Monday, October 13

கிருஸ்ணசாமி பத்மநாதன் (கலாபூஷணம்)

0
அறிமுகம்
ஈழத்தின் பண்பாட்டு கூறுகளையும் தமிழையும் இசையையும் பேணுவதிலும், வளர்ப்பதிலும் ஈழத்து இசையுலகின் தனித்துவ ஆளுமையாய் தமிழ் ஈழத்தின் பிரபல வயலின் வித்துவான் பத்மநாதன் அவர்கள் 1960களின் பின் கலை உலகில் கலை அரங்குகளிலும், இசைநிகழ்ச்சிகளிலும் வயலின் வாசித்து இசை அரங்கினை சிறப்புற நடந்தேறச் செய்தவர். பல்லாயிரவரின் போற்றுதலையும் பாராட்டுக்களையும் பெற்று புகழேணியின் உச்சியை அடைந்தவர். இத்துடன் வயலின் கற்பித்தலிலும் வாசிப்பதிலும் தனக்கென ஒரு வழியைக் கையாண்டு வயலின் விற்பன்னர்களை உருவாக்கிய மேதை. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழிலும் பாண்டித்தியம் பெற்றிருத்தலே ஒரு கலைஞனைப் பூரணப்படுத்தும். அந்த வகையில், இவர் இசையாளர் மட்டுமல்லாது நாடறிந்த வயலின் இசைஞர், சிறந்த வர்ணனையாளன், நாடகங்களிற்கு இசை புனைவதிலும் நாடகம் வடிவபை;பதிலும் வல்லவர். அதுமட்டுமல்லாது பொற்றொழில் செய்வதிலும் மிக திறமையுள்ளவர். மேலும், பண்ணிசையிலும் நன்கு பரீட்சயம் உள்ளவர்.
எம் நாட்டில் கர்நாடக இசைத்துறையில் தனக்கென ஒரு பாணியை அமைத்து, இசையின் இனிமையை உள்வாங்கி இசையுணர்வினை அனுபவித்து, தான் பெற்ற இசையின்பத்தை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற உணர்வுடையவர். அவ்வுணர்வின் வெளிப்பாட்டுடன் இசையை கேட்போரும், இரசிப்போருகம் உன்னத நிலை அடையும் வண்ணம் இசையை இறையாக எண்ணிவாழ்ந்தவர். அவருக்கு நிகர் அவரே தான் எனில் மிகையில்லை.
மரபு தவறாத சம்பிதாய சங்கீதத்தை தன் வயலின் இசை மூலம் பல அரங்குகளில் அரங்கேற்றியுள்ளார். இவர் சரீர வளமும், சாரீர வளமும் கொண்டு தனது வயலினிசையால் இசைநுட்பம் தெரியாத பாமரரையும் வயலினிசையோடு இணைத்து, மெய்மறக்க செய்து இரசிப்போருக்கு சுகானுபவத்தை உயிரோட்டமாக அனுபவிக்க செய்வது சிறப்பம்சமாகும்.
வழித்தோற்றலின் தோற்றம்
விஸ்வகர்ம குலத்தோன்றலாக கிருஸ்ணசாமி மங்களம்மா தம்பதியினரின் அருந்தவ முதற் புத்திரனாக உயர்திரு. பத்மநாதன் அவர்கள் 1950ஆம் ஆண்டு ஆடி மாதம் 28ஆம் திகதி பிறந்தார்;. தந்தையின் வழிநடத்தலில் லலித கலை கலாசாரத்தில் முக்கியமான ஆபரண உருவ வேலைகளில் பத்மநாதன் சிறந்த பாண்டித்தியம் பெற்றிருந்தார். இவர் மூன்று தங்கைமார்களாக கலாமணிதேவி, நிர்மலாதேவி, பகவதி ஆகியோரை மூத்தவர்களாக கொண்டு நான்காவது புதல்வ னாக பிறந்து வளர்ந்தார். இவருக்கு அடுத்து தங்கையாக கணேஸ்வரி, அடுத்து மூன்று தம்பிமார்களாக சிவகுருநாதன், செல்வநாதன், சாந்தசற்குண நாதன் ஆகிய சகோதரர்களையுடையவர்.
