Thursday, April 17

கலாபூஷணம் கலைஞர் நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் (என்.எம்)

0

அறிமுகம்

யாழ்நகரின் வண்ணார்பண்ணை தென்மேற்கே யாழ் காரைநகர் பிரதான வீதியின் கிழக்காக அமைந்துள்ள நெய்தல் நிலம் நாவாந்துறை என்று அழைக்கப்படும் நாவாய்த்துறை துறைமுக நகரமாகும். புனித நீக்கிலாரும் புனித பரலோக அன்னையும் அருள்பொழியும் திருத்தலத்தில் மிக்கேல் நீக்கிலஸ் இன்னாசி கத்தறீனா மண இணையருக்கு மூன்றாவது பிள்ளையாக பாலச்சந்திரன் 1952-06-17ஆம் நாள் பிறந்தார்.

தந்தை பிரிட்டிஷ; இராணுவத்தில் லெப்டினன் தரத்தில் திருகோணமலை றெஜிமென்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சிறந்த கடலோடி. தாயார் கல்வியறிவுமிக்கவர். தந்தைவழி பேரன் பூட்டன் கிருத்தோ இவர் மகன் மரியாம்பிள்ளை மாமன் நல்லையா மூவரும் புலவர்களாவர். தாயின் தந்தையும் மாமனாரும் சிறந்த தென்மோடி நாட்டுக்கூத்து கலைஞர்கள் ஆவார்கள். தாயார் சிறந்த குரல்வளமுடைய பசாம் அம்மானை ஒப்பாரி பாடுகின்ற பாடகியாவார். 

பாடசாலைக்காலம்.

யாழ் நாவாய்த்துறை றோ.க. வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரணதரம் வரையில் கல்விகற்று சிறப்பாக சித்தியடைந்து சிறிதுகாலம் கழித்து கா.பொ.த. உயர்தரம் தனியார் கல்விமூலம் வர்த்தகத்துறையில் கல்வி கற்றார். பாடசாலை நாள்;களில் புனித பரலோக மாதா ஆலயத்தின் பாடகர் குழாமில் 11 வயதில்  இணைந்து இன்றுவரை பணியாற்றிவருகின்றார். ஆசிரியர் கலைக்கவி அமரர். நீ.எஸ்தாக்கி அவர்களினால் பயிற்றப்பட்ட இவர் 1963தொடக்கம் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளிலும் பேச்சுப்போட்டிஇ வில்லுப்பாட்டு, நாட்டார்பாடல் போட்டிகளிலும், வலய, மாவட்டங்களில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுக்கொடுத்தார். நீளம்பாய்தலில் 1966ல் அகில இலங்கைப்போட்டியில் றோயல் கல்லூரியில் பங்கு பற்றினார்.

 நாடகக் கலைஞனாக பாலச்சந்திரன்

பாடசாலைக் காலத்தில் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் ஷேக்ஸ்பியரின் MERCHND OF VENICE (இரத்தத்துளி) நாடகத்தில் சட்டவல்லுனர் போர்;pயா (கதாநாயகி) ஆக நடித்து நாடகமேதை கலையரசு சொர்ணலிங்கம் அவர்களிடம் சிறந்த நடிகை என்று பாராட்டுப் பெற்றார். தொடர்ந்து கட்டப்பொம்மன் நாடகத்தில் ஜக்கம்மாவாகவும், வில்லிசை, சென்மேரிஸ் சனசமூகநிலைய முத்தமிழ் மன்றம் தயாரித்த அப்பு தந்த சீதனம் மற்றும் சாந்தி நாடகத்திலும் ஆணையின் ஆட்சிவேதாகம நாடகத்திலும் இன்னும் பல கிறிஸ்மஸ் நாடகங்களிலும் பாடல்களிலும் பங்கு பற்றினார்.

