அறிமுகம்

பாஷையூர் கிராமத்துக் கலைவளங்களை நன்குணர்ந்து பிற அரங்குகளில் தான் கண்ட புதுமைகளையும் தன் ஆளுமைக்குட்படுத்தி மரபுக்கலைகளான நாட்டுக்கூத்து, இசைநாடகம் ஆகிய இரண்டு தளங்களின் மீதான வளர்ச்சியில் புதுமை புகுத்தி உயர்ந்து நினறவர். தான் சார்ந்த மறைக்கும், தன் கிராமத்திற்கும் தான் விரும்பிய கலை மரபிற்கும் இயன்றளவு பங்களிப்பை நல்கி தன் வழியில் உருவாகக்கூடிய கலைப்பரம்பரையையும் தோற்றுவித்த அண்ணாவியாரது சுவடுகள் அழிக்கமுடியாத கலை வரலாற்றின் பதிவுகள்.
பாசெய்யும் ஊர் பாஷையூர் என்ற காரணப் பெயர் கொண்ட இவ்வூர் நெய்தல் நிலமாக இருந்தாலும் வரலாற்றின் முக்கிய பாகங்களை சுமந்த பிரதேசமாகவும் பாணன்பாடி பரிசு பெற்ற யாழ்ப்பாணத்தின் கொடுமுடியாகவும் விளங்கும் பாஷையூர் கலைமலிந்த பூமியாகத் திகழ்கின்றது. தென்மோடி நாட்டுக் கூத்திற்கும் நவீன நாடகப் பாங்கிற்கும், இசைநாடகத்திலும், கவிதை இலக்கியத் திலும் ஒன்றை ஒன்று விஞ்சிய இலக்கியம் படைத்த புலவர்கள் வாழ்ந்த பூமியில் அக்கிராமத்துக் கலைக்கு அம் மரபின் தொடர்பறா நீட்சியில் வரலாறு படைத்த கலைஞராக அன்ரனி பாலதாஸ் அவர்கள் பாஷையூரில் அன்ரனி சிசிலியம்மா தம்பதியரின் ஒன்பதாவது புதல்வனாக 1940-04-26ஆம் நாள் பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை பாஷையூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும்
உயர் கல்வியை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் கற்றார். பாஷையூர் வளர்பிறை நாடக மன்றத்தில் அங்கத்தவராக இணைந்து ஆரம்பித்த கலைப்பயணம் யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தின் நீண்ட கலைப் பயணத்தின் ஆஸ்தான கலைஞனாக மாற்றியது.. இசைநாடகம், தென்மோடிக்கூத்து ஆகியவற்றின் நுணுக்கங்களை தன்னுள் கொண்டிருந்தது மட்டுமல்லாது அதனை ஏனையோருக்கும் கற்றுக்கொடுத்து கலைத் தொடர்ச்சி யினை ஏற்படுத்தினார்.

திருமண வாழ்வில் பாலதாஸ் அவர்கள்
‘
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றில் நின்ற துணை’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க இல்லறத்தில் இணைந்தார். பாஷையூர் வைத்தியாம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதியரின் புதல்வியான செபஸ்தியம்மா அவர்களை கரம்பற்றி பீற்றர், ஜோதினி, ராஜ்குமார், புரூனே, பிறையன், பிறிற்றோ ஆகிய பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களை கல்வியில் உயர வைத்து வையத்துள் வாழ்வாங்கு வாழும் உலமை அமைத்துக் கொடுத்து தந்தையின் கடமையை நிறைவேற்றினார். குறிப்பாக பிறையன் அவர்களை இறைமகனாக அருட்தந்தையாக ஒப்புக்கொடுத்து கிறிஸ்துவத்தின் ஊழியனாகத் திகழ்ந்தார்.
கலைச்சாதனையாளனாக அன்ரனி பாலதாஸ்.