கல்வியும் தொழிலும்
தனது ஆரம்பக்கல்வியை முதன்முதலில் பேரன் பேத்தியின் ஆசியுடன் தாய், தந்தையிடம் ஆரம்பித்தார்;. பாடசாலைக் கல்வியை யாழ் கொக்குவில் இந்து ஆரம்பபாடசாலையில் பயின்றார். அங்கு தரம் ஒன்றிலிருந்து தரம் ஐந்துவரை கற்றார்.அதனையடுத்து தரம் ஆறு தொடக்கம் உயர்தர வகுப்பினை யாழ் கொக்குவில் இந்து கல்லூரியில் கற்று வந்தார். அப்பாடசாலையில் இடம் பெற்ற கலை நிகழ்ச்சிகள், சமய நெறி விழாக்கள், குருபூஜை தின ஆராதனைகள் மற்றும் பாடசாலை விழாக்களிலும் ஏனைய பேச்சு போட்டி, சமய அறிவுப் போட்டி, விளையாட்டுப்போட்டிகளிலும் பங்கு கொண்டு சிறுவயதிலேயே இசைத்துறையை தனது குறிக்கோளாக எண்ணி செயற்பட்டார். அத்துடன் கவின் கலைகளான சங்கீதம், ஓவியம் மற்றும் சிற்ப கை வேலைகளில் அதி ஆர்வம் கொண்டிருந்தார். அவை தொடர்பான செயற் பாடுகளில் ஈடுபட்டு தனது ஆற்றலை வெளிக் கொணர் வதிலே முன்னின்று உழைத்தவர். அதன் பேறாக இளவயதிலேயே பல பாராட்டுதல்களை யும் பரிசுகளையும் பெற்றுள்ளார். 
இவர் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கற்று ஆசிரியருக்கான இசையறிவையும் பயிற்றும் திறனையும் கண்டு கலாசாலை விரிவுரையாளர் மெச்சுமளவிற்கு 1981ஆம் ஆண்டு தொடக்கம் 1983ம் ஆண்டு வரை இசைத்துறையில் பயிற்றப்பட்ட ஆசிரியர் தரத்தினை பூர்த்தி செய்து கொண்டு மீண்டும் 1984 இல் நுவரெலியா கல்லூரியிலே கடமையாற்றி பல சாதனைகளை நிலை நாட்டிக் கொண்டவர். 
1986ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சன்மார்க்க வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று நாட்டின் புலம் பெயர்வு போர் காலச் சூழலலின் நிமித்தம் பல இன்னல்களையும் சந்தித்து, தனது சேவையை முழு விருப்புடன் தொடர்ந்தார். 1986ம் ஆண்டின்  நடுப்பகுதியிலேயே இணுவில் சைவ மகாஜனா மத்திய மகா வித்தியாலயத்திலலும், 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் ஆசிரிய சேவையை தொடர்ந்தார். யாழ் இந்துவில் இசை ஆசிரியராக பாட இணைப்பாளராகவும் பகுதித் தலைவராகவும் பல்வேறு சேவைகளை ஆற்றி மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் நிரந்தர இடத்தைப் பெற்றுக் கொண்டவர். 1977 ஆம் ஆண்டு அரச தொழில் ஆசிரிய நியமனம் பெற்று நுவரெலியா பரிசுத்த திரித்துவக் கல்லூரியிலே 1980ம் ஆண்டு வரை இசை ஆசிரியராக திறம்பட கடமையாற்றினார். 