1974ல் யாழ் திருமறைக்கலாமன்றத்தில் இணைந்து மன்றத்தின் திருப்பாடுகளின் பெருங்காட்சி நாடகங்களிலும் ஒலிப்பதிவுகளிலும் ரூபவாகினி தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் பிரதம பாடகராகப் பணிசெய்தார். யாழ் மறைக்கல்வி நடுநிலையத்தின் கத்தோலிக்க நிகழ்வான சிறுவர் உலகம்‘ ‘புதிய உலகம்வானொலி நிகழ்வுகளில் நாடகம் பாடல்களில் பங்கு கொண்டார். 1978ல் யாழ்.நாவாய்த்துறை புனித பரலோக மாதா ஆலய பங்கு மக்களைக் கொண்டு அருட்பணி R.M.G நேசநாயகம் அடிகளாரின் தலைமையில் எழுத்துருவாக்கம் தயாரிப்பு நெறியாள்கை செய்து பரபாஸ்திருப்பாடுகளின் பெருங்காட்சி நாடகத்தினை 200க்கு மேற்பட்ட கலைஞர்;களைப் பயன்படுத்தி 120அடி மேடையில் தனது 26வது வயதில் இரண்டு நாள்கள் 1978.03.16ஆம், 17ஆம் நாள்களில் மேடையேற்றினார். திருமறைக்கலாமன்றத்தின் தொடர் நிகழ்வுகளில் பங்குபற்றிய இவர் 1980ல் தனது திருமணத்தின் பின்பு சிங்கப்பூர் சென்று மிட்சுபிசி சிப்யாட்டில் வெல்டர் அன்பிற்றராகப் (WELDER)  பணிபுரிந்தவேளை சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகத்தின் SBC நமது பாடல் நிகழ்வின் ஒலிப்பதிவில் பங்கு கொண்டு கவிஞர் இளமாறனின் பாடலை இசையமைப்பாளர் சுந.சண்முகத்தின் இசையமைப்பில் பாடினார். சென்மேரீஸ் விளையாட்டுக்கழகத்தின் வலது முன்கள வீரனும் யாழ் மாவட்ட உதைபந்தாட்ட தெரிவு அணியின் வலதுமுன் களவீரனாகிய இவர் சிங்கப்பூரில் எனது நிறுவனத்தின் தெரிவு அணிக்காக விளையாடினார்.

1982ல் தாயகம் திரும்பும்பொழுது எனது உழைப்பின் பயனை ஸ்ரீரியோ மிக்ஸர் ஒலியமைப்பு ஒலிப்பதிவு சாதனங்களையும் இசை நிகழ்வுகளுக்கான (Power) பவர் அம்ளிபயர்களையும் (Casio) வீன ஓகன் ஆகியவற்றை எடுத்து வந்து ஜெயாசவுண்ட்ஸ்‘ ‘தொம்ஸன்ஒலிப்பதிவு கலையகத்தையும் வடக்குக்கிழக்கில் உருவாக்கி பலநிகழ்வுகளுக்கும் பல ஒலிப்பதிவுகளையும் மேற்கொண்டார். தாயகத்தின் குரலான புலிகளின்குரல்‘ ‘நிதர்சனம்ஆகியவற்றில் ஒலிப் பதிவாளராகக் கடைமையாற்றனார். இவ்வேளையில் தாயக விடுதலைக்காக யாழ்பல்கலைக்கழக மாணவர்களால் மேடையேற்றப்பட்ட விரிவுரையாளர் க.சிதம்பரநாதனின் மண்சுமந்தமேனியர்பெருங்காட்சி கவிதா நிகழ்வுக்கு ஒலி ஒளியமைப்புச்செய்தவர். குழந்தை ம.சண்முகலிங்கம் நெறியாள்கையில், இசை வாணர் M.கண்ணன் இசையில் அரங்கேற்றம் நடைபெற்றது. இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான இசைக்குழுக்களுக்கு மேடை ஒலியமைப்புச் செய்தவர்.

