அறிமுகம்
யாழ்ப்பாணம் வேலணைப்பதியில் புகழ்பூத்த வில்லிசைக் கலைஞர் திரு சபா
சதாசிவம் இளவாலை பேபி தம்பதிகளின் மூத்த புதல்வனாக 1966-06-18ஆம் நாள் பிறந்தவர். தந்தையார் விவசாயத் திணைக்களத்தில் வேலை பார்த்தாலும் பரம்பரையாக கலை ஞானமுடையவர். வில்லிசைக்கலையில் ஈழத் தில் பிரபல்யம் பெற்றிருந்தவர். இத்தகைய கலைக்குடும்ப பின்னணியிலிருந்து கலையுல கில் உதித்தவர்தான் சதா வேல்மாறன். தனது ஆரம்பக் கலவியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ் பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். இவரது தந்தையார் இசைக்கலைஞனாக அதிலும் வில்லிசைக்கலைஞனாக வாழ்ந்தவர். இக்கலைஞானத்தோடு தன் ஒன்பதாவது வயதில் தந்தையாரிடம் மிருதங்கக் கலையை பழக ஆரம்பித்தார். பின்னர் வித்துவான் அம்பலவாணரிடம் கற்றுத் தேறினார். வித்துவானுடைய இறப்பினால் வித்துவான் மகேந்திரன் அவர்களிடம் மிருதங்கக் கலையை பரிபூரணமாக கற்றுத்தேறினார். மிருதங்கத் துடன் தபேலா என இருவாத்தியங் களிலும் தன்னை ஈடுபடுத்தி வேலணை பெருங்குளம் அம்பாள் சன்னிதியில் அரங்கேற்றம் செய்தார். உலகெங்கும் புகழ்பெற்ற இசைக்கலைஞனாக தாயகத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் ஆஸ்தான வித்துவானாக பின்னணிக் கலைஞனாக கலைத்துறை யில் தடம் பதித்தவர்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். இவர் வாழ்ந்த சூழல் இசைத்துறையில் எந்நேரமும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக் கும் இணுவையம் பதியாகும். இச்சூழலே வேல்மாறன் அவர்களை இசைத் துறையில் தடம் பதிக்க ஊன்று கோலானது. 1975ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தில் தன் தந்தையாரிடமும் 1976ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மிருதங்க வித்துவான் hநச்சிமார் கோயலடி அம்பலவாணர் அவர்களிடமும் பணின்றார். துரதிஸ்டவசமாக அம்பலவாணர் அவர்கள் இறைபதம் அடைந்தமையைத் தொடரந்து மிருதங்க வித்துவான் 1983ஆம் ஆண்டு மகேந்திரன் அவர்களிடம் கற்றுப் பின்னர் யாழ் அண்ணாமலை இசைத் தமிழ் மன்றத்தில் சங்கீத ரத்தினம் திரு எம்.சிதம்பரநாதன் அவர்களிடம் இசை நுணுக்கங்களை கற்றுத்தேறினார். 1989ஆம் ஆண்டு நல்லை ஆதினத்தில் சங்கீதவித்துவான் திரு இராமநாதன் அவர்களது பாட்டில் திரு பீஎஸ்.பிச்சையப்பாவினது வயலின் இசையில் இசைக்கலைமணி திரு கண்ணதாசனின் கடம் வாசிப்பில் திரு ஸ்ரீனிவாசனது முகர்சிங் இசையில் வேல்மாறன் மிருதங்கம் வாசித்து அரங்கேற்றத்தினை முழுமையாக்கினார்.
2000-04-09ஆம் நாள் திரமண பந்தத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். திருநாவுக்கரசு தம்பதியரின் மகளான கமலினி என்னும் மங்கையை கரம் பற்றி அதன் பயனாக சாருமதி, சாரங்கி என்னும் தமிழ்ப்பெயருடை பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களை கல்வியில் உயர வைத்து ஒரு தந்தையின் கடமையை செவ்வனே நிறைவேற்றினார்.
மிருதங்க கலைஞனாக வேல் மாறன்.
