந்துள்ள “அலுப்பாந்தி” என்றழைக்கப்படும் துறைமுகமும் அதன் ஆதாரங்களாகத் தெரிகின்றன.

     இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் மையத்தில் “ஐநூற்றுவன் வளவு” என்ற ஒரு குறிச்சி காணப்படுகிறது. தோம்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஐநூற்றுவர் வளவு இன்றைய யாழ்ப்பாணத்தின்  வைத்தியசாலைக்கு தெற்குப் பக்கமாக உள்ள வர்த்தக நிலையங்கள், மணிக்கூட்டுக் கோபுரம், நூலகப்பரப்பு மறறும் யாழ் கோட்டை வரைக்கும் பரந்து காணப்படுகின்றது. ஜாவகன் பட்டினம் சாவகச்சேரி என மாற்றமடைந்தது போன்றே ஐநூற்றுவன் வளவு என்பது  ஐநூற்றுவன் பட்டினமாகி காலப்போக்கில் ஜாழ்ப்பாணன் பட்டினம் எனமருவி, ஜாழ்ப்பாணம் பட்டினம் என்றாகிப் பின்னர்  யாழ்ப்பாணம் என இற்றைவரைக்கும் வழங்குகின்றது எனலாம்.

        வேறு சிலர் “நல்ல ஊர்” என்னும் கருத்தைத் தருகின்ற பாளி-சிங்களச் சொல்லான, யஹபனேஃயாப்பனே என்பதிலிருந்தோ, அல்லது சிங்கள இலக்கியங்கள் சிலவற்றில், இப்பகுதியைக் குறிக்கப்பயன்பட்ட யாப்பாபட்டுன என்ற நிர்வாகப்பிரிவிலிருந்தோ அச்சொல் மருவி வந்து இன்று  யாழ்ப்பாணம் என வழங்குகின்றது எனக்குறிப்பிடுகின்றார்கள். யாழ்ப்பாண அரசை கி.பி.15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருப்புகழ் மற்றும் மதுரைப் பாண்டியர் கல்வெட்டில் யாழ்ப்பாணாயன் பட்டினம் எனவும், சமகால சிங்கள இலக்கியங்களில்  யாப்பாபட்டுன எனவும் போர்த்துக்கேய ஆவணங்களில் யவ்னா எனவும் சமகாலத் தமிழகக் கல்வெட்டுக்களில் யாழ்ப்பாணத்தேசம் எனவும் குறிக்கப்;படுகின்றது. யாழ்ப்பாண இராச்சியம் தொடர்பாக யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை, வையாபாடல், ராஜவலிய, அளகேஸ்வரயுத்த, நிகாய சந்கிரக என்பனவும் கோகில சந்தேய,  பரவிசந்தேய, பரகும்பாமித போன்ற இலக்கியங்களும், இவற்றின் சமகாலத்தில் வெளியிடப்பட்ட தமிழ், சிங்கள கல்வெட்டுக்களும், யாழ்ப்பாண இராசதானி கால மன்னர்களால் வெளியிடப்பட்ட “சேது”வாசகம் பொறித்த பலவகை நாணயங்களும், ஹர்ச பணம், பிராமிக் கல்வெட்டு என்பனவும் ஓரளவுக்கு வiலாற்றை அறிய உதவுகின்றன. கள்ளியங்காட்டுச் செப்பேடும் யாழ்ப்பாண அரசு பற்றி அறிவதற்கு உதவுகின்ற செப்பேட்டுச் சான்றாகும்.

