Sunday, November 15

ஈழத்து இசைஞானி கண்ணன் மாஸ்ரர்.

0

திரு கண்ணன் அவர்கள் ஈழத்தில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் என்னும் இடத்தில் 1943. 03. 29 இல் பிறந்தவர். இவர் தனது ஆரம்ப இசைப்பயிற்சியைப் புலவர் சண்முகரட்ணம் அவர்களிடமும் நாதஸ்வர வித்துவான் கோவிந்தபிள்ளை அவர்களிடமும் பெற்றார். பின்னர் சிதம்பரம் கிருஸ்ணமூர்த்தி அவர்களிடமும் வேலணை சங்கீதபூஷணம் இராஜலிங்கம் அவர்களிடமும் வாய்ப்பாட்டினை முறையாகக் கற்றுத் தேர்ந்தார்.
தனது பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு முழு நேரமும் தன்னை இசையில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். இசைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழப்பதிந்து விட்டது. கருநாடக இசை, பொப் இசை, மெல்லிசை, பக்தி இசை, திரையிசை, நாடக இசை என பல்திறமை கொண்ட ‘இசைவாணர்’ கண்ணன் என்பவரால் கண்ணன் இக்குழு வழிநடத்தப் பட்டது. நாச்சிமார் கோவிலை சேர்ந்த “வண்ணக் கலைவாணர்” நாடகக்குழுவிற்கும், அதன் பின்னர் புகழ்பெற்ற நாடக இயக்குனர் நட்சத்திரவாசி பாலேந்திரா,
இதைத் தொடர்ந்து “உயிர்த்தெழுந்த மனிதர் கூத்து” பொய்க்கால் போன்ற நாடகங்களுக்கும் சி.மௌனகுருவின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட நாடகங்களுக்கும் “மண் சுமந்த மேனியர்” என்ற நாடகத்திற்கும் “எங்கள் மண்ணும் இந்த நாட்களும்” என்ற கவிதா நிகழ்விற்கும் இசை அமைத்தார்.
இதன்பின்னர் இசையமைப்பாளர் றொக்சாமியுடன் இணைந்து இலங்கை வானொலியில் பணியாற்றினார். 90களில் விடுதலைப் புலிகள் எழுச்சியடைகிற போது ஈழத்து இசைப்பாடல்கள் விடுதலைப் பாடல்களாக போரிலிருந்து பிறந்த பாடல்களாக பரிணமிக்கின்றன. இந்தப் பரிமாணத்திலும் கண்ணனின் பங்களிப்பு கனதியானதாகும். “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்…” என்ற பாடலை அறியாதவர் இருக்கமுடியாது. கண்ணன் ‘1996’ என்கிற வெளிவராத குறும்படத்திற்கான பின்னணி இசையையும் அமைத்திருந்ததை இங்கு நினைவு கூரலாம் .
திரு கண்ணன் அவர்கள் 1983ம் ஆண்டு வரை இசைக்குழு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், நாடகக்குழு என்று அவர்களுடன் இணைந்து பணியாற்றிவிட்டு அவற்றை எல்லாம் துறந்துவிட்டு 1983ல் யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் கோவிலில் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு குடும்பத்தாருடன் வசிக்கலானார். ஈழத்தில் இருந்த தரமான இசையமைப்பாளர் கண்ணன் ஒருவரே. ஈழத்து மெல்லிசைப்பாடல்கள், பொப்இசை, றொக்இசை, ஆங்கில இசை, தென்னிந்தியத் திரைஇசை, பக்திப்பாடல்கள் போன்றவை எமது இசைக்குழுவால் இசைக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் பிரபல சிங்களத் திரைப்பட இசை அமைப்பாளர் திரு றொக்சாமி அவர்களின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. அவர், கீபோட், வயலின் செக்ஸபோன் ஆகிய கருவிகளை இசைப்பதில் வல்லவர் சிறந்த இசையமைப்பாளர் அவரோடு இணைந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியதும், “தெய்வம் தந்த வீடு” என்ற ஈழத்துத் தமிழ்த்திரைப்படத் திற்கு இசை அமைத்ததும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒர் அனுபவம். இவ் அனுபவம் இசைத்துறையில் ஆழமான ஈடுபாட்டையும் உற்சாகத்தினையும் அவருக்கு ஏற்படுத்தியது. தொடர்ந்து கோமாளிகள் ஏமாளிகள் திரைப்படங் களுக்கு இசை அமைக்கும் வாய்பையும் ஏற்படுத்தியது. முதன்முதல் சிங்களத்திரைப்படத்திற்கு இசை அமைத்த திரு முத்துஸ்வாமி ஐயர் அவர்களது அறிமுகம் இவ்வேளையில் அவருக்குக் கிடைத்தது.
