Monday, January 6

செஞ்சொற்செல்வர் சிவத்தமிழ்ஞாயிறு கலாநிதி ஆறு திருமுருகன்

0

அறிமுகம்

யாழ்ப்பாணம் சைவமும் தமிழும் தழைத்தோங்கி இசைமழை பொழியும் புண்ணிய பூமியாம் இணுவில் கிராமத்தில் 1961-05-28 ஆம் நாள் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட கந்தையா ஆறுமுகம் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சரஸ்வதி என்னும் ஆசிரிய தம்பதிகளுக்கு ஐந்தாவது புதல்வனாக வைகாசி விசாகத்தன்று பிறந்தார். 1967ஆம் ஆண்டு தனது ஆரம்பக்கல்வியை சேர் பொன் இராமநாதனவர்களால் உருவாக்கப்பபெற்ற, யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் கல்லூரியில் பயின்றார்.  1971ஆம் ஆண்டு தனது இடைநிலைக் கல்விக்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட இவர் 1980ஆம் ஆண்டு வரை தனது உயர் கல்வியினையும் அதே பாடசாலையில் கற்றார். இக்கல்லூரியிலிருந்து கலைத்துறைப்பட்டப்படிப்பிற்காக  1985ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

கல்விச் சேவையில்

பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து கலைப்பட்டதாரியாக வெளியேறிய இவர்  1989இல் யாழ்ப்பாணம் சுன்னாகம் திருஞானசம்பந் தர் வித்தியாசாலை ஆசிரியர் குழாமில் ஒருவராக கால் பதித்தார். தெதாடர்ந்து மகரகம தேசியகல்வி நிறுவகத்தில் 1995ஆம் ஆண்டு பட்டப்;பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறியை பூர்தி செய்தார். 1993ஆம் ஆண்டு சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் இணைந்து கொண்ட இவர் இப் பாடசாலையில் மாணவர்களை நெறிப்படுத்தி நல்லாசானாய் விளங்கினார். பாடசாலையின் சகல நிகழ்வுகளிலும் தன்னை இணைத் துச் செயற்பட்டது மட்டுமல்லாமல் கல்லூரியில் ஆசிரியர் என்பதற்கப் பால் பகுதித்தலைவராகவும் உபஅதிபர், பிரதி அதிபராகவும் பணியாற்றி வழங்கப் பட்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றினார். 16.03.2008ஆம் நாளிலிருந்து யாழ் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்று 28.05.2012ஆம் நாள் வரை அர்ப்பணிப்புமிகு அதிபராகக் கடமையாற்றினார். இத்தகைய அர்ப்பணிப்பு மிகு பணிகளுக்காக கல்விச்சேவையில் நல்லாசிரியராக யாழ் மாவட்ட கல்வித் திணைக்களத்தினால் 1991ஆம் ஆண்டு நல்லாசிரியருக்கான விருது  வழங்கிக்கௌரவிக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டு வலிகாமம் கல்வி வலயத்தினால் நல்லாசிரியருக்கான விருது வழங்கி கொளவிக்கப்பட்டார்.

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் அருட்கடாட்சம் பெற்ற ஆறுதிருமுருகனவர்கள் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களது அன்பையும் நன்மதிப்பினையும் பெற்றவர். அவரால் புடம் போடப்ட்டவர். அவரின் மறைவிற்குப் பின்னர் அவரின் நற்பேறு பெற்ற சீடராக தெல்லிநகர் துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தினை வழிநடத்தும் பேற்றினைப்பெற்றார். தேவஸ்தானத்தின் தலைவராக பொறுப் பினை யேற்றார். ஆன்மீகப்பணிக்காகவே தனது சேவைக்காலம் நிறைவுறுவ தற்கு முன்னராக அரச பணியினைத்துறந்து தெல்லிநகர் துர்க்கை அம்பாளின் பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர். இவருடைய தலைமைத்துவத்தில் தெல்லிநகர் துர்க்கை அம்பாள் ஆலயம் மேலும் பல மாற்றங்களையடைந்தது. குறிப்பாக திருமஞ்சம் இல்லாத குறைiயை நீக்கும் வகையில் மஞ்சத்திருவிழாவினை ஏற்படுத்தி புதிய மஞ்சம் ஒன்றினை உருவாக்கியளித்தார். அதுமட்டுமன்றி வடக்கு வாசலிலும், தெற்கு வாசலிலும் கோபுரங்களை அமைத்ததோடல்லாமல் காங்கேசன்துறை பிரதான வீதி முகப்பு நுழைவாயில் கோபுரம் அமைத்து துர்க்கை அம்பாளின் சிந்தனை அனைவர் மனதிலும் ஏற்படும் வகையிலான எழில்மிகு தோற்றத்தினை ஏற்படுத்திய பெருமை பெற்றார்.

