அறிமுகம்.
ஈழமணித் திருநாட்டின் மகுடம் போல் விளங்கும் யாழ்ப்பாணத்தில்
மானிப்பாய் என்னும் பட்டணத்தைச் சேர்ந்த அமரர் சின்னப்பூ கந்தையா என்பவருக்கும் அமரர் சின்னத்தம்பி தங்கம்மா என்பவருக்கும் 1940-02-03ஆம் நாள் கண்டி கெட்டம்பே என்னும் இடத்தில் இளைய புத்திரியாக பிறந்தார். பெற்றோரின் அரவணைப்பிலும் அறிவுரையிலும் தன்னிகரற்று விளங்கியவர். இவரது தந்தையார் தொழில் நிமித்தமாக கண்டி கொமர்சியல் கம்பெனியில் வேலை செய்ததனாலே இவர்கள் கண்டியில் வாழ்ந்தார்கள்.

அரை நூற்றாண்டுக்கு மேல் கற்பித்தல் அனுபவம் உள்ளவராக விளங்கும் கலாபூஷணம் நீலாம்பிகை செல்வராஜ் அவர்கள் நடன கலைஞராக நடன ஆசிரியராக ஆட்ட அமைப்பியலாளராக சிறந்து விளங்கியதுடன் தனது இறுதி காலம் வரை கலைக்கு தன்னை ஆத்மாத்மாக அர்ப்பணித்து வாழ்ந்தவரா வார். வட இலங்கை சங்கீத சபையின் ஆதரவில் 1961 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 11ஆம் திகதி இவரது ஆடற்கலைச் சிறப்பினை உணர்த்தும் பரதநாட்டிய அரங்கேற்றம் யாழ்ப்பாணம் நகர சபை மண்டபத்திலே ஆயிரக்கணக் கானோர் முன்னிலையில் அரங்கேற்றம் கண்டது. வயலின் வித்துவான் காரைக்குடி சாம்பசிவஐயாரிடமும்; அவரின் பேத்தியான இராஜேஸ்வரி என்பவரிடமும் வீணை இசையை ஐந்தாண்டுகள் பயின்றார். கலாஷேத்ராவில் கல்வி கற்கும் போது பல நாட்டிய நாடகங்களில் பங்கு பற்றியுள்ளார். சம்பூர்ண ராமாயணம், பாதுகாபட்டாபிஷேகம், இராமவன கமனம் ஆகிய நாட்டிய நாடகங்களில் முக்கிய பங்கினை வகித்தவர். இவ்வாறு நாட்டியக் கலையை செவ்வனே கற்று 1961ஆம் ஆண்டு டிப்ளமோ பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
தனது ஆரம்பக் கல்வியை கண்டி கிங்ஸ்வூட்; கல்லூரியில் பயின்றார். இந்து ஆசார முறையில் வளர்ந்த இவர் கண்டியில் கிறிஸ்தவ கல்லூரியில் இணைக்கப்பட்ட போதிலும் அக்கல்லூரியில் கிறிஸ்தவ பாடல்களை பாடுவதில் முன்னணி வகித்தார். கண்டி நல்லாயன் கல்லூரியில் சேர்ந்து மூன்றாம் தரம் தொடக்கம் எட்டாம் தரம் வரை கல்வி பயின்றார். அங்கு கல்வி பயிலும்போது ஆறாம் ஏழாம் தரங்களில் ஒரியண்ல் நடனக் கலையை திருமதி நிரஞ்சலாதேவி குறுப்பு எனும் வட இந்திய பெண்மணியிடம் பயின்றார். பூஜா நடனம் அரிவிவெட்டு நடனம், குறத்தி நடனம,; பாம்பு நடனம் ஆகிய கிராமிய நடனங்களை பயின்று கொண்டார.; நிரஞ்சலா தேவி குறுப்பு அவர்கள் இசைத்தட்டு கருவி கிராமஃபான் ஒன்றைக் கொண்டு வந்து அதிலேயே இந்நடனங்களை பயிற்றுவித்தார.; கண்டி நல்லாயன் கல்லூரியில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் போது பாடசாலை பரிசளிப்பு விழாவில் நேற்றநதி நேரத்திலே என்னும் பதத்தினை சக மாணவியுடன் இணைந்து ஆடினார். தந்தையாரின் இடமாற்றம் காரணமாக மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்து யாழ் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் 9 10 11 ஆம் தரங்களில் கல்வி கற்று தேசிய கல்வி பொதுத் தராதர பரீட்சையில் தோற்றிச் சித்தியடைந்தார். இவர் பாடசாலையில் கல்வி கற்கும்;போது உடற்பயிற்சி போட்டியில் கலந்து கொண்டு தலைவியாக செயற்பட்டார். நடனம் நாடகம் பற்றி வேறு நூல்கள் மூலம் வாசித்த விடயங்களை எடுத்து தானே தயாரித்து கண்ணகி கோவலன் நாட்டிய நாடகத்தை மேடையேற்றினார்.
