மிருசுவில் மண்ணின் மைந்தன். அளவிடமுடியாத ஆளுமையின் சிகரம், புலமையாளன், பண்பாளன், சொல்லழகன், நல்லூர்க் கோட்டக் கல்விப்பணிப்பாளராகப் பணியாற்றய F.X..அன்ரன் அவர்களின் மனிதநேயமும் அறத்தின் வழி நின்று அவர் ஆற்றிய பணியும் ஒரு போதும் மறத்தற்குரியதன்று. யாருக்கும் தீங்கு நினையாத அவரின் வாழ்வு “உற்றநோய் நோன்றல் உயிர்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்குரு” என்ற வள்ளுவனின் அறத்தை அடையாளப்படுத்தி நிற்கும். ஆசிரியர், அதிபர், கோட்டக்ல்விப்பணிப்பாளர்என்ற பதவி நிலைகளில் இருந்து சீரிய பணியாற்றிய அவர் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் ஒரு பெரும் சொத்தாவார். எங்கும் எதிலும் ஒருசுமுகமான நிலையை ஏற்படுத்துவதில் அவர்காட்டிய வகிபாகம் சாதாரணமான தல்ல. வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு, வடக்கு மாகாணக் கல்வித்திணைக் களம், யாழ்ப்பாணக் கல்வி வலயம் என்ற முத்தரப்பு நிர்வாகக் கட்டமைப்பில் அன்ரன் அவர்கள் ஒரு நேர்மையான இணைப்பாள ராகச் செயற்பட்டவர். அவரின் அந்தப்பணி அவர் மீது உயர்ந்த மரியாதையை அனைவரிடமும் ஏற்படுத்தியது. இதற்கு மேலாக தமிழ் இனத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதியை மனித மொழி களால் கூறிவிடமுடியாது. அக்கினி என்ற புனைபெயரில் மிகச் சிறந்த கட்டுரைகளைத் தந்த அன்ரன் அவர்கள் முரசொலிப் பத்திரிகையில் எழுதி வந்த மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் அவரின் எழுத்துப் புலமைக்குத் தக்க சான்றாகும்.
சிறந்த அரசியல் விமர்சகரான அவர் நாடகத்துறையிலும் தன் கற்பனைத்திறணைப்பதிவு செய்தார். நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத அமைதியான அறிவு ஞானம், அறத்தின்வழி நின்று ஆற்றும் சேவை, எல்லோரையும் மதிக்கின்ற உயர்ந்த பண்பு என்பன அவரின் அணிகலன்கள்.
தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரியிலும், மானிப்பாய் மெமோறியல் ஆங்கில்ப் பாடசாலையிலும் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி மற்றும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, முதுகலைமாணி, முதுதத்துவமாணி ஆகிய பட்டங்களைப் பெற்றவர். தமிழ் இலக்கியப்பரப்பில் பத்திரிகை ஊடகங்கள் ஊடாக அக்கினி என்ற புனை பெயரில் இலக்கியப் பணியாற்றினார். கத்தோலிக்க திருச்சபையக்கு பெரும் பங்காற்றிய இவர் யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியதுடன் மடுத்தீனார் குருமடத் தின் ஆங்கில மொழிப் போதனாசிரியராகவும் பணி செய்து மறை மாவட்ட திருச்சபைக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவ இவர் 2022-05-24ஆம் நாள் வாழ்வுலகை விட்டு நிலையுலகம் சென்றார்.