1982ல் பாரதியார் நூற்றாண்டு விழாவினைக் கலைநிகழ்வுகளோடு இணைந்த ஒலிஒளியமைப்பில் இசைநிகழ்வொன்றினையும் இயக்கியிருந்தார். இந்நிகழ்வுக் காக சென்மேரீஸ் முத்தமிழ் மன்றத்தினால் கலைஞர்“ என்ற விருது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து யாழ் திருமறைக் கலாமன்றத்தின் திருப்பாடுகளின் காட்சிகளிலும் நாடகங்களிலும் இசைநிகழ்வுகளிலும் பாடியது மட்டுமல்லாது ஒலியமைப்பு ஒலிப்பதிவுகளையும் மேற்கொண்டவர். 1987ல் தேசிய கலை இலக்கியப்பேரவையினரின் புது வரலாறு நாமே படைப்போம்என்னும் எழுச்சிப் பாடல்கள் நிகழ்வின் பிரதான பாடகனாகப் பங்குபற்றியதுடன் பல இடங்களில் மேடையேற்றப்பட்டபோது ஒலியமைப்பும் செய்திருநதார். இந்நிகழ்வு இவரால்; ஒலிப்பதிவு செய்யப்பட்டு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வெளியீடும் இசைநிகழ்வும் நடத்தப்பட்டது. பின்பு ரூபவாகினி தொலைக் காட்சியிலும் பலதடவைகள் ஒளிபரப்பானமை குறிப்பிடத்தக்கது.

1995 இடம்பெயர்வில் மிருசுவில் பங்கில் நடந்த திருமறைக்கலாமன்றத்தின் திருப்பாடுகளின் காட்சியில் பாடியதுடன் 1997ல் விடத்தல் தீவுப்பங்கில் கல்வாரியில் கருணை வெள்ளம் திருப்பாடுகளின் காட்சியினை அருட்பணி வின்சன் பற்றி தலைமையில் 100அடி மேடையில் 150கலைஞர்களைக் கொண்டு தயாரிப்பு நெறியாள்கை செய்து மேடையேற்றினார். UNHCR இடைத்தங்கல் முகாமில் சுகாதாரப்பரப்புரை நிகழ்வினையும் இந்தமண்ணில் மீண்டும் கிறிஸ்து கிறிஸ்மஸ் பெருங்காட்சி நாடகத்தினையும் பண்டிவிரிச்சானில் நடைபெற்ற மாவீரர் நாள்நிகழ்வில் வீரத்தாய்புறநானூற்று காப்பிய நாடகத்தையும் மேடையேற்றினார். பெரியமடு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கல்விக் கண்காட்சியில் எல்விஸ் ஆசிரியருடன் இணைந்து நாடகம் சம்பந்தமான அரங்க நிகழ்வினை இரண்டு தினங்கள் மேற்கொண்டார்.

