Sunday, April 6

கலாவித்தகர் பாகீரதி கணேசதுரை

0

அறிமுகம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு என்பது வரலாற்றில் கலைப்பூமியாகத் திகழும் பிரதேசம். ஐவகை நிலங்களான மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி, பாலை என அனைத்து வளங்களையும் ஒருங்கே கொண்டமைந்த பூமி. ஒருபுறம் வெற்றிலைச் செடியும் மறுபுறம் ஆன்மீக வளமும் என வரலாறு பேசும். குதிரைமுகம் நீங்கியதனால் மாவிட்டபுரம்மாவிட்ட புரம் எனவரலாற்றில் பதியப்பட்ட சோழவரலாறு பேசும் மாவைக் கந்தன் எழுந்தருளி அருள் பாலிக்கும் புண்ணிய பூமியாம் மாவிட்டபுரம் என்னும் பதியில் இசைக் கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் ஓதுவார் களும் நிறைந்திருந்து கலை வளர்த்த பாரம்பரியத்தில் திரு திருமதி புண்ணியமூர்த்தி மாரிமுத்து தம்பதியினரின் மூன்றாவது புதல்வியாக 1952 மார்கழி மாதம் இரண்டாம் திகதி பிறந்தார் .இவரது மூத்த சகோதரர் திரு.பு.கண்ணபிரான் (அமரர்) இரண்டாவது சகோதரி ஜானகி ரகுநாதன் இளைய சகோதரி கலைச்செல்வி நாவலன் ஆகியோர் உடன் பிறந்தோராவர்.

 கலைப் பாரம்பரியப் பூமியில் கலைஞானத்தோடு பிறந்த பாகீரதி அவர்கள் ஆசிரியராக, உளவளத்துணை வளவாளராக, மிகச் சிறந்த படைப்பாளியாக, நாடகம், இசை என அனைத்துக் கலைகளிலும் பிரகாசித்து வரும் இவர் அமைதியாக இருந்து கலைத்துறையில் சாதிக்கும் பெண் ஆளுமையாளரா  வார்.

 இவர் தனது ஆரம்பக் கல்வியினை தெல்லிப்பளை வீமன்காமம் ஆங்கில பாடசாலையில் ஆரம்பித்தார். இடைநிலை, உயர்கல்வி ஆகியவற்றினை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைக்கழக மாணவியாக 1971ஆம் ஆண்டு இணைந்து சங்கீதரத்னம் டிப்ளோமா கர்நாடக இசைப்பட்டதாரியாக  1973ஆம் ஆண்டு நிறைவு செய்து வெளியேறினார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதல்தடவையாக வெளிவாரிக் கற்கைகள் 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது தன்னை முதலாம் தொகுதி வெளிவாரி மாணவியாக கலைப்பிரிவில்  பதிவு செய்துக் கலைமாணிப் பட்டத்தினை 1994-1994; கற்கைநெறி ஆண்டில் நிறைவு செய்தார். தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமைந்திருந்த தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டபின் கல்வி டிப்ளோமா வினை 1993-1995 கல்வி ஆண்டில் பதிவுசெய்து நிறைவு செய்தார்.

 பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் சிறுது காலம் தொழில்வாய்ப்பின்றி வேலை தேடும் படலத்தில் இருந்த இவர் குறித்த அந்தக் காலத்தை வீண்விரயமாக்காமல் தொண்டர் சேவை என்னும் அடிப்டபடையில் 1973-1977ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலயத்தில் மூன்று நாள்களும்; யாழப்பாணம்; வீமன்காமம் ஆங்கிலப் பாடசாலை யில் இரண்டு நாள்களும் என வேதனமின்றிக் கற்பித்து வந்தார். இறைவனின் திருவருளினால் இவருக்கு இலங்கை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைந்து சேவையாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. 1977-05-23ஆம் நாள் மட்டக்களப்பு அமிர்தகழி சிறிசித்தி விநாயகர் வித்தியாலயத்தில் தனது நிரந்தர ஆசிரியர் சேவையினை ஆரம்பித்து ஆசிரியர் சேவைப் பயிற்சி பெறுவதற்காக 1979-1981 யாழ் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பயிற்றப்பட்ட ஆசிரியரானார். பியிற்சி நிறைவில் யாழப்பாணம் கீரிமலை நகுலேஸ் வரா வித்தியாலயம் 1982 -1999 வரை கடமையாற்றிய பின்னர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகஜனாகல்லூரியில் 2000-2012 வரை கடமையாற்றி 2012-12-01ஆம் நாள் ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.