சமய சமூக நிறுவனங்களில் வகிபாகங்கள்

  • தலைவர் – ஸ்ரீ துர்க்கா தேவஸ்தானம் தெல்லிப்பளை.
  • தலைவர் – துர்க்காபுரம் மகளிர் இல்லம், தெல்லிப்பளை.
  • தலைவர் – சிவபூமி அறக்கட்டளை ( ஸ்தாபகர்)
  • உபதலைவர் – அகில இலங்கை இந்துமாமன்றம்.
  • பொறுப்பாளர் – அகில இலங்கை இந்துமாமன்றம் யாழ் பிராந்திய அலுவலகம்.
  • உறுப்பினர் – நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன அறக்கட்டளை.
  • உபதலைவர் – திருக்கேதீஸ்வர திருப்பணிச்சபை.
  • அறக்கட்டளை உறுப்பினர் – அமெரிக்க ஹவாய் ஆதீனம், அளவெட்டி பசுபதீஸ்வரர் ஆலயம்.
  • பேச்சாளர் – அகில இலங்கை கம்பன் கழகம்.
  • பேரவை உறுப்பினர்-யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்(2008இல் இருந்து இன்று வரை)
  • உறுப்பினர் – யாழ் பல்கலைக்கழக கணக்காய்வு சபை. ( Council  nominee
  • சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசு நிதியம் உறுப்பினர் யாழ்.பல்கலைக்கழகம்.
  • உறுப்பினர் – பட்டப்பின் படிப்புகள் பீடம் யாழ்.பல்கலைக்கழகம். யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம். ( Council  nominee  )
  • Member – Ethics Committee, Faculty of Medicine, University of Jaffna.
  • உறுப்பினர்-ஆலோசனைக்குழு, வெளியீட்டுக்குழு, எதிர்கால திட்ட மிடற்கழு, சித்த மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
  • இயக்குனர் சபை உறுப்பினர் – கேன் புற்று நோய் காப்பகம், உடுவில்.
  • ஸ்தாபகர்-நிர்வாகசபைப் போகர்- இணுவில் அறிவாலயம் அரும்பொருட்காட்சியகம்.
  • போகர் – நல்லூர் இளங்கலைஞர் மன்றம்.
  • ஆயுட்கால உறுப்பினர் – சைவ பரிபாலன சபை.
  • ஆயுட்கால உறுப்பினர் – சைவ வித்தியா விருத்திச் சங்கம்.
  • உறுப்பினர் – யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம்.
  • உறுப்பினர் – யாழ்போதனா வைத்தியசாலை அபிவிருத்தி ஆலோசனைச்சபை.
  • போகர் – யாழ் / இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்.(தாய்ச்சங்கம்)
  • போஷகர் – யாழ் / இராமநாதன் கல்லூரி பழைய மாணவர் சங்கம்.
  • உறுப்பினர் – யாழ்/இந்துக்கல்லூரி முன்னாள் அதிபர் நினைவு அறக்கட்டளைச்சபை.
  • போகர் – தெல்லிப்பளை இந்து இளைஞர் மன்றம்.
  • போகர் – உடுவில் இந்து இளைஞர் மன்றம்.
  • பிரதம ஆசிரியர்-“அருள்ஒளி” ஆன்மீக சஞ்சிகை(வெளியீடு ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம்)
  • பிரதம ஆசிரியர் – “சிவபூமி” பத்திரிகை (வெளியீடு-சிவபூமி அறக்கட்டளை )
  • ஆசிரியர் குழு- “ இந்து ஒளி” அகில இலங்கை இந்துமாமன்றம்.

பெற்ற விருதுகளும் பாராட்டுக்களும்

1992 இவரது பெயருடன் நிரந்தரமாகவே சேர்ந்தமைந்த வகையில் “செஞ்சொற்செல்வர்” என்ற பட்டமும் திகழ்கிறது. இணுவில் கோண்டாவில் காரைக்கால் அம்மையார், சிவன் தேவஸ்தானத்தில் 1992 ஆம் ஆண்டு மகோற்சவ காலத்தின் போது “ சைவசமய மகிமைகள், பேருண்மைகள்  எனும் பொருள் பற்றி பன்னிரு கோணங்களில் தொடர் விரிவுரை நிகழ்த்தியதற்காக மேற்படி தேவஸ்தானத்தால் 1992 ஆகஸ்ட் 13 ஆம் திகதியன்று “ செஞ்சொற்செல்வர்” பட்டம் வழங்கப்பட்டது.

1993 திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம். 1993 ஆம் ஆண்டு ஆலய உற்சவ காலத்தில் தெய்வீக அருளுரை வழங்கிய திரு.ஆறு.திருமுகன் அவர்களுக்கு தலங்காவல் இளைஞர்களால் “ திருவருட்சீலன்” என்னும் பட்டம் வழங்கிக் கொரவிக்கப்பட்டது.

1994 சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் கோயிலில் 09.09.1994ல் இடம்பெற்ற மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பெரியபுராணம் தெய்வீக அருளுரை வழங்கியதற் காக மேற்படி ஆலய பரிபாலன சபையினரால் “அருளுரை வாரிதி” எனும் பட்டம் வழங்கிக் கொரவிக்கப்பட்டது.

1994 உடுவில் தெற்கு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது பெரிய புராண விரிவுரைகளை நிகழ்த்தியமையைப் பாராட்டி “கதாமிர்த சுரபி” எனும் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.

1994 சங்கானை மாவடி ஸ்ரீஞானவைரவர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெரியபுராண தெய்வீக சொற்பொழிவு ஆற்றியமையைப் பாராட்டி “சிவசுரபி” எனும பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1994 ஸ்ரீநாகவரத நாராயணர் தேவஸ்தான மகோற்சவ காலத்தில் தொடர் சொற்பொழிவு ஆற்றியமையை முன்னிட்டு “செஞ்சொற் சஞ்சீவி” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1999 கொழும்புத்துறை மன்றிலாடு பிள்ளையார் கோவில் நிர்வாக சபையினரால் “ செஞ்சொற் கொண்டல்” பட்டம் வழங்கப்பட்டது.

1999 இணுவில் பரராஜசேகர பிள்ளையார் தேவஸ்தானத்தால் “அருள்ஞானபூபதி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2000 கனடா வாழ் இணுவையூர் மக்கள் சார்பாக 2000 மே மாதம் 20ஆம் திகதி அன்று “ செந்தமிழ்ச் சைவவித்தகர்” பட்டம் வழங்கப்பட்டது.

2000 அறநெறி பிரச்சாரத்தின் மூலமும், செயல் மூலமும் சைவ சமய வளர்ச்சிக்கும், பண்பாட்டிற்கும் பல்லாண்டு காலமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆற்றி வருகின்ற பணியைப் பாராட்டும் முகமாக “அறநெறிச் செம்மல்” எனும் விருதினை லண்டன் சிவயோக நிர்வாகம் 29.04.2000 இல் வழங்கி வருகின்றது.

2000 பிரித்தானிய இணுவை மக்கள் ஐக்கிய ஒன்றியத்தால் “ இணுவை  இளம்நம்பி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2001 சுழிபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் வருடாந்த பொங்கல் விழாவின் போது 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்படி தேவஸ்தான பரிபாலன சபையால் “ சைவச் செந்தமிழன்” விருது வழங்கிக் கௌரவித்தது.

2002 தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் இராமாயணம் எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு ஆற்றியமைக்காக “அருள்ஞான வேந்தன்” எனும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

2003 யாழ்ப்பாணத் தேசிய கல்வியற் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவின் போது 2003 ஜீலை 10 ஆம் திகதியன்று கல்லூரியின்சார்பாக பீடாதிபதி தி. கமலநாதன் அவர்களால் “சிவநெறித்தவமகன்” எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

2005 இவரது பெரும் முயற்சியினால் தோற்றம் பெற்ற இணுவில் அறிவாலயம் திறப்பு விழாவின் போது 2005 மார்ச் 20 ஆம் திகதி அன்று இணுவில் வாழ் மக்கள் சார்பாக ஓய்வுபெற்ற வடமாகாண கல்விப் பணிப்பாளர் சுந்தரலிங்கம் அவர்களால் “பணிக்கொடைச்செம்மல்” எனும் கௌரவம் வழங்கப்பெற்றது.