1997 டிசெம்பரில் புலம்பெயர்ந்து குடும்பத்தினருடன் மன்னார் சென்றார். 1998ல் தலைமன்னார் கிராமத்தில் வசிக்கும் பொழுது அருட்பணி வின்சன் பற்றி தலைமையில் ‘120அடி மேடையில் 250 கலைஞர்களைக் கொண்டு இவரது தயாரிப்பில் நெறியாள்கை மற்றும் பாடல் இசையுடன் கல்வாரியில் கருணைமழையேசுவின் திருப்பாடுகளின் பெருங்காட்சி நாடகத்தினை மேடையேற்றினார். பேசாலைக்கு இடம்பெயர்ந்தபோது திருமறைக்கலாமன்றத் தின் அரங்கப் பொறுப்பாளராக கடமையாற்றினார். 1998ல் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசியப் பாடசாலையில் தொண்டராசிரியராகக் கடமையாற்றியபோது ஞானசௌந்தரிஇசைநாடகத்தினை பாடசாலை ஆசிரியர் களை நடிகர்களாக இணைத்துக்கொண்டு பலதடவைகள் பல்வேறு இடங்களில் மேடையேற்றிப் பாராட்டைப் பெற்றார். பாடசாலையின் தமிழ்த்தினப் போட்டி களுக்குப் பொறுப்பாகவிருந்து நாட்டார் பாடல்கள், வில்லிசை, சமூக சரித்திர, இலக்கிய நாடகங்கள், வீரத்தாய் புறநாநூற்றுக்காவியம்‘ ‘சூரியவம்சம்மனுநீதிச் சோளன், வீடு, இடம்யெர்வு, பெண்ணடிமை புதிய மோடி, யார் ஆற்றுவார் வில்லிசை ஆகியவைகளை எழுதி தமிழ்த்தினப் போட்டிகளில் பங்குபற்றி மாவட்ட மாகாண வெற்றிகளைப்பெற்றுக் கொடுத்ததுடன் வீரத்தளபதிதென்மோடிக் கூத்தினையும் வில்லிசையினையும் மாகாண மட்டத்தில் வெற்றிபெறச் செய்தார். ஆங்கில தினப்போட்டிகளின் ஆங்கில நாடகங்களுக்கு தயாரிப்பாளராகவும் உடை ஒப்பனை மேடைக்காட்சி அமைப்பாளராகவும் செயற்பட்டவர். 1999-06-18ல் திருமறைக்கலாமன்றத்தின் மன்னார்க்கிளையினை உருவாக்கி அதன் இணைப் பாளராகவும் அரங்கப்பொறுப்பாளராகவும் இருந்து தயாரிப்பு நெறியாள்கை செய்து பல கலைநிகழ்வுகளை மேடையேற்றினார். கவின்கலைகள் பயிலகம் உருவாக்கி வயலின் ஓகன் மிருதங்கம் மேலைத்தேய நடனம் ஆகியவற்றில் மாணவர்கள் பயின்று பயனடைய வழிப்படுத்தினார்.                                                 