இவருடைய ஆசிரியர் சேவைக் காலத்தில் பல நல்ல மாணவர்களை உருவாக்கியுள்ளார். இன்று கலைத்துறையில் மிளிர்ந்து உலகெங்கும் பணிசெய்து வரும் மாணவர்கள் இவருடைய ஆசிரியப்பணியின் நிதர்சன சாட்சிகளாகவுள்ளனர். வட இலங்கை சங்கீத சபையி;ன் கர்நாடக இசை மற்றும் நாடகமும் அரங்கியலும் கற்கையிலும் தராதரம் 1 தொடக்கம் 6 வரை பயின்று  ஆசிரியர்தரம் சித்திபெற்று சங்கீத கலாவித்தகர், நாடகக் கலாவித்தகர் பட்டங்களைப் பெற்றுக்கொண்டவர்.

திரு. மு.கணேசதுரை (அமரர்) என்னும் கனவானை 1977.06.20ஆம் நாள் தனது வாழ்க்கைத் துணையாக ஏற்று திருமணம் என்னும் நல்லறத்தில் இணைந்து கொண்டார். திருமண வாழ்வில் நான்கு ஆண்பிள்ளைச் செல்வங்களைப் பெற்றார். இவர்கள் அனைவரும் கல்வி மட்டுமல்ல கணணி மற்றும் கலைத்துறையில் உன்னதமான இடத்தில் தங்கள் பணியை ஆற்றிவருகின்ற னர். மூத்த புதல்வன் மதுராகணேசன் கணணித்துறையில் நிறுவனமயமாக சேவையாற்றியதோடு கலைத்துறையில் மிருதங்க அணிசைகலைஞராகவும் யுனிசெவ் தொண்டு நிறுவனத்தில் சேவையாற்றி அனர்த்தத்தில் பாதிக்கப்  பட்ட மக்களிற்கு இடர் உதவிகள் ஆற்றியதன் மூலம் சமூகசேவகராகவும் பணியாற்றிவருகின்றார். இரண்டாவது புதல்வன் தீபன் பொறியியளாளரா கவும் கலைத்துறையில் இசைநடனம் Keyboard, புல்லாங்குழல் வீணை ஆகியவற்றில் பல்துறைக் கலைஞராகவம் குறிப்பாக நடன அரங்கேற்றங் களில் நட்டுவாங்கக் கலைஞராகவும்விளங்குகின்றார். கடந்த பத்து வருடங் களிற்கு மேலாக சிங்கப்பூர் செண்பக விநாயகர் தேவஸ்தானத்தில் கலை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்  சேவையாற்றுகிறார். மூன்றாவது புதல்வன் ஆதித்தன் கல்லூரிக் காலங்களில் சதுரங்கத் துறையில் தேசியமட்டம் வரை தெரிவு செய்யப்பட்டு இந்தியாவில் நிகழ்ந்த சதுரங்கப் போட்டிக்குத் தெரிவாகியதோடு சதுரங்கப்போட்டிகளை நடத்தும் பணியிலும் இணைந்து சேவையாற்றியுள்ளார். நான்காவது புதல்வன் அபயன் இந்தியாவில் அனிமேஷன் கற்கைநெறியினைப் பயின்று பத்துவருட அனுபவம் பெற்ற இவர் குறுந்திரைப்படங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டவர். தற்போது  இலங்கையில் IBC தமிழ் நிறுவனத்தில் தயாரிப்புத்துறைத் தலைவராக இருப்பதோடு 150 பகுதிகள் நிறைந்த மர்மக்குழல் நெடுந்தொடரை தயாரித்தமை குறிப்பிடத்தக்கது அத்துடன் சமூகத் தொடர்பாடல் மூலம் மக்கள் இடர்களையும் சேவைகளையும் IBC தமிழ் நிறுவனத்தின் அனுசரனை யுடன் ஆற்றிக் கொண்டு இருக்கிறார்.