2008 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 2008 மே மாதம் 18 ஆம் திகதியன்று புதுடில்லியிலுள்ள டில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தமிழ் ஆய்வு மாநாட்டின்போது “செந்தமிழ்ஞாயிறு” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்;டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இவரது சைவப்பணி, தமிழ்ப்பணி, சமூகப்பணிகளை கௌரவித்து பல்கலைக்கழக மூதவை, பேரவை வழங்கிய சிபாரிசின் பெயரில் கௌரவ கலாநிதிப் பட்டம் 2011-10-06 பல்கலைக்கழக வேந்தரால் வழங்கப்பட்டது.

2011 அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச பிரதேச இந்து மாமன்றம் கலாநிதி.ஆறு.திருமுகன் அவர்களின் சமய சமூக சேவையைப் பாராட்டி “மனிதநேயசெம்மல்” விருது 09.04.2011 அன்று வழங்கி கௌரவித்தது.

2012 சிகரம் தொட்ட செம்மலுக்கு 14.01.2012 அன்று கொழும்பு தழிழ்ச்சங்கத்தில் சான்றோர் அவையில் நடைபெற்ற முதுசம் நிகழ்வில் இணுவில் திருவூர் ஒன்றியத்தினரும் கற்பகம் இலக்கிய சேவை அமைப்பினரும் இணைந்து “செவ்வியல் ஞாயிறு” எனும் சிறப்பு பட்டத்தினை வழங்கி கௌரவித்தனர்.

2012 கல்விக்கு நிழல் கொடுத்த செல்வரே கலாநிதியாம் நம் அதிபர்” என்ற விருது மூலம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியால் 2012ஆம் ஆண்டு கொளரவிக்கப்பட்டார்.

2014 கம்பன் விழா – 2014ல் கலாநிதி.ஆறு.திருமுருகனின் ஏற்றமிகு சமூகப் பணியை பாராட்டி மகாவித்துவான் சி.கணேசையர் விருது 16.02.2014 இல் கொழும்பு கம்பன் கழக பெருந்தலைவர் நீதியரசர் மாண்புமிகு ஜெ.விஸ்வநாதன் அவர்களால் வழங்கப்பெற்றது.

2017 யாழ் மாநகராட்சி மன்ற சைவமய விவகாரம் குழுவினரால் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சமய. சமூகப் பணிகளை கௌரவிக்கும் முகமாக “யாழ்விருது” 15.08.2017ல் வழங்கப்பட்டது.

2017 சைவத்திற்கும் தமிழுக்கும், இன்னல் உற்றார்க்கும் சேவையாற்றிவரும் ஆறு திருமுருகன் அவர்களின் சேவையைப்பாராட்டி “சைவத்தமிழ் துறவி” எனும் விருதை இணுவையூர் அப்பாக்குட்டி அறக்கட்டளையின் சார்பில் இலண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் 08.11.2017அன்று வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

2018 நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் கொள்ளிடம் பெரியகுத்தவக்கரை ஸ்ரீ வீரனார் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கு “திருவாசகக் காவலர்” எனும் விருது 05.07.2018 அன்று வழங்கப்பட்டது.

2018 – 2018 ஆம் ஆண்டுக்கான “தலைசிறந்த தமிழன்” விருது கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கு 31.12.2018 அன்று DAN தொலைக்காட்சி சேவையால் வழங்கப்பட்டது.

2018 50 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் வழங்கியமையால் இரத்தவங்கியால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

2019 நாள் தவறா நற்பணிகள், அடுத்தவர் துயர் பொறுக்காமை, அருள் நிறைந்த அறக்குணங்கள், தேசபக்தி, செயல்வீரம், இத்தனையும் ஒருங்கமைந்த கலாநிதி.ஆறு திருமுருகன் ஐயா அவர்களுக்கு தென்மராட்சி இலக்கிய அணியால் 2019ஆம் ஆண்டு கம்பன் விழாவில் “அருட்செல்வர்” எனும் விருது வழங்கப்பட்டது.

2019 கனடா 2019ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது கனடா Kuruvi குழுவால் வழங்கப்பட்டது.

2020 உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெறவில்லை.

2024-05-21 யாழ்ப்பாணப்பெட்டகம்-நிழலுருக் கலைக்கூடம் உலக பண்பாட்டுத்தினத்தினை முன்னிட்டு நடத்திய ‘யாழ் மண்ணே வணக்கம்’ செயற்திட்ட அறிமுக விழாவல் “சிவத்தமிழ்ஞாயிறு” விருது வழங்கிப் போற்றப்பட்டார்.

சொற்பொழிவுச் சாதனைகள்

கல்வி சமய சமூக நற்பணிகளுடன் இணைந்து ஆன்மீகச் சொற்பொழிவாளராக வும் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு. திருமுகன் திகழ்ந்து வருகின்றார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவனாக பல்வேறு சொற்பொழிவுகளில் பங்கு பற்றி வந்த இவர்  1977இல் யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் உரை நிகழ்த்தினார். இவ்விழாவில் முதன்முறையாக ஆசிரியர் மகாதேவன் அவர்களால் ஆறுதிருமுருகன் என அழைக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்நாமம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பல்வேறு காலப்பகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நீர்கொழும்பு, கொழும்பு, புத்தளம் மற்றும் மலையகப் பகுதிகளில் பல்வேறு ஆன்மீக, சமூக சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளமை. இவரது சொற்பொழிவுகள் இடம்பெற்ற உள்நாட்டு ஆலயங்களின் விபரங்கள் இச்சிறப்பு மலரின் இன்னொரு பகுதியில் இடம்பெற்றுள்ளன.

தமது நாட்டில் மட்டுமல்ல இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், கனடா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, நியூஸ்லாந்து, தாய்லாந்து, சுவிஸ், போன்ற பல்வேறு நாடுகளிலும் இவரது தொடர் சொற்பொழிவுகள் ஆன்மீகப் பேருரைகள் மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.

1990ஆம் ஆண்டிலிருந்து அகில இலங்கை கம்பன் கழகத்தினால் நடத்தப்பட்டு வருகின்ற பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்ற பல்வேறு மேடை நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்.

  • தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பல்வேறு அருளுரைகளை ஆற்றி வருகின்றார்.
  • இந்தியாவில் சேலத்தில் நடைபெற்ற மார்கழிப் பெருவிழாவில் தொடர் சொற்பொழிவாற்றியமை.
  • 1999ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற அகில உலக இந்துமாநாட்டில் உரை நிகழ்த்தியமை. – சைவத் திருக்கோயில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டது.
  • 2000ஆம் ஆண்டில் இலண்டன் சிவயோகம் அறக்கட்டளையினர் நடாத்திய முத்தமிழ் விழாவில் சிறப்புரையாற்றியமை.
  • 2000ஆம் ஆண்டில் வரசித்தி விநாயகர் ரொறன்டோவில் கனடா தமிழர் தகவல் நடாத்திய விழாவில் பிரதம விருந்தினராக உரையாற்றியமை.
  • 2001ஆம் ஆண்டில் இலண்டன் சிவயோகம் அறக்கட்டளையினர் நடத்திய விழாவிலும் மேலும் பல சைவக்கோயில்களிலும் இலண்டனில் சிறப்புரையாற்றியமை.
  • 2001ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா சிட்னி சைவ மன்றத்தின் விசெட அழைப்பை ஏற்று அங்கு சென்று ஐம்பதிற்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளமை.
  • 2001ஆம் ஆண்டு சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் உலக மாநாட்டில் “இலங்கையில் தமிழ் இலக்கியம் கற்பித்தலில் ஏற்படும் பிரச்சினைகள்” என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பிப்பதுடன் சிறப்புரையாற்றியமை.
  • 2001ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள பேரூர் ஆதீன அழைப்பை ஏற்று அங்கு சென்று உரையாற்றியமை.
  • 2002ஆம் ஆண்டில் இலண்டன் சிவயோகம் அறக்கட்டளையினர் நடாத்திய விழாவிலும் இலண்டன் ஈலிங்கில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிலும் கலந்து சிறப்புச் சொற்பொழிவாற்றியமை.
  • 2003ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இலங்கைத்தழிழர் அழைப்பை ஏற்றுச் சென்று செண்பக விநாயகர் ஆலயத்தில் தொடர் சொற்பொழிவாற்றியமை.
  • 2003ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியா ஈழத்தமிழர் கழக அழைப்பை ஏற்று அங்கு சென்று சிட்னி முருகன் கோயிலில் சிறப்பு சொற்பொழ்வாற்றியமை.
  • 2003ஆம் ஆண்டில் அமெரிக்கா புளேரிடா மாநில இலங்கை தமிழர் சங்கத்தின் அழைப்பை ஏற்று ரொரன்றோ றிச்மண்ட்ஹில் ஆலய கந்தச~;டி விழாவிலும், மொன்றியல் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் சிறப்புரையாற்றியமை.
  • 2003ஆம் ஆண்டில் இரண்டாவது தடவையாக காசிக்கு புனித யாத்திரை சென்றார்.
  • 2004ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் உலகின் ஆன்மீகத் தலைவர்களுக்காக தாய்லாந்தில் நடத்திய எயிட்ஸ் தொடர்பான மாநாட்டில் இலங்கையின் இந்துமதப் பிரதிநிதியாக கலந்துகொண்டு சிறப்புரைகள் நிகழ்த்தியவர்.
  • 2004ஆம் ஆண்டு இலண்டமன் சிவயோகம் அறக்கட்டளையினர் நடத்திய முத்தமிழ் விழாவிலும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
  • 2005ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்று, அங்கு புளேரிடா, ரெக்சாஸ், கலிபோர்னியா, நியூயோர்க் நியூஜோர்க் ஆகிய மாநிலங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் உரையாற்றினார்.
  • 2005ஆம் ஆண்டில் கனடாவில் சைவசமய நிகழ்வுகளில் கலந்து சிறப்புரைகள் ஆற்றியமை.
  • 2005ஆம் ஆண்டு திருப்பூர் ஐயப்பன் விழாவில் கலந்து சிறப்புரைகள் ஆற்றியமை.
  • 2008ஆம் ஆண்டு அனைத்துலக வளர்தமிழ் ஆய்வு மாநாடு – டில்லித்தழிழ்ச்சங்கம்” புதுடில்லி நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றினார்.
  • 2012ஆம் ஆண்டில் திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி காலத்தில் கலந்து கொண்டு சிறப்புத் தொடர் சொற்பொழிவாற்றியமை. கந்தசஷ்டி காலத்தில் நடைபெறும் சொற்பொழிவில் தொடர்ந்து நான்கு தடவைக்கு மேல் தொடர் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரியவர்.
  • 2013ஆம் ஆண்டில் மீண்டும் திருச்செந்தூர் ஆலயத்தில் சிறப்புத்தொடர் சொற்பொழிவாற்றியமை.
  • 2013ஆம் ஆண்டில் புதுச்சேரி கம்பன் விழாவில் சிறப்புரை ஆற்றியவர்.
  • 2013ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (ATBC)அமைப்பின் பேரில் பங்கு பற்றி பல்வேறு சமய சொற்பொழிவுகள் ஆற்றிய பெருமைக்குரியவர்.
  • 2014ஆம் ஆண்டில் இலண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்தின் அழைப்பின் பேரில் பங்குபற்றி பல்வேறு இந்துக்கோயில்களில் சிறப்புரையாற்றினார்.
  • 2014ஆம் ஆண்டில் சேலம் மார்கழிப் பெருவிழாவில் பங்குபற்றியவர்.
  • 2014 – தர்மபுர ஆதீனத்தில் விசேட உரையாற்றிய ஈழத்தவர்.
  • 2014 – சிதம்பரம் நாவலர் பாடசாலை 150வது ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்றினார்.
  • 2014ஆம் ஆண்டில் அமெரிக்காவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பங்குபற்றி சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியமை.
  • 2015ஆம் ஆண்டில் கனடாவில் இணுவில் திருவூர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பங்குபற்றி பல்வேறு சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியமை.
  • 2015ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ATBC) அழைப்பின் பேரில் பங்குபற்றி பல்வேறு சொற்பொழிவுகள் ஆற்றியமை.
  • 2015ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் செண்பக விநாயகர் தேவஸ்தான அழைப்பின் பேரில் பங்குபற்றி சொற்பொழிவுகள் ஆற்றியமை.
  • 2015ஆம் ஆண்டில் திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி விரத காலத்தில் தொடர் சொற்பொழிவாற்றியமை.
  • 2016ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (யுவுடீஊ) அழைப்பின் பேரில் பங்குபற்றி சிறப்புரை ஆற்றியமை.
  • 2016ஆம் ஆண்டில் மலேசியா இந்து அபிவிருத்திச் சங்கத்தின் அழைப்பின் பேரில் பங்குபற்றி சிறப்புரை ஆற்றியமை.
  • 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் கொள்ளிடம் பெரிய குத்தவக்கரை ஸ்ரீ வீரனார் திருக்கோயிலில் சிறப்புரை ஆற்றியமை.
  • 2016ஆம் ஆண்டில் சுவிற்சர்லாந்தில் சூரிச் சிவன்கோயில் தேவஸ்தான அழைப்பின் பெயரில் பங்குபற்றி சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியமை.
  • 2017ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ATBC) அழைப்பின் பேரில் பங்குபற்றி சிறப்புரை ஆற்றியமை.
  • 2017ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் சிறப்புரை ஆற்றியமை.
  • 2017ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் சைவத்தமிழ் மாநாட்டில் பங்குபற்றி சிறப்புரை ஆற்றியமை.
  • 2017ஆம் ஆண்டில் திருவண்ணாமலை திருமுறை மாநாட்டில் சிறப்புரை ஆற்றியமை.
  • 2017ஆம் ஆண்டு திருச்செந்தூரில் கந்தசஷ்டி கால தொடர் சொற்பொழிவுகள்.
  • 2017ஆம் ஆண்டில் இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்து பல்வேறு சிறப்புரைகள் ஆற்றியமை.
  • 2018ஆம் ஆண்டில் மதுரைக் கம்பன் விழாவில் சிறப்புரை ஆற்றியமை.
  • 2018ஆம் ஆண்டு கொள்ளிடம் பெரியகுத்தவக்கரை ஸ்ரீ வீரனார் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழாவை சிறப்பாக நடத்தியமைக்காக கௌரவிக்கப் பட்டார்.  
  • 2018 ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத் தாபனத்தின் (யுவுடீஊ) அழைப்பின் பேரில் பல்வேறு சிறப்புரைகள் ஆற்றியமை.
  • 2019ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத் தாபனத்தின் (ATBC) அழைப்பின் பேரில் பங்குபற்றி பல்வேறு சிறப்புரைகள் ஆற்றியமை.
  • 2019ஆம் ஆண்டு கனடா ஈ குருவி சிறந்த சிந்தனையாளர் விருது பெற்று சிறப்புரையாற்றியமை.
  • 2020ஆம் ஆண்டு சிதம்பரம் திருமுறை மாநாட்டில் சிறப்புரை.
  • 2020ஆம் ஆண்டில் கொள்ளிடம் பெரிய குத்தவக்கரை ஸ்ரீ வீரனார் திருக்கோயிலில் நல்லாசி புரிந்தமையை முன்னிட்டு விருது வழங்கப்பட்டது.
  • பல்வேறு நாடுகளில் இலண்டன் (10வது தடவைகளுக்கு மேலும்) அவுஸ்ரேலியா (8 தடவைகளுக்கு மேலும்) கனடா (9தடவைகளக்கு மேலும் சிங்கப்பூர், மலேசியா, சுவிஸ், நியுசிலாந்து, மற்றும் இந்தியா (கடந்த இரு தசாப்தங்களாகவும்) பல்வேறு சமய, சமூக, தமிழ் சொற்பொழிவுகளில் பங்குபற்றி சிறப்பித்தமை.

