சபாபதி 1898ஆம் ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதி பிறந்தார். தந்தையார் வரணியைச் சேர்ந்தவர். யாழ் பரி யோவான் கல்லூரியில் கல்வி கற்ற இவர் கல்லூரியின் மாணவர் தலைவராகவும் பணியாற்றினார். விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டிருந்த சபாபதி, கல்லூரியின் துடுப்பாட்டக் குழுத் தலைவராக இருந்ததுடன், கால்பந்தாட்டக் குழுவிலும் சேர்ந்து விளையாடினார். சபாபதி தொல்புரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகளான கனகேஸ் வரியை மணம் புரிந்தார். இவர்களுக்குப் பத்மினி என்னும் மகள் உள்ளார். இவரது உடன்பிறந்தாரான எஸ். குலேந்திரன் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் யாழ்ப்பாண ஆயர் ஆவார். தனது கல்வியை முடித்து குற்றவியல் சட்டத்தில் சிறப்புத் தகைமை பெற்ற சட்டத்தரணியாக சட்டத்தொழிலில் நுழைந்தார். யாழ்ப்பாணத் திலேயே பணியாற்றினார். யாழ்ப்பாண நகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், 1937 தொடக்கம் 1939 வரை நகர சபைத் தலைவராகப் பதவி வகித்தார். 1949இல் யாழ்ப்பாணம் மாநகர சபையாகத் தரமுயர்த்தப்பட்டபோது, சபாபதி அதன் முதல் நகர முதல்வரானார். யாழ்ப்பாணப் பொது நூலகம், சுப்பிரமணியம் பூங்கா, நல மையங்கள்ஃமகப்பேற்று மருந்தகங்கள் போன்ற பல வசதிகள் இவர் காலத்தில் உருவாயின. பொது நூலகத்துக்கான அடிக்கல் 1953 மார்ச் 29 அன்று இவரால் நாட்டப்பட்டது. 1964 பெப்ரவரி 12 ஆம் திகதி தனது 66 ஆவது வயதில் காலமானார்.