யாழ்ப்பாண அரசு

பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வட இலங்கையில் தமிழ் மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு பலமான அரசாக யாழ்ப்பாண அரசு காணப்பட்டது. இவ்வரசின்; தலைநகரான நல்லூர் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஒரு மையம் என்பதில் எவ்விதமான சந்தேகமும் எழமுடியாது. கொழும்புத்துறை, பண்ணைத்துறை உள்ளடங்கலாக கோப்பாய், மானிப்பாய், பண்ணை, அரியாலை , செம்மணி ஆகிய சுற்றுவட்டப் பரப்பினை உள்ளடக்கிய வகையில் தலைநகரான நல்லூரின் நிர்வாகம் மன்னனால் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டமைக்கான சான்றுகள் உண்டு. மேலே குறிப்பிடப்பட்டவற்றினை எல்லை களாகக் கொண்ட மூன்று மைல் சுற்று வட்டத்துக்குள்  உள்ளடக்கப்பட்டிருந்த இந்துக்கோவில் களுடன்  இவ்வரசு நேரடியாக  தொடர்பு கொண்டிருந்தமைக்கு   தமிழ் இலக்கியங்களிலும் போர்த்துக் கேய ஆவணங்களிலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன. இத் தலைநகர் பற்றி யாழ்ப்பாண வைபவமாலையில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

“நல்லூர் பகுதியிலே அரசிருக்கையை ஸ்தாபிக்க கருதிச் சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன்மூகூர்த்தத்தில் அஸ்திவாரம் போட்டு நாலு மதிலும் எழுப்பி வாசலுக்கு ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும், கூட கோபுரங்களும், பூங்காவும், 

பூங்காவின் நடுவே ஸ்நான மண்டபமும் முப்படைக் கூடமும் உண்டாக்கி அக்காலத்தில் யமுனாநதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்து விட்டு நீதி மண்டபம் யானைப்பந்தி, குதிரைப்பந்தி,சேனா வீரரிப்பிடம் முதலிய அனைத்தும் கட்டுவித்து தன்னுடன் வந்த காசியிற் பிரம்ம குல திலகரான கெங்காதர ஐயரும் அன்னபூரணி அம்பாள் என்னும் அவர் பத்தினியும் வாசம் செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கி கீழ்த் திசைக்கு பாதுகாப்பாக வெயிலுகந்தப் பிள்ளையார் கோயிலையும், மேற்றிசைக்கு வீரமாகாளியம்மன் கோவிலையும் வட திசைக்கு சட்டநாதர் கோயில் தையல் நாயகியம்மன் கோவில், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தியாருடனே பிரவேசம் செய்து வாழ்ந்திருந்தார்.”.

பூங்காவின் நடுவே ஸ்நான மண்டபமும் முப்படைக் கூடமும் உண்டாக்கி அக்காலத்தில் யமுனாநதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்து விட்டு நீதி மண்டபம் யானைப்பந்தி, குதிரைப்பந்தி,சேனா வீரரிப்பிடம் முதலிய அனைத்தும் கட்டுவித்து தன்னுடன் வந்த காசியிற் பிரம்ம குல திலகரான கெங்காதர ஐயரும் அன்னபூரணி அம்பாள் என்னும் அவர் பத்தினியும் வாசம் செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கி கீழ்த் திசைக்கு பாதுகாப்பாக வெயிலுகந்தப் பிள்ளையார் கோயிலையும், மேற்றிசைக்கு வீரமாகாளியம்மன் கோவிலையும் வட திசைக்கு சட்டநாதர் கோயில் தையல் நாயகியம்மன் கோவில், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தியாருடனே பிரவேசம் செய்து வாழ்ந்திருந்தார்.”.

இந்நல்லூரைத் தலைநகராகக் கொண்டே ஏறத்தாழ 350 ஆண்டுகள் சிங்கையாரியத் தமிழ் மன்னர்;கள் ஆட்சி செய்திருந்தனர்;. இதனால் இத் தலைநகர் நல்லூர் இராசதானி எனவும் யாழ்ப்பாண இராச்சியம் எனவும் அழைக்கப்பட்டது.

இபுன் பதூதா என்ற மொரோக்கோ நாட்டு நாடுகாண் பயணி 1341 ஆம் ஆண்டு தரையிறங்கிய போது யாழ்ப்பாண மன்னன் (ஆரியச்சக்கரவர்த்தி) மார்த்தாண்ட சிங்கை பரராஜசேகரன் (1325-1348)அவர்களின் விருந்தினராவது எப்படி என்பது பற்றிய குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. அவனது குறிப்பில் பினவருமாறு உள்ளது.