யாழ்ப்பாணத்தில் சி.மௌனகுருவின் நெறியாள்கையில் மேடையேற் றப்பட்ட ‘புதியதொரு வீடு’ ‘சம்காரம்’ ஆகிய நாடகங்களுக்கு இசையமைக்கும் பணியேற்று மீண்டும் நாடக உலகினுட் பிரவேசிக் கின்றார். 1985ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலாசாரக் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மண் சுமந்த மேனியர்” என்ற நாடகத்திற்கும் “எங்கள் மண்ணும் இந்த நாட்களும்” என்ற கவிதா நிகழ்விற்கும் கண்ணனே இசை அமைத்தார். இவ்விரு நிகழ்வுகளும் யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய சாதனையைப் புரிந்தவை. இதற்குக் கண்ணனுடைய இசையும் மிகமுக்கிய காரணம் என்று விவரிக்காத விமர்சகர்கள் இல்லை. ‘மண் சுமந்த மேனியர்’ குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பட்டு சிதம்பரநாதன் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டது. எங்கள் மண்ணும் இந்த நாட்களும் சுவிதா நிகழ்வில் இடம் பெற்ற கவிதைகள் பாடல்கள் அனைத்தும் உ.சேரன் அவர்களுடையது.
இந்த இரு நிகழ்வுகளும் யாழ்ப்பாண மக்களின் வாழ்நிலைப் போராட்டங்களையும் (அகம், புறம்) அவற்றின் வலிகளையும் 1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் அழிவுகள், இழப்புகள், துயரங்கள் ஆகியவற்றையும் சித்தரிப்பனவாக அமைந்து இருந்தன. இந்நிகழ்வு களுக்கு இசை அமைப்பதற்குக் கண்ணன் அவர்கள் உபயோகப்படுத் திய இசைக்கருவிகள் ஒரு ஹார்மோனியம், ஒரு வயலின், ஒரு தபேலா ஆகியவை மட்டுமே. 1985 ற்கு முன்னர் அமைத்த இசைகளை விட இவை சற்று வித்தியாசமாகவே அமைந்து இருந்தன. தமிழிசையை அடிப்படையாகக் கொண்டு நாட்டாரியற் கூறுகளையும் அவற்றுடன் இணைத்து அவசியம் ஏற்படின் மேலைத் தேசஇசை உத்திகளையும் கையாண்டு யாழ்ப்பாணக் கலாசாரப் பின்னணியையும் இணைத்துத் தனது கற்பனைகளைப் புகுத்தி மண்வாசனையுடன் அவரது தனித்துவமான ஆளுமையில் பாடல்கள் உயிர்பெற்று எழுந்தன. அவற்றைப் பாடும் போது பாடகர்களும், நடிகர்களும் வெளிப்படுத்திய உணர்வலைகள் யாழ்ப்பாணத்தை அதிரச்செய்தன. யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் இவ்விரு நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
