அறிமுகம்
கலாமணி, தம்பி ஐயா யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். பேராதனைப் பல்கலைக்கழக பௌதீகவியற் பட்டதாரியன ,வர், ,யல், ,சை, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர். தனது தந்தையிடம் நாடகம், கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் போன்ற பல துறைகளையும் கற்றுக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். ,வர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியற் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
தம்பிஐயா கலாமணி அவர்கள், வடமராட்சியில் கரவெட்டிப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அல்வாய் எனும் கிராமத்தில் 12.11.1951,ல் அமரர்களான தம்பிஐயா அவர்களுக்கும் பறுவதம் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். கலாமணி அவர்களின் தந்தையார் புகழ்பெற்ற ஒரு சோதிடராகவும், மரபுவழியான ,சைநாடக கலைஞராகவும் விளங்கியவர். தனது ஆரம்பக் கல்வியை தேவரையாளி சைவ வித்தியாசாலையில் ஆரம்பித்துப் பின்னர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் உயர் நிலைக் கல்வியைக் கற்று பல்கலைக்கழகம் சென்று விஞ்ஞான மாணிப் பட்டதாரியானார். 1976-1978 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பௌதிகவியல் துறையில் உதவி விரிவுரையாளராகவும் கடமைபுரிந்தார். சிறிதுகாலம் பனை அபிவிருத்திச் சபையில் சந்தைப்படுத்தல் உத்தியோகத்த ராகப் பணியாற்றிய பின்னர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் பௌதிக விஞ்ஞானத் துறை ஆசிரியராக பத்து வருடங்கள் (1982-1992) பணியாற்றி வந்தார். கலாமணி அவர்கள் பௌதிகவியல் துறையில் புகழ்பெற்ற ஒரு ஆசிரியராக விளங்கியவர். தந்தையாரின் சோதிட ஞானமும் மகனது பௌதிகவியல் வித்துவ மும் ஒருங்குவைத்துப் பார்க்கத்தக்கவை.
கலையிலும் கல்வியிலும் தனி ஆளுமை பெற்ற கலாமணி அவர்கள்
கலை, ,லக்கியம், கல்விப் புலமை, நாட்டார் ,லக்கியம், நூல் வெளியீடுகள், பேச்சாற்றல் எனப் பன்முக ஆளுமையைக் கொண்டு, ஒரு பேராசானாக விளங்கிய, தம்பிஐயா கலாமணி அவர்கள் பரந்தமனப் பான்மையும் தூரநோக்கு சிந்தனையும் கல்வித் துறையில் ஆழமான ஈடுபாடும் கொண்டவராக ,ருந்தார். ,வரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘நாட்கள், கணங்கள் நமது வாழ்க்கை’ என்பதாகும். ,வர் ‘ஒப்பிலாமணியே” என்ற குறும்படத்தையும் நடித்துள்ளார். 1974 முதல் சிறுகதை எழுத ஆரம்பித்து 35 ஆண்டுகளில் 30,ற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
தந்தைவழி வந்த ஒரு பரம்பரைக் கலைஞனாக ஈழத்து ,சைநாடக அரங்குகளில் தனது ஆளுமையை வெளிப்படுத்திய ஒரு உன்னதமான கலைஞராக விளங்கிய கலாநிதி த.கலாமணி அவர்கள் ஆக்க ,லக்கியத் துறையில் சிறுகதை, கவிதை, கட்டுரை நாட்டார் ,லக்கியம் போன்ற துறைகளில் பல நூல்களை தமிழ் ,லக்கிய உலகுக்குத் தந்த உயர்ந்த படைப்பாற்றல் மிக்க பல்துறை ஆற்றல்மிக்க எழுத்தாளராக விளங்கியதால் கலை ,லக்கியத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்று அந்த விருதுகளுக்கே பெருமை சேர்த்தவர்.
அம்மாவின் உலகம், ,ளையோர் ,சை நாடகங்கள், ஏனிந்தத் தேவாசுர யுத்தம், காலநதியின் கற்குழிவு, ஜீவநதி நேர்காணல்கள், நதியில் விளையாடி, பாட்டுத் திறத்தாலே, புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும், மாற்றம் காணும் கல்வி உலகுடன் ,ணைதல், வடமராட்சி வலயக்கல்விச் சமூகம் முன்னெடுக்கும் ஆசிரியர் மகாநாடு 2016 ஆகியன ,வரது நூல்கள். ஈழத்துக் கல்வியியல் புலத்தின் நன்கு அறியப்பட்ட, முக்கியமான ஆளுமையாக விளங்கிய கலாமணி அவர்கள், கல்வி உளவியலை எளிமையா கக் கற்பித்ததுடன், தேசிய நிலையிலான ஆய்வுகள் மற்றும் பல்வேறு பணிகளில் ,ணைந்து செயலாற்றியவர்.