“ஆரியச் சக்கரவர்த்தி என்னை வரும்படி ஆளனுப்பினான். நான் அவரது தலைநகரத்திற்குச் சென்றேன். அந்த இடம் துப்பரவாகவும், சுற்று மதிலையும் கொண்டிருந்தது. மன்னன் தன்னருகில் என்னை அழைத்து கனிவுடன் உரையாடினான். அதன் பின் எனக்கு தங்குமிட வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டான். அங்கு மூன்று நாள்கள் தங்கியிருந்தேன். மன்னன் பாரசீக மொழியை அறிந்திருந்தான். நான் பிறநாட்டு மன்னன் பற்றி சொன்ன கதைகளை ஆவலுடன் கேட்டான். ஒரு நாள் மன்னன் கரங்களில் முத்துக்களை வைத்திருந்த சமயத்தில் அவன் முன்னிலயில் சென்றேன். அம்முத்துக்கள் அவனது ஆளுகைக்குட்பட்ட கடற்பிராந்தியத்தில் முத்துக்குளிப்பால் பெறப்பட்டவை.”

இது யாழப்பாண அரசின் செழிப்பான அரசாட்சியை சுட்டி நிற்கிறது. சோழர் கால பண்பாட்டுத் தாக்கங்களும் யாழ்ப்பாண அரசில் முக்கிய இடம் பெற்றிருந்தன.

யாழ்ப்பாண வரலாற்றுக் கால கட்டங்கள்

யாழ்ப்பாண வரலாற்றை பின்வரும் கால கட்டங்களாகப் பிரிக்கலாம்

     1.சிங்கைஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்ட காலம் (கி.பி. 1236 ஆம் நூற்றாண்டுக்கு முன்)

     2.சிங்கைஆரியசக்கரவர்திகள் காலம் (கி.பி 1236 -1621)

    3.குடியேற்றவாத ஆட்சிக் காலம் (கி.பி 1621 – !948)

    4.நவகாலனித்துவ காலம் (1948 க்கு பின்)

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் வட இலங்கை மீது படையெடுத்து பாண்டியரின் படைத்தளபதியளான ஆரியச்சக்கரவர்த்திகளே நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தனர் என்பது அறிஞர்களின் பொதுவான கருத்தாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1236ல்) பொலனறுவையைக் கைப்பற்றிய கலிங்கமாகன் தமிழ்,சோழ,கேரளப்படை வீரர்களின் உதவியுடன் பௌத்த, சிங்கள மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தினான். இதனால் வெறுப்படைந்த சிங்கள மக்களும், சிங்கள இராஜதானியும் தென்மேற்கு நோக்கி நகர்ந்த போது வட இலங்கையில் தமிழர்களுக்கு என ஓர் அரசு கலிங்க மாகன் மற்றும்  சாவக மன்னன் சந்திரபானுவின்  காலத்தில் தோற்றம் பெற்றதாக  பாளி, சிங்கள இலக்கியங்கள் கூறுகின்றன.

ஆரியச்சக்கரவர்த்திகளே நல்லூரைத் தலைநகராகக் கொண்ட இராசதானியில் ஆட்சி செய்த முதல் மன்னர்கள் என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும். இம்மரபில் வந்தவர்கள் சிங்கையாரியன், கங்கைநாடான், சேதுகாவலன் என்ற சிறப்பு பெயர்களையும் செகராஜசேகரன், பரராஜசேகரன் என விருதுப்பெயர்களை யும் கொண்டு  அழைக்கப்பட்டனர். யாழ்ப்பாண வைபவமாலையில் விஜய கூழங்கைசக்கரவர்த்தி, குலசேகர சிங்கையாரியன், விக்கிரம சிங்கையாரியன், மார்த்தாண்ட சிங்கையாரியன்,குணபூஸண சிங்கையாரியன் ,கனக சிங்கையாரியன் முதலான மன்;னர்;களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவர்களுள் முதலில் குறிப்பிடப்படும் மன்னர்கள் சிலரது பெயர்கள் ஆரியச்சக்கரவர்த்திகளுக்கு முன்னர் ஆட்சியில் இருந்ததாக கருதப்படும் மன்னர்களது பெயர்களும் ஆரியச்சக்கரவர்த்திகளுடன் இணைக்கப்பட்டதாக தெரிகின்றது. ஆனால் யாழ்ப்பாணத்தில் செண்பகப்பெருமாளின் ஆட்சி 1567 இல் முடிவுற்றதன் பின்னர் இங்கு ஆட்சி புரிந்த முதலாம் சங்கிலி, காசிநயினார், பெரியபிள்ளை, புவிராஜபண்டாரம், எதிர்மன்னசிங்ககுமாரன், இரண்டாம் சங்கிலி முதலான மன்னர்களது பெயர்களை நோக்கும் போது அவர்கள் சுதேச மன்னர்கள் என்பது புலனாகிறது.