ஆற்றிய நினைவுப் பேருரைகள்.

  1. சேர்.பொன் அருணாசலம் நினைவுப் பேருரைகள் பழைய பாராளுமன்றத்தில் நிகழ்த்தியமை.
  2. சுன்னாகம் இராமநாதன் கல்லூரி பரிசளிப்பு விழாவில் சேர் பொன் இராமநாதன் நினைவுப் பேருரைகள்.
  3. யாழ் நாவலர் பாடசாலையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் நினைவுரை.
  4. யாழ் இந்துக்கல்லூரியில் சுவாமி விவேகானந்தர் யாழ் வருகை நூற்றாண்டு நிறைவு விழா பேருரைகள்.
  5. வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் நாவலர் பெருமான் நினைவுரை
  6. கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் நடாத்திய அதிபர் சி.கே.கந்தசாமி நினைவுப் பேருரை.
  7. அகில இலங்கை இந்துமாமன்றம் இரத்மலானை சக்தி இல்லத்தில் நடாத்திய வைத்திய கலாநிதி.க.வேலாயுதப்பிள்ளை நினைவுப் பேருரை.
  8. யாழ் தேசிய கல்வியற் கல்லூரியில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப் பேருரை.
  9. வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி பரிசளிப்பு விழாவின் போது நினைவுப் பேருரை.
  10. சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பரிசளிப்பு விழாவின் போது நினைவுப் பேருரை.
  11. யாழ் இலக்கிய வட்டம் நடாத்திய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நினைவுப் பேருரை.
  12. கொழும்பு விவேகானந்த சபையின் பொதுச்செயலாளர் அமரர் க.இராஜபுவனேஸ்வரன் நினைவு உரை.
  13. பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் நினைவுப் பேருரை.
  14. இணுவில் இந்துக்கல்லூரி ஸ்தாபகர் பேருரை.
  15. 2011 இல் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு இந்துமாநாட்டில் பேருரை.
  16. 2012 இல் தமிழ்தூது தனிநாயகம் அடிகளார் நினைவுப் பேருரை- மன்னார் நகர மண்டபம்.
  17. 2013 இல் தமிழ்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா நினைவுரை- மன்னார் தமிழ்ச்சங்கம்.
  18. 2013 இல் மகாஜனக் கல்லூரியில் அமரர் தெ.து.ஜெயரத்தினம் நினைவுரையும் கௌரவிப்பும்.
  19. 2014 இல் அக்கடமி விழாவில் பிரதம விருந்தினராக சிறப்பித்தமை.
  20. 2014 இல் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 120ஆம் ஆண்டு விழாவில் கௌரவமும் சிறப்புரையும்.
  21. 2015 இந்துமாமன்ற 60வது ஆண்டுவிழாவில் சிறப்புரை.
  22. யாழ் இந்துக்கல்லூரியின் 125ஆம் ஆண்டில் சிறப்புரை.
  23. 2015 இல் திருக்கேதீச்சரம் ஸ்ரீ சபாரத்தின சுவாமிகள் தொண்டர் சபையினரால் நிகழ்த்தப்பட்ட ஆன்மிகப் பெருவிழாவில் சிறப்புரை.
  24. 2015 இல் வடமராட்சி பிரதேசசபை நடத்திய கலை, கலாசார நிகழ்ச்சியில் சிறப்புரை.
  25. 2015 இல் சைவசமய எழுச்சி விழாவில் நாவலப்பிட்டி கலாசார மண்டபத்தில் பங்குபற்றி சிறப்புரையாற்றியமை.
  26. 2016 இல் யாழ் பாரதி பதிப்பக ஆண்டு விழாவில் சிறப்புரை.
  27. 2016 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நடத்திய முதலாவது சைவ மாநாட்டில் சிறப்புரை.
  28. 2016 பாரதியார் விழாவில் சிறப்புரை – மன்னார் மாவட்ட சைவ கலை மன்றம்.
  29. 2017 இல் யாழ் இந்துக்கல்லூரி தமிழ் விழாவில் பிரதம விருந்தினராக உரை.
  30. 2017 இல் யாழ் இந்துக்கல்லூரியில் விவாத மேடையில் நடுவராக பங்குபற்றி சிறப்பித்தமை.
  31. 2017 இல் புனிதசவேரியர் குருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தவத்திரு தனிநாயகம் தமிழ் மன்ற விழாவில் பிரதம விருந்தினராக சிறப்பித்து உரையாற்றியமை.
  32. 2018 இல் சித்திரமொழி பழனியானந்தன் சனசமூக நிலையம் 75ஆம் ஆண்டு விழாவில் கௌரவ விருந்தினராக சிறப்புரை ஆற்றியமை.
  33. 2018 இல் யாழ் இந்துக்கல்லூரியில் “நாம் தலைவர்கள்” நிகழ்ச்சியில் வளவாளராக பங்குபற்றியமை.
  34. 2018 இல் சுன்னாகம் ஐயனார் மகரஜோதி விழாவில் உரை
  35. 2018 இல் நல்லைக்கந்தன் குருஷேத்திரம் நிகழ்வில் தலைவராக கலந்து சிறப்பித்தமை.
  36. 2018, 2019 ஆம் ஆண்டுகளில் இணுவில் பெரிய சந்நிதியாசியாரின் 101. 102ஆம் ஆண்டு நினைவு விழாவில் சிறப்புரை ஆற்றியமை.
  37. 2019ஆம் ஆண்டு யாழ் இந்துக்கல்லூரி தமிழ்த்தின விழாவில் பிரதம விருந்தினராக உரை.
  38. 2019 இல் யா/கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலையில் சரஸ்வதி சிலை திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராக ஆசிரியர் தின உரை.
  39. 2019ஆம் ஆண்டு VN அக்கடமி ஆசிரியர் தின விழாவில் பிரதம விருந்தினராக உரை.
  40. 2019 இல் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க தீபாவளிக் கொண்டாட்டம் – சிறப்பித்து உரை நிகழ்த்தியமை.
  41. 2019 இல் சைவ வித்தியா விருத்திச் சங்கம், கருணை இல்லம், பொன் தெய்வேந்திர நினைவு மண்டபத்தில் சிறப்பு விருந்திகராகப் பங்குபற்றி சிறப்புரை ஆற்றியமை.
  42. 2020 புத்தளம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய வைர விழாவில் பிரதம விருந்தினராக சிறப்பித்தமை.