1993ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் விரிவுரையாள ராக பணியாற்றத் தொடங்கிய காலத்தில். உலக வங்கியின் புலமைப்பரிசில்பெற்று அவுஸ்திரேலியாவின் வூலோங்கொங் பல்கலைக்கழகத்தில் “Pநசஉநிவழைn ழக ளவரனநவெ வநயஉhநசள யனெ pசயஉவiஉiபெ pசiஅயசல வநயஉhநசள in சநடயவழைn வழ pசiஅயசல அயவாநஅயவiஉள” என்ற ஆய்வைச் செய்து கல்வியியலில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட அவர் மீண்டும் 2005ஆம் ஆண்டுமுதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் சிறப்புடன் பணியாற்றிப் பின்னர், யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியல் பீடத்தலைவராகவும், சிலகாலம் சட்டப்பீடத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டு அரும்பணியாற்றியவர்.
கல்வி மற்றும் கலை ,லக்கியத்துறைகளில் மட்டுமல்லாது, விளையாட்டுத் துறையில் குறிப்பாகத் துடுப்பாட்டடத்திலும் அதிகநாட்டம் கொண்ட கலாநிதி கலாமணி அவர்கள், அல்வாயின் புகழ்பெற்ற விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழகத்தின் அணியிலும் அங்கம் வகித்து தன் திறமைகளை விளையாட்டுத்துறையிலும் வெளிக்காட்டியவர்.
ஆளுமைகளையும், ஆற்றல்களையும் கொண்ட திரு.கலாமணி அவர்களின் ஆற்றல்களின் ஒட்டுமொத்த பிரதி பிம்பமாக விளங்கும், அவரது மகன் பரணிதரனின் கைவண்ணம் கடந்த பல வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் “ஜீவநதி” சஞ்சிகையை மாதம் தவறாது குறித்த நாளில் கனதியான ,தழாக வெளியிட்டுவைத்து ஈழத்து வாசகர்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குவதற்கு அவரது தந்தையாகிய அமரர் தம்பிஐயா கலாமணி அவர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் பேருதவியாக ,ருந்ததை ஜீவநதியின் வடிவமைப்பு வெளிக்காட்டுகின்றது. அந்தவகையில் தனது ஆற்றல்களின் வாரிசாக தனது மகனை வளர்த்தெடுத்த பெருமை முழுவதும் அமரர் கலாமணி அவர்களையே சாரும்.
சிறந்த அண்ணாவியாராக, மனங்கவர் நடிகராக, செவிக்கினிய இசைக் கலைஞராக, கலை இலக்கியப் படைப்பாளியாக, விமரச்கராக, இலக்கியச்யச் சொற்பொழிவாளராக, ஆற்றல்மிகு ஆசிரியராக, பல்கலைக்கழக விரிவுரையாளராக, சமூக ஆர்வலராக என்று பல்வேறு பரிமாணங்கள் ஒரு சேர வல்லவரான கலாநிதி கலாமணி அவர்கள் பெயருக்கு ஏற்றாற்போல் கலையிலும் கல்வியிலும் உயர்ந்து நிற்பவர். கலாமணியின் தந்தையார் தம்பிஐயா அவர்கள் சாமணந்துறைப் பிள்ளையார் கோவிலில் சிவராத்திரியின் போது இசை நாடகஙக்ள் மேடையேறறும் கைங் கரியத்தை ஆரம்பித்து வைத்தவர். புகழ்பூத்த இசை நாடகக் கலைஞர்களான பெ. அண்ணாச் சாமி மாஸ்டர், நடிகமணி வி.வி. வைரமுத்து, வசாவிளான் மார்க்கண்டு, அச்சுவேலி மாரக்க்ணடு; , நாடகத் திலகம் நறகு;ணம், திகவில் வேலுப்பிள்ளை, சோக சோபித சொர்ணக் கவிக்குயில் அரியாலையூர் வி.கே. இரதத்னம,; அரியாலையூர் வே. ஐயாத்துரை போன்றவர் களுடன் ,ணைநது; நடிதத் பெருமைககு;ரியவர் தந்தையார் தம்பிஐயா அவர்கள். தனது தந்தையையே ,சை நாடகக் குரு வாகக் கொணட் கலாமணி, தந்தையாரின் அணண் hவியதத் pல் மேடையேறிய நாடகங் களில் சிறு சிறு பாத்திரங்களை ஏற்று நடித்து நாடகவுலகில் பிரவேசித்தார். அரிச்சந்திராமயானகாண்டத்தில் லோகிதாச னாக, அயலாத்துப்பிள்ளையாக நடிக்க ஆரம்பித்த கலாமணி பின்னாட்களில் தன் தந்தையாருடனும் மற்றும் வி.வி. வைரமுத்து, அண்ணாச்சாமி, கே.வி.நற்குணம், வி.என். செல்வராஜா போன்ற மூத்தகலைஞர் களுடன் சேரந்;து நடிதத்தை தன் வாழ் நாளில் மறக்கமுடியாத நினைவுகளாகக் குறிப்பிடுகிறார்.
