Thursday, October 9

இராசையா சின்னத்தம்பி, பண்டிதர் – அரியாலை

0
ஊர் மக்களால் வாத்தியார் என்று பயம் கலந்த மரியாதையோடு அழைக்கப்பட்ட பண்டிதர் இராசையா அவர்கள் அரியாலையில் சின்னத்தம்பி தம்பதியரின் புதல்வனாக 1908ஆம் ஆண்டு அவதரித்தார். அரியாலைக் கிராமத்தின் கல்வி முன்னேற்றத்தில் தன்னை அர்ப்பணித்த பண்டிதரவர்கள் அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் ஆசிரியராகவும் அதிபராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர். நாவலர் பெருமானால் ஆரம்பிக்கப்பட்ட வண்ணை நாவலர் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றும் பேறுபெற்ற இவர் தனது கல்விச்சேவையின் ஓய்வினை நாவலர் பாடசாலையிலேயே நிறைவு செய்தவதற்கான வாய்ப்புப் பெற்றவர். மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் கட்டுப்பட்ட இவர் கல்வியாலும் ஆன்மிக நாட்டத்தாலும் தன்னை நாடிவருவோரை வழிப்படுத்தி நல்வழிகாட்டினார். 
தமிழ் இலக்கண, இலக்கியங்களில் அதிக பாண்டித்தியமுடைய இவர் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள கணேசா வித்தியாசாலையில் ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினால் நடத்தப்பட்டு வந்த பால பண்டித, பண்டித வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இலக்கியத்தினைப் போதித்து வந்தவர். இவருடன் பண்டிதர் துரைசிங்கம், பொன்னுத்துரை போன்றவர்களும் இணைந்து பக்கபலமாக நின்று பண்டித பரம்பரை ஒன்றினை யாழ்ப்பாணத்தில் உருவாக்குவதற்கு அயராது உழைத்தவர். தமிழ் மரபு சார்ந்த விடயங்களை அடுத்தவர்களுக்கு கற்பிக்க வேண்டுமென்பதனை தம் நெஞ்சிருத்தி தமிழிற்காக உழைத்தவர். ஈழத்து பண்டித மரபில் முதன்மையானவராகவும் பண்டிதத்துவத்தின் மூலவேர்களில் ஒருவரானகவும் வாழ்ந்த பண்டிதரவர்கள் 1980ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். 
பல பண்டித மாணவர்கள் மற்றும் பண்டிதர்கள் இவரின் இல்லம்நாடி வந்து தமது ஐயங்களைக்கேட்டு தெளிவுபெற்றுச் சென்றுள்ளனர். சனி,ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாள்களில்அமரரின் இல்லம் நாடி வரும் பண்டிதர்கள் மற்றும் மாணவர்கள் பலருளர். இவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகவும் இராசையா பண்டிதரவர்களை நன்கறிந்தவருமான பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். 
பண்டித வகுப்புகளை பண்டிதர் துரைசிங்கம் அவர்களுடன் இணைந்து சனி, ஞாயிறு மற்றும் n பாதுவிடுமுறை நாள்களில் நடத்தி வருவது வழக்கம். இத்தகைய வகுப்புகிளில் பண்டிதரவர்களின் தமிழ்மொழி, இலக்கியங்கள், இதிகாசங்கள் மீதான பற்றும் அறிவும் கொண்ட பண்டிதரவர்கள் அதனை பிழையின்றி அனைவரும் படித்துப்பயன்பெற வேண்டுமென்பதில்  அதிக கவனத்துடனும், ஈடுபாட்டுடனும் கற்பிப்பதில் கவனம் செலுத்தியவர். கும்பகர்ணன் வதைப்படலம் என்ற நூலை எழுதி அதற்குரிய உரையுடன் வெளியிட்டவர்.
அரியாலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் பிள்ளையார் கதை, திருவெம்பாவை விரத காலங்களில் புராண படலப்படிபப்பிற்கு பயன் சொல்வதை செய்து வந்தவர். தனது இல்லத்தில் புராணம் தொடர்பான பல அரிய நூல்கள் மற்றும் ஏடுகள் சேகரித்து வைத்திருந்தவர். அவரது மறைவிற்குப் பின்னர் பிள்ளைகளின் பாதுகாப்பிலிருந்த அவையனைத்து ஈழத்தில் நிலைகொண்டிருந்த இந்திய ராணுவம் தீயிலிட்டு சாம்பராக்கியமை துரதிஸ்டவசமானது. 
ஈழத்து பண்டித மரபில் முதன்மையானவராகவும் பண்டிதத்துவத்தின் மூலவேர்களில் ஒருவரானகவும் வாழ்ந்த பண்டிதரவர்கள் 1980ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். 
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!