Thursday, October 9

சாந்தலிங்கம் செல்லப்பா குணரத்தினம் (எஸ். ஜி. சாந்தன்)

0
அறிமுகம்
பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை 1972ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது. காந்தக் குரலோன் பாடகர், ஈழ விடுதலை எழுச்சிப் பாடகர். ஈழ விடுதலை போராட்டத்துக்கு தனது புரட்சிப்பாடல்களால் அளப்பெரும் பங்களிப்பு செய்த ஈழத்தின் தலைசிறந்த பாடகர். ஈழத்துப் பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத் திறனுக்குச் சான்றாக அமைந்தது. 
யாழ்ப்பாணம் புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தில் செல்லப்பா குணரத்தினம் தம்பதியருக்கு 1960-12-20ஆம் நாள் பிறந்தவர். எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து நூற்றுக்கணக்கான தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியவர். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் திகழ்ந்தார்.
“இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற பாடலில் ஆரம்பித்து “களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்….”, “ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..”, “கரும்புலிகள் என நாங்கள்…”, “எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்” போன்ற நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.
கலைப்பயணம்
இவருடைய தந்தைக்குக் கொழும்பில் வியபாரம் செய்து வந்த காலத்தில் தனது பாடசாலை விடுமுறை தினங்களில் தந்தையாருடன் கொழும்பில் தங்கியிருந்த சாந்தன். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித்தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்றார். அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாகவும், இவரது முதல் மேடை அனுபவமாகவும் இது அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த “மருதமலைப் பாடலைப் பாடு” என்று இவருடைய இரசிகர்கள் கேட்கத் தொடங்கினர். இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் முகத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழு 1982இல் கலைக்கப்பட்டதனால் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தார். 
இவர் பாடிய பாடல்கள் – எழுச்சிப் பாடல்கள் – தனித்துப் பாடிய எழுச்சிப் பாடல்கள்
வானம் பூமியானது – இவருடைய முதலாவது பாடல்… 1989 இல் வெளிவந்தது
அடங்கிக் கிடந்த தமிழன் – இறுவட்டு வீரத்தின் விளைநிலம்
அடி அடி அடியென – இறுவட்டு தேசத்தின் புயல்கள் பாகம் 03
ஆதியாய் அநாதியாய் – இறுவட்டு: பரணி பாடுவோம்
அலையை அலையைப் – இறுவட்டு கடற்கரும்புலிகள் பாகம் 02)
அலைகள் குமுறி – இறுவட்டு கடற்கரும்புலிகள் பாகம் 03)
ஆழக் கடலெங்கும் – இறுவட்டு நெய்தல்
ஆனையிறவின் மேனி தடவி – இறுவட்டு அலையின் வரிகள்
இங்கு வந்து பிறந்தபின்பே – இறுவட்டு: கரும்புலிகள்
இந்த மண் எங்களின் – இது இவருடைய இரண்டாவது எழுச்சிப் பாடலும் தமிழீழத்திலிருந்து இசையமைக்கப்பட்டு வெளியான முதலாவது எழுச்சிப் பாடலுமாகும். இப்பாடலைத் தாங்கியபடி வெளியான இறுவெட்டே முதலாவது தமிழீழ இறுவட்டாகும்… 1990 இல் வெளிவந்தது. 