கோட்டை இராச்சியத்தின் மேலாதிக்கத்தின் கீழ் யாழ்ப்பாணம் வந்த பின்பே பல மாறுதல்கள் ஏற்பட்டன. கி.பி. 1450 இல் செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதன் மூலம் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணம் கோட்டை இராச்சியத்தின் மேலாதிக்கத்திற்குள் வந்தது. இப் படையெடுப்பை நடத்திய மலையாள இளவரசன் எனக் கருதப்படும் செண்பகப்பெருமாள் எனப்படும் சபுமல்குமாரய கோட்டை மன்னன் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனாவான். கி.பி1415 இல் கோட்டை மன்னனாகப் பதவி பெற்ற ஆறாம் பராக்கிரமபாகு பல நூற்றாண்டுகளாக பலவீனமுற்றிருந்த சிங்கள இராச்சியத்தை வலுப்பெறச் செய்ததன் மூலம் இலங்கை வரலாற்றில் முக்கிய மன்னர்களில் ஒருவனாகக் கருதப்படுகின்றான்.

1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேயர் வசம் செல்லும் வரையில் அதன் தலைநகரம் என்ற வகையில் நல்லூரே இப்பகுதியின் பிரதான நகராக இருந்தது. அக்காலத்தில் இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் கொழும்புத்துறையில் ஒரு சிறிய இறஙங்கு துறையும் பின்னர் போர்த்துக்கேயரின் கோட்டை இருந்த இடத்தில் முஸ்லிம் வணிகர்களின் இறங்கு துறையும் பண்டகசாலைகளும் சில குடீயிருப்புகளும் இருந்ததாக தெரிகின்றது.

17 ஆண்டுகள் ஸ்ரீ புவனேகபாகு என்ற பெயருடன் ஆட்சி செய்த செண்பகப் பெருமாளின் வரலாறு கைலாயமாலையில் தனிச்செய்யுளாகக் காணப்படுகின்றது. இவன் ஆட்சியில் புதிய அரச மாளிகை, பிற கட்டடங்கள், கோட்டை என்பன கட்டப்பட்டதாகக் கருதப்படுகின்றது. நல்லூர் கந்தசுவாமி கோவிலை செண்பகப் பெருமாள் தாபித்தான் என்பதற்கு கோவிலில் இன்றுவரை ஓதப்பட்டு வரும் கட்டியம் ஆதாரமாக உள்ளது. யாழ்ப்பாணப் பிரதான வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட இவனது கல்வெட்டு யாழ்ப்பாண அரச வரலாற்றை அறிய ஒரளவு உதவுகின்றது. கோட்டை மன்னன் ஆறாம் பராக்கிரமபாகு இறந்ததன் பின்னர் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் செண்பகப்பெருமாள் தொடர்;ந்தும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது படையெடுப்புகளோடு கோட்டைக்குச் சென்று அங்கு 1467 இல் அதிகாரத்தைக் கைப்பற்றி ஸ்ரீசங்கபோதி புவனேகபாகு என்ற பெயருடன் ஆட்சி புரிந்தான்.