சமாதான ஒப்பந்தத்தின் மூலம் 2002ல் யாழ்ப்பாணம் வந்து மீள்குடியேறிய பின் 2004ல் புனித பரலோக மாதா ஆலய பங்கு மக்களைக் கொண்டு அருட்பணி அமரர் M.X.கருணாரட்ணம் அடிகளார் தலைமையில் 175அடி மேடையில் 350க்கு மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு மார்ச் 27,28ல் கல்வாரி கண்டகடவுள்திருப்பாடுகளின் பெருங்காட்சி நாடகத்தினை எழுத்துருபாடல் இசைதயாரிப்பு  நெறியாள்கை செய்து மேடையேற்றினார். 2005ல் யாழ் பிரதேசசபை கலாசார அவை கலைஞர் களால் அரங்கேற்றப்பட்ட பண்டாரவன்னியன்தென்மோடிக் கூத்தில் ஆங்கிலேய மந்திரி பாத்திரம் ஏற்று நடித்தார். 2009ல் அரச கிறிஸ்மஸ் நாடக விழாவிற்காக அருட்பணி அற்புதராஜ் அடிகளாரின் அழைப்பின் பெயரில் ஹப்புத்தளை சென்ற இவர் காஏகல்ல எஸ்டேட் மக்களைக் கொண்டு இந்த மண்ணில் மீண்டும் கிறிஸ்துபெருங்காட்சி நாடகத்தினை தயாரித்து இயக்கி பதுளை நூலக மண்டபம், ஹப்புத்தளை கலாசார மண்டபம், காகெல்ல புனித செபஸ்தியார் ஆலயம் போன்ற இடங்களில் கரோல் நிகழ்வுகளுடன் மேடையேற்றினார். 2010ல் மன்னார் புனித செபஸ்ரியார் பேராலய பங்கு மக்களுக்காக 200அடி மேடையில் 400க்கு மேற்பட்ட கலைஞர்கள் களமாட கல்வாரியில் கருணை மழையேசுவின் திருப்பாடுகளின் பெருங்காட்சி நாடகத்தினை 2010-03.2829ல் மிகுந்த பொருட்செலவில் எழுத்துரு தயாரிப்பு நெறியாள்கை, பாடல் இசை என அனைத்தினையும் ஒருங்கிணைத்து மேடையேற்றினார். இந்நிகழ்வில் அதிவண. ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசியப்பாடசாலை சமூகமும் இணைந்து பொன்னாடை பொற்கிளியுடன் “Golden Voice”  ‘தங்கக்குரல் நாயகன்விருது வழங்கப்பட்டதுடன் இதன் இறுவட்டு வெளியீட்டில் மன்னார் அரசஅதிபர் திரு.நீக்கிலாப்பிள்ளை அவர்களால் அருட்பணி S.K.தேவராஜா அடிகளார் தலைமையில் பங்குச்சமூகத்தால் கலாவித்தகர்விருதும் வழங்கப்பட்டது. மன்னாரில் வாழ்ந்த காலங்களில் தமிழ்த்தினப் போட்டிகள் நாடக, நாட்டுக்கூத்து போட்டிகளுக்கு இசைநிகழ்வுகளுக்கு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வருடாந்த  போட்டிக் கலை நிகழ்வுகளுக்கும் சிறந்த நடுவராகக் கடமையாற்றியதுடன் இன்றுவரை யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற போட்டிகளுக்கும் நடுவராகக் கடைமையாற்றி வருகின்றார். 2010ல் மன்னார் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்ட தமிழ் செம்மொழி விழாவின் மூன்றாம் நாள் நாடக விழாவினை இவரது மகளின் துணையுடன் இலக்கியம் வரலாறு சிறுவர் நாடகங்கள் வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்துக்களை வரவேற்புரையுடன் மேடையேற்றினார். இந்நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களால் பொன்னாடை போர்த்தி சிறந்த நாடகக் கலைஞர்விருதினை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. 2010ல் நடைபெற்ற யாழ்பிரதேச செயலக கலாசார விழாவில் பண்டாரவன்னியன் கூத்தில் ஆங்கிலேய மந்திரியாக நடித்தார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ் பிரதேச செயலக கலாசார விழாவில் இவரது எழுத்துருத் தயாரிப்பு நெறியாள்கையில் சூரியவம்சம்இலக்கிய வரலாற்று நாடகம் அரங்கேற்றப்பட்டது. 2014ல் ‘கலாபூஷணம்அரசவிருதினையும் யாழ்ரத்தினாவிருதினையும் கலைஞர்; விருதினையும் பெற்றுக் கொண்டார்.

2015ஆம் ஆண்டு யாழ். பிரதேச செயலக கலாசார விழாவில் இடம் பெற்ற புதிய மோடி நாடகத்தில் பிரதான பாத்திரங்களில் ஒன்றில் நடித்தார். இக்காலப்பகுதியில் யாழ் கொட்டடி சனசமூக மற்றும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தினாலும் சமூகதிலகம்விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். நாவாந்துறை இளைஞர் ஓன்றியத்தினால் இளையோர்இரவுநினைவுச்சின்ன விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்;டார். சர்வோதயம் தேசோதயம் யாழ் மாவட்ட அமைப்பினால் தேசோதயதீபம், 2016ல் அமாபிலிம்ஸ் விருதும் 2016ஆம் ஆண்டு யாழ்பிரதேச செயலக கலாசார விழாவில் சங்கிலியன்தென்மோடிக்கூத்தினை தயாரிப்பு நெறியாள்கை செய்து அண்ணாவித்தளத் திலிருந்து மேடையேற்றினார். இதில் சோழமந்திரியாக பாத்திரமேற்று நடித்;தார். 2017ல் M.G.R நூற்றாண்டு விழாவில் சர்வோதயம் தேசோதயம் இணைந்து வழங்கிய கலைமாமணி‘ ‘விருதினைப் பெற்றுக் கொண்;டார். 2017-04-0405 திகதிகளில் நாவாந்துறை புனித பரலோக மாதா ஆலய பங்குமக்கள் துணையுடன் பங்குத்தந்தை அருட்பணி C.J .அன்ரனிபாலா அடிகளாரின் தலைமையில் இவருடைய எழுத்துரு தயாரிப்பு நெறியாள்கையில் 237அடிக்கு மேல் அகண்ட மேடையில் 400க்கு மேற்பட்ட கலைஞர்;களைக் கொண்டு மிகுந்த பொருட்செலவில் யேசுவின் பின்னால் பரபாஸ்திருப்பாடு களின் பெருங்காட்சி நாடகத்தினை மிகப்பிரமாண்டமாக மேடையேற்றினார்.

