யாழ்ப்பாணத்தின் செழுமையான வரலாற்றுப் பாரம்பரியத்தையும், அதன் பன்முகத்தன்மையையும் திரும்பிப் பார்க்கும்போது, யாழ் நிர்வாகத்தில் மறக்க முடியாத ஆளுமையாகத் திகழ்பவர் காதி M. A. M. M. சுல்தான் அவர்கள். 1955 ஜனவரி 5 அன்று பதவிப் பிரமாணம் செய்து யாழ்ப்பாண மாநகரசபையின்முதல் முஸ்லிம்மேயர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து யாழ்ப்பாண மாநகர சபையின் 4ஆவது மேயர் என்ற பெருமையும் அவர்களைச் சாரும். சாம் சபாபதி மாநகர சபையின் மேயராக முதலாம், மூன்றாம் மேயராகத் தெரிவு செய்யப் பட்ட பின்னர் காதி சுல்தான் அந்த இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அரசியல் வாழ்வைத் தாண்டி, அவர் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் (Proctor) காதி (Qazi) நீதிபதியாகவும் சேவையாற்றி னார். நேர்மைக்கும் நீதிக்கும் பெயர் பெற்ற அவர், அனைத்துச் சமூக மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்தார். 1950-களில் இவரது தலைமைத்துவம், யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே நிலவிய ஆழமான ஒற்றுமைக்கும் பரஸ்பர மதிப்பிற்கும் சிறந்த சான்றாகத் திகழ்ந்தது. வழக்கறிஞர் M. A. M. M. சுல்தான் அவர்கள் இலங்கையின் முதல் முஸ்லிம் சிவில் சேவை அதிகாரியும் (CCS) சிறந்த கல்வியாளரும், YMMA இன் ஸ்தாபகருமான அறிஞர் A. M. A. அஸீஸ் அவர்களின் மைத்துனரும் ஆவார்.