நடன அரங்கேற்றம்
இந்தியாவில் பரதக் கலையினைக் கற்று நாடு திரும்பிய அமரர் லீலாம்பிக்கை அவர்களுக்கு வட இலங்கை சங்கீத சபையின் ஆதரவில் 1961 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 11ஆம் திகதி இவரது ஆடற்கலைச் சிறப்பினை உணர்த்தும் பரதநாட்டிய அரங்கேற்றம் யாழ்ப்பாணம் நகர சபை மண்டபத்திலே ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அரங்கேற்றம் கண்டது. இவ் அரங்கேற்றத்தில்; மேயர் திரு டி எஸ் துரைராஜாவும் அவரது பாரியாரும் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தனர். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கலாசாரத் தொடர்புகளை பலப்படுத்த லீலாம்பிகை போன்ற கலைஞர்களின் முயற்சி பயனளிப்பதாகப் பேசப்பட்டது. கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் நன்றி தெரிவித்துப் பேசினார். இவரது அரங்கேற்றத்திற்கு சரஸ்வதி பாக்கியராஜா குரல் இசை வழங்கினார். மறைந்த கலைஞன் திரு ஏ எஸ் நட்டுவனார் திருவாளர் ஏ சுப்பையா நட்டுவாங்கம் செய்தார.;
இவரது அரங்கேற்றமே வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்பட்ட முதலாவது பரதநாட்டிய அரங்கேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சிகளை ளுழடழ Pநசகழசஅயnஉந செய்துள்ளார். கொழும்பு பம்பலப்பட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்ற விழாவில் அமரர் லீலாம்பிகையும் இவருடன் பரதம் பயின்ற சகபாடி சாந்தாமணி மகேந்திராவும் இணைந்து கலாஷேத்ரா பக்கவாத்திய குழுவினரின் இசைக்கு நடன நிகழ்வை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இல்லற வாழ்வு
1962ஆம் ஆண்டு பாண்டித்துரை செல்வராஜ் என்பவரை திருமணம் செய்து இல்லறத்தில் இணைந்து கொண்டார.; இவர்களது திருமணம் நல்லூர் சிவன் கோவிலில் நடைபெற்றது. இறைவனின் ஆசியில் இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் பலமாக கிடைத்தனர். புருஷோத்தமன், செல்வாம் பிகை பார்த்திபன் பிரதாபன் எனப் பெயர் சூட்டி அவர்களையும் நன்னிலை யில் கல்வியால் உயரவைத்து தன் கடமையை நிறைவேற்றியுள் ளார. குறிப்பாக தனது மகளை பரதத்துறையில் பெயர்சொல்லும் கலைப்படைப் பாளியாக உலகில் மிளிர வைத்து தன் கலைத்தொடர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
நடன ஆசிரியையாக லீலாம்பிகை அவர்கள்
ஆசிரியர் பதவி 1972 ஆம் ஆண்டு ஆடி மாதம் மூன்றாம் தேதி மாணிப்பை
மகளிர் கல்லூரியில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதனை பெரும் பேறாகக் கருதி அக்கல்லூரில் 23 வருடங்கள் ஆசிரியராக நடனக்கலையின் வான்மை விருத்தியில் மகுடம் சூட்டினார். அக்கல்லூரி இவரால் பெருமை பெற்றது. நாட்டிய நாடகங்கள், தனி நடனங்கள், கிராமிய நடனங்கள் என்பவற்றை கற்பித்தும் அவைக்காற்றுகைகள் செய்வித்தும் சாதனையாளராக மிளிர்ந்தார். தொடர்ந்தும் மணிப்பாய் சென்ற்ஆன்ஸ் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, மாணிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலை, வத்தளை புனித அன்னம்மாள் வித்யாலயம், பொரளை டி எஸ் ஜனநாயக கல்லூரி ஆகிய பாடசாலைகளில் நடனக்கலையின் கதிர்வீச்சினை பரப்பினார். எங்கு சென்றாலும் தன்னொளி மங்காத புகழ் பூத்த ஆசிரியராக அமரர் கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜா விளங்கினார்.