செண்பகப் பெருமாள் கோட்டை திரும்பியதும் முன்னர் பதவியிழந்த கனகசூரிய சிங்கை ஆரியன் தமிழகப்படை உதவிகளுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இவனின் பின்னர் அவன் மகன் பரராஜசேகரன் நீண்ட காலம் ஆட்சி செய்தான். இப் பெயர் பிற்பட்ட மன்னர்களால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் இது பட்டப்பெயராகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும் இக் காலத்தில் இருந்து ஆரியசக்கரவர்த்திகளைக் குறிக்கும் அடைமொழி மறைந்து போவதால் ஆரியச்சக்கரவர்த்திகளது ஆட்சி முடிவுற்றதெனக் கூறலாம். இதன் பின்னர் முதலாம் சங்கிலியன், காசி நயினார், பெரியபிள்ளை, புவிராஜ பண்டாரம், எதிர்மன்னசிங்ககுமாரன் முதலான மன்னர்கள் ஆட்சிபுரிந்த வரலாறு காணப்படுகின்றது. அவர்களுள் முதலாம் சங்கிலி, இரண்டாம் சங்கிலி மன்னர்களது ஆட்சி யாழ்ப்பாண வரலாற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. 

போர்த்துக்கேயர் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம்

யாழ்ப்பாணத்தை தங்களுடைய நிர்;வாக மையம் ஆக்கிய போர்த்துக்கேயர் முன்னர் தங்;களுடைய தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் சதுர வடிவில் அமைந்த பெரிய கோட்டையொன்றைக் கட்டினர். உள்;ர் மக்களின் குடியிருப்புகள் இக்காலத்தில் பெரும்பாலும் நல்லூரை அண்டியே இருந்திருக்கூடும். இன்றைய யாழ்ப்பாண நகரத்துக்குள் அடங்கும் சோனகத்தெரு என்று அழைக்கப்படும் இடத்தில் சிறிய அளவில் முஸ்லிம் வணிகர்களின் குடியிருப்புகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம்

ஏறத்தாழ 140ஆண்டுகள் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்டனர். இதனால் அவர்களின் சுவடுகளை இன்றும் யாழ்ப்பாண நகரத்தில் காண முடியும். போர்த்துக்கேயர் கட்டிய கோட்டையை இடித்து விட்டு புதிய கோட்டையொன்றை ஒல்லாந்தர் கட்டினர். இன்று பறங்கித்தெரு என்று அழைக்கப்படும் இடத்திலேயே ஒல்லாந்தருடைய குடியிருப்புகள் அமைந்திருந்தன. இவர்களுடைய காலத்தில் யாழ்ப்பாண நகரம் ஓரளவுக்கு விரிவடைந்தது. பறங்கித் தெரு பகுதியைத் தவிர வண்ணார்பண்ணை போன்ற பகுதிகள் நகரத்தின் உள்;ர் மக்களுக்குரிய பகுதிகளாக  வளர்ச்சி பெற்றன.

இவர்;களுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்து சமயம் தொடர்பான பிடிவாதம் தளர்ந்ததைத் தொடர்ந்து முக்கியமான இந்துக்கோயில்கள் சில இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் எல்லைக்குள் அமைந்தன. பிற்காலத்தில் இப்பகுதிகள் சைவ சமயத்தவரின் பண்பாட்டு மையங்களாக உருவாக இது வழி வகுத்தது. நல்லூர்க் கந்தசாமி கோவில், வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவில், யாழ் வெங்கடேசப் பெருமாள் கோவில் என்பன இவற்றுள் முக்கியமானவை.

பிரித்தானியர் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம்

பிரித்தானியர் ஆட்சி  யாழ்ப்பாணத்தில் 152 ஆண்டு காலம் நீடித்தது.இக்காலத்தில் யாழ்ப்பாணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக பொருளாதார, பௌதீக வளர்;ச்சிகளைப் பெற்றது. தற்காலத்து யாழ்ப்பாணக் கல்வி மேம்பாட்டுக்கு அச்சாணியாக விளங்கிய பாடசாலைகள் அனைத்தும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன. யாழ்ப்பாண நகரத்திலிருந்து குடாநாட்டின் பல பகுதிகளையும் இணைக்கும் வீதிகள் அமைக்கப்பட்டன. யாழ்ப்பாண மாவட்ட செயலகம் (1869), யாழ்ப்பாண பொதுநூலகம் (1935), யாழ் மணிக்கூண்டுக் கோபுரம் (1875), யாழ் புகையிரத நிலையம் (1902) என்பன உருவாக்கப்பட்டன. இதில் யாழ்ப்பாண மணிக்கூண்டுக் கோபுரம் 1875 ஆம் ஆண்டில் வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் வருகையை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டது. யாழ்ப்பாணம் பழைய கச்சேரியும் பழைய பூங்காவும் 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில் பிரித்தானிய அரசின் அராங்க அதிபரான பேரிசிவல் அக்லண்ட் டைக் அவர்களால் தனது சொந்தப்பணத்தில் வாங்கி உருவாக்கப்பட்டதாகும்.