1990இல் இந்த இசை போர்க்கால இசையாக மாற்றம் பெறுகின்றது. கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இருந்து இசைப் பனி புரிந்த கண்ணன் அவர்கள் இக்காலத்தில் தனது இருப்பிடத்தை வன்னிப்பகுதிக்கு மாற்றிக் கொண்டார். கண்ணன் அவர்களுடைய ஆளுமையின் இன்னுமொரு பரிமாணம் இது. 1990ஆம் ஆண்டின் பின் போராட்டக் களத்திலும் போராளிகளே கவிஞராக இருந்தும் பாடிய ஏராளமான பாடல்களுக்குக் கண்ணன் இசையமைத்துள்ளார். அவருடைய இரு பிள்ளைகளாகிய சத்தியனும் சாயிதர்சனும் தந்தையாருடன் வன்னியில் இருந்து இப் பணி சிறக்க உதவியுள்ளனர். அவர்கள் தனியாகவும் பல பாடல்களுக்கு இசையமைத்து உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எந்த வித தொழில் நுட்ப வசதியும் இன்றி மிகக்குறைந்த வாத்தியங்களையும் மிகக் குறைந்த கலைஞர்களையும் வைத்துக் கொண்டு மண்ணின் மணம் கமழ மக்கள் மனதைப் பிசைந்து பிசைந்து உணர்வையும், புத்தியையும் உயிர்ப்பிக்கும் இசையைக் கண்ணன் அவர்கள் போர்க்கால இசையாக எமக்குத் தந்துள்ளார். போராட்டச் சூழலிற் குண்டுகள் பொழிய மானிடம் மரணிக்க மக்களின் கூக்குரல்களுக்கு மத்தியில் குருதிதோய்ந்த மண்ணில் இந்த அற்புதமான பாடல்கள் உருவாகியுள்ளன.
இவ்வாறு ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த கண்ணன் ஈழ மண்ணினின் இசையமைபாளராகத் தடம் பதித்து ஈழத்து மெல்லிசை, பொப்பிசை, றொக்கிசை, ஆங்கில இசை, கர்நாடக இசை, ஈழத்துத் தமிழ்ச் சினிமாவின் இசை நாடக இசை, பக்தி இசை, போர்க்கால இசை என்று பல பரிமாணங்களிலும் அவரது புலமை விரிந்து ஆளுமை மிக்க அற்புத மனிதராக வாழ்கின்றார். தன்னுடைய புத்திரர்களான சத்தியனையும், சாயி தர்சனையும் இத்துறையிலேயே ஈடுபடுத்தியுள்ளார்.
ஈழத்தில் புகழ்பெற்றிருந்த இசைக்குழுக்கள்
கண்ணன் இசைக்குழு
இரட்டையர் இசைக்குழு                                                                                     கலாலயா இசைக்குழு
அருணா இசைக்குழு
மண்டலேஸ்வரன் இசைக்குழு
றெக்ஸ் இசைக்குழு
ரங்கன் இசைக்குழு
நவகீதா இசைக்குழு
சுண்டுக்குழி ராஜன் இசைக்குழு
பீற் நிக்ஸ் இசைக்குழு
சுந்தரையர் இசைக்குழு
கோப்பாய் தியாகராஜா (தனிமனிதராக இசைக்கச்சேரி நடத்தியவர்)
இவற்றுடன் நித்தி கனகரட்னம்,. மனோகரன், ஆ.P.பரமேஸ், அரியாலை ராமச்சந்திரன், சண்.சத்தியமூர்த்தி, அமுதன், அண்ணாமலை ஸ்ரனி சிவானந்தன், அன்ரன் டேவிட், எம்.எஸ்.பெர்னாண்டோ, ரொனி காஸன், முல்லை சகோதரிகள் த்றீசிஸ்ற்ரேஸ் போன்ற தனி மனிதர்களும் புகழ்பெற்றிருந்தார்கள் !
இசைவாணர் கண்ணனின் இசைப்பயணம் மூன்று தசாப்தங்களாக தொடர்கிறது.
இவருடைய இத்தகைய இசைப் பணியினை போற்றும் வகையில் எங்கள் ஈழத்து இசைஞானி அவர்களுக்கு யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக் கலைக்கூடம் “இசைநேயப்பரிதி“ என்னும் விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!