உளவளத்துணையாளராக பகீரதிகணேசதுரை அவர்கள்

சீர்மியர் யாழ்ப்பாணம் உளவளத்துணை நிறுவனமான சாந்திகம் நிறுவனத்தில் 1993 இலிருந்து 1995வரை உளவளத்துணையாளராகப் பணியாற்றிவர். இவற்றிற்குமேலாக புற்றுநோயாளர்களுக்கான விசேட அமர்வுகள், வயோதிபர்களுக்கான அருகிருத்தல் அமர்;வுகள் ,மரணப்படுக் கையில் உள்ளநோயாளர்களுக்கானஅருகிருத்தல் அமர்வுகள் (இறப்புநேரும்; வரை)என உளவளத்துணையின் பலமுக்கியவிடயங்களின் தனது ஆளுமைத் திறணை வெளிப்படுத்தியவர். 2008ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை துர்க்காபுரம் மகளிர் இல்ல சிறுமிகளுக்கான ஆலோசனையும் வழிகாட்டலும் மற்றும் நாடகப்பயிற்சிகளுடன் பரீட்சைக்குத் தயார்படுத்தல், விழாக்காலங் களுக்கான நாடகத்தயாரிப்பு என்பவற்றில் சமூகசேவையாக ஈடுபட்டு வருகின்றார்.

 சீர்மியற்றுணை வழங்கல் சேவை

GTZ நிறுவன அனுசரனையுடனான உளவளத்துனை வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் போரினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பானதுவடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ,இடைத்தங்கள் முகாம்களில் வாழும் மக்கள் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள்

நெருக்கீட்டிற்கு பிற்பட்ட மனவடு தொடர்பான உளவளத்துணை வழங்கள்மந்திகை தொடக்கம் பொத்துவில் வரையான முகாம்களில் தெரிவு செய்யப்பட்டவர்களிற்கு உரியது

சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தற்காலிக முகாம்களில் வாழும் மக்களுக்கு முகங்கொடுத்தல் தாங்குதிறன் தொடர்பான பயிற்சிகள் வழங்கலும் இனங்காணப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கல் சேவையும்

உளவியல் அணுகுமுறை தொடர்பான ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கைநூல் ஆகிய சிறுவர் உளநலம் நூலின் எழுத்தாளர் குழுவின் 9வது அத்தியாயத்தை எழுதி பயிற்சி வழங்கல்

பாடசாலைகளில் உளவளத்துணையாளர்களாகவும் நட்புதவியாளர்களாகவும் கடமையாற்றுவதற்கு தெரிவசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் சேவை மேற்கூறிய யாவும் வடக்கு கிழக்கு பாடசாலைகளில் தொடர் சேவையாக நடைபெறு வதற்குரிய இணைப்பாக்கக் குழுவில் ஒருவர்

உளவளத்துணை ஆசிரியர்களுக்கான சீர்;மிய கீதம் ஆகிய ஆறுதல் சொல்வோமே எனும் பாடலை எழுதி இசையமைத்தவர்.

 அரங்கத் தயாரிப்பாளராக பாகீரதிகணேசதுரை அவர்கள்.

