தமிழ் பத்திரிகைத்துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலா
ளர் பி.எஸ்.பெருமாள் என அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் இரத்தினபுரியில் 1933 ஆம் ஆண்டு பிறந்து யாழ்ப்பாணத்தை வாழ்விடமாக் கொண்ட இவர் மாணவராக இருந்த காலப்பகுதியிலேயே பத்திரிகைத்துறை யில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகத் தனது பத்திரிகைத்துறையை ஆரம்பித்தார். 1961ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகை யில் உதவி ஆசிரியராகத் தனது பணியினை தொடர்ந்தார். சிறிது காலத்திலேயே ஈழநாடு வாரமஞ்சரியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

போர்க்காலத்தில் இவருடைய பணி முக்கியமானதாக இருந்தது. அதன் பின்னரான காலப் பகுதியில் உதயன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும், ஆசிரிய
ஆலோசகராகவும் பணிபுரிந்தார். சுமார் 55 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறை யில் பணியாற்றிய சி. பெருமாள், தனது ஊடகத்துறை அனுபவங்களை இளம் ஊடகவியலாளர்கள், ஊடகத்துறை மாணவர்களுடன் பகிர்ந்து அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவராக இருந்தவர். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கை நெறி மாணவர்களுக்குத் தன்னுடைய அனுபவங்களை இவர் பகிர்ந்து வந்தார். யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அவரைச் சந்திப்பது வழமையாகும். தனது 84 ஆவது வயதில் 2017 ஆம் ஆண்டு பத்திரிகைத்துறையிலிருந்து ஓய்வு பெற்றார்..

மரணத்துக்குப் பின்னர், தனது உடலை மாணவர்களின் ஆய்வுக்காக யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கையளிக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தார். இதற்கமைய அவரது உடல், இறுதிச் சடங்களுக்குப் பின்னர், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கையளிக்கப்பட்டது. 2019.11.05ஆம் நாள் இவ்வுலகிலிருந்து இறுதி விடைபெற்றார்.