Monday, November 16

கலைச்சுடர்   நடராசா    சிறீஸ்கந்தராசா

0

அறிமுகம்

அளவெட்டி   வடக்கு  முதலியார் கோவிலடியைச்  சேர்ந்த    நடராசா   சரஸ்வதி  தம்பதியினருக்கு   மூத்தமகனாக   1958-04-23 ஆம் நாள் பிறந்தவர்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை   முதலாம்  தரம்  முதல்    நாலாம்  தரம்  வரை   அளவெட்டி  சீனன்  கலட்டி  வித்தியாசாலையிலும்    ஐந்து   முதல்  ஏழு  வரை   அளவெட்டி அருணோதயாக்   கல்லூரியிலும்  எட்டு  முதல்  பத்து  வரை    மகாஜனா  கல்லூரியிலும்   பயின்றார்.

தனது  பதினெழுவயதில்  அரைக்கும்  ஆலையில்  பணியை  தொடர்ந்தார்   அப்போது  முதல்    சிறுகதை   கவிதை  பாடல்        கட்டுரைகள்   வாசிப்பதையும்     பொழுது போக்காக   கொண் தனது பிள்ளைகளை கல்வியில் சிறப்புற வைத்து அவர்கள் உலகின் சிறந்த தொழில் முயற்சியாளர் களாக வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தனது   இருபத்திநான்காவது   வயதில்  திருமணம்  செய்து  கொண்டார்.   இவரின்  மனைவி  பெயர்   பத்மலீலாவதி.   இவர்களுக்கு   மூன்று   பிள்ளைகள்.    தனது பிள்ளைகளை கல்வியில் சிறப்புற வைத்து அவர்கள் உலகின் சிறந்த தொழில் முயற்சியாளர்களாக வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பொழுது போக்கிற்காக வாசிப்பில் ஈடுபடுத்தி வந்த சிறி அவர்கள; எழுபத்தி ஏழாம்  ஆண்டிலிருந்தே  சிறுகதை  பாடல்   நாடகம்  கவிதை  என  எழுத்துத்  துறைக்குள்   நுழைந்தார்.    தொன்னூற்றி மூன்றாம்  ஆண்டு  ஏற்பட்ட  இடம்பெயர்வால்  இருப்பிடம்  விட்டு  வடமராட்சி  துன்னாலையில்  குடியேறினார். இரண்டாயிரத்து  மூன்றாம்  ஆண்டுவரை   அங்கு  வசித்து  வந்தார். அவ்வேளையில்  அங்குள்ள  காசிநாதர்  வித்தியாசாலையில்  வருடந்தோறும்  நடைபெறும்  நவராத்திரி விழாவில்    சிறுவர் நாடகங்கள்  எழுதி அம்மாணவர்களை  கொண்டு  நடித்து  மேடையேற்றி   வந்தார்

பின் இரண்டாயிரத்து  நான்காம்  ஆண்டு  சொந்தவூரான  அளவெட்டிக்கு  வந்து  சேர்ந்தனர்.  அங்குவந்து   இரண்டாயிரத்து  ஏழாம்  ஆண்டு  வலி வடக்கு  பிரதேச செயலகம்  ஊடாக   கலைத்துறை  சம்பந்தமான  போட்டிகளில்   பங்கு  பற்றலானார்.  அன்றுமுதல்  இன்றுவரை  பாடலாக்கம்  சிறுகதை   கவிதைப்  போட்டிகளில்  பங்கு  பற்றி  பிரதேச மட்டம்    மாவட்ட மட்டம்    தேசிய மட்டங்களில்   தன்  திறமைகளை வெளிப்படுத்தி   வருகின்றார்.

தேசிய மட்டத்தில்   இரண்டாயிரத்து  ஒன்பதாம் ஆண்டு  பாடலாக்கத்தில்  மூன்றாமிடம்   பெற்றமைக்காக  அளவெட்டி  அபிவிருத்தி  மன்றத்தினால்   கௌரவிக்கப்பட்டார்.

இரண்டாயிரத்துப்   பத்தாம்  ஆண்டு  அளவெட்டி  அபிவிருத்தி மன்றத்தால்   காடு கரம்பில்   வாழ்க்கையடா,  குயில்  கூவும்  வசந்த  காலம்   பாடல்கள்  வெளியீடு,

இரண்டாயிரத்து  பதினொன்றில்   எங்கள் அருணோதயா  பாடலுடன்  அளவெட்டி அபிவிருத்திச்  சங்கத்தின்  சீருலாவும்  கலைகள் யாவும்  பொழியும்  அளவெட்டி  எனும் பாடலும்  வெளியீடு,   இப்பாடல்  அளவெட்டியின்     கீதமாக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரத்து  பதினைந்தில்  லண்டன்   இல்பொட்  பிள்ளையாரின்   பக்திப்பாடல்   இறுவெட்டு  வெளியீடு.

இரண்டாயிரத்து  இருபத்தி நான்காம்  ஆண்டு  யாழ்ப்பாணப்   பெட்டகம் நிலலுருக்கலைக்கூடம்   வழங்கிய யாழ்மண்ணே  வணக்கம்  இறுவட்டில்  ஞானிகள் வாழ்ந்த  இடம்  என்னும்  பாடல்  இடம்  பெற்றுள்ளது.

அளவெட்டி  கும்பளாவளைப்  பிள்ளையார்  பற்றிய  பாடல்  அளவையூர்க்  கொருவிழா  ஆனைமுகன்  திருவிழா     என்னும்   பாடல்  இரண்டாயிரத்துப்  பதினைந்தில்  பதியப்பட்டது.

இரண்டாயிரத்துப்  பதினோராம்  ஆண்டு  வலிகாமம் வடக்கு  பிரதேச செயலகத்தினால்  கலைச்சுடர்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!