இரவு பூத்து (அனுராதபுரம் தேடிஃஎல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்)
இனிவரும் இனிவரும் – இறுவட்டு ஆனையிறவு
ஈழத்திருமகள் – இறுவெட்டு தாயகத்தாய்
ஊர் பெயரைச் சொல்லவா – இறுவட்டு தமிழீழ மொட்டுக்கள்
எங்களின் வாசலில் – இறுவட்டு வரும் பகை திரும்பும்
எத்தனை பேர்களை – இறுவட்டு வானம் தொடும் தூரம்
எந்தையர் ஆண்ட – இறுவட்டு புதியதோர் புறம்
எம்மண்ணில் எதிரிகள் – இறுவட்டு புதியதோர் புறம்
ஒரு கூட்டுக் கிளியாக – இறுவட்டு தேசத்தின் புயல்கள் பாகம் 02
உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் – இறுவட்டு கரும்புலிகள் 2
கடலதை நாங்கள் – இறுவட்டு நெய்தல்
கடலலை எழுந்து – இறுவட்டு கடற்கரும்புலிகள் பாகம் 10
கடலின் மடியில் – இறுவட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 07
கடலோரப் பூவாக – “உப்பில் உறைந்த உதிரங்கள்” திரைப்படத்திலிருந்து
கண்ணுக்குள்ளே வைத்து – இதுவே இவர் பாடிய கடைசி எழுச்சிப் பாடலாகும்
கரும்புலிகள் என நாங்கள் – இறுவட்டு: பரணி பாடுவோம்
கரும்புலி எழுதிடும் கடிதம் – இறுவட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 04
கல்லறைகள் விடை திறக்கும் – இறுவட்டு கல்லறை தழுவும் கானங்கள்
காற்றடிக்கும் திசைகள் – இறுவட்டு அலைபாடும் பரணி
கிழக்கு வானம் – இறுவட்டு: பூநகரி நாயகன்
குயிலே பாடு – இறுவட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்
கோணமலை எங்களது – இறுவட்டு இசைபாடும் திரிகோணம்
சண்டைகளின் நாயகனே – இறுவட்டு: சமர்க்கள நாயகன்
சிங்களம் எங்களை கொன்று – இறுவட்டு புதியதோர் புறம்
சிட்டு சிட்டு சிட்டு ஈழமண்ணில் பூத்த மொட்டு – இறுவட்டு: வீரத்தின் விளைநிலம்
சீலன் புயலின் பாலன் – இறுவட்டு: தீயில் எழும் தீரம்
சுற்றி வரக் கடலே – இறுவட்டு: பசுந்தேசம்
தாயவளே உன்னை – இறுவட்டு: தாயகத்தாய்
திருமலையில் பகை – இறுவெட்டு தேசத்தின் புயல்கள் பாகம் 01
தூக்கம் ஏனடா – இறுவட்டு: புதியதோர் புறம்
நித்திய புன்னகை – இறுவட்டு சிரிப்பின் சிறகு
நித்திய வாழ்வினில் – இறுவட்டு: தேசத்தின் குரல்)
நிலவே கண்ணுறங்க – இறுவட்டு: வாகையின் வேர்கள்
நிலாக்கால நேரமிங்கே  – இறுவட்டு: ஊர் ஓசை
நீலக்கடலே பாடுமலையே – இறுவட்டு: கடலிலே காவியம் படைப்போம்
நெஞ்சிலே இருந்த கோபம் – அனுராதபுரம் தேடிஃஎல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்
பண்பாட்டுக்கு இசைவாக – இறுவட்டு: பரணி பாடுவோம்
பாட்டுக்குள் கரும்புலி – இறுவட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 01
பாயும் புலி அணி – இறுவட்டு விடியும் திசையில்
பெய்யுதே மழை – இறுவட்டு சிரிப்பின் சிறகு
பெருகும் கால நதியில் – இறுவட்டு: போரிடும் வல்லமை சேர்ப்போம்
மாரி கால மேகம் தூவி – இறுவட்டு விளக்கேற்றும் நேரம்
மீண்டும் எனக்கொரு – இறுவட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 09
விண்வரும் மேகங்கள் – இறுவட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்
மின்னல் சூழும் (லெப். கேணல் மதனாவின் நினைவாகப் பாடப்பட்ட இப்பாடலானது, 1999ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 67வது இதழில் இடம்பெற்றுள்ளது.)