இந்நிகழ்வின் (04-04-2017) முதல் நாளில் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு ஐஸ்ரியன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களினால் பரிந்துரைக்கப் பட்ட  திருமறைக்கலைவேந்தன்வாழ்நாள் சாதனையாளர் விருதினை யாழ் மாவட்ட குருமுதல்வர் P.ஜெபரட்ணம் அடிகளார் வழங்கினார். இந்நிகழ்வில் உள்ளூர் அரங்கக் கலைஞர்;கள் ஐவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இக்கலைஞனுடைய அனுசரனையில் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்வில் பங்குத்தந்தையும் பங்குக்கலைஞர்;களும் பங்கு மக்களும் இணைந்து வழங்கிய மாபெரும் அரங்க இயக்குனர்வாழ்நாள் சாதனையாளர் விருதினை மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அவர்கள் வழங்கினார்கள்.

2018ஆம் ஆண்டு யாழ் மாவட்ட செயலக யாழ் முத்துவிருதினையும் 2019ல் வடமாகாண பண்பாட்டலுவல்கள்  திணைக்களத்தின் கலைக்குருசில்விருதினையும் பெற்றுக்கொண்டவர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபை யாழ் மாநகரசபை தேர்தலில் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு 300 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று கௌரவ உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். யாழ் மாநகரசபையின் சமய விவகார கலைபண்பாட்டு நிலையியற்குழுவின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டு வாணிவிழா, கிறிஸ்மஸ் விழா, இப்தார் விழா, பொங்கல் காணும் பொங்கல் விழாக்களையும் வியக்கும் வண்ணம் நிறைவு செய்தவர்.   

நாவாந்துறை றோ.க.வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கச் செயலாளர், யாழ் மூத்த பிரஜைகள் குழு செயற்குழு உறுப்பினர், சர்வமதங்களின் ஒன்றிய உறுப்பினர் சர்வோதயம் தேசோதயம் மற்றும் பிரதேச செயலகம் மாவட்டச் செயலகத்தின் கலை, கலாசார மற்றும் அதிகாரசபை செயற்குழு உறுப்பினர், J/85 கிராம அலுவலர் பிரிவின் ஜனாதிபதியிடம் கேளுங்கள் அமைப்பின் இணைப்பாளர், நாவாந்துறை சென் மேரி ஆலய பவளவிழாக்குழுவின் செயலாளர், யாழ் வரணி (LIONS CLUB) அரிமா கழகத்தின் உறுப்பினர் என பல்வேறு சமூக மட்ட அமைப்புகளில் இணைந்து சமூகசேவையாளராக செயற்பட்டு வருகின் றார். லண்டனைத் தலைமையகமாகவும் சட்டத்தரணி அமுது இளஞ்செழியன் அவர்களைத் தலைவராகவும் கொண்டு செயற்பட்டு வருகின்ற உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் பன்னாட்டு நிறுவனம் 2022இல உலகத்தமிழ் மாமணிபன்னாட்டு விருதினை 2022.10.06ஆம் 07ஆம் திகதிகளில் தமிழ்நாடு பாண்டிச்சேரி தௌ்ளாறு ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில் வழங்கி மதிப்பளித்தது. இதே காலப்பகுதியில் 20222023ஆண்டு களில் நடைபெற்ற பசாம்போட்டிளில் முதலாம் இடத்தையும் 2023ஆம் ஆண்டு மறை ஒளிநடத்திய பசாம் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார். 2023 தமித்தின நாடகப் போட்டிக்காக யாழ் இந்து மகளிர் கல்லூரியின் தயாரிப்பிற்காக கோடை வள்ளல் வேள்பாரி (துரோகம்) இலக்கிய நாடகத்தினை எழுதி பாடல்,இசை ஆகிய பணிகளை வழங்கியிருந்தார். யாழ்ப்பாணப்பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடம் யாழ்மண்ணே வணக்கம்பாடல் தொகுதியில் விழியின்றி கவி பாடிஎன்ற பாடலை எழுதி பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய பிள்ளைகள் இன்று கலைத்துறையில் பிரகாசித்து வருவதனை நாம் காணக் கூடியதாகவிருக்கின்றது. குறிப்பாக இசைத்துறையிலும், நாடகத்துறை யிலும் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கதுடன் தனது கலைத்தொடர்ச்சியினையும் ஏற்படுத்தியிருக்கும் கலைஞர் பணி என்றும் சிறப்பாக அமைய வாழ்த்தினை தெரிவிக்கின்றோம்.