1948ஆம் ஆண்டு தனது கலை வாழ்வை ஆரம்பித்த பாலதாஸ் அவர்கள் இறக்கும் வரை கலைக்காகவே வாழ்ந்தார்;. வாத்தியக் கருவிகளில் ஆர்மோனியத்தை இசைக்கும் ஆர்மோனியக் கலைஞராக திழகழ்ந்தவர். பாஷையூர் வளர்பிறை நாடக மன்றம் இவரை கலையுலகில் அறிமுகம் செய்து கலை ஆளுமையாளனாக உலகறியச் செய்த பெருமை இம் மன்றத்தையே சாரும். கலைப்பாரம்பரியத்தில் செல்வாக்குச் செலுத்தி நிற்கின்ற கலைஞனின் ஆளுமையே அவனை வழிப்டுத்தும் கருவியாகும். அண்ணாவியார் பாலதாஸ் அவர்கள் பன்முக ஆளுமைக்குரிய கலைஞனாக ஆற்றிய கலைப்பணிகளை பின்வருமாறு மதிப்பிடலாம்.
1- அரங்கின் கட்டமைப்பாளனாக நடிப்பாளுமை பெற்ற கலைஞன்.
2- அண்ணாவி மற்றும் நெறியாளர் வகிபாகம்.
3- பனுவலாக்க கர்த்தாவாக அரங்க ஆளுமை.
4- இசைக் கலைஞனாக அரங்கை ஆளுமை செய்தமை.
என்கின்ற பல்வேறு கோணங்களில் இக்கலைஞனின் அரங்க ஆளுமை வெளிப்பாட்டினை கட்டமைத்து வரையறை செய்யமுடியும்.
அரங்கின் கட்டமைப்பாளனாக நடிப்பாளுமை பெற்ற கலைஞன்
அண்ணாவியார் பாலதாஸ் அவர்கள் தென்மோடிக்கூத்து, இசைநாடகம் இரண்டிலும் தனித்துவமான ஆளுமை பெற்றவர். கடவுள் கொடுத்த வரம். தனது எட்டாவது வயதில் குமாரிகாமியின் மகனாக நடித்துப் புகழ் பெற்றார். அன்று தொடக்கம் பலஅ ண்ணாவிமார்களது பல்வேறு கூத்துக்களிலும் பல்வேறு
பாத்திரங்களை ஏற்று நடித்து தனது கிராமத்தில் நல்ல நடிகன் எனப் பெயர் பெற்றார். கூத்துக்களில் பாத்திரம் வழங்குதல் அல்லது தெரிவு செய்தல் என்பதில் பிராதானமாக குரல், உடலமைப்பு நடிப்புத்திறன் என்பவற்றினை அடிப்படையாக வைத்தே பாத்திரத் தெரிவு நடைபெறும். அண்ணாவியார் பாலதாஸ் அவர்களது கணீரென்ற குரலும் தோற்றப் பொலிவும் அவரை இராபார்ட் நடிகனாக தெரிவு செய்வதற்கு காலாய் அமைந்தன. குறிப்பாக கண்டி அரசன் இசை நாடகத்தில் கண்டி அரசனாகவும் தீர்க்கசுமங்கலி இசை நாடகத்தில் இயமனாகவும் நடித்த பாத்திரங்கள் இவருக்கு நாடளாவிய புகழைப் பெற்றுக் கொடுத்தன. கண்டி அரச்ன ஸ்ரீவிக்கிரமக இராஜசிங்கன் பாத்திரம் இவருக்கு பேராசிரியர் வித்தியானந்தனதும் அப்போதைய அதி மேன்மை தங்கிய ஜனாபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களதும் பாராட்டினைப் பெற்றுக்கொடுத்தது. இயமன் பாத்திரமேற்றவர் களில் ஒருசிலரே