கர்நாடக சங்கீதத் துறையின் மூலம் கலையுலகில் இனங்காளப்பட்டவராக இருந்தாலும் நாடகமும் அரங்கியலும் செயற்பாட்டினூடாகவே பாகீரதி அவர்கள் அறியப்பட்டவர். தெல்லிப்பளை கலை, இலக்கியக் களத்தினூடாக திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களுடன் இணைந்து அரங்க முயற்சியிலீடுபட்டவர். நாடக ஆசிரியராக தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கற்பித்து அப்பாடசாலையின் கலை இலக்கியக் களத்திற்கு மெருகூட்டியவர். இலக்கிய நாடகங்கள், வில்லிசை, நடிப்பு, மேடைநாடகம் நிகழ்ச்சிகள் தயாரித்து மேடையேற்றியதுடன் 1990-1995 வரை போர்க்கால அரங்கப் படைப்புகள் பலவற்றினையும் தந்துள்ளார். அந்தவகையில்……..

தென்றலேமெல்லவீசு (நாட்டியநாடகம்) – எழுத்துரு, இசைநெறியாள்கை, தயாரிப்பு

எமதர்மராஜன் நிவாரணம் பெறுகிறார்முதலாவது ஆசிரியர் தினநாடக எழுத்துருப் போட்டியில் முதற்பரிசு பெற்ற நாடக எழுத்துரு.

மேற்கில் தோன்றும் உதயம்பாநாடகம்எழுத்துரு, இசை,நெறியாள்கை,              தயாரிப்பு

2000 – நமோநாராயணாஎழுத்துரு, இசை,நெறியாள்கை, தயாரிப்பு

2001 – ஞானப்பூஎழுத்துரு,இசை, நெறியாள்கை,தயாரிப்பு

2001 – நான் போனால் (மகிஷவதம்) – எழுத்துரு,இசை,நெறியாள்கை,தயாரிப்பு

2002 – சாபமும் சக்கரவர்த்தியும் பாநாடகம்எழுத்துரு,இசை,நெறியாள்கை, தயாரிப்பு

2002 – கல்வியா செல்வமா வீரமா ( சமயநாடகம் ) – எழுத்துரு,இசை, நெறியாள்கை, தயாரிப்பு

2003 – நதிக்கரைநாணல் (நாடகக் கலாவித்தகர் பட்டத்திற்கான ஆற்றுகை) – நடிப்பு,  எழுத்துரு, இசை,  நெறியாள்கை, தயாரிப்பு.

2004 – நிழலைத்தேடும் நிஜங்கள்எழுத்துரு, இசை, நெறியாள்கை,தயாரிப்பு

2004 – பக்தபிரகலாதாஎழுத்துரு,இசை, நெறியாள்கை,தயாரிப்பு

2010 – துர்க்காதேவிசரணம்எழுத்துரு, இசை, நெறியாள்கை, தயாரிப்பு

2011 – சத்யவான் சாவித்திரிதயாரிப்பு

2012 – வள்ளிதிருமணம்தயாரிப்பு. சிறுவர் உரிமைஎழுத்துரு, தயாரிப்பு, (வில்லிசை)

 தங்கத்தாய்மடியில்எழுத்துரு, தயாரிப்பு (வில்லிசை)

2013 – மைந்தனின் மாட்சி ( விஷேட கூத்து ) – மகஜனாக்கல்லூரி நூற்றாண்டு விழாவில் ஆற்றுகை செய்யப்பட்ட ஆவணப்படைப்பு

2014 – சரணாலயம் நாட்டிய நாடகம்எழுத்துரு, இசை,தயாரிப்பு

2015 – இனியொரு விதிசெய்வோம் (வில்லிசை) – எழுத்துரு, தயாரிப்பு (2016 தேசியமட்டம் 3ஆம் இடம்)

2017 – நான் போனால்இசைநாடகம்எழுத்துரு,இசை, தயாரிப்பு

2022 – சீதா கல்யாணம்இசைநாடகம்எழுத்துரு, இசை, தயாரிப்பு ஆகிய படைப்புகள் குறிப்பிடத்தக்கன.

நடிகையாக பாகீரதி அவர்கள்.

அப்பாவின் மிதிவண்டி யோசித்தனின் தயாரிப்பில் வெளியான குறும்படத்தில் ………பாத்திரமேற்று நடித்தார்.