இவை தவிர பல்வேறு சமய, சமூக விழாக்களில் ஆசியுரை, சிறப்புரைகள் நிகழ்த்தியமை, ஆனந்தசாகரம், பரதநாட்டிய நிகழ்வுகள், மிருதங்க அரங்கேற்றங்கள் போன்றவற்றில் பிரதம விருந்தினராக அழைத்து கௌரவிக்கப் பட்ட பெருந்தகையாளன்.

செஞ்சொற்செல்வர், கலாநிதி. ஆறு.திருமுகன் தொடர் விரிவுரையாற்றிய உள்நாட்டுத் திருக்கோயில்கள்

ஏழாலை, களவாவோடை அம்மன் கோயில்.

சுன்னாகம், வரியப்புலம் மகமாரி அம்மன் கோயில்.

இணுவில், காரைக்கால் சிவன் கோயில்.

இணுவில், சிவகாமி அம்மன் கோயில்.

இணுவில், பரராஜசேகரப்பிள்ளையார் கோயில்.

சுன்னாகம், ஐயனார் கோயில்.

சுன்னாகம், சந்திரசேகரப்பிள்ளையார் கோயில்.

கோப்பாய், முத்துமாரி அம்மன் கோயில்

கோப்பாய், கிருஸ்ணன் கோயில்.

கோப்பாய், பாலாணை அம்மன் கோயில்

நெல்லியடி, தடங்கன் புளியடி முருகன் கோயில்.

பருத்தித்துறை, ஆலடிப் பிள்ளையார் கோயில்.

அல்வாய், முத்துமாரி அம்மன் கோயில்.

செல்வச் சந்நிதி பிள்ளையார் வாசல்.

மாலுசந்தி பிள்ளையார் கோயில்.

சாவகச்சேரி கச்சாய் வீதி முருகன் கோயில்.

கொழும்புத்துறை, மன்றுளாடும் பிள்iளாயர் கோயில்.

அரியாலை, பிரப்பங்குளம் மாரியம்மன் கோயில்.

இருபாலை, லிங்கப்பிள்ளையார் கோயில்.

கோண்டாவில், ஆசிமட விநாயகர் கோயில்

மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயில்.

கட்டுடைப் பிள்ளையார் கோயில்.

கொக்குவில், மஞ்சவனப்பதி முருகன் கோயில்

கோண்டாவில், நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயில்.

கொக்குவில், கிருபாகர சுப்பிரமணியர் கோயில்.

உரும்பிராய், கருணாகரப் பிள்ளையார் கோயில்.

நீர்வேலி அச்செழு அம்மன் கோயில்.

கோண்டாவில் கிழக்கு வைரவர் கோயில்.

கோண்டாவில் பூதராஜர் கோயில்.

கோண்டாவில் பழனி கோயில்.

கோண்டாவில் சிவகாமி அம்மன் கோயில்.

ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோயில்.

ஆனைக்கோட்டை உத்துங்கப் பிள்ளையார் கோயில்.

சித்தன்கேணி விநாயகர் கோயில்.

சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோயில்.

சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோயில்.

சுதுமலை எச்சாட்டி வைரவர் கோயில்.

இணுவில் நடுவிழாத்தி வைரவர் கோயில்.

இணுவில் நரசிங்க வைரவர் கோயில்.

திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோயில்.

சங்கானை நிகரவைரவர் கோயில்.

சங்கானை மாவடி வைரவர் கோயில்.

மூளாய் பிள்ளையார் கோயில்.

வட்டுக்கோட்டை பிள்ளையார் கோயில்.

வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் கோயில்.

கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில்.

ஊரெழு வீரகத்தி விநாயகர் கோயில்.

உரும்பிராய் கற்பக விநாயகர் கோயில்.

உரும்பிராய் பூதராஜர் கோயில்.

வரணி கும்பிட்டான் பிள்ளையார் கோயில்.

