Monday, October 13

கோபாலரத்தினம், எஸ்.எம், பத்திரிகை, யாழ்ப்பாணம் 

0
இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் 1930-10;-03 ஆம் நாள் யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் பெருமாள் கோவிலுக்கு அருகில்  ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இளம் பராயத்திலேயே தாயை இழந்தார்.  தந்தையாரும் நோயாளியாகி விட்ட நிலையில்  இவரது ஏழ்மையை கவனத்தில் கொண்டிருந்த யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி ஆசிரியர் சீனிவாசகம் என்பவரின் பராமரிப்பில் தமது கல்வியை தொடர்ந்தவர்தான் பின்னாளில் இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகில் கோபு என  நன்கு அறியப்பட்ட கோபாலரத்தினம்.
தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சன்மார்க்க பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையிலும்  அதன்பிறகு  யாழ்.வைதீஸ்வரா கல்லூரியிலும் கற்றதாகவும் சில மாதங்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திலும் கல்வியைத் தொடர்ந்ததாகவும்  தெரியவருகிறது.
தமது 23 வயதில் பத்திரிகை  உலகில்  பிரவேசித்திருக்கும் கோபு,  வீரகேசரியில் 1953 இல் முதலில் ஒப்புநோக்காளராகவே  இணைந்தவர். அதன் பிறகு அவருக்கு ஆசிரிய பீடத்தில் ஒரேசமயத்தில் அலுவலக நிருபர் வேலையும் துணை ஆசிரியர் பணியும் கிடைத்திருக்கிறது. 
கல்லூரிப்படிப்பிற்குப்பின்னர்  கோபாலரத்தினம், கிழக்கில் செங்கலடியில் காரியாதிகாரியாக அன்று னு.சு.ழு – தற்போது உதவி அரசாங்க அதிபர் பணியிலிருந்த இலங்கையர்கோன் அவர்களிடத்திலும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரும் சோதிடருமான கே.என்.நவரத்தினம் அவர்களிடத்திலும் கடமையாற்றியிருக்கும் தகவலை மற்றும் ஒரு பத்திரிகையாளரான எஸ்.தி(எஸ்.திருச் செல்வம்) 1984 இல் வெளிவந்திருக்கும் ஈழநாடு வெள்ளிவிழா சிறப்பிதழில் பதிவுசெய்துள்ளார்.
கோபு என்றும், எஸ்.எம்.ஜி. என்றும் நன்கு அறியப்பட்ட  தனித்துவமான பத்திரிகையாளராக விளங்கிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத் தினம்;.  பத்திரிகை ஆசிரியராக செயற்பட்ட காலத்திலேயே ஈழநாடு பத்திரிகை தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம் பெற்றது. 1981இல் இலங்கை இராணுவத்தால் ஈழநாடு பத்திரிகை எரியூட்டப்பட்டபோது கோபாலரத்தினம் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தார்.
ஈழநாடு” பத்திரிகை நாளிதழாக வெளியானபோது, அதன் செய்தி ஆசிரியராக இணைந்த கோபாலரத்தினம் 1980களின் முற்பகுதிவரை அதன் ஆசிரியபீடத்தின் பிரதானியாக இயங்கிவந்தார். 1985இல் ‘ஈழமுரசு” பத்திரிகையின் ஆசிரியராகப் பணியை ஏற்று அப்பத்திரிகையின் துரித வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தார். அவ்வேளையில்; 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கைக் குள் புகுந்து ஈழத்தின் பத்திரிகைச் சுதந்திரத்தில் கைவைத்த போது கைது செய்யப்பட்டு பல மாதங்கள் இந்திய அமைதிப் படைகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந் தார். பின்னர் வெளியே வந்ததும் ‘ஈழமண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்ற தலைப்பில் தனது அனுபவத்தினை தொடராக தமிழகத்தின் ‘ஜுனியர் விகடன்” பத்திரிகையில் இடம்பெறச்செய்து, இந்திய அமைதிப்படையின் கோரமுகத்தை வெளிப்படுத்தினார். இத்தொடர் பின்னர் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற மூலத் தலைப்பிலேயே மட்டக்களப்பு றுழசடன எழiஉந Pரடிடiஉயவழைளெஇ வெளியீடாக ஆகஸ்ட் 2000 இல் நூலுருவாக வெளிவந்தது. இந்நூலில் இந்திய அமைதிப்படை யினரால் தான் கைது செய்யப்பட்டதன் பின்னரான இரண்டு மாத சிறை அனுபவம் விரிவாகப் பதிவுசெய்திருந்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலையாகும் வரை நடந்த நிகழ்வுகள், சிறையில் சந்தித்தவர்கள், அவர்களிடமிருந்து கேட்டறிந்தவை என அனைத்தும் பதிவுக்குள்ளா கியிருந்தன. 
மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக்கதிர் தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், பின்னர் ஆலோசகராகவும் கடமையாற்றினார். 2000ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பில் தங்கியிருந்த அவர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஆலோசகராக வழிநடத்தினார்.
தேனீ, ஊர்சுற்றி, எஸ்.எம்.ஜி.  முதலான பெயர்களில் ஏராளமான கட்டுரைகளையும் பத்திகளையும் எழுதியிருக் கும் கோபு, படைப்பிலக்கியத்துறையிலும் கால் பதித்தவர். சில சிறுகதைகளை ஸ்ரீரங்கன் என்ற புனைபெயரில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு முதலான பத்திரிகைகளிலும் எழுதியிருப்பதாகவும், ஈழநாடுவில் வாராசாரம்  என்னும் தலைப்பில் வாராந்தம் காரசாரமான அரசியல் பத்திகளை எழுதியிருப்பதாகவும், அவருடன் முன்னர் பணியாற்றியவரும் தற்பொழுது கனடாவில் தமிழர் தகவல் என்னும் மாத இதழை வெளியிடுபவருமான எஸ். திருச்செல்வம்(எஸ்.தி) 1984 இல் எழுதியிருக்கும் ஒரு தகவல் குறிப்பு சொல்கிறது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு என அவர் வாழ்க்கை தொழில் நிமித்தம் ஓடிக்கொண்டே இருந்து,  இலங்கையின் பத்திரிகைத்துறையில் பல சிறந்த பத்திரிகையாளர்களையும் பத்திரிகை ஆசிரியர்களையும் இவர் உருவாக்கினார். தமிழ் தேசியம் சார்ந்து இவர் ஆற்றிய பணிகளுக்காக தேசியத்; தலைவர் பிபாகரன் அவர்களால் 2006இல் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர் 2017.11.15ஆம் நாள் மட்டக்களப்பில் இறைவனடி சேர்ந்தார்;.
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!