Friday, October 30

மகாத்மா காந்தியின் யாழ் வருகை – 1927

0

இந்திய விடுதலை போராட்டத்தின் தலைவர்களில் ஒருவரான மகாத்மா காந்தி அவர்கள் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் முன்னெடுத்த முயற்சிகளின் பயனாக 1927 நவம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகைதந்தார். அவரை காண்பதற்கு ஆயிரக்கணக் கான மக்கள் திரண்டனர். அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்தின் கல்வி வரலாற்றில் முக்கிய கல்லூரியாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் அவர் வருகை தந்து உரையாற்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் அவர் நிகழ்த்திய உரைகளில் சாதிப் பாகுபாடு, மத நல்லிணக்கம், சமூக சீர்திருத்தம், பாரம்பரிய பண்பாட்டை பாதுகாத்தல் மற்றும் ஏழை மக்களின் துயரங்கள் போன்ற விடயங்கள் முக்கிய இடம்பெற்றன. மகாத்மா காந்தி அவர்களுடன் யாழ்ப்பாணம் வந்திருந்த சி. ராஜகோபாலாச்சாரி, 1927 நவம்பர் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் உரையாற்றினார் என கல்லூரியின் வரலாற்றுப் பதிவு குறிப்பிடுகின்றது. இன்று இந்த நிகழ்வுகள் இடம்பெற்று கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. ஆனால், யாழ்ப்பாணத்தின் கல்வி வரலாற்றையும் அக்கால இளைஞர்களின் சமூக பங்களிப்பையும் நினைவூட்டும் முக்கியமான பதிவுகளாக அவை திகழ்கின்றன.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!