
2002ஆம் ஆண்டு கிருபா சாரதிப் பயிற்சிப் பாடசாலை என்னும் பெயரில் தனது தொழில் நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று அதன் வளர்ச்சி கிருபா அவர்களது கடின உழைப்பால் வடமாகாணத்தில் அதி தரம் வாய்ந்த சாரதிப் பயிற்சிப் பாடசாலையாக நிமிர்ந்து நிற்கிறது. யாழ்ப்பாணம் மட்டுமன்றி இந் நிறுவனம் வவுனியா, கிளிநொச்சி மன்னார், முல்லைத்தீவு என வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ளதுடன் அனுராதபுரம் மற்றும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் கிளைகளை நிறுவி அதிசிறந்த சாரதிப் பயிற்சி பாடசாலையாக சிறப்புப் பெற்று நூற்றுக்குமேற்பட்ட ஊழியர்களை தன்னகத்தே கொண்டு
தாயகத்தில் வாழும் இளைஞர் யுவதிகளின் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொடுப்பதற்கான நம்பிக்கை நட்சத்திர நிறுவனமாக கிருபா சாரதி பயிற்சிப் பாடசாலை திகழ்கின்றது. மோட்டார் சயிக்கிள், கார், கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்குமான பயிற்சிய ளிப்பதுடன் அதற்கான சாரதி அனுமதிப் பத்திரத்தினை பெற்றுக்கொடுப்பதில் உறுதியும் நேர்மையும் நம்பிக்கையும் கொண்டவராக கிருபாகரன் அவர்கள் திகழ்ந்தார்.

தான் செய்யும் தொழிலுக்கூடாக ஈட்டுகின்ற வருமானத்தில் ஒரு வீதத்தினை யாவது பொதுப்பணிகளுக்குச் செலவிடவேண்டுமென்ற எண்ணம் உருவாகும் லட் சம்பேர்களில் ஒருவராக அழகசுந்தரம் கிருபாகரன் அவர்கள் முகிழ்த்தெழுந்தார்.
தன் வருமானத்தின் ஒருபகுதியினை கல்வி, கலை, விளையாட்டு மற்றும்
பொதுப் பணிகள் என அனைத்துத் தேவைகளுக்கும் நாடிவருவோர்க்கு இல்லை என்று சொல்லா மல் முடிந்தளவு உதவியை வழங்கி வருபவர். இவரது இத்தகைய மனப்பாங்கிற் காக நாட்டின் தலைவர்களளால் அதிஉயர் கௌரவம் வழங்கப்பட்டது. குறிப்பாக முன்னாள் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேன அவர்களாலும் நாட்டின் கௌரவம்மிக்க அமைச்சர்களாலும் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுடைய இவர் ஆன்மீகச் செயற்பாடுகளுக்கும் தனது உதவிக்கரத்தினை நீட்டியவர்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற அரச நிகழ்வுகளானாலும் சரி, பொதுமக்களது நிகழ்வுகளானா லும் சரி, பாடசாலைகளது நிகழ்வுகளானாலும் சரி கிருபா சாரதிப் பயிற்சிப் பாடசாலையின் பங்குபற்றல் இன்றி எந்தவொரு நிகழ்வுகளும்
நடைபெற்றது கிடையாது. சிறிதோ பெரிதோ தன்னாலான உதவியினை வழங்கி ஒவ்வொருவரது செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தி தட்டிக் கொடுக்கின்ற மனப்பக்குவமுடையவர்.

இவருடைய இத்தகைய பணிகளைப் போற்றும் வகையில் பல்வேறு நிறுவனங் களும் சமூகமட்ட அமைப்புகளும் விருதுகளை வழங்கி பாராட்டி னர். சமூகதில கம், கொடையருவி சமாதானதூது வர், கல்வி காருண்யன், சமூகமாமணி, சாரத்திய திலகம், கொடைஞானச்சுடர், தேசாபிமானி, தேசகீர்த்தி, சேவாஜோதி, தேசகீர்த்தி விருதுகள் இவரது சேவையினை கௌரவித்து அலங்கரித்தன.
குறித்த ஒரு விடயம் என்றில்லாமல்; அனைத்துச் சமூகத்தினரும் பயன்பெறும்
வகையில் தனது சேவை மனப்பாங்கினை கட்டமைத்து நிறைவேற்றி கண்ணியத் துடனும் கௌரவத்துடனும் வாழ்ந்து அனைவர் மனதிலும் என்றும் அழியாப்புகழ் பெற்ற அழகசுந்தரம் கிருபாகரன்; அவர்களுக்கு யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக்கலைக்கூடம் 2023ஆம் ஆண்டு “பணிநேயப்பரிதி” என்னும் விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுச்சேவையில் உதவிக்கரம் நீட்டும் உன்னத மனிதர்களில் ஒருவராக தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்த மகான் 2024-11-19ஆம் நாள் திடீரென ஏற்பட்ட சுகயீனத்தால் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார் என்பது ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். அன்னாரின் சேவையினை யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக் கலைக்கூடம் ஏற்றிப்போற்றித் தலைவணங்கி நிற்கின்றது.