புகழப்பட்டவர்கள் குறிப்பாக அப்பெயரை அடைமொழியாக் கொண்டும் அழைக்கப்பட்டார்கள். வட்டுக்கோட்டையில் இயமன் நாகப்பு, வயாவிழானில் இயமன் மார்க்கண்டு வரிசையில் பாஷையூரில் பாலதாஸ் அவர்கள் குறிப்பிடப்படுகின்றார். திருமறைக் கலாமன்றத் தயாரிப்பான ‘நீ ஒரு பாறை’ நாடகத்தில் நீரோ மன்னாக நடித்துப் பாராட்டுப் பெற்றார். பாத்திரத்தினை வெளிப்படுத்தி பாடிநடிப்பதிலும் அதற்கிணையாக எதிர்வினைகளை காட்டுவதிலும் பாலதாஸ அண்ணாவியார் சிறந்து விளங்கினார். அண்ணாவியாரின் நடிப்புத்திறனுக்காக கலையரசு சொர்ணலிங்கமவர்கள் இசைநாடக இளங்கோ என்ற பட்டத்தினை வழங்கி கௌரவித்தார். வளர்பிறை நாடக மன்றத்திய தயாரிப்புகளான இசைநாடகங்களிலும், தென்மோடி நாட்டுக் கூத்துக்களிலும் திருமறைக்கலாமன்ற தயாரிப்புகளிலும் தன்னை ஈடுபடுத்தி நடித்த அனுபவமே அவரது பரந்த கலை அறிவினையும் நடிப்பாளுமையையும் கட்டமைப்பதற்கு உந்து சக்திகளாயி;ன.

அண்ணாவி மற்றும் நெறியாளர் வகிபாகம்
நாட்டுக்கூத்து மரபில் அண்ணாவியார் என்னும் வகிபாகம் நவீன நாடகத்தில்
நெறியாளர் என்னும் வகிபாகத்திற்கு ஒப்பானது. அண்ணாவியார் என்னும் வகிபாகத்தினை ஒரு கலைஞன் மிக எழிதில் அடைந்து விட முடியாது. இவன் கூத்தின் ஆடல், பாடல் மத்தளம், 3கூத்தினை தொகுத்தல், நடித்தல் என பலவாறான வகிபாகங்களை கற்று கூத்தினை திறம்பட மேடையேற்றும் வல்லமை பெற்றவர்களையே அண்ணாவியார் என் கிராமங்களில் அங்கீகரிக்கப்படும். அத்தகைய வகி பாகத்திணை பாலதாஸ் அவர்கள் தனது பதினெட்டாவது வயதில் கண்டி அரசன் கூத்தினை பாஷையூர் இளைஞர்களை வைத்து அண்ணாவியம் செய்து அரங்கேற்றி அடைந்தார். ஆனாலும் திருமறைக்கலாமன்றத்தினால் 1994ஆம் ஆண்டு முறையாக ‘அண்ணாவியார்’ என்ற பட்டத்தினை வழங்கியது. மரபுவழி அண்ணாவியார்களுக்கு எந்த வகையிலும் குறைவு படாதவராக கூத்தின் பாடல்கள், ஆடல்களை நன்கறிந்தவராக ஆர்மோனியம் இசைப்பதிலும், கூத்தின் பாடல்களை எழுத வல்லவராகவும் இரவிரவாக ஆடிய கூத்துக்களை கூத்தின் சுவையும் கருவும் கெட்டுவிடாத வகையில் 30 அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு ஆடக்கூடிய வகையில் சுரக்கி ஆக்கும் வல்லமை பெற்றவராக காணப்படுகின்றார்.

பனுவலாக்க கர்த்தாவாக அரங்க ஆளுமை.