யாழ்ப்பாணத்தில் மதம்

இந்து மதம் இப் பிரதேசத்தில் தனித்துவமான வகையில் வளர்ச்சி அடைந்து காணப்பட்டது. ஆரம்ப காலங்களில் இலங்கை வழிபாட்டோடு இணைந்த வகையில் பல மதம் சார் சடங்குகள் இடம்பெற்றதுடன் சில பிரதேசங்களில் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர்;, நயினாதீவு, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி, கீரிமலை நகுலேஸ்வரம் முதலிய ஆலயங்கள் இந்துப் பண்பாட்டுடன் சிறப்பானதாகக் காணப்படுகின்றது. காலப்போக்கில் போர்த்துக்கேயர் வருகையால் பெருமளவான கரையோரப் பிரதேச மக்கள் கத்தோலிக்க மதத்தைத் தழுவிக் கொண்டனர்;. அத்துடன் கிறிஸ்தவ தேவாலயங்களும் பெருமளவுக்கு தோற்றம் பெற்றன. போர்த்துக்கேயர் காலத்தில் சமயம் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவ பாதிரிமார்கள் யாழ்ப்பாணக் கடற்கரையோரத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றையும் அவர்களுக்கான இருப்பிடங்களையும் கட்டியிருந்தனர். பின்னர் முஸ்லிம் வணிகர்களின் பண்டகசாலைகள் இருந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டு அவ்விடத்தில் முன்னரிலும் பெரிதாகக் கட்டடங்களைக் கட்டியதாகத் தெரிகின்றது. இன்று பௌத்த, இஸ்லாம் சார்ந்த சான்றாதாரங்களும் யாழ்ப்பாணப் பண்பாட்டோடு இணைந்த வகையில் காணப்படுகிறது.

சங்கிலியன் தோப்பு

சங்கிலியன் தோப்பு அல்லது பூதத்தம்பி வளைவு என்பது  நல்லூரில் யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றது. சங்கிலித் தோப்புக்கு எதிரே இன்னொரு அரச தொடர்புள்ள இடமான மந்திரிமனை உள்ளது. இதற்கு அருகிலேயே யாழ்ப்பாண அரசர்களால் அமைக்கப்பட்ட சட்டநாதர் சிவன்கோவிலும் உள்ளது.

யமுனா ஏரி

யமுனா ஏரி யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக நல்லூரிலிருந்த பகர வடிவிலமைந்த ஒரு கேணி ஆகும். இது யாழ்ப்பாணத்தை கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பு வளவில் உள்ளது. யாழ்ப்பாண வைபவமாலையின் படி இது சிங்கையாரியச் சக்கரவர்த்தி காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது. யமுனா நதியின் நீர் கலக்கப்பட்டதால் இது பின்னர் யமுனா ஏரி எனப்பட்டது. இதற்குச் செல்லும் வீதி யமுனா வீதி என இன்றும் அழைக்கப்படுகின்றது. யமுனா ஏரி மற்றும் மந்திரிமனை இடையே ஒரு சுரங்கப் பாதையை பயன்படுத்தி நிலத்தடி இணைப்பு உள்ளது.

யாழ்ப்பாணக் கோட்டை

யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பிய குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போர்;த்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக்கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. யாழ்ப்பாண அரசு 1619 இல் பேர்த்துக்கேயரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்;கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக் கடலை அண்டி ஒரு  சதுரகோட்டையையும் கட்டினர். 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றை கட்டிக்கொள்ள கோவாலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது. எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவு செய்து கோட்டையின் கட்டட வேலை 1625 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1980 களின் இறுதிக் காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக்கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டது.