இல் வாழ்க்கை நன்நெறி
அமரர்  பத்மநாதன் அவர்கள் 1979ஆம் ஆண்டில் தனது இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார். இசையின் பூர்வீக கிராமமான அளவையூரில் வாழ்ந்த விஸ்வ ஸ்ரீ சிவசாமி பத்தர் புவனேஸ்வரி தம்பதியினரின் ஏக புத்திரியும் செம்பொற் சோதியின் அன்பு தங்கையான சுலோஜினி தேவியை  1979 ஆம் ஆண்டு மாசி மாதம் 09 ஆம் திகதி வாழ்க்கை துணையாக ஏற்று நல்லறம் நடத்தி வாழ்ந்தவர். இவர் தன் இசைத் திறனோடு இல்லறத் துணைவியாNhhடு வாழ்ந்த வாழ்க்கையின் பேறாக “ஷண்முக” வடிவங்களாக ஆறு குழந்தைச் செல்வங் களைப் பெற்றெடுத்தார். பத்மநாதனின் இசைப் பணிக்கு பெருந்துணை யாக இருந்தவர்; பத்மநாதன் அவர்கள் இசையும் அதில் வெற்றியும் தனது பிள்ளைகளின் எதிர்காலம் என்பதை கணித்தார். அதில் கவனம் செலுத்த தீர்மானித்து தனது பிள்ளைகளை பண்பும் ஆற்றலும் மேன்மை பெற சிறந்த வழிவகைகளை அமைத்து அறத்தின் வழி வளர்த்தெடுத்தார்.
இவருடைய மூத்த புதல்வன் சியாமகிருஸ்ணா இசை ஞானமும், கலையாற்றலும் இயற்கையாகவே கொண்டு விளங்குபவர். இவர் தற்போது  வயலின் வித்துவானாகவும், மிருதங்க வித்துவானாகவும் ஈழத்தில் இளம் கலையுலகில் சிறந்த கலைஞனாக திகழ்கின்றார். 
பத்மநாதன் அவர்கள் தனது ஆறு பிள்ளைகளையும் தனது குருநாதரான பிரம்ம ஸ்ரீ சர்வோஸ்வரசர்மாவின் ஆசியுடன் தானே குருவாக இருந்து வயலின் இசை யினைக்கற்றுக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது இவரின் பேரக் குழந்தை களும் இசை ஆற்றல் கொண்டு திகழ வைத்து கலை தன்னுடன் நின்றுவிடாது தனதுபிள்ளைகள் மூலம் கலைத்தொடர்ச்சியை ஏஙற்படுத்தியுள்ளார். 
இசைக்கலைஞனாய் பத்மநாதன் 
1976ஆம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 27ஆம் திகதி வயலின் அரங்கேற்றம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. இவரது அரங்கேற்ற நிகழ்வானது இவரது சகோதரனாகிய கி. சிவகுருநாதன் மிருதங்க வித்வான் வே. அம்பலவாணர் அவர்களின் மாணவன். மிருதங்க வாத்தியம் வாசிக்க இருவருக்கும் அரங்கேற்ற நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடதக்கது.  அரங்கேற்றத்தில் திரு. வு. தங்கராசா (புவியியல் ஆசிரியர்), சங்கீதபூஷணம் வு. இராசலிங்கம் (அதிபர், யாழ் ரசிக ரஞ்சனாசபா), திரு. இராம குமாரசாமி (டீ.யு டிப்ளோமா சங்கீதம்), திரு. ளு.பரம்தில்லைராசா ( ஆ,யு.டிப்ளோமா ), திருமதி சரஸ்வதி பாக்கியராசா (சங்கீத விரிவுரையாளர்), சங்கீதபூஷணம்  யு.ளு இராமநாதன் (மிருதங்கம் பேராசிரியர்), சங்கீதபூஷணம் பொன் சுந்தரலிங்கம் (இசைப் பேராசிரியர்) ஆகியோர் ஆசியுரைகள் வழங்கி வாழ்த்தினர் என்பது சிறப்பு அம்சமாகும். 
மேலும,; இசைக்கச்சேரியில் வித்துவான் ஸ்ரீ க. இராமநாதன் அவர்கள் பாட்டும், கரவேக சுரஞானகேசரி திரு. மு. கணேசபிள்ளை கெஞ்சிரா, சங்கீத ரத்தினம் அ. ரகுநாதன் கடம் வாசித்தும் விழாவை மெருகூட்டி சிறப்பித்தனர். 