மீசாலை மாவடிப் பிள்ளையார் கோயில்.

யாழ்ப்பாணம் பன்றிக்கோட்டுப் பிள்ளையார்கோயில்.

ஈச்சமோட்டை வயிரவர் கோயில்.

கரவெட்டி யாக்கருப் பிள்ளையார் கோயில்.

கரவெட்டி தச்சன் தோப்பு பிள்ளையார் கோயில்.

பருத்தித்துறை சிவன்கோயில்.

பருத்தித்துறை கோட்டுவாசல் அம்மன் கோயில்.

உடுவில் மீனாட்சி அம்மன் கோயில்.

உடுவில் மல்வம் வைரவர் கோயில்.

இணுவில் பாலாவோடை பிள்ளையார் கோயில்.

சுன்னாகம் சிவபூதவராயர் கோயில்.

அச்சுவேலி பிள்ளையார் கோயில்.

மீசாலை தட்டாங்குளம் பிள்ளையார் கோயில்.

அளவெட்டி கும்பாவளைப் பிள்ளையார் கோயில்.

ஏழாலை சூராவத்தை அம்மன் கோயில்.

அளவெட்டி நாகவரத ஸ்ரீநாராயணர் கோயில்.

சண்டிலிப்பாய் கல்வளைப்பிள்ளையார் கோயில்

சண்டிலிப்பாய் இரட்டைப்புலம் வைரவர் கோயில் .

  தாவடி காளி கோயில்.

வண்ணை நாச்சிமார் கோயில்.

கொக்குவில் பூநாரி மடவைரவர் கோயில்.

யாழ்ப்பாணம் கடைச்சுவாமி கோயில்.

யாழ்ப்பாணம் அத்தியடிப் பிள்ளையார் கோயில்.

நீர்வேலி அரச கேசரிப் பிள்ளையார் கோயில்

கைதடி கயிற்றசிட்டி முருகன் கோவில்.

பருத்தித்துறை வல்லிபுரக் கோயில்.

யாழ்ப்பாணம் நீராவியடிப் பிள்ளையார் கோவில்.

சுன்னாகம் மயிலணி முருகமூர்த்தி கோயில்.

பன்னாலைக்கட்டுவான் அயக்கடவைப் பிள்ளையார் கோயில்.

மல்லாகம் முருகன் கோயில்.

சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் கோயில்.

ஊரெழு ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயில்.

உரும்பிராய் பர்வதவர்த்தனி அம்மன் கோயில்,

வவுனியா கந்தசுவாமி கோயில்.

கல்முனை சிவன் கோயில்.

கொழும்பு கொட்டாஞ்சேனை வரதராஜவிநாயகர் கோயில்.

கொக்குவில் பத்திரகாளி அம்மன் கோவில்.

வழக்கம்பராய் தொல்புரம் முத்துமாரி அம்மன் கோயில்.

கொழும்புத்துறை பாண்டியன் தாழ்வு வைரவர் கோயில்.

அளவெட்டி கேணிக்கரை வைரவர் கோயில்.

சொற்பொழிவுகளால் நிகழ்த்திய சாதனைகள்

1- கலாநிதி. ஆறு.திருமுகன் ஆன்மிக சொற்பொழிவு வீடியோநாடா இலண்டனில் வெளியிடப்பட்டமை

2- Aruthirumugan Spitual Lectures  என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிட்டமை. (அவுஸ்திரேலியாவில் அன்னை பவானி என்பவரால் வடிவமைக்கப்பட்டது)

3-    aruthirumugan.com  என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டமை.

4-    20 இற்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்கள் பெற்றமை.

5-    27ற்கும் மேற்பட்ட பட்டங்கள் பெற்றமை.

பணிகள்

1-சுன்னாகம் திருஞான சம்பந்தர் வித்தியாசாலையில்; ஆறு.திருமுகன் அறக்கொடை நிதியம் ஆரம்பித்து வறிய பிள்ளைகளுக்கு உதவுதல்.

2- கொழும்பு பழைய மாணவர் சங்கம் மூலம் கிடைத்த நிதியில் ஸ்கந்தாவில் ஸ்கந்தன் கோயில் திருப்பணி நிறைவேற்றியமை. ஸ்தாபகர் கந்தையா உபாத்தியாரின் உருவச்சிலை நிறுவியமை.

3- இலண்டன் அநாதைகள் அறக்கட்டளை உதவியுடன் கண்பார்வையற்ற வாழ்வகச் சிறுவர்களுக்கு 16 இலட்சம் ரூபா செலவில் உடுவிலில் நிரந்தர இருப்பிடம் உருவாக்கிக்கொடுத்தமை.

4-இலண்டன் சிவயோகம் அறக்கட்டளை உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் 15 இலட்சம் ரூபா செலவில் நவீன கண் சத்திர சிகிச்சை நிலையம் உருவாக்கியமை. 18 இலட்சம் ரூபா செலவில் நவீன லேசர் இயந்திரம் வழங்கியமை.

5- 15 இலட்சம் ரூபா செலவில் கணவனை இழந்த இளம் விதவைகளுக்குப் புதிய வீடுகளை அமைத்து சிவயோகம் அன்னையர் குடியிருப்பு என்ற மாதிரிக்கிராமத் தினை உருவாக்கியமை.

6-யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி ஆகிய இடங்களில் உள்ள சைவச் சிறுவர் இல்லங்களுக்கு இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலய உதவியுடன் வருடா வருடம் நிதி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளமை.

7-யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட புற்றுநோயாளர் கருணைநிதியம் மூலம் சுமார் 13 இலட்சம் ரூபாவரை புற்று நோயாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தமை.

8-யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இந்துசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஆறுமுகநாவலரின் சிலையினை தம் சொந்த செலவில் ஸ்தாபித்தமை.

9-திருகோணமலை அலஸ்தோட்டத்தில் வாழும் 1200  அகதிக் குடும்பங் களின்  வழிபாட்டிற்காக ஆனந்த விநாயகர் ஆலயம் ஸ்தாபித்தமை.

10-1995 இடப்பெயர்வுடன் கிளிநொச்சியில் குடியேறிய மக்களுக்காக 20க்கு மேற்பட்ட நாகதம்பிரான் விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்தமை.

11- யாழ்ப்பாணம், சப்பிரகமுவா ரஜரட்டைப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வசதி குறைந்த மாணவர்களின் கல்விக்கு உதவி பெற்றுக் கொடுத்தமை.

12-யாழ்போதனா வைத்தியசாலை நூல் நிலையத்திற்கு விலை மதிப்மற்ற நூல்கள் பெற்றுக்கொடுத்தமை.