மந்திரிமனை

யாழ்ப்பாண இராச்சிய கால மன்னன் பரநிருசிங்கனால் 15 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டது. இதனுடைய கட்டமைப்பை மிகவும் நுட்பமாக பல்வேறு கலை அம்சங்களுடன் பாதுகாப்பைக் கருதிக் கட்டப்பட்டதாக நம்புகின்றார்கள். பாதுகாப் பிற்காகவும், அவர்களுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காகவும் அமைக்கப்பட்ட நிலவறைச் சுரங்கத்தின்  நுழைவாயிலாகவும் காணப்படுகின்றது. இங்கு நிலவறைச் சுரங்கங்களுக்கிடையில் தொடர்;புகளை ஏற்படுத்துவதற்காக படிக்கற்கள் அமைக்கப் பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் பெருமையையும் இங்கு தமிழ் அரசு ஒன்று நிலவியது என்பதையும் இன்று வரை பறைசாற்றி கம்பீரமாக மந்திரிமனை உயர்ந்து நிற்கின்றது.

யாழ்ப்பாண அரசு கால வீதிகள்.

யாழ்ப்பாணத்தில் தமிழரசு ஒன்று நிலவிய காலத்தில் புழக்கத்தில் இருந்த வீதிகளின் பெயர்கள் இன்றுவரை உள்ளன. அவையாவன, நல்லூர் இராஜ வீதி, நல்லூர் இராணி வீதி, நல்லூர் யமுனா வீதி, நல்லூர் சங்கிலியன் வீதி, நல்லூர் அரச வீதி, கோப்பாய் இராச வீதி போன்றனவாகும். கோப்பாயில் யாழ்ப்பாண மன்னர் கால இராசதானி ஒன்று காணப்பட்டதாகவும் இவ்வீதியூடாக பல்லக்கில் மன்னர் சென்று வருவதாலேயே இவ்வீதி இராசா வீதி என அழைக்கப்பட்டதென்பர்.

முடிவுரை

இவ்வாறாக இன்று பல்பரிணாம வளர்ச்சி பெற்று உலகெங்கும் புகழ் பரப்பி நிற்கும் யாழ்ப்பாணம் என்ற தமிழரின் நகரம் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தையும் , மரபுகளையும் தன்னகத்தே தாங்கி வளர்ச்சியடைந்து வந்துள்ளது. வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டங்களிலும் அதன் தாக்கங்களை உள்வாங்கி காத்திரமான வளர்ச்சிப் போக்கை தன்னகத்தே கொண்டு தலைநிமிர்ந்து நிற்கின்றது.

உசாத்துணை நூல்கள்

1)Abayasinge.T.,1966, Portuguese Rule in Ceylon,1594-1612,Colombo.

2)Arasaratnam.S.,1958,The Dutch Power in Ceylon 1658-1687,Colombo.

3)Pathmanathan.S.,(2011),King of Jaffna,(AConciseHistory(Tamil),Kumaranbook House, Colombo.

4)Paranavitana,S.,1961,The  Arya  Kingdom in Northern Sri Lanka: Society Ceylon Branch, Vol.VII pt.2. 

5)QueyrozFernaoDe.,(1930),The Temporal and spiritual congest of Ceylon ,trans,Perero,S.Q Colombo.

6) Ragupathy,P.,1987,Early Settlements inJaffnaAnArchaeologicalSurrvey,Madaras. 

7)Silva.K.M.De,(1981),AHistoryof Srilanka,Oxford University press,Delhi.

8)Silva,Cosme (1994),Fidalgrs in the KingdomofJaffnaof Jaffnaptam,Colombo.

9)இந்திரபாலா.கா(2006),இலங்கையில் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு,குமரன்புத்தகஇல்லம்,கொழும்பு.

10)சபாநாதன்.குல.,(ப.ஆ)(1949),யாழ்ப்பாணவைபவமாலை,சுன்னாகம்.

11)சிற்றம்பலம்.சி.க,(1992),யாழ்ப்பாண இராச்சியம்(பதிப்பு),யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வெளியீடு.

12)புஸ்பரட்ணம்.ப(2007),இலங்கைத்தமிழர் – ஒரு சுருக்க வரலாறு – , தமிழ்க்கல்விச்சேவை,சுவிற்சர்லாந்து.

error: Content is protected !!
error: Content is protected !!