இவரின் இசை வாழ்க்கை ஏழாவது வயது பராயத்திலே ஆரம்பித்துவிட்டது. இசையோடு தன்னை இணைத்து இசையே தனது வாழ்க்கை என எண்ணிய பத்மநாதன் அவர்கள் கல்வித் துறையினை சிறப்பாக பூரணப்படுத்திக் கொண்டு தனது விடாமுயற்சியாலும் அடக்கத்தினாலும் நல்ல பாதையை தேர்ந்தெடுத்தார். பத்மநாதன் அவர்களின் பெற்றோர் இவரிடம் இருந்த இசைத்திறனை அறிந்து இவருக்கு பலவாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கோடு தமதுகுல தெய்வமாம் வண்ணை ஸ்ரீ காமாட்ஸி அம்மாள்; ஆலயத்தில் வெள்ளி கிழமை தோறும் நடைபெறும் கூட்டுப்பிரார்த்தனையிலும், மார்கழி திருவெம்பாவைபஜனையிலும் , திருவிழாக்காலங்களில் தேவாரம் ஓதுவதற்;கும் வாய்ப்பளித்தனர். இது வழக்கமாக மாறியது மட்டுமல்லாமல் பரீட்சயமும் தேர்ச்சியும் அடையவழிவகை செய்தது.
2010ஆம் ஆண்டு இவரின் நெறிப்படுத்தலில் தனி இசைப்பிரிவு தேசிய ரீதியில் தங்கப்பதக்கத்தை யாழ் இந்துவிற்கு பெற்றுக் கொடுத்தமையும் அத்துடன் ஹற்றன் நாஸனல் வங்கியால் 2009ஆல் நடாத்திய “உலகை வெற்றி கொள்ளும் சிறுவர்கள்” எனும் இசை நிகழ்வில் தேசிய மட்டப் போட்டியில் 1ஆம் இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சித்திரப் பாட சங்கீத பாட ஆசிரியர்களை இணைத்து கவின் கலைமன்றத்தினை திருவாளர். கி. பத்மநாதன் அவர்கள் ஆரம்பித்து வருடாவருடம் சிறப்பாக “கவின் கலை விழா” முன்னெடுத்து வந்தார். மன்றத்தின் பொறுப்பாசிரியராக முன்னின்று அனைத்து செயற்பாட்டையும் செவ்வனே தயாரித்து முழுமூச்சாக ஒப்புவிக்கும் இசையாளன். 2005 ஆம் ஆண்டு “ தீம் தீம்” என்ற ஒலி இறுவட்டு கல்லூரி மாணவர்களைக் கொண்டு தயாரித்து வெளியிட்டு உலகெங்கும் இந்துவின் கீதம் ஒலிக்கச் செய்தார். இவ் இறுவட்டின் பாடல்களுக்கு தானே இசையமைத்தும் ஒழுங்கமைத்து தனது வயலினிசையால் மெருகூட்டி மகிழ்வடைந்தார். இது தனக்கு மறக்க முடியாத அனுபவமாக நோய்வாய்ப்பட்டிருந்த காலப்பகுதிகளிலும் கடைசி வரை இறுவட்டை கேட்டு மகிழ்ந்தவர். அத்துடன் கவின்கலை மன்றம் ஆரம்பித்து வைத்த மகிழ்வு ஒரு பக்கமிருக்க எப்பொழுதும் பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பேரவாகொண்டவர்.  
பங்குகொண்ட இசை கச்சேரிகளும் இசைப் பணியும் 
இவர் தனது வயலினிசையில் தனக்கென ஒரு பாணியை இசை அரங்குகளில் கையாள்வதோடு இவர் இசைத்த வயலினிசை பல பிரபல வித்துவான்களின் இசைக்கச்சேரியை மெருகுபடுத்தியதுடன் கச்சேரியை சோபிக்க வைத்தமை கண்கூடு. இவரது கச்சேரிகளின் ஆற்றுகையில் ஒவ்வொரு புதுமைகள் நிறைந்திருக்கும். கர்நாடக இசைக் கலைஞர்கள் மும்மூர்த்திகளின் அரும் படைப்புக்களை இசைக்கும் போது கைதட்டல் பெறுவதை இரண்டாம் பட்சமாக வைத்துக்கொண்டு அந்த மகான்கள் எச் சந்தர்ப்பத்தில் எத்தகைய உணர்வோடு பாடியிருக்கிறார்கள் என்பதனை தெரிந்து புரிந்துணர்ந்து அர்த்த புஸ்டியுடன் சாகித்திய பாவத்துடனும் பாடவோ வாசிக்கவோ வேண்டும் என்ற உணர்வு கொண்டே தனது வயலினிசை கச்சேரிகளை ஆற்றுகைப்படுத்துவது இவரிடம் காணப்படும் சிறப்பம்சம்.
