Tuesday, October 7

சிவபாதம் ஐயாத்துரை, மிருதங்க வித்துவான் – அளவெட்டி.

0

யாழ்ப்பாணம் அளவெட்டி என்னும் ஊரில் இசைப் பாரம்பரியமிக்கதொரு குடும்பத்தில் கரகத்திலகம் மு. ஐயாத்துரை ராசம்மா தம்பதியரின்;; புதல்வனாக மிருதங்க வித்துவான் ஐயாத்துரை சிவபாதம் 1940-10-16 பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அளவெட்டி ஞானோதயா வித்தியா சாலையில் பயின்றார். இவரது தந்தை கரகத்தில் திறமை மிக்கவராக இருந்ததால் கரகத்திலகம் என்ற பட்டத்தை பெற்று பிரபல்யமாக வாழ்ந்து வந்தார். இவரும் தனது 13 வயதில் தந்தையின் கரகத்திற்கு மிருதங்கம் வாசித்து பலரது பாராட்டுகளைப் பெற்றார்.

இதன்பின் மிருதங்க கலையை முறையாகக் கற்க விரும்பி முதலில் மல்லாகம் ஆறுமுகம் என்பவரிடம் ஆரம்ப பாடத்தை கற்று 1957ஆம் ஆண்டு தனது 17வது வயதில் இந்தியாவிற்கு சென்று குறிஞ்சிஐயரிடமும் திருவாரூர் நாகராஜனிடமும் மேல்பாடங்களை கற்று கச்சேரிகளுக்கு வாசிக்கக்கூடிய திறமையோடு தாயகம் திரும்பினார். தாயகத்தில் ரீ.ரத்தினம் என்பவரிடம் நுணுக்கங்களைப் பயின்று மிருதங்கத்தில் மிகச் சிறந்த வித்துவானாகத் திகழ்ந்தார். 1960 ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற தவில் மேதை லயஞானகுபேரபூபதி வீ. தெட்சிணாமூர்த்தி என்பவரிடம் தவில் வாசிக்கவும் கற்றுக் கொண்டார். இவற்றினை விட கெஞ்சிரா, தபேலா, உடுக்கு கடம் போன்ற வாத்தியங்களையும் வாசிக்கும் திறமையினையும் பெற்றவரானார். மேலும் புராண நாடகங்கள,; காவடி, கரகம். இன்னிசை கச்சேரி, பண்ணிசை கச்சேரி, கர்நாடக கச்சேரி போன்ற எல்லாவற்றிற்கும் நுணுக்கமாக வாசித்து கலைஞர்களையும் உற்சாகப்படுத்தி ரசிகர்களையும் கவர்ந்து தனது திறமையை வெளிக்காட்டி பாராட்டுக்களைப் பெற்றார்.

பிரபல்யமான இந்திய கலைஞர்கள் சித்தூர் சுப்பிரமணியம், கல்யாண கிருஷ்ணபாகவதர், சந்நியா வந்தனம் சீனிவாஸ்ராஜ், மகாராஜபுரம் சந்தானம் தியாகராஜன,; தாரகாபுரம் சுந்தரராஜன் பண்ணிசைப் புலவர் ராஜசேகரன் ஆகியோர்க்கும் இலங்கை கலைஞர்கள் ஐயாக்கண்ணு தேசிகர், ஏகே கருணா கரன,; திலகநாயகம் போல், இசைப்புலவர் சண்முகரட்டினம், சண்முகராகவன,; பத்மலிங்கம,; பொன் சுந்தரலிங்கம், சரஸ்வதி பாக்கியராஜா, நேசபூபதி, வயலின் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் மிருதங்கம் வாசித்துள்ளார்.

நாடக கலைஞர் விவி.வைரமுத்து, வி.எம்.செல்வராஜா, எம் எம் மாரியப்பா, மாசிலாமணி, கன்னிகா பரமேஸ்வரி, ராமலட்சுமி, வில்லுப்பாட்டு கணபதிப் பிள்ளை அவர்களுக்கும் மிருதங்கம் வாசித்த பெருமையுடையவர். நாதஸ் வரக் கலைஞரான பி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை, எம்.கே.பத்மநாதன், எம்.பி பாலகிருஷ்ணன், கோண்டாவில் பால  கிருஷ்ணன், சகோதரர் கான மூர்த்தி, பஞ்சமூர்த்தி இந்தியா சத்தூர் கணேசன் போன்றவர்களுக்கும் தவில் வாசித்து பெருமை அடைந்துள்ளார். மற்றும் வயலின் ராதாகிருஷ்ணனோடு சேர்ந்து சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று லால்குடி ஜெயராமனின் சகோதரிகளின் வீணை கச்சேரிகளுக்கும் வாசித்து பெருமை அடைந்துள்ளார்.
1970ஆம் ஆண்டு பார்வதி என்ற பாடகியை திருமணம் செய்து அவரோடு சேர்ந்து பார்வதி சிவபாதம் என்ற பெயரில் பல கச்சேரிகள் செய்;தார். இவரது மனைவி பாடகியோடு நடிப்பு திறமையும் உள்ளதால் அரிச்சந்திர மயானகாண்டம் என்ற புராண நாடகத்தை பெண்கள் மட்டும் நடிக்க வேண்டும் என்று மனைவியை அரிச்சந்திரனாகவும் மற்றும் பெண்களையும் சேர்த்து பழக்கி பல மேடைகள் ஏற்றி பாராட்டுகள் பெற்றார்.

1978ஆம் ஆண்டு இலங்கை வானொலியிலும் பெருமைமிகு கலைஞராக லயவிஞ்ஞாசம், தாள வாத்தியக்கச்சேரி இதைவிட ரூபாவாகினி தொலைக்காட்சி சேவையில் தனது கலை நிகழ்வுகளை வழங்கினார். இந்த நாளில் மனைவி பார்வதி சிவபாதம் வானொலியில் பல பாடல்களை பாடி இருக்கின்றார். சிறு பிள்ளை களுக்கு காவடி, கரகம் போன்ற கலைகளைப் பழக்கி ஆவர்களையும் அரங்கேற்றி யுள்ளார்.1974ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்களால் லாய வாத்திய திலகம் என்ற பட்டத்தை பெற்று தனக்கென ஓர் தனி இடத்தை பெற்று பெருங் கலைஞர் ராக விளங்கினார். போர்க்காலச் சூழலால் 1993ஆம் ஆண்டு அளவெட்டியில் இருந்து இடம்பெயர்ந்து உரும்பிரா யிலிருந்து பின் 1994ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தார்;. தாயககலைப்பணியில் பங்கெடுத்தார்.

ஸ்கந்தபுரத்தில் பண்டிதர் பஞ்சாட்சரம் அவர்கள் பல்லியக்கலைமணி விருதினையும்,2004 ஆம் ஆண்டு கிளிநொச்சி கலாசாரப் பேரவை கலைச்சுடர் விருதினையும்,2008ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதும், 2015 ஆம் ஆண்டு முதலமைச்சர் விருதினையும் பெற்ற இக் கலைஞர் 1918ஆம் ஆண்டு ஆனி மாதம் இரண்டாம் தேதி இறைவனடி சேர்ந்தார். இக்கலைஞனின் கலை ஆளுமையைப் போற்றி யாழ்ப்பாணப்பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடம் தலைவணங்குகின்றது.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!