Sunday, January 5

தாயகநேயப்பரிதி சிவப்பிரகாசம் சக்திதரன்.

0

அறிமுகம்

சிவப்பிரகாசம் சக்திதரன் என்னும் இயற்பெயருடைய இவர் சிவ சக்திதரன் , ஏழாலை சக்தி எனவும் அன்பாக அழைக்கப்படுகின்றார். நோர்வே மாநகரில் ஆர்யாலயா இசை வளாகம் (The Institude of Aisian Rhythm) என்னும் நிறுவனத்தினை உருவாக்கி அதன் இயக்குநராக 40 வருடங்கள் செயற்பட்டு வரும் சக்திதரன் அவர்கள் மிருதங்கம், முகர்சிங், கெஞ்சிரா, கடம், தபேலா, தவில் ஆகிய தாளவாத்தியங்களில் பாண்டித்தியம் பெற்றவர். இன்று கலைத்துறையில் குறிப்பிடக் கூடிய ஒருவராக விளங்குகின்றார், இவர் இலங்கை, இந்தியா,  சுவீடன், டென்மார்க்,  மலேசியா, சிங்கப்புர் ஆகி நாடுகளில் தன் கலைத் திறமையை வெளிப்படுத்தியவர். இவர் யாழ்ப்பாணம் மலேசியாவில் பிறந்து வட்டுக்கோட்டை (துணவி) என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த மகாராஜா ஸ்ரேலிங் புறடக்ற் நிறுவனத்தில் லிகிதராக பணியாற்றிய அப்பையா சிவப்பிரகாசம் ஏழாலையைச் சேர்ந்த  ஆறுமுகம் ஞானம் தம்பதியினரின் மூத்த புதல்வனாக சக்திதரன் அவர்கள் 1956-03-14ஆம் நாள் ஏழாலையில் பிறந்தார்.  இவருடன் சக்திமித்திரன், சக்திக்கிரீவன் ஆகியோர் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவர்.  இவர்களில் மூத்தவர் நோர்வேயில் வாழ்ந்து வருகின்றார். இளையவர் இந்து சமயப்பேரவையின் தலைவராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. சக்திதரன் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கற்று பின்னர் ஏழாலை மேற்கு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஆறு வரை கற்று மேற்கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கற்றார். கல்விப் பொதுத் தராதர உயர்தரக் கல்வியில் கணிதமும் வர்த்தகமும் கற்பதற்காக மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இணைந்து கொண்டார். பின்னர் லண்டன் கணக்குப்பதிவு முறையியல் கற்றார். (Book keeping) கொழும்பு பல்கலைக் கழகத்தில் வெளிவாரியாக சட்டம் பயின்றுவரும் காலத்தில் வெளிநாட்டு உயர் கல்விக்காக 1984 ஆவணி மாதம் நோர்வே பயணமானார்.  நோர்வே மாநகரில் நோர்வே மொழியினை ஒருவருடம் பயின்று தொடர்ந்து நோர்வே அட்கர் (Adger) பல்கலைக்கழகத்தில் கணனி மென்பொருள் பொறியியலாளராக பட்டம் பெற்று நோர்வே பேர்கன் பல்கலைக்கழகத்தில் ஐந்து வருடங்கள் விரிவுரையாளராக பணியாற்றியதுடன் நோர்வேயிலுள்ள தனியார் நிறுவனங்களிலும் கணனி பொறியியலாளராக பணியாற்றி  ஓய்வு பெற்றார்.

1991ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். யாழ்ப்பாணம் புங்குடுதீவிவைச் சேர்ந்த நாகலிங்கம் முருகேசு புஸ்பலீலா தம்பதியினரின் இரண்டாவது புதல்வியான ரஜினி அவர்களை தனது வாழ்க்கைத்துணையாக கரம் பற்றி ஆர்ஜா என்னும் பெயருடை புதல்வியைப் பெற்று கல்வி மற்றும் உயர் தொழிலில் முன்னோக்கி ஒரு தந்தையின் கடமையை நிறைவேற்றியுள்ளார்.  இவருடைய வாழ்க்கைத் துணைவியார் நோர்வேயில் வேர்கன் பல்லைக் கழகத்தில் பட்டம் பெற்று பல்மருத்துவராக பணியாற்றி வருகின்றார்.