பன்முக ஆற்றலும் ஆளுமையும் கொண்ட  கலைஞர் என்.எம்.பாலச்சந்திரன் அவர் கள் எம் சமூகத்திற்காற்றிய கலைச்சேவையினை  ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறையினருக்கு கையளிப்பதில் யாழ்ப்பாணப்பெட்டகம் – நிழலுருக்கலைக் கூடம் பெருமையடைகின்றது. இவ்வாக்கத்தினை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கலைஞருக்கும் அவரது புதல்வியான ஆன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

கலைஞர் லயன் என்.எம்..பாலச்சந்திரன் அவர்களின் படைப்புகள்

இல  ஆண்டு   கலைப்படைப்புகள்      வகிபாகம்
01       1963  கிறிஸ்மஸ் நாடகம்          தெருப்பாடகன்
02      1964  இரத்தத்துளி   கதாநாயகி
03  1965  கட்டப்பொம்மன் ஜக்கம்மா
04   1966  கூட்டுறவு வில்லிசை தலைவன்
05     1966  ஆயர்தியோகுப்பிள்ளை தலைவன்
06  1968  அப்பு தந்த சீதனம்   மகள்
07  1970  சாந்தி சமூகநாடகம் நண்பன்
08 1972  பண்டாரவன்னியன்வரலாற்றுநாடகம்  

 பரநிருபன்

  09   1973    ஆணையின் ஆட்சி‘  அகாஸ்வேருமன்னன்
10   1978  பரபாஸ் திருப்பாடுகளின் காட்சி       தயாரிப்புஇயக்கம்
11 1988  கல்வாரியில் கருணை வெள்ளம்       (திருப்பபாடுகளின்   காட்சி) தயாரிப்பு இயக்கம்     
12   1997 வீரத்தாய் எழுத்துரு பாடல் இசை, பாடகர்
13     கல்வாரியில் கருணை வெள்ளம் தயாரிப்பு இயக்கம்
14  இந்த மண்ணில் மீண்டும் கிறீஸ்து    

தயாரிப்பு,இயக்கம், எழுத்துருபாடல், இசை,பாடகர்

15   1998  கல்வாரியில் கருணைமழை   

தயாரிப்பு இயக்கம், எழுத்துரு,பாடல், இசை, பாடகர்

16  1999  ஞானசெளந்தரி இசைநாடகம்      தயாரிப்பு இயக்கம்
17 தர்மத்தின் வாழ்வு வில்லிசை    தயாரிப்பு இயக்கம்
18  2000 சிலம்பின் சீற்றம் வில்லிசை
19    வீரத்தளபதி தென்மோடிக் கூத்து  தயாரிப்பு இயக்கம்
20    பெண்ணடிமை புதுமோடி     தயாரிப்பு இயக்கம்
21   2001  வீடு சமூக நாடகம்     எழுத்துரு, தயாரிப்பு, இயக்கம்
22  20022011 சூரியவம்சம் இலக்கிய வரலாற்று நாடகம்

