
சுவாமி அவர்கள் எல்லா மதத்தினருடனும் அன்பாக பழகி மதம் கடந்து மனித நேயத்தையும் மாண்பையும் அதிகமாக நேசித்து அனைத்து மக்களாலும் விரும்பப்படுபவராகவும் போற்றப்படுபவராகவும் தனது எளிமையான வாழ்வை வாழ்ந்திருந்தார். அத்துடன் சிறந்த மனித நேயப் பண்பாளரான இவர் ஈழத்தமிழர் வாழும் தேசந்தோறும் பல மாநாடுகளில் பங்குபற்றி மத விழுமியங்களோடு சமூக விழுமியங் களையும் பரப்பிய பெருமைக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர்; 01.05.2025; இறைவனடி சேர்ந்தார்.