கலைத்துறையில் சக்திதரன் அவர்கள்

ஏழாலை முத்தமிழ் மன்றம் நடத்திய கலை விழாக்களில் தனது பன்னிரண்டா வது வயதில் கே.எம்.வாசகர் எழுதிய கலையும் கண்ணீரும் நாடகத்தில் அரசனாக தலைமைப் பாத்திரம் ஏற்று தன் கலைச்சிறப்பினை வெளிப்படுத்தினார். மேலும் தனது பாடசாலைக் காலங்களில் கார்த்திகைக் குமரன் அவருடைய தொடர்பினால் அவர் கற்ற மிருதங்க கல்வியின் பால் இவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பினால் தெல்லிப்பளை காசிவிநாயகர் ஆலய பாலர் ஞானோதய சபையில் நடைபெற்று வந்த மிருதங்க பயிற்சி வகுப்பில் இணைந்து கொண்டார். இதனுடன் இணைந்ததாக மகாஜனக்கல்லூரியின் இசை ஆசிரியர்கள்  அமரர்களான நாகம்மா கதிர்காமர், இராஜமணி சிங்கராஜா ஆகியோரிடம் இசை பயின்றார். கட்டுவன் வீ.ரி.வீ.சுப்பிரமணியம் அவர்களிடம் பண்ணிசை பயின்றவர்.

மிருதங்க இசையினை வித்துவான் க.ப.சின்னராசா அவர்களை முதற்குருவாகக் கொண்டு தனது கலை வாழ்வை ஆரம்பித்தவர். இத்தகைய கலை ஆவர்முடைய சக்திதரன் அவர்கள் இன்று நோர்வேயில் வாழ்ந்து வந்தாலும் தாயகம் மற்றும் உலகம் புராவுமுள்ள கலைஞர்களோடு இணைந்து தனது கலைப்பணியை ஆற்றி வருகின்றார்.  தபேலா வாசிப்பதில் வல்லவரான இவர் இக்கலையை இசைஞானி இளையராஜா அவர்களது இசைக்குழுவில் முதல்நிலை இசைக்கலைஞராக விளங்கும் மது என்பவரிடம் முறையாகக் கற்றவர்.

நாடகக் கலைஞனாக சக்திதரன்

கே.எம்.வாசகரின் கலையும் கண்ணீரும் மற்றும் சிவநெறிச் செல்வர் சி.சண்முகவடிவேல் அவர்களது நெறியாள்கையில் உருவான சோழன் துறவு மீட்பு போன்றனவும், இ.இராஜேஸ்வரன் அவர்களது தயாரிப்பான புதிய பாதை, வீ.எம்.குகராஜாவினது தயாரிப்புகளில் நடித்து நாடகத்துறையில் சிறந்த நடிகனாக இனங்காணப்பட்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபானத்தின் வானொலி நாடகத் தயாரிப்புகளிலும் நடித்தவர். இவர் நடித்த நாடகங்களும் கதாபாத்திரங்களும்.

கலையும் கண்ணீரும்       –    அரசன்

சோழன் துறவு                      –     அரசன்

மீட்பு                                           –     சிற்பி, முதலாளி ஆகிய இரு பாத்திரங்கள்

புதியபாதை                           –     முதலாளி,இளம்வாலிபன்ஆகிய இரு  பாத்திரங்கள்.

மிருதங்க வித்துவான் சக்திதரன்

மிருதங்க கலையினை வித்துவான் க.ப.சின்னராசா அவர்களிடம் பயின்று வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தராதரம் பயின்று கலாவித்தகர் பட்டம்  பெற்றவர். மிருதங்க வாசிப்பில் தனி ஆவர்த்தனத்தில் துரிதகதி சொற்களை  கையாள்வதில் நிபுணத்துவமுடையவர். பாடல்களின் கைளுகையில் பாடல்களுக்கமைவாக நுணுக்கமான சொற்களை தன்சிந்தனைக் கமைவாக வாசிக்கும் ஆற்றலும் பெற்றவர். தெல்லிப்பளை காசிவிநாயகர் ஆலயத்தில் திருவிழாக்காலங்களில் நடைபெற்றுவந்த கலைநிகழ்வுகளில் தன் மிருதங்க வாசிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி தன் கலைப்பயணத்தினை ஆரம்பித்தவர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசைக்கச்சேரிகளில் பின்னணி வாத்தியக் கலைஞனாகப் பங்கெடுத்த இவர் புகழ்பெற்ற பல வித்துவான்களுக்கு தனது மிருதங்க இசையை பின்னணியாக வழங்கிய பெருமைக்குரிவர். குறிப்பாக அளவையூர் சங்கீதபூஷணம் வீ.கே.நடராசா, கரவெட்டி  சங்கீதபூஷணம் ஏ.கே.கருணாகரன், அளவையுர் கலாபூஷணம் வை.சிவ ஞானசேகரம், கலாபூஷணம் சிவஞானராசா, அளவையுர் இரட்டையர்களான இராமலக்ஸ்மணன், வி.நவரட்ணம், பொன்.தெய்வேந்திரம், பொன். முத்துக்குமார், நல்லூர் குணபூஷணம் மல்லிகா நாகாராஜா, வீ.ரி.வி.சுப்பிரமணியம், ஆரூரன் அருள்நந்தி, வயலின் வித்துவான் இராதாகிருஸ்னன், கலாபூஷணம் லயனல் திலகநாயகம் போல் போன