கலையால் பொருளாதாரம் பெருக்கும் இக்காலத்தில் தான் கற்ற கலையால் கலைஞானமுடையோரை உருவாக்கியது மட்டுமல்லாது பணத்தை அடிப்படை யாகக்கொண்டு தன் பயணிக்காத மாபெரும் கலைஞன். கலைக்காக தன்னை அர்ப்பணித்தார். கலைவணிகனாக ஒருபொழுதும் அவர் வாழ்ந்ததில்லை. இவர் தனது இயல்பான இசைஞானத்தினால் தனது ஏழாவது வயதில் தந்தையாரின் வில்லசை நிகழ்வுகளுக்கு மிருதங்கம் வாசித்து வந்தார். அத்துடன் மிருதங்கம் மட்டுமல்லாது தபேலா, கடம், கெஞ்சிரா, மலோடிக்கா போன்ற இசைக்கருவிகளை நுட்பமாக வாசிக்கும் ஆற்றல் பெற்றிருந்தவர். அக்காலத்தில் இத்தகைய கலைகணை பயிற்றுவிப்பதற்கு பொருத்தமன ஆசிரியர்கள் எவரும் இருந்திராத காலத்தில் இக்கருவிகளின் ஓசையை உணர்ந்து ஒலி நாடாக்களிலும், ஒளிநாடாக்களிலும் இருந்தும் மிருதங்க சொற்களை அடிப்படையாகக் கொண்டு தபேலா இசைக்கருவியை சிறப்பாக வாசிக்கும் ஆற்றலைப் பெற்றுக்கொண்டார்.
வேல்மாறன் அவர்கள் இவ் இசைக்கருவிகள் யாவற்றையும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிகச் சிறப்பாக வாசித்து கலையுலகில் தனக்கென்றொரு தனியிடத்தை நிலைநாட்டியவர். இவரால் இசை வழங்கப்பட்ட நிகழ்வுகளை எட்டு வகையாகப் பார்க்கலாம்.
1- கதாப்பிரசங்கம்.
2- வில்லிசை.
3- இசைநாடகங்கள்.
4- கர்நாடக இசைக் கச்சேரிகள்.
5- பண்ணிசைக் கச்சேரி.
6- மெல்லிசை நிகழ்வுகள்.
7- ஒலிப்பதிவு ஒளிப்பதிவு நாடாக்கள்.
8- அரங்கேற்றங்கள்.
இலங்கையின் பல இடங்களிலும் மிருதங்க இசையினை வழங்கியிருந்தாலும் இவர் அதிகமாக வாசித்த நிகழ்வு கலைஞர் திரு தமிழ்மணி சு.ப.கணேசசுந்தரன் அவர்களுடைய நிகழ்வுகளும் அவருடைய இணைப்பும் முதன்மையானதாகும்.
வேல்மாறன் வாசித்த வில்லிசை நிகழ்வுகளாக
1- யாழ்ப்பாணம் வேலணையூர் திரு சபா சதாசிவம் – அம்பிகை வில்லிசைக்குழு(தந்தையாருடையது)
2- கலைமாமணி திரு எஸ்.சோமஸ்கந்தசர்மா வில்லிசைக்குழு (ஸ்ரீதேவி வில்லிசைக்குழு)
3- திரு கணேசமூர்த்தி – நாச்சிமார் கோயிலடி இராஜன் வில்லிசைக்குழு.
4- திரு திருப்பூங்குடி ஆறுமுகம் – திருப்பூங்குடி ஆறுமுகம் வில்லசைக் குழு.
5- கலாவினோதன் திரு சின்னமணி – கலைவாணர் வில்லிசைக் குழு ஆகியவற்றிற்கும், நடிகமணி வி.வி.வைரமுத்து, கலாபூஷணம் திரு வி.என்.செல்வராசா, திரு சி.ரி.செல்வராசா திரு சின்னமணி ஆகிய இசைநாடகக் கலைஞர்களது ஆற்றுகைகளான சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திர மயானகாண்டம், பூதத்தம்பி, அல்லி அர்ச்சுனா ஆகிய இசை நாடகங்களுக்கும், இசைவாணர் கண்ணன் மாஸ்ரின் கண்ணன்கோஸ்டி, இசையமைப்பாளர் முரளி, றாஜன் இசைக்குழு, சப்தஸ்வரா இசைக்குழுவிலும் மிருதங்கம், தபேலா, கடம், கெஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசித்து சிறப்புப் பெற்றவர்.
அதுமட்டுன்றி ஏ.கே.கருணாகரன், எஸ்.பத்மலிங்கம், பொன் சுந்தரலிங்கம், எஸ்.குமாரசாமி, எஸ்.கணபதிப்பிள்ளை, பரமேஸ்வரி கணேசன், எஸ்.பாலசிங்கம், இராமநாதன், எல்.திலகநாயகம்போல் ஆகிய வாய்ப்பாட்டிசைக் கலைஞர்களது கச்சேரிகளில் மிருதங்க அணிசெய் கலைஞனாகவும் அ.ஜெயராமன், இராதக்கிருஸ்னன், கோபிதாஸ் போன்ற வயலின் வின்னர்களோடு இணைந்து மிருதங்கத்தினை கச்சேரிகளில் வாசித்து அணிசெய் கலைஞராக திகழ்ந்தார். பண்ணிசைக்கச்சேரிகளில் ந.வி.மு.நவரத்தினம், கே.ஆர்.எஸ்.திருஞானசம்பந்தன், எஸ்.சிவஞானசேகரம், எஸ்.தில்லைமணி, சிவஞானராஜா போன்ற கலைஞர் களினது கச்சேரிகளில் மிருதங்கம் வாசித்துச் சிறப்பித்துள்ளார். வடஇலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தராதரம் வரை கற்று மிருதங்கக் கலாவித்தகர் பட்டம் பெற்றார். இலங்கை வானொலி, இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் நிகழ்வுகளில் மிருதங்கம் வாசித்துப் பெருமை பெற்றவர்.