தாந்தாமலைத் தென்றல் உன்னைத் தாலாட்டுமே
சாவுக்குள் வாழ்வெனும் தத்துவம் தாங்கிய தர்மத்தின் காவலர்கள்
வாசலிலே கோலமிட்டு வாழைதோ
ரணம் கட்டு
பக்திப் பாடல்கள்
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் கொக்கட்டிச்சோலை
துதிக்கை தூக்கி ஆளையா (கரணவாய் பிள்ளையார்)
வேழமுகனே ஆளையா (கரணவாய் பிள்ளையார்)
அழகுரதம் ஏறி எங்கள் ஆனைமுகன் வாறான் (சந்திரசேகரப் பிள்ளையார்)
சந்திரசேகரப் பிள்ளையாரை (சந்திரசேகரப் பிள்ளையார்)
வதிரன்புலோ வாசன் வண்ணமயில் அழகேசன் (மூளாய் பிள்ளையார்)
முருகண்டி வீதிக்கரை அமர்ந்த கணபதியை நீ நாடு (முருகண்டிப் பிள்ளையார்)
துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே (முருகண்டிப் பிள்ளையார்)
கணபதியின் திருப்பாதம் கண்களுக்கு மனப்பாடம் (முருகண்டிப் பிள்ளையார்)
சித்திரத் தேரேறும் சித்தி விநாயகா (நெடுந்தீவுப் பிள்ளையார்)
மாம்பழக்கதையின் நாயகனே (வந்தாறுமூலை)
நாயகனே கல்வளைப் பதிவாழும் (கல்வளைப் பிள்ளையார்)
தேரோடுது தேரோடுது தேரோடுது பாரு (கல்வளைப் பிள்ளையார்)
கஜகேணிப் பிள்ளையாரே காப்பு (உசன் கந்தசாமி)
மூளாயூரின் வதிரன்புலோவில் மூத்தவிநாயகர் திருக்கோலம் (மூளாய் பிள்ளையார்)
திசையெல்லாம் ஒளிவெள்ளமே (கைதடிப் பிள்ளையார்)
கைதடி கணபதியை (கைதடிப் பிள்ளையார்)
வந்தாறுமூலை எங்கள் வளமிகு வளம்பதியூர் (வந்தாறுமூலை)
அம்மையப்பன் பெற்றெடுத்த மூத்தபிள்ளை (அளவெட்டி)
செருத்தனை வாழும் மகாமாரி (புளியங்கூடல் மகாமாரி)
மங்கள நாயகியே (புளியங்கூடல் மகாமாரி)
கண்ணகியம்மா எங்கள் கண்ணகியம்மா (வற்றாப்பளை கண்ணகி)
வானுயர்ந்த கோபுரத்தைப் பாருங்கள் (திருமலை நாயகி)
நோன்பினில் சிறந்தது கௌரி நோன்பதுதான்
நங்கையவள் பெருமை நாலிடமும் பரவ
ஆழ்கடல் உனைத் தழுவிட ஆதரித்திடும் நாயகி (நயினை நாகபூசணி)
கலைபொங்கும் தீவினிலே உறைகின்ற தேவி (நயினை நாகபூசணி)
உன்னைவிட உயர்ந்த சக்தி உலகத்தில் இல்லையம்மா (தம்பாட்டி அம்மன்)
மாங்கனி வேண்டுமென்று மயிலேறி வந்தவனே (பண்டத்தரிப்பு முருகன்)
சித்தம் தெளிந்தேனே ஐயா (சாளம்பை முருகன்)
பழம்பெரும் திருவூராம் (பண்டத்தரிப்பு முருகன்)
மணி ஒலிக்குது (தம்பாட்டி அம்மன்)
உருக உருகப் பாடுகிறோம் உசன் முருகா (உசன் கந்தசாமி)
ஐயப்பன் புகழ்பாடுவோம்
சிவனுக்கு மூத்தபிள்ளை (கைதடிப் பிள்ளையார்)
பரவசம் தருகிறதே உந்தன் பாதச்சிலம்பின் ஒலி (வந்தாறுமூலை)
கண்ணா கண்ணா (வந்தாறுமூலை)
உடுவில் பதியமர்ந்த மீனாட்சியம்மா
வாரி வாரி அருள்மாரி பொழிபவளே முத்துமாரிஜ26ஸ
ஆடுமயில் மீது வந்து ஆளுகின்ற முருகையா
மாமணி ஓசை கேட்கின்றது
நீர்வேலி முருகேசரே
புள்ளிமயில் மீதினிலே ஏறி
சித்திரை மாதமும் கொடியேறும்
