Saturday, October 11

சற்சொரூபவதி  நாதன் 

0
இலங்கையில் 40 ஆண்டு காலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கியவர். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டில் என்னுமிடத்தில் 1937.03.06ஆம் நாள் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பெற்று அறிவியல் பட்டதாரியானார். பின்னர் பௌத்த மகளிர் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியையாக பணியாற்றினார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்
ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர்; தனது ஒலிபரப்புத்துறை வாழ்க்கையை ஒரு பகுதி நேர அறிவிப்பாளராக 1965இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆரம்பித்தார். 1969இல் நிரந்த அறிவிப்பாளரான அவர், தொடர்ந்து பல பதவிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வகித்திருக்கின்றார்.
1965ல் ஒலிபரப்புத்துறையில் இணைந்து கொண்டு அறிவிப்பாளரானார். 1979 இல் முதலாம் தர செய்தி அறிவிப்பாளரானார். பின்னர் ஆங்கில சேவையின் பதில் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும், செய்தி ஆசிரியராகவும், கல்விச் சேவையில் முறைசாராக் கல்வி நிகழ்ச்சிப் பொறுப்பாளராகவும் பல பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
சற்சொரூபவதி நாதன் பன்முக புலமை கொண்ட ஒர் ஒலிபரப்பாளர். செய்திகள் வாசிப்பில் உச்ச புகழைப் பெற்றிருந்த அவர்; கலை, கலாசார விடயங்களிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். சமய பக்தராகவும் இருந்தார். நாடகத்துறை, பூவையர் பூங்கா, பாடசாலை மாணவர் கல்வி நிகழ்ச்சி என்பனவற்றோடு, ‘கலைக்கோலம்” சஞ்சிகை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். பல வானொலி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதலாவது பெண் துணைத் தலைவராக இருந்தமை பலருக்கு தெரியாது .இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன .
இலங்கையில் செய்தி வாசிப்பு துறையிலும், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பிலும் சிறந்து விளங்கிய  இவர்  இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்படும் ஒலிபரப்பாளராக அவர் இறுதிவரை திகழ்ந்தார். வானொலி செய்தி வாசிப்பில் பல தசாப்த காலம் தனக்கென தனியிடத்தை வகித்து, நேயர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்த ஒருவரே செல்வி சற்சொரூபவதி நாதன்.அவர்களே ஆவார் . பெண் அறிவிப்பாளர்களில் செந்தில் மணி மயில் வாகனத்தின் பின்னர் சற்சொரூபவதி நாதனின் வருகை அமைந்தது, பல மாற்றங்களை செய்தி வாசிப்புத்துரை சார்ந்த பல முன்னேற்றங்களைக் கண்டது .
ஆனந்தி சூரியப்பிரஹாசம்,புவன லோஜினி வேலுப்பிள்ளை,யோகா தில்லைநாதன்,கோகிலா சிவராஜா ஆகியோர் சற்சொரூபவதியின் பின்னரே பணியாற்றத் தொடங்கினர். பின்னர் ராஜேஸ்வரி சண்முகம்,விசாலாட்சி ஹமீது, விமலேஸ்வரி இந்திரன், ஆமீனா பேகம் என்று மெருகேறத் தொடங்கியது. ஆண்அறிவிப்பாளர்களுக்கு மத்தியில்  களமாடிய செய்தித் துறைக்குள் நுழைந்து தனக்கென்று ஒரு  தனிச் சிறப்பை ஏற்படுத்தியவர் இவரது ஆங்கில அறிவு சகலஅறிவிப்பாளரை விட  செறிவானது ,இவரது சொல்லாட்சி உச்சரிப்புக்கு இவருக்கு நிகர் இவரே.
இந்த இடத்தில் மிகவும் முக்கியமானது சானாவின் பாசறையில் வளர்ந்தவர்.லண்டன் கந்தையாவில் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர். இவரது மேடைப்பேச்சு எல்லோரையும் கவரும் .இவரது மேடைப் பேச்சை செவி மடுத்த தமிழ் தேசிய சேவையின் பிரதான பொறுப்பாளர் கே.எஸ்.நடராசாவைக் கவர்ந்து விட வானொலி அறிவிப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார் அறிவிப்பாளராக சேவை செய்தபொழுதும் மகளிர் சஞ்சிகை,உரைச்சித்திரம்,நேர்காணல்கள் கல்விச்சேவை என்று இன்னோரன்ன பணிகளில் அகலக் கால் பதித்து  நிமிர்ந்து நின்றவர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றிய காலங்களில் நன்மதிப்புடனும் சேவை மனப்பாங்குடனும் செயற்பட்டவர். செய்திகள் வாசிப்பில் அவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அவரது கணீரென்ற குரலை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் உருவாகியிருந்தது.
சற்சொரூபவதி நாதனின் இனிமையான குரல் காற்றிலே பரவி வரும்போது, ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றது என்ற நிலையே ஒரு காலத்தில் இருந்தது. நாட்டு நடப்புகளை அறிவதற்கு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் தவிர எந்த விதமான ஊடகங்களும் இல்லாத அந்த கால கட்டத்தில் சற்சொரூபவதி நாதனின் செய்தி வாசிப்பில் தனியானதொரு பாணி இருந்தது. ஒலிபரப்புத் துறைக்குள் நுழையும் தமிழ், முஸ்லிம் அறிவிப்பாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பை பலரும் இன்று நன்றியுடன் நினைவு கூருகின்றனர்
உண்டாவிருது 
முதலில் பெற்றவர் திரு.எஸ்.கே. பரராஜசிங்கம் என்றால், அவரை அடுத்து ‘உண்டா’ விருதினைப் பெற்ற பெருமைக்குரியவர் சற்சொரூபவதியே  ஆவார். இவருக்கு வழங்கப்பட்ட ஏனைய கௌரவங்கள் வருமாறு.
ஜவகர்லால் நேரு விருது (1958)
சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது (1995)
ஒலிபரப்பாளருக்கான ‘உண்டா’ விருது (1992)
இந்து கலாசார அமைப்பின் தொடர்பியல் வித்தகர் விருது (1993)
வானொலி பவள விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தேசிய விருது
யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சகலகலாவித்தகி விருது
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சான்றோர் விருது (2012)
 பல பெருமைகளைப் பெற்ற இவ் வானொலி ஊடகவியலாளர் மே 4, 2017 அன்று தனது 80 ஆவது அகவையில் காலமானார். 
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!