அறிமுகம்
நடிகன், எழுத்தளன், நெறியாளன், அண்ணாவியார், கூத்திசைப்போன் என கூத்திலும் நாடகத்திலும் எந்நேரமும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த கலைஞர் அருட்பிரகாசம் அவர்கள் கலைத்தாயின் புதல்வனாக பாசையூரில் வாழ்ந்தவர். யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராம்; யாழ்ப்பாணத்தின் பாவலர்கள் நிறைந்த பூமியாகிய நெய்தல் நிலத்தில் கூத்தும் ஆட்டமும் பாட்டும் என எந்நேரமும் கலைமலிந்த பூமியாக திகழும் பாசெய்யூரில் முடியப்பு தம்பதியரின் புதல்வனாக அருட்பிரகாசம் அவர்கள் 1944-10-07ஆம் நாள் பிறந்தார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கூத்துக்கலையைப் பேணி வருகின்ற கலைப்பாரம் பரியக் கிராமமாகிய பாஷையூர்க் கிராமத்திற்கு கலைத்தொடர்ச்சியை ஏற்படுத்தி நிற்கின்ற அண்ணாவியாராக மு.அருட்பிரகாசம் அவர்கள் விளங்கிய வர். அண்ணாவியாரவர்கள் ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் ‘கலைஅலை” என்றால் அது மிகையாகாது. எத்தகைய இயலாமையிலும், நோயோடு போராடிக் கொண்டிருந்தாலும் அரங்கோடு தன்னை இணைத்து இயங்கிக் கொண்டிருப்பவர்.
அண்ணாவியாராக அருட்பிரகாசம் அவர்கள்
பாஷையூரில் பிறந்த அண்ணாவியாரவர்கள் தனது எட்டு வயதில் இருந்தே நாடகம், கூத்துக்களில் நடிக்கத் தெடாங்கியவர். அண்ணாவியார்களான பஸ்தியாம் பிள்ளை, சி.அந்தோனி, சேத்துரை துரைசாமி, சரவணபவானந்தன், வ.அல்பிறட், யோ.பாக்கியன், பிலிப்பையா, சின்னத்துரை போன்ற பாண்டித்தியம் பெற்ற அண்ணாவிமார்களின் கூத்துக்களில் நடித்து பட்டை தீட்டி ஒளிர்ந்தவர். ஆரம்பத்தில் துணை நடிகனாக நடித்தார். பின்னர் பிரதான பாத்திரங்களையேற்று நடிக்க ஆரம்பித்தார். அவரது ஆர்வமேலீட்டால் நடிப்பில் ஆழமான அனுபத்தினைப் பெற்று கூத்தின் மரபை குறையறக் கற்றவர். கூத்தினை நெறிப்படுத்த வல்லவராக மாறினார். அவருடைய நெறியாளுகையின் ஆளுமை படிப்படியாக எழுதத்தூண்டி கூத்துக்களை எழுதி தயாரிப்பாளராகவும் நெறிப்படுத்துனராகவும் மாறினார். அத்தகை முயற்சிகளின் பால் தன்னை இணைத்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்ற அண்ணாவியார் தன் இறுதி மூச்சு வரை கூத்திற்காகவும் அரங்கிற்காகவும் அர்ப்பணித்தார்.
தனது எட்டு வயதில் கூத்துக்கலையில் கால் பதித்தவர். 1952ஆம் ஆண்டு ஞானசௌந்தரி நாட்டுக்கூத்தில் சேனாதிபதியாக நடித்ததன் மூலம் கலைப்பிரவேசம் உருவானது. 1956களில் பிரகாஸ் நாடக மன்றத்தால் மேடையேற்றப்பட்ட மணிமகுடம் நாடகத்தில் மலைச்சாமி வேடத்தில் தோன்றினார். இதன் பின்னர் சாம்பிராட் அசோகன் நாடகத்தில் சாம்பிராட் அசோகனாக நடித்து வடக்?கு மாகாண சனசமூகங்களுக்கிடையிலான நாடகப் போட்டியில் முதற்பரிசினைப் பெற்றுக்கொண்டார். 1958ஆம் ஆண்டு தனது பதின்னான்காவது வயதில் அருள் என்ற பெயரில் நாடகமன்றமொன்னை உருவாக்கினார். இம்மன்றத்தினூடாக பல நாடகங்களையும் கூத்துக்களையும் நெறியாளுகை செய்து அரங்கேற்றினார். 1975களில் உடுத்துறை ஆழியவளை கலைமகள் நாடக மன்றம், உடுத்துறை முரசொலி கலைமன்றம் ஆகியவற்றில் இணைந்து கலைப்பணியாற்றினார். 2024ஆம் ஆண்டு நல்லூர் கலாசாரப் பேரவையின் சார்பில் சங்கிலியன் நாட்டுக்கூத்தினை அரங்கேற்றினார்.