சீர்மேவிச் செம்பொருளாகி
மயிலிட்டி மண்ணை வலம் வந்தோமே
சரணம் சரணம் கணபதி சரணம்
வெள்ளைக் கடற்கரை தள்ளும் அலை நுரை வெள்ளிப் பூப்போலப் பூக்கும்
ஊசியிலே தொங்கிக் கொண்டு நோவையெல்லாம் தாங்கிக் கொண்டு
தொம் தொம் தொம் கணபதியே
மூசிகவாகனப் பிள்ளையார் இந்த மூவுலகாளும் பிள்ளையார்
ஐந்துதலை நாகம் குடைபிடிக்க
பிள்ளையார் சுழிபோட்டு
வளம் நிறை ஊர் இதுவே வடலியூர் இதுவே
வானம் மலர்தூவ வான்தேவர் வாழ்த்த
சித்தி விநாயகா சரணம் சரணம்
மோதகப் பிரியனே பிள்ளையாரே
பிள்ளையாரை நினைத்துக் கும்பிட்டு வேண்டிவிடு
தாயின் பெருமை பாடிடுவோம்
பசுமைசூழ் பணிப்புலம்
சுட்டிபுரத் தாயே சினம் கொண்ட தீயே
அறத்தி அறத்தி அறத்தி
பாற்கடலின் மீதிலே பள்ளிகொள்ளும் மாதவா
முக்கண்ணனே எங்கள் மூலமுதல்வனே
ஆயிரம் சூரியன் உன் முகத்தில் தெரியும்
இருகரம் கூப்பி வணங்கிவிடு
அரவத்தால் பாற்கடல் கடைந்த சடையான்
கோணங்குள கணபதியை
அலங்காரக் கந்தனாய் அம்பதியிலே அமர்ந்தவா
யானை முகத்தான் மூத்த கணநாயகன்
நித்தமும் மனம் உந்தன் தலம் நாடுதே
முனியப்பன் காலடி கண்டுதொழ
புலம்பெயர்ந்து வேறு மண்ணில் நாமிருந்தாலும்
வடமுனையில் வீற்றிருக்கும் பெரிய பிள்ளையார்
ஆலடியில் வீற்றிருக்கும் ஐங்கரனே நமோ
தேரேறி வரும் கோலம் கோலாகலம்
எங்கள் கணபதிக்கு அன்பு வணக்கம்
நாதம் கேட்குதடா ஓமென்றே
நாயகமாய் அமர்ந்து நாயுடன் காத்து நின்று
அம்பிகையே எமையாளும் ஜெகதாம்பிகையே
கும்பிட்டோர் துயர்தீர்க்கும் கூழாவடிப் பிள்ளையாரே
வரமொன்று அருளிட வாராயோ அம்மா
பெற்றோரே உலகென்று மாங்கனி பெற்ற பிள்ளை
கற்சிலைமடு உறையும் கணபதியே
ஐந்துகரம் இருந்தும் தாராதிருப்பாயோ
கல்வெட்டுத்திடல் கந்தன் என்ற பெயர் பெற்றவன்
மகிழமரத்தான் எங்கள் ஆறுமுகத்தான்
சுந்தர உருவம்…
தாயே ஈஸ்வரியே உந்தன் திருநாமம் பாடிவந்தேன்
திருவிழா திருவிழா உலவிக்குள நாயகனின்
நாயகனே வெல்லன் விநாயகனே
கரவைப் பதியில் கருணை பொழிய வந்தமர்ந்தான் கணபதி
உலகாளும் உத்தமியே காவல்தெய்வமே
அறுகம்புல் நாயகனே வேண்டும் வரம் தாருமையா
கொய்யாவளைக் கந்தனுக்கு காவடி
எனையாளும் என் அன்னை மகாமாரி
எத்தனை நாமங்கள் சூடிவந்த தாயே
கடல்கொண்ட மதுரையிலே சினம் கொண்டு நின்றாய்
நற்றமிழ் அணியிசைந்து சங்கமிக்க
கொடிகாமம் பதியுறை கொற்றவையே தாயே
சண்டிலிப்பாய் கூறும் பொருளே ஊர் போற்றும் நாயகனே
ஈடிணையில்லா இரட்டயப்புலத்தவனே
வண்ணைக் காமாட்சி…
முருகா உன் பெயர் சொல்ல இனிக்கின்றது
அம்மா அபிராமியே ஆளும் சிவகாமியே
அரசோலை விநாயகனே…..
ஓங்கார மணி ஒலிக்கும்….
தாமரைப் பத மலர்…
குருபரனை….
மயில்மீது வந்தான்…
சிந்தனை செய்திடுவாய்…
உள்ளம் உருகி….
மஞ்சப்பதி முருகன்..
பரிந்தோடி வந்தான்..