நாட்டுக்கூத்துக்களிலும் இசைநாடகங்களிலும் நடித்து வந்த அண்ணாவியாரை நாடக எழுத்துப்பிரதி ஆக்கும் கலைஞனாக மாற்றிய பெருமை திருமறைக்டகலாமன்றத்திற்கே உரியது. திருமறைக்கலாமன்றத்திற்காக அவரால் எழுதப்பட்ட ‘நீ ஒரு பாறை’ என்ற நாடகப்பனுவலே அண்ணாவியாரின் முதல் நாடக எழுத்துரவாகும். பாரம்பரிய நாட்டுக்கூத்து எழுத்துருக்களில் இருந்து அண்ணாவியார் பாலதாஸ் அவர்களின் எழுத்துருக்கள் வேறுபட்டவை. பாரம்பரிய புலவர்களால் எழுதப்படும் முறைமையினை மீறி உடைத்தெறிந்து புதிய களத்தோடு நாட்டுக்கூத்துப்பனுவல்களை ஆக்கினார். இதற்கு அரங்கக் கலைஞனாக அவர் பெற்ற அனுபவங்கள் இவ்வாறானதொரு சிந்தனைக்கு களம் அமைத்தது எனலாம். குறிப்பாக அண்ணாவியாரின் நாட்டுக்கூத்து மற்றும் நாடகப் பனுவல்களை பினவருமாறு பட்டியலிடலாம்.
1- நீ ஒரு பாறை

2- அனைத்தும் அவரே
3- இடமில்லை
4- பத்திரிசியார் ஏற்றிய பாஸ்கா ஒளி
5- ஏமாந்தன் ஏரோதன்
6- வீரத்தளபதி
7- கோடி அற்புதர்
8- சவுலன் சின்னப்பர்

9- புனித பிலிப்பு நேரியார்
10- சம்மிக்கேல்
11- தோமஸ் அடிகள்
12- மக்சிமில்லியன் கோல்பே
13- மறைகாத்த மாவீரன்
14- புது யுகம் நோக்கி
15- யூடித்
16- தாவீது கோலியாத்
17- இரத்தக்கடன்
18- செந்தூது
19- சாலமோன் மன்னன்
20- குவலயம் ஆளப்பிறந்த கோமகன்
21- தொலைந்த மகன்
22- புனித சவேரியார்
23- சகுந்தலை
24- விசுவாமித்திரர்
25- பரதன் ஆகிய பனவுல்கள் அண்ணாவியாரின் அரங்க ஆளுமையின் அறுவடையாகும்.
இசைக் கலைஞனாக அரங்கை ஆளுமை செய்தமை.
அண்ணாவியார் பாலதாஸ் அவர்கள் நாடறிந்த ஆர்மோனிய இசை ஆளுமையாள
னாக திகழ்ந்தார்;. இசைக்கலைஞனாக அரங்கை ஆளுமை செய்தமை. பெரும்பாலும் கத்தோலிக்கக் கூத்துக்களி லிருந்தே ஆர்மோனியம் வாசிக்கும் மரபு ஈழத்தில் நாட்டுக்கூத்துக்களில் உருவானது எனப் பொதுவாக அறியப் படுகின்றது. முதன்முதலில் ஆர்மோனியத்தை வாசித்தவர் சுருதி மரியான் எனப்படும் மா.மரியாம்பிள்ளை ஆவார் இவர் எக்கோடியன் மிரயாம்பிள்ளை என அறியமுடிகின்றது. இவரிடம் முறையாக ஆர்Nமுhனியத்தைக் கற்றுக் கொண்ட அண்ணாவியார் பாலதாஸ் வளர்பிறை நாடக மன்றத்தின் நாடகங்களுக்கு ஆரம்பத்தில் ஆர்மோனி இசையை வழங்கினார். அமரர் பூந்தான் ஜோசேப், பக்கிரி சின்னத் துரை உட்பட பிரபல்யமான அண்ணாவிமார்களின் நாட்டுக் கூத்துக் களுக்கு ஆர்மோனியம் வாசித்தவர். இவருக்கு நாட்டுக்கூத்தின் இராகங் கள், மெட்டுக்கள் அனைத்தும் இலாவகமாக இருந்தமையினால் பாடலை காதில் கேட்டதும் உடனே அந்தப்பாடலின் தருவுக்கேற்ப சுருதியில் வாசிக்கத் தொடங்கி விடுவார். நடிகர்கள் பாடும்போது சுருதி பிசகினால் அவர்களைக் காட்டிக்கொடுக் காது அவரது சுருதிக்கு மாறி இலகுவாக நிலமையை சீர் செய்து விடும் பண்பு கொண்டவர். வீரமான பாடல்களை நடிகர்கள் பாடும்போது தனது சுருதியில் நின்று ‘ஹே’ என்று ஓசையை எழுப்பி நடிகருக்கு உற்சாகமூட்டுவார். இத்தகை இசை ஆளுமை என்பது ஒரு சிலருக்கு மட்டும்தான் கைவந்த கலை.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்.