செங்கையாழியானின் கிடுகுவேலி நாவலை அடிப்படையாகக் கொண்டு நேத்ரா தொலைக் காட்சியில் ஒலி ஒளிபரப்பப்பட்ட சித்திரங்கள் என்னும் தொலைக்காட்சி நாடகத்திலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

 வெளியிட்ட நூல்கள்

கந்தர்வகானங்கள்மாவிட்டபுரம் கந்தசுவாமி தேவஸ்தான வெளியீடு

ஆரண்யவாசம் கவிதைத் தொகுப்பு தெல்லிப்பளை, கலை இலக்கியக் கள வெளியீடு

சாபமும் சக்கரவர்த்தியும் 12 நாடக எழுத்துருக்களின் தொகுதி பூவரசி மீடியா வெளியீடு, இந்தியா. (2016)

 சிறப்புச் செயற்பாடுகள்

ஐடீஊ தமிழ் தொலைக்காட்சியில் மர்மக்குழல் மெகாதொடர் 1 150 பாகங்களுக்குமான ஆலோசகராகப் பணியாற்றியமை

மர்மக்குழல் மெகாதொடரின் முகப்புப் பாடலாகிய அழகியதெய்வத்தாய் நிலமே’–எழுத்துருஆவணம்இணையத்தளம்

சிங்கப்பூர் பிரதமர் மான்புமிகு லீக்குவான்யு அவர்களின் மறைவையொட்டிய கீதம்பாலை வனமாய் கிடந்த மண்ணைபாடலாக்கம்

 வழங்கிய விருதுகள், கௌரவங்கள்.

நாடகக் கலைச்சுடர் விருதுவலிகாமம் வடக்கு பிரதேச செயலக கலாசாரப்பேரவை.

நாடகக் கலாவித்தகர்வடஇலங்கை சங்கீதசபை

வாழ்நாள் சாதனையாளர் விருதுபூவரசி மீடியா இந்தியா.

விழிசைச்சிவம் கலைஞர் விருதுசோலைக்குயில் அவைக்காற்றுக்கழகம்.

                                    பணிகளின் விபரங்கள்.

தலைப்பு  ஆவணம் பக்கம்

ஈழக்கலைஞர்களோடு

    பூவரசி (2015 தை   61

என்னாலே     கவிதை

உன்னத ஆளுமையால் உலகை வெல்வோம்  

55
எழுத்தாளர் குழு

    சிறுவர் உளநலம் அத்தியாயம்  9   

II
அழகியலுக்கூடாக ஆற்றுப்படுத்தல்  முழுநிலாமுத்து  2014 1-4
சுலன சங்கம சங்காரம்

  முழுநிலாமுத்து 

2017 8-11
இதயத்தை மீட்டெடுப்போம்    மகாஜன் நூற்றாண்டு மலர் 2013  77-82
ஆசியுரை கந்தர்வ கானங்கள் V
அணிந்துரை கந்தர்வ கானங்கள்  VI-XI
ஆசிச்செய்தி

சாபமும் சக்கரவர்த்தியும் நாடகத் தொகுப்பு

அணிந்துரை

சாபமும் சக்கரவர்த் தியும் நாடகத் தொகுப்பு                                                                          

ஆசிச்செய்தி    ஆரண்யவாசம்  V
பதிவு

  ஆரண்யவாசம் 

VI
சிந்தனைத்தூறல்     ஆரண்யவாசம் VII-XI
பேராசிரியர் இளங்கோவன்; கருத்துக்கள் ஆரண்யவாசம் பின் அட்டை
பூவரசி விருது வழங்கல் அழைப்பிதழ் விருதாளர் பெயர்கள் விருதுகள் படங்கள் 
விருது வழங்கல் விழா  தமிழ் மிரர் செய்தி
தேனோடு குழைத்து விமர்சனம் தமிழ்மிரர்
நாயிற்கடயாய் உருவகக்கதை வலம்புரி சங்குநாதம்   19.03.2017
எதுவரை சஞ்சிகை வரை