பாடல்,இசை, எழுத்துரு தயாரிப்பு,  இயக்கம்  

23 2004 கல்வாரி கண்ட கடவுள்  எழுத்துரு தயாரிப்பு இயக்கம்,பாடல்
24   20052010 பண்டாரவன்னியன் தென்மோடி ஆங்கிலேய மந்திரி
25  2009  இந்த மண்ணில் மீண்டும் கிறிஸ்து

எழுத்துருதயாரிப்பு, இயக்கம் பாடல்,  இசைபாடகர்

26  2010     கல்வாரியில் கருணைமழை

எழுத்துரு, தயாரிப்பு, இயக் கம்,பாடல்    இசை   பாடகர்

27 2015 விடியல் புதுமோடி  பொதுமகள்
28 2016 சங்கிலியன் தென்மோடி சோழ மந்திரி தயாரிப்பு, இயக்கம்
29

       30 

2017 

                2023 

இயேசுவின் பின்னால் பரபாஸ் 

                                                               வேள்பாரி    

எழுத்துரு தயாரிப்பு இயக்கம்,பாடல்  இசை,   பாடகர்    எழுத்துரு, பாடல்கள், இசை

கலைஞர் லயன் என்.எம்.பாலச்சந்திரன் அவர்கள் பெற்ற விருதுகள்

இல  ஆண்டு விருது பெயர்  வழங்கிய நிறுவனம்
01  1982 கலைஞர் யாழ் நாவாந்துறை சென்மேரிஸ் சனசமூகநிலையம்
02 2005 கௌவரவிப்பு     யாழ். பிரதேச செயலகம்
03  2010  Golden Voice மன்னார். G.r.M தேசிய பாடசாலை
04  2010    கலாவித்தகர்    மன்னார் மறைமாவட்ட ஆயர்
05 2010  சிறந்த நாடகக்கலைஞர்   மன்னார் தமிழ்ச்சங்கம்
06 2014  கலாபூஷணம்   கலாசார அலுவல்கள் திணைக்களம்
07 2015  யாழ்ரத்னா யாழ் பிரதேச செயலகம்
08 சமூகதிலகம்  யாழ் கொட்டடி சன சமூக நிலையம் கி.அ.சங்கம்
09    தேசோதயதீபம்    சர்வோதயம் யாழ் மாவட்டம்
10   இளையோர் இரவு யாழ் நாவாந்துறை சென்மேரிஸ்.இளைஞர் கழகம்
11  2016      கலைமாமணி  சர்வோதயம், தேசோதயம்
12     அமாபிலிம்ஸ் விருது அமாபிலிம்ஸ் கொழும்பு
13  2017 திருமறைக்கலைவேந்தன் யாழ் மறைமாவட்ட ஆயர்
14   2017  மாபெரும் அரங்க இயக்குனர் நாவாந்துறை
15      இசைத்தமிழன்  பிரான்ஸ் பன்னாட்டு விருது
16  2018 யாழ் முத்து   மாவட்டச் செயலகம் கலை பண்பாட்டு பேரவை
17   கலைவேந்தன் யாழ்.நாவாந்துறை ப.ம.ஆ அருட்சபை
18  2019  கலைமாமணி      சர்வோதயம்
19 2022   உலகத்தமிழ்மாமணி    உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம்

கலைஞர் என்.எம்.பாலச்சந்திரன் அவர்களது                         கலைப்பயண புகைப்படத்தொகுப்புகள்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!