கலைஞன் வாழும்போதே போற்றப்படவும் மதிக்கப்படவேண்டியவனாகவும்
காணப்படுகின்றான் இஅப்போதுதான் அவனது கலை ஆளுமை என்பது உலகறிவதுடன் உலக அங்கீகார மும் கிடைக்கின்றது. உலகில் நோபல் பரிசி வழங்கு வதன் ஒருஆளுமை மதிக்ப்படுகின்றது போற்றப் படுகின்றது. அதேபோன்று நாமும் நமக்கோர் நலியாக்கலையுடையோம் என்பதற்கிணங்க வாழும் பேதே எமது கலைஞர்களும் போற்றப்பட வேண்டிய வர்கள் அந்த வகையில் அண்ணாவியார் பாலதாஸ் அவர்களையும் அரசு, அரசு சாரா அமைப்புகள் பராட்டிப் போற்றி கௌரவித்தமை கலைஞர் வாழும்போதே வாழ்த்திய நிதர்சனமாகும்.

இசைநாடக இளங்கோ – கலையரசு சொர்ணலிங்கம் – 1970.
அண்ணாவியார் விருது – திருமறைக்கலாமன்றம் – 1993.
யாழ் ரத்னா விருது – யாழ் பிரதேச செயலர் – 2002.

கலைஞானபூஷணன் – திருமறைக்கலாமன்றம் – 2004.
கலாபூஷணம் – கலாசார அலுவல்கள் திணைக்களம் – 2006
கூத்தரசன் – நெயோ கல்சரல் கவுன்சில் – 2008.
ஆளுநர் விருது – வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு – 2011.
வேதகலாவித்தகன் – யாழ் மறைமாவட்ட பொது நிலையினர் கழகம் – 2011.
கலைத்தகழி – புனித பத்திரிசியார் கல்லூரி – 2014.
கலைச்சிகரம் – ஆயர்; சவுந்தரநாயகம் மீடியா சென்ரர் – 2016.
தனது பன்முக ஆளுமைகளை ஈழத்தின் நாடக அரங்குகளில் செழுமையுடன் வெளிப்படுத்திய பாலதாஸ் அண்ணாவியாரவர்கள் நாட்டுக்கூத்தினை ஆத்மார்த்
தமாக நேசித்த ஓர் அற்புதக் கலைஞன். இசையாலும், ஆடலாலும், நடிப்பாலும், பாடலாலும் அரங்கின கட்டிப்போட்டு தனக்கென ஒரு தனிப்பாதை யில் நாட்டுக்கூத்தின் பரிமாணங்களை கட்டமைத்த இக்கஞைன் 2018-04-26ஆம் நாள் அதாவது தான் பிறந்த அதே நாளில் கலையுலக வாழ்வை நீத்து நிலையுலகம் சென்றார். தன்னை அர்ப்பணித்து தன் இறுதி வரை வாழ்ந்த இக்; கலைஞனின் கலை அர்ப்பணிப்பினை நினைந்து யாழ்ப்பாணப்பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் தலைவணங்கி நிற்கின்றது.
கூத்தரசன் திருமணப் பொன் விழா மலர் மற்றும் அருட்தந்தை பாலதாஸ் பிறையன் அவர்களுக்கும்; மனமார்ந்த நன்றி..