கூத்துக்கலை மரபில் குறிப்பாக யாழ்ப்பாணத் தென்மோடி நாட்டுக்கூத்து மரபில் அண்ணாவியார் அமரர் அருட்பிரகாசம் அவர்கள் தனக்கென தனித்துவமான முத்திரை பதித்தவர். கூத்தின் பாடல்களை உணர்வு தொனிக்கப்பாடுதல், அவ்வுணர்வுகளுக்கு ஏற்ப ஆட்ட அசைவுகள், நிலைகள் என்பவற்றை மிக லாவகமாகத் தோற்றுவித்தல், வசனங்களை உரிய ஏற்ற இறக்கங்களுடன் ஒப்புவித்தல், பாத்திரப் பண்பை நடிப்பிலும் பாடலிலும் நேர்த்தியாகக் கொண்டு வருதல் என பாரம்பரிய கூத்துமறைமையில் இருந்து வேறுபட்டு தனக்கென தனித்துவமான நடிப்பாளுமையை கொண்டிருப்பது முதல் அதனை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கும் ஆளுமையாகத் திகழ்ந்தவர்.
இவர் அண்ணாவியம் செய்த நாடகங்கள், கூத்துக்கள் கட்டிறுக்கம்மிக்கவை யாகவும் ஆரம்பம், வளர்ச்சி, உச்சம், முடிவு என்னும் நாடகங்களின் வளிர்ச்சி நிலைகளை தமக்குள் கொண்டிருப்பதனை காணமுடிவதுடன் ஒரு கதையைமிக வும் எளிமைப்படுத்தி கூத்துமரபுக்கூடாகச் சொல்லக்கூடிய சிறப்பாளுமை இவருடைய தனித்துவமாகும். இத்தகைய நெறியாக்கத்தின் அரங்கப்பாடங்களா கவே அவரது கூத்தின் எழுத்துருக்கள் அமைந்திருக்கின்றன.
அண்ணாவியார் அருட்பிரகாசம் அவர்கள் இருபத்துநான்கு கூத்துக்களையும் இரண்டு காவியங்களையும் எழுதியுள்ளார். கூத்து இராகங்களையும் ஆட்டமுறை களையும் பார்சிவழி நாடகங்கள் எனப்படுகின்ற இசை நாடகத்தின் மெட்டுக் களையும் ஆற்றுகை முறையினையும் கலந்து பரீட்சார்த்த முறையில் உருவாக்கி கூத்திசை நாடகத்தினை அரங்கேற்றி வெற்றிகண்டுள்ளார். கூத்திசை என்னும் புதிய மரபினை அமரர் அருட்பிரகாசம் அவர்கள் உருவாக்கினார். இவ்வுருவாக்கம் தொடர்பாக கலையுலகில் ஏன் இன்னமும் பேசப்படவில்லை என்கின்ற ஒரு ஆதங்கம்; இங்கு எழுகின்றது.
நாட்டில் உருவான யுத்த சூழலால் மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து வாழும் சூழல் ஏற்பட்டது. அண்ணாவியாரவர்கள் இடம்பெயர்ந்து பூநகரி hநச்சிக்குடாவில் தற்காலிகமாக வாழ்ந்து வந்தார். இவ்வேளையில் பாi~யூர், நாவாந்துறை, குருநகர், மாதகல் போன்ற பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்த கலைஞர்களை ஒண்றினைத்து வளர்மதி கலாலயம் என்ற அமைப்பை உருவாக்கி பல நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றினார். 2002ஆம் ஆண்டு மீளவும் பாi~யூரில் குடியேறி பாஷையூர் புதுவையர் என்ற கலாமன்றத்தை உருவாக்கி கலைப்பணியாற்றினார். 1990களிலிருந்து நாட்டுக்கூத்துக்குப் பாடல்களை எழுத ஆரம்பித்தார்.
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி, கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியால யம், இணுவில் மத்திய கல்லூரி, பிரான்பற்று கலைமகள் வித்தியாலயம், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, சங்கானை சிவப்பிரகாச வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கூத்துப் பயிற்சி வழங்கியதுடன் அம் மாணவர்களைக் கொண்டு பல கூத்துக்களை நெறியாள்கை செய்து அரங்கேற்றி னார்.
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்.
கலைஞர்கள் வாழும்போதே போற்றப்படவேண்டியவர்கள். அவர்களின் அர்ப்பணிப்புமிகு கலைப்பணி போற்றப்படுவதால் கலை வளர்கின்றது. அவர்களும் திருப்ப்தி அடைகின்றனர். அந்த வகையில் அருட்பிரகாசம் அவர்களுக்கு ஏராளமான விருதுகள் வழங்கிப் போற்றப்பட்டவர். அமரர் அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் குறிப்பாக 2003ஆம் ஆண்டு பாஷையூர் உதயதாரகை கலைமன்றம் கூத்திசைப்பாவலன், 2004 இல் குமுழமுனை பங்கு புனித பொஸ்கோ இளைஞர் ஒன்றியம் கலைச்செல்வர், 2007இல் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக்கழகம் மரபுக்கலைச்சுடர், 2008இல் யாழ்ப்பாணப் பிரதேச கலாசாரப்பேரவை யாழ்ரத்னா, 2009இல் கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூ~ணம், 2014இல் வடக்கு மாகாண முதலமைச்சர் விருது, 2003இல் இலக்கியப்பேரவை மணிமேகலை நாட்டுக்கூத்து நூலுக்கு இலக்கியச் சான்றிதழ், 2012இல் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் மாவீரன் சங்கிலியன் நாட்டுக்கூத்து நூலுக்கு தமிழியல் விருது ஆகிய விருதுகளும் கௌரவங்களும் வழங்கி போற்றப்பட்டவர்.