இவர் தனது பக்கவாத்தியக் கலைஞர்களாக ஈழத்தில் சிறந்த மிருதங்க வித்வான் சி. துரைராஜா, மிருதங்க வித்வான். செல்வரட்ணம், கலாவித்தகர் க. நந்தகுமார், கலாவித்தகர். இ. பிரபாகரசர்மா, கலாவித்தகர். ரவிசங்கர், கலாவித்தகர் சியாமகிருஸ்ணா போன்ற கலைஞர்களை அணிசெய் கலைஞர்களாக கொண்டு தமது பணியை ஆத்ம திருப்தியுடன் ஆற்றினர். சுருதி சுத்தமும், ஸ்வரஸ்தான சுத்தம், லய, ராக பாவம் அனைத்திலும் சிறதும் பிசகாமல் மிகவும் இனிமையாக வயலின் இசையில் மழை பொழியும் போது குயிலின் ஓசை போல கணீர் என நாதமிசைப்பார். 
எமது நாட்டின் பிரபல வித்துவான்களான கலாபூஷணம் சு. கணபதிப்பிள்ளை, கலாபூஷணம் டு. திலகநாயகம் போல், கலாபூஸணம் நா.வி.மு. நவரட்ணம், கலாபூஷணம் பொன் சுந்தரலிங்கம், கலாபூஷணம். ஏ.மு .நடராசா,  கலாபூஷணம் சி.ஞானகுமாரி, கலாபூஷணம் வி. சிவஞானசேகரம், கலாபூஷணம். யு. கருணாகரன், கலாபூஷணம். சி. சிவஞானராசா, கலாபூஷணம்  குமாரசாமி, கலாவித்தகர் க. இராமநாதன் போன்ற பல இசைக்கலைஞர்களுக்கும், இளம்கலைஞர்களின் இசைக்கச்சேரிகளுக்கும் தனது வயலின் இசையால் அலகரித்தார். பல நாட்டிய மேடைகளையும், நாட்டிய, மிருதங்க அரங்கேற்றங்களுக்கும் வயலின் வாசித்து சிறப்பித்துள்ளார்.
இலங்கையில் பல இடங்களிலும் பல பிரபல ஆலயங்களிலும் இவர் வயலின் இசை ஒலிக்காத இடங்கள் இல்லை எனலாம்.
1. இலங்கை அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம்
2. அகில இலங்கை கம்பன் கழகம்
3. யாழ்ப்பாணம் ரசிக ரங்சனாசபா
4. அகில இலங்கை இளங்கலைஞர் மன்றம்
5. தெல்லிப்பளை கலா ரஞ்சனா சபா   
6. அளவெட்டி இசைக்கலை மன்றம்
7. வட இலங்கை சங்கீத சபை தற்பரானந்தம் கலையரங்கு 
8. காரைநகர் கிழவன்காடு கலாமன்றம்
9. சைவபரிபாலன சபை மன்றம்
10. தென்மாராட்சி இசை மன்றம்
11. நாவலர் கலாசார மண்டபம்
12. இணுவில் இளம் தொண்டர் சபை 
13. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்
14. அகில இலங்கை திருமுறை மன்றம்
15. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபம்
16. ஸ்ரீ துர்காதேவி மணிமண்டபம்
17. இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி
18. திருமறைக் கலா மன்றம்
19. திருநெல்வேலி சத்திய சாயி தேவா மண்டபம்
20. நடராஜா பரமேஸ்வரி மண்டபம் 
போன்ற கலை மன்றங்களில் 1974 தொடக்கம் 2016 வரை தனது இசைப்பணியை ஆற்றிவந்தவர்.  அவற்றுள் யாழ்ப்பாணம் ரசிக ரஞ்சனாசபா, அகில இலங்கை இளங்கலைஞர் மன்றம், காரைநகர் கிழவன்காடு கலாமன்றம், அகில இலங்கை திருமறை மன்றம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபம், கோப்பாய் கலா மன்றம் ஆகிய கலை மன்றங்களில் வயலின் இசைவகுப்புக்களை நடத்தி மாணவர்களுக்கு  இசை ஆர்வத்தையூட்டியவர்.