வேல்மாறன் அவர்கள் மிருதங’;கம், தபேலா, கடம் போன்ற இசைக்கருவிகளை கற்பிப்பதில் தனக்கென ஒரு நுட்பத்தினைக் கையாண்டு வந்தவர். இவர் 1989ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் hநச்சிமார் கோயிலடி வி.அம்பலவாணர் அவர்களது இல்லத்தில் செயற்பட்டு வந்த சரஸ்வதி கலைக் கல்லூரியில் நீண்ட காலமாக மிருதங்க இசையைக் கற்பித்து வந்தவர். யுத்தம் காரணமாக யாழ்ப்பாணமக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வன்னிப்பெருநிலப் பரப்பிற்கு இடம்பெயரவேண்டிய அபாயகர மான சூழல் உருவாகியவேளை சரஸ்வதி கலைக்கல்லூரியில் இருபத்தைந்திற்கு மேற்பட்ட மிருதங்கங்களையெல்லாம் கைவிட்டு பெரும் மன அவலத்தோடு கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தார். சகோதரன் திருமாறன் அண்ணனின் மனக்குழப்பத்தினை அறிந்து அத்தனை மிருதங்கத்தினையும் யாழ்ப்பாணத் திலிருந்து மீட்டு கிளிநொச்சியில் வேல்மாறன் வாழ்ந்த இடத்திற்கு கொண்டு சென்று கையளித்தார். இதனால் மகிழ்வுற்ற மாறன் கிளிநொச்சி கணேசபுரத்தில் மிருதங்க கலைபயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தினார். தொடர்ந்த இடம்பெயர்வுகளினால் பாதிப்புற்றாலும் மிருதங்க கலையை கற்பித்து வந்தார்.
மீண்டும் 2004ஆம் ஆண்டு தொடக்கம் தனது கலட்டி அம்மன் வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் விரலிசை பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவ்வாறானதொரு முறைமையின் ஊடாக மாணவர் பரம்பரை ஒன்றினை உருவாக்கினார.; குறிப்பாக தனது சகோதரன் திருமாறன், கலாவித்தகர் பிரபாகரசர்மா, கலாவித்தகர் நந்தகுமார், லண்டனில் வசித்து வருகின்ற கார்த்திகேயன், இராஜேஸ்வரன், கனடாவில் வசித்து வருகின்ற ரீ.நரேந்திரா, கலாவித்தகர் மற்றும் நுண்கலைமாணியான திரு வே.சிவமூர்த்தி போன்றோர் இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்களாவர்.
வழங்கப்பட்ட கௌரவங்கள்
கலைஞர்கள் வாழும்போதே போற்றப்படவேண்டியவர்கள். அவர்களது திறமை மதிக்கப்படவேண்டும். அந்த வகையில் விரலிசைக் கலைஞன் வேல்மாறன் அவர்களின் திமையினை நன்குணர்ந்த கலைஞர் பெருமக்கள் ஏற்றிப்போற்றினர் குறிப்பாக நடனப்பேராசான் வீரமணி ஐயரவர்களால் போற்றப்பட்டவர். ஆசி பெற்றவர். பிரம்மஸ்ரீ வீரமணி ஐயரவர்களால் லயநாத வித்தகர் என்னும் பட்டமும், பிரம்மஸ்ரீ நித்தியானந்தசர்மா அவர்களால் சகலகலாஞான வித்தகர் என்னும் விருதும் வழங்கி கலைஞனின் உச்த் திறனை போற்றி மகிழ்ந்தனர். இவற்றினை விட தாள இசை வித்தகர், லயஞானபோதன், சகலகலா வித்தகன், லயஞானபூபதி, மெல்லிசை லய வேந்தன் போன்ற பட்டங்களும் அறிஞர் பெருமக்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.
நோயுற்ற வேளையிலும் தான் கற்ற கலையை எம் சமூகம் பயனுறும் வகையில் செயற்படுத்திய அற்புதக் கலைஞனது ஆற்றலைப் போற்றி யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக் கலைக்கூடம் தலைவணங்குகின்றது. அவருடைய கலைப்பயணம் அவர் மாணவர்களால் என்றும் எடுத்துச்சொல்லும் வகையில் வாழ்ந்து 2021-09-18ஆம் நாள் கலையுலக வாழ்விலிருந்து விடைபெற்றார்.
Post Views: 21