13-மஹாவித்துவான் பிரம்ஸ்ரீ வீரமணி ஜயாவின் பதிப்பிற்குள்ளாகாத நூல்கள் சிலவற்றை பதிப்பித்து வெளியிட்டமை.

14-கொக்குவில் மஞசவனப்பதி ஆலயத்தில் நடைபெற்ற தொடர் சொற்பொழிவுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு மூலம் விதவைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கியமை.

15-இணுவில் கிராமத்தில் மத்திய அறிவாலயம் அமைக்க கனடா, இலண்டன் நாடுகளில் இணுவில் வாழ் மக்கள் உதவி பெற்றுக் கொண்டமை.

16- இந்துக்கள் கண்தான சபையை உருவாக்கியமை.

17-செவிப்புலன் குறைந்த மாணவர்களுக்கு அவுஸ்ரேலிய மருத்துவர் உதவி பெற்று அக்குறை நீக்கும் கருவிகள் பெற்றுக்கொடுத்தமை.

18-அரியாலையில் யுத்த அனர்த்தங்களால் அழிந்துபோன தென்னைமர மீள்நடுகைக்காக 600 தென்னங்கன்றுகளை தனது   இலண்டன் சொற்பொழிவு மூலம் கிடைத்த பணத்தில் இருந்து பெற்றுக்கொடுத்தமை.

19-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர் வழிபாட்டிற்காக வித்தக விநாயகர் ஆலயம் அமைப்பதற்கு இலண்டன் சிவயோகம் அறக்கட்டளை நிதியத்திடமிருந்து நிதி பெற்று வழங்கியமை.

20- கோண்டாவிலில் மனவளர்ச்சி குறைந்த சிறுவர்களுக்கான சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலையை நிறுவியமை

21-  யாழ் போதனா வைத்தியசாலை சிறுநீரக நோயியல் பிரிவுக்கு 18 இலட்சம் செலவில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை பிரித்தானிய இந்துக்கோவில்களின் உதவியுடன் வழங்கியமை.

22-ஆவரங்கால் சிவசக்தி மணிமண்டபத்தை நிறுவ முக்கிய ஆலோசகராக விளங்கியமை.

23-கிளிநொச்சி வைத்தியசாலை அபிவிருத்திக்கு சுமார் இரண்டு லட்சம் வழங்கியமை.

24-திருநெல்வேலி சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் கிளை நிறுவனத்தை இணுவிலில் ஆரம்பிப்பதற்கு காணி கொள்வனவு செய்ய நிதி வழங்கியமை.

25-தனது ஆசான் இ.மகாதேவா(தேவன்யாழ்ப்பாணம்) அவர்களது சிறுகதைத் தொகுதியை யாழ் இலக்கிய வட்டத்தினூடாக வெளியிட நிதி வழங்கியமை.

26- உடுவில் சபாபதிப்பிள்ளை வீதியில் இலண்டன் கேன் புற்றுநோயாளர் உதவி நிறுவனத்தினூடாக புற்றுநோயாளர் காப்பகம் அமைக்கும் பணியைத் தொடங்கியமை.

27-யாழ் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப்பிரிவு மாணவர்களுக்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றை  இலண்டன் அன்பர் ஒருவர் மூலம் பெற்றுக்கொடுத்தமை.

28-  யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்  சங்கத்திற்கு மருத்துவ நூல்கள், உபகரணங்கள் அன்பளிப்புச் செய்தமை.

29-யாழ் மருத்துவ பீட மாணவர்களின் “அரும்புகள்” சிறுவர் இருதய நோய் சிகிச்சை நிதியத்திற்கு 50,000.00 ரூபா வழங்கியமை.

30- துர்க்காதேவி தேவஸ்தான அறப்பணிக்கு உதவி வருகின்றமை.

31-பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் துர்க்காபுரம் மகளிர் இல்ல பிள்ளைகளுக்கு வருடந்தோறும் மடிக்கணணிகள் வழங்குதல்.

32-துர்க்காபுரம் மகளிர் இல்ல சிரேஸ்ட பிள்ளைகளின் பாவனைக்கு தையல் இயந்திரங்கள் வழங்கியமை.

33-இளம் ஆற்றலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தன் பிறந்தநாளை முன்னிட்டு ‘இளம்ஆற்றலாளர்’ விருது வழங்கி கௌரவிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

34-சிவபூமி அறக்கட்டளையினை நிறுவி அதனூடாக பல்வேறு சமய, சமூக ஆன்மீகப் பணிகளை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தொல்புரம் முதியோர் இல்லம்,

நாவற்குழி அரும்பொருட்காட்சியகம்,

நாவற்குழி திருவாசக அரண்மனை என்பன அவரது முக்கிய பணிகளில் விதந்து பேசக்கூடியவையாகும்.

அம்பாளின் திருவருள் பூரணமாக இவருக்குக் கிடைத்துள்ளது. திருவாசகம், திருமந்திரம், அபிராமி அந்தாதி, திருக்குறள் இவற்றைக் கருங்கல்லிலே செதுக்கிவித்துள்ளார்.

ஈழநாட்டின் குறிப்பாகத் தமிழ்ப்புலமைப் பாரம்பரியம் பற்றி விரல் நுனியில் வைத்துள்ள இவரின் மேடைப்பேச்சிலே அவற்றைக் காணலாம். இவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும் இன்னும் படித்துக் கொண்டிருப்பது இவரின் தேடல் ஆர்வத்தையும் ஆற்றலையும் காட்டி நிற்கின்றது.

கலாநிதி ஆறுதிருமுருகன் எம் தேசத்தின் முதுசம் சைவமரபையும் வரலாற்றையும் இணைக்கும் பாலம். குரு மரபும் துய்ய நிற்கும் இவ்வாற்றல் வல்லோரின் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பதே எமக்குப் பெருமை. சைவத்திற்கும் தமிழிற்கும் அளப்பரிய பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் இவரின் பணிகள் தொடரவும் பயன்பாடு பெருகவும் இறைவனை வாழ்த்தி 2024ஆம் ஆண்டு உலக பண் பாட்டுத்தினத்திலே சிவத்தமிழ் ஞாயிறுஎன்னும் விருது வழங்கி கௌரவிப்பதிலும், ஆவணப்படுத்துவதிலும் யாழ்ப்பாணப்பெட்டகம்-நிழலுருக் கலைக்கூடம் பெருமையடைகின்றது.  https://youtu.be/PA0Q5s1JuBs

நன்றி  –  மணிவிழா மலர் – 2021

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!