மஞ்சப்பதி கந்தன்…
துதித்திடுவாய் நெஞ்சே…
அருள் தந்தே என்னை
கானமயில் மீது…
ஆறுமுகன் இருக்க….
இணுவையூர் மஞ்சப்பதி
மயில் வாகனனை…
ஐந்துகர ஆனைமுகப் பிள்ளையார்…
கன்னிமூலக் கணபதி…
கண்ணகையம்மா எங்கள் கண்ணகையம்மா
கடல்வழி வந்த நம் கண்ணகையே
முழங்காவில் பதிவாழும் சித்திவிநாயகனே…
முத்துக்காவடிகள் காண வாருங்கோ
சுதுமலையில் குடிகொண்ட எச்சாட்டி நாதா
தென்சுதுவைப் பதியினிலே
எட்டுத் திசையிலும் உன் புகழ் பரவ
வதிரி எனும் பதியினிலே
சிதம்பரவளவாளே அருள்சொரிய வருவாய்
ஆயிரம் கண்கொண்ட தேவியம்மா
ஆடிப்பூரத் திருவிழா பாடிப்போற்றும் பெருவிழா
தாவடிப் பிள்ளையார் தாவடிப் பிள்ளையார்
வேதவிநாயகா வேதவிநாயகா
பழவத்தை பதியாளும் காளியம்மா
சந்தனத்தின் வாசத்திலே தந்தனத்தோம் தாளத்திலே
சஞ்சலங்கள் தீர்க்கும் எங்கள் சங்கரனின் மைந்தா
மாமணியானே எங்கள் மாமணியானே
பாடவந்தோமே சபரிமலை வாசனையே பாடவந்தோமே பைந்தமிழ்
தேன்மொழிச் சுவை நீதானே பெரும் வானருள் மழை நீதானே
வாசலிலே வந்து நிற்கும் வண்ணத்தமிழ் முருகா
சாணமோர் பிடியெடுத்து அறுகம்புல்லை நுள்ளியெடுத்து
கல்லிருப்பு கல்லிலொரு கற்பூரச் சிரிப்பு
அன்பினைச் சொரியும்…
உறுமிடும்…
அண்டம்…
மரியாத்தா…
ஊரெண்டா ஊரு.
கவலையின்றி பாடுகின்றோம்
வேப்பமரம் குடைபிடிக்க
மதுராபுரியின்
பச்சை நிலம் படர்ந்த
பொலிகண்டி கரையினில் எழில்கொஞ்சும் பதியினில் அமர்ந்தவனே
குட்டி நல்லூர் என்று கும்பிடுங்கள்
நெஞ்சத்தில் குமரனைத் தேடிடுவோம்
நிழல் சூழ்ந்த வேம்பிடையில்
“ஒதியமலையானே” இறுவெட்டில் உள்ள பாடல்ஃபாடல்கள்
ஞானவைரவர் பாதம் பணிந்திட நாளும் அருள்கூடும்
அம்மா உன் கோவிலிலே மணியோசை கேட்கையிலே
கல்வளை எனும் பதி உண்டு
அம்பிகை பாலகனாய் அருகிருப்பவனே
திருவடிவே எங்கள் சிவவடிவே
தஞ்சம் என்று நாடி வந்தோம்
ஆனைமுகத்தானே ஐயா ஐங்கரனே நாதா
இணுங்கித்தோட்டம் உருவான…
பிள்ளையார் எனும் நாமம்… (நித்தம் துதி மனமே…)
வட்டுவாகல் கன்னிகள் தாய் புதுமை தனையே
மயிலையூரில் வாழும் எங்கள் வேல்முருகையா 
அழகான ஊரிருக்கும் ஆனைமுகத்தான் (தாமரைக் குளத்தருகில் ஜில் என்று காற்று வரும்…)
வாரிக்குட்டி ஊர் அமர்ந்து வயல்தனையே செழிக்கவைக்கும் வீரனையா
மக்கள் குறைதீர்க்க வந்த மாரித்தாயே
அதிசய தெய்வம் நம்ம அதிசய தெய்வம்
சிங்காரக் காவடியில் சிந்தை மகிழும் வேலனுக்கு
ஆழ்கடலின் மதியினிலே…
காட்டுப்பிள்ளையார்…
கடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்திருந்த இக்கலைஞன் 26-02-2017ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். 
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!