தொடர்ந்து 1978-1979 ஆகிய வருடங்களில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்காக கலாசாலையில் பயிற்சி ஆசிரியராக நடனக்கலையில் பயிற்சி பெற்றார். இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத்துறையில் பயிலும் மாணவருக்கான இறுதி ஆண்டு பரீட்சகராக கடமை ஆற்றியுள்ளார். இவர் கலைக்காற்றிய சேவைகள் எண்ணில் அடங்கா. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரி இவரை வருகை தரு விரிவுரையாள ராக வரவேற்றமை இவருடைய புகழ் பூத்த நடன கலைக்கு முன்னணி சான்றாக விளங்குகிறது. 14 ஆண்டுகள் தன் பணியை திறம்பட ஆற்றி பல மாணவர்களை ஆசிரியர்களை தோற்றுவித்த பெருமை அமரர் கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜா அவர்களையே சாரும். குறித்த கால கட்டத்தில் நாட்டிய கலைமணிப் பட்டத்திற்குரிய வினாத்தாள்களைத் தயாரிப் பதிலும் அவற்றை மதிப்பீடு செய்வதிலும் இவரது பங்களிப்பு அமைந்திருந்தது.
மீபேயில் அமைந்துள்ள தேசிய கல்வி நிறுவகமும் வளவாளராகப் பணியினை மேற்கொண்டார். நடன பாட ஆசிரிய ஆலோசராக கல்வி வலயம் இரண்டில் பணியாற்றினார். 1991 – 1992ஆம் வருடங்களில் தென்மராட்சி, வலிகாமம் வடக்கு, தெற்கு ஆகிய வலயங்களில் கடமை ஆற்றினார். தொலைக் கல்வித் துறையில் நடன பாடத்தில் விசேட பயிற்சி பெறும் பயிலுனர் ஆசிரியர்களுக்குரிய பாடத்திட்டங்களையும்; நடன பாடத்தில் விசேட பயிற்சி பெறும் பயனுள்ள ஆசிரியர்களுக்குரிய பாடத்திட்டங்களையும் மொடியூல்கள்; பலவற்றையும் பரத நடன பாடத்திட்டங்களை வடிவமைப்பதிலும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்.
மேலும் வட இலங்கை சங்கீத சபை பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண பரிட்சை, கல்வி பொதுத் தராத உயர்தர பரீட்சை, மட்டக்களப்பு விபுலானந்த இசை நடனக் கல்லூரி பரீட்சை போன்ற வற்றிற்கும் பிரதமர் பரீட்சராகவும் கடமை ஆற்றியுள்ளார்.
நடனக் கலைஞர் வித்தாக முகிழ்த்தமை
லீலாம்பிகை அவர்கள் கல்கி சஞ்சிகையில் வெளிவந்த விளம்பரம் ஒன்றினைப் பார்த்து இந்தியாவிலுள்ள கலாஷேத்திராவில் பரத நாட்டியத்தை பயில முடியும் என்ற விடயத்தினை ஆசிரியரான திருமதி சரஸ்வதி மேனன் மூலமாக உறுதி செய்து கொண்டார்.