வழங்கப்பட்ட விருதுகளும் கௌரவங்களும்
இசைப் புலமையாளார்கள் மேன்மேலும் வளர்ந்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருப்பதற்கும், பணியாற்றுவதற்கும்;, பாராட்டுதல்களும், ஊக்குவிப்பு வாய்ப்புகள் மிக மிக அவசியமானதொன்றாகும். இவ்வாறே கலாபூஷணம் அமரர் இ.பத்மநாதன் அவர்கள் தனது பட்ட படிப்பை முடிப்பதற்கு முன்னரே ஈழத்தின் இசையில் தொடர்;புபட்டிருந்தார். வயலினிசை கற்றும் காலப்பகுதியான 1974ஆம் ஆண்டு இலங்கை நான்காவது அனைத்துலக தழிழாராச்சி மாநாடு கலை விழாவில் கலந்து வயலினிசை வழங்கிய பத்மநாதன் அவர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். 
1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்பட்ட ஆசிரியதரப் பரீட்சையில் சித்தியடைந்தமையை உறுதி செய்து “சங்கீத கலா வித்தகர்” 
2010ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ‘Sri Lanka festival of music , dance speech’ தேசிய நிறுவனத்தின் போட்டி பரிசில் விழாவில் பங்கு கொண்டு இடத்தைப் பெற்றமைக்கு பாராட்டி கௌரவ பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 
வட மாகாணம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இசைப் பெருவிழா  2011 ஆம் ஆண்டு ஆளுநர் நல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு நல்லூர் சைவ மகா சபை நடாத்துகின்ற தெய்வீக தொடர் இசைப் பேருரையின் பூர்த்தி விழாவில் கான கதா வாதிரி பிரம்ம ஸ்ரீ . சிவ.வை. நித்தியானந்தசர்மா அவர்களால் “சப்த ஸ்வர ஞான பூபதி” எனும் சிறப்புப்பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டு “கலா பூஷணம்”  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி ‘சிவாகம ஞானி’  ஸ்கந்த சாம்ப சிவாச்சாரியார் அவர்களின் ஞாபகார்த்த ஆன்மீகப் பெருவிழாவில் கிருஸ்ணசாமி பத்மநாதன் அவர்களின் சமய, சமூக கலைப் பணிகளைப் பாரர்டி பொன்னாடை போர்த்தி “ இசை ஞான மணி” என்னம் சிறப்புப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதேச கலாசாரப் பேரவையினால் யாழ்ப்பாணத்தின் மூத்த கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2014 ஆம் ஆண்டு திருமறைக்கலா

 மன்ற மண்டபத்திலே இடம் பெற்ற போது பத்மநாதனின் இசைத்துறைப் பணியை கௌரவித்து “ யாழ்ரத்னா” விருது வழங்கப்பட்டது. 

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நல்லூர் சைவ மகாசபையினரின் இசைப் பெருவிழா எடுத்துக் கொண்டாடப்பட்டு “ வயலின் வித்துவ சிரோமணி” என்ற சிறப்பு விருதும் பதக்கமும் அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தி கௌரவித்தனர். 
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சேவையாற்றி ஓய்வு பெற்ற சிறந்த இசையாசிரியர் கௌரவ பட்டத்தை கல்லூரியில் 125 வது ஆண்டு நிறைவு விழாவின் போது பாராட்டி கௌரவித்தனர்.  
தமது சேவைகளை சிறப்பாகவும் தன்னலம் பாராது வயலினிசையால் இசையுலகை அலங்கரித்து வந்த கலாபூஷணம் கி. பத்மநாதன் அவர்கள் பல சிறப்பு பட்டங்களையும், கௌரவ விருதுகளையும் பெற்று எம் ஈழத்தமிழ் இசைக்கு பெருமை சேர்த்த சிறந்த வித்துவான். இவரது புகழ் மங்காது ‘மறைந்தும் மறையா புகழாளனாய்’ விளங்கும் இக்கலைஞன் 2017.07.22ஆம் நாள் கலையுலகை வாழ்வை நீத்து இறைவடி சேர்ந்தார். 
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!