2010 தை தொடக்கம் 2011 மார்கழி வரை 

   2-3

 

 எங்கள் தவப்பயனே

மகாஜனன் ஜயரத்தினம் நூற்றாண்டு மலர்  

2013  
உங்களுடன் இருக்கிறேன் –  முனதைக் கழுவும் மகாசமர்த்தர்கள் சிறுகதைத் தொகுப்பு 33- 45
பூவொன்று புயலாகிறது  மனதைக்கழுவும் மகாசமர்த்தர்கள் சிறுகதைத் தொகுப்பு   63- 72

இவரது ஆசான்கள்

ஆரம்பகால இசைத்துறையில் இசைமணி . செல்லத்துரை, நேசபூபதி நாகராஜன் திலகவதி ஆகியோரிடம் மாவை முத்தமிழ்  கலை மன்றத்தில் இணைந்து கற்றார். மேலும் இத்துறை யில் தன்னை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் சிறப்புப் பயிற்சியில் சித்தூர் சுப்ரமணியப்பிள்ளை, ஐயாகண்ணுதேசிகர், திருமதி சத்தியபாமா ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். கவிஞர் .முருகையனை குருவாகக்கொண்டு இலக்கியத்துறையில் தடம்பதித்ததுடன், நாடகத்துறையில் அமரர் .ரி.பொன்னுத்துரை பேராசிரி யர் மௌனகுரு, குழந்தை .சண்முகலிங்கம் ஆகியோரும் நாட்டிய நாடக எழுத்துரு தயாரிப்புத்துறையில் வீரமணிஐயர், கலாபூஷணம் .சின்னராஜா, வேல்ஆனந்தன,; சாந்தினி சிவனேசன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார்; பேராசிரியர் தயா சோமசுந்தரம், சா.சிவயோகன், கோகிலா மகேந்திரன் ஆகியோரிடம் உளவளத்துறையில் பயிற்சி பெற்று இத்துறையில் செயற்ட வைத்த ஆசான்களாக மதித்து வருகின்றார்.

 இணைந்து செயலாற்றியவர்கள்

இவரது கலைப் பயணத்தில் பலர் இணைந்து செயற்பட்டு வந்துள்ளனர். யாழ்ப்பாண கலைச் செயற்பாட்டு நடவடிக்கைகளில் பண்டிதர்களும், கலைஞர்களும் தயாரிப்புகளை மேற்பார்வை செய்து ஆலோசனை வழங்கிவந்துள்ளனர். குறிப்பாக பண்டிதர் வே.தனபாலசிங்கம,; பேராசிரி யர் சி.சிவலிங்கராஜா, கவிஞர் சோ. பத்மநாதன் அவர்களும் தயாரிப்புகளில் இணைந்து பங்காற்றியவர்களாக சா.வே.தயாநிதி, .கிருபாநந்தன,; கமலராணி கிருபாநந்தன், வை.விஜயபாஸ்கர் தி.தர்மலிங்கம் து.அயூரன் ஆகியோரும் குறிப்பிடக்கூடியவர்கள்.

இசைத்துறை மூலம் கலையுலகில் கால் பதித்தாலும் இசை மட்டுமன்றி, நாடகம், நடனம், படைப்பிலக்கியம், உளவளத்துணை என தன்னை அடையாளப்படுத்தி தன்னலமற்ற சேவையாற்றி வருகின்ற கலாவித்தகர் திருமதி பாகீரதி கணேசதுரை அவர்கள் மேலும் பல கலைச்சேவையினை எமது மண்ணிற்காற்ற வேண்டுமென வாழ்த்துகின்றோம்.

இத்தொகுப்பிற்காக எமக்கு பல வழியிலும் உதவிய க.அபயன் அவர்களுக்கும் யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூட உறுப்பினர் சங்கரப்பிள்ளை கிருபானந்தன் அவர்களுக்கும் யாழ்ப்பாணப் பெட்டகம் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

,,

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!