‘அல்வாய் மனோகர கான நாடகசபா’ அமைபப்hளராக பொறுப்பேற்றுக்கொண்ட ,வர் பல நாடகஙக்ளில் நடித்தும், அண்ணாவியம் செய்தும் வந்தவர். வாலிவதை, பூதத்தம்பி, சத்தியவான் சாவித்திரி, ஸ்ரீவள்ளி, கோவலன் கண்ணகி, பவளககொடி, ஆதம்லிஙக்ம,; பகத்ப்பிரகலாதா, மாரக்க்ணடேயர் கணண்பப்ன,; பக்த நந்தனார், கர்வபங்கம், காத்தவன் கருணை, பாரிஜாதம், சதி சுலோச்சனா, பாஞ்சாலி சபதம் என்பன ,துவரை இவர் அண்ணாவியம் செய்த இசை நாடகங் களாகும். ,வரது பூதத்தம்பி நாடகம் 46 மேடைகளை ,துவரை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த இசை ஆளுமையும், பாட்டுத்திறனும் கொண்ட கலாமணி ,சை நாடகங் களில் முக்கிய பாத்திரங்களில் தோன்றிச் சிறப்புச் செய்தார். அவர் நடித்த ,சை நாடகங்களும் ஏற்ற பாத்திரங்களும் பின்வருமாறு. ,சைநாடகம் பாத்திரம் பூதத்தம்பி – பூதத்தம்பி வாலிவதை – இராமன் சத்தியாவன் சாவித்திரி, – சத்தியவான், சாவித்திரி ஸ்ரீவள்ளி – நாரதர், முருகன் கோவலன் கண்ணகி – கோவலன் பவளக்கொடி – அரிச்சுணன் மார்க்கண்டேயர் – மார்க்கண்டேயர் கண்ணப்பன் – சிவகோசரியார் பக்த நந்தனார் – வேதியர் சதி அகல்யா – ,லக்குமணன் பாஞ்சாலி சபதம் – விதுரர் இவை தவிர, ‘காத்தவராயன்’ என்ற சிந்துநடைக் கூத்தில் காத்தானா கவும், ‘ஒரு பயணத்தின் கதை’ என்ற வட்டக்களரி கூத்தில் உரைஞனாகவும் நடித்துள்ளார். மேலும் பாரம்பரிய கூத்து, இசை நாடகங் களுடன் நின்றுவிடாது நவீன நாடகங்க ளிலும் அனுபவமிகக்வர் ‘மானுடன் என் பது புல்லோ’, ‘விட்டில் பூச்சி’, ‘நூறு பூக்கள் மலரும’; , ‘சூரியன’; , ‘விஞஞ்hனதபீம’; , ‘மனுஷா மனுஷா’ ஆகிய நவீன நாடகங்களை நெறியாள்கை செய்ததுடன் அதில் சிலவற்றில் நடித்துமுள்ளார். அவுஸத்pரேலியாவில் படட்கக்லவி பயிலும் காலத்தில் அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழாவில் ‘பூதத்தம்பி’, சிட்னி முருகன் ஆலய நிதிக்காக ‘சத்தியவான் சாவித்திரி’ அவுஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர் களுக்காக ‘பாஞ்சாலியின் சபதம்’ ஆகிய இசை நாடகங்களை அண்ணாவியம் செய்து மேடையேற்றியதோடு சிட்னியில் இசை நாடகப் பட்டறை ஒன்றையும் நடத்தினார். அத்துடன் இளைய பத்மநாதனின் அண் ணாவியத்தில் மேடையேறிய பிரெக்டின் ‘ஒரு பயணத்தின் கதை’ என்ற கூத்தில் பிரதம உரைஞராகவும் பாடகராகவும் கலாமணி விளங்கினார். கலாபூஷணம் மெற்றாஸ் மெயில் அவர்க ளின் யாழ்ப்பாணம் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டு நிறுவனம் பதிவு செய்த பூதத் தம்பி, பவளக்கொடி, நல்லதங்காள் ஆகிய ,சைநாடகங்களின் ,றுவெட்டில் முக்கிய பாத்திரங்களில் பாடி நடித்துள்ளார். மேலும் திருமறைக் கலாமன்றம் வெளியிட்ட ‘இசை நாடகப் பாடல் மெட்டுக்கள்’ என்ற இறுவெட்டில் 25 பாடல்களைப் பாடியுள்ள கலா மணி தற்போது யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகத்தின் தலைவராக விளங்கி வருகிறார். இவரது இசைநாடகப் பஙகளிபiபைப் பாராடடி; வடமராட்சி பபூன் சிதமப்ரபப்pள்ளை கலைக் குழுமம் கலாமணி அவர்களுக்கு ‘இசை நாடகக்கோன்’ என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளனர்.
,வரது எனது நாட்களின் கணங்கள் நமது வாழ்க்கைகள் சிறுகதை நூலுக்கு, வடக்கு- கிழக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சி னால் சிறந்த நூலுக்கான விருது 2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்டமை; கல்வி உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த கலாமணி அவர்கள் 10.02.2023 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.