வயலின் வித்துவான் காரைக்குடி சாம்பசிவஐயாரிடமும்; அவரின் பேத்தியான இராஜேஸ்வரி என்பவரிடமும் வீணை இசையை ஐந்தாண்டுகள் பயின்றார். கலாஷேத்ராவில் கல்வி கற்கும் போது பல நாட்டிய நாடகங்களில் பங்கு பற்றியுள்ளார். சம்பூர்ண ராமாயணம், பாதுகாபட்டாபிஷேகம், இராமவன கமனம் ஆகிய நாட்டிய நாடகங்களில் முக்கிய பங்கினை வகித்தவர். இவ்வாறு நாட்டியக் கலையை செவ்வனே கற்று 1961ஆம் ஆண்டு டிப்ளமோ பட்டத்தை பெற்றுக்கொண்டார். இவருடைய கற்கை நெறி பூர்த்தியானதும் விரிவுரையாளராக கடமை ஆற்றும்படி ஸ்ரீமதி ருக்குமணிதேவிஅருண்டேல் அவர்கள் மூலம் அடையாறு கலாஷேத்திரா நடனப்பள்ளியில் விரிவுரையாளராக கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் உருவாகியது. ஆனால் இவரது தாயாரின் சுகயீனம் காரணமாக இவரால் குறித்த கடமையை மேற் கொள்ள முடியவில்லை.
மாணவர்களுக்கு கலையை கற்பிக்கும் நோக்குடன் மாணிப்பாயில் கலைக்கோயில் என்னும் நடனப் பள்ளியை 1961ஆம் ஆண்டு ஸ்தாபித்தார். நூற்றுக்கணக்கான மாணவர்கள் பரதத்தை இவருடைய வழிகாட்டல் மூலம் கற்று வந்தார்கள். 1967ஆம் ஆண்டு தனது கணவரின் வேலை நிமித்தமாக டன் கந்தே ஸ்டேடில் ஒரு வருட காலமாக வசித்து வந்த பின்பு மாணிப்பாய்க்கு வந்து தனது கலைப் பணியை தொடர்ந்தார.;
இவரது கலை சேவையை பாராட்டி இவருக்கான பொன்விழாவினை 2011ஆம் ஆண்டு இவரிடம் கற்ற பழைய மாணவராகிய திருமதி விக்னேஸ்வரி பத்மநாபன் ஒழுங்கமைப்பில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து நடன கலைஞர்களும் ஒன்று கூடி ஜெர்மனியில் கொம்பஸ் பார்க் நகரில் இவரது கலைச் சேவையை கௌரவிக்குமுகமாக பெரு விழாவாக கொண்டாடினார் கள்.
அனைத்து உலக தமிழ்க்; கலை நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் வரை அனைத்து உலக தமிழ் கலை நிர்வாகத்தின் தேர்வு நடுவராக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டவர.; ஆடற்கலையில யில் ஆழம் பதித்த இவர் நூல்களை எழுதுவதிலும் பின் நிற்கவில்லை. நடனசாரம், பரதநாட்டியம் கற்பித்தல் முறைகள், ஆடற்கலை ஆகிய நூல்களை தானே வெளியீடு செய்துள்ளார். தனது இறுதி காலத்திலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் நமது தமிழ்குழந்தைகள் படிக்க வேண்டும் என கருதி நடனம் தொடர்பான பல விடயங்களை ஆங்கிலத்தில் எழுதி இரு அத்தியாயங்கள் பதிவேற்றிய படி இறை பதம் அடைந்து விட்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வருகை தர விரிவுரையாளராக இருந்த காலகட்டத்தில் பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் மௌனகுரு, பேராசிரியர் பாலகிருஸ்ணன் போன்றவர்களும் பேராசிரியர் அம்பிகா தாமோதரன் என்பவர்களுடனும் நெருங்கிய கலைத் தொடர் இணைப்புக் கொண்டிருந்தார். மும்மொழியினையும் சரளமாகப் பேசும் வல்லமை பெற்றவராகவும் சமஸ்கிருதம் ஓவியம் வீணை இசை என்பவற்றில் ஈடுபாடு கொண்டவராகவும் காணப்பட்டார்;. சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களை துல்லியமான உச்சரிப்புடன் கூறும் வல்லமை உடையவர.;
ஆடற் கலையின் அற்புத மங்கை பெற்றுக்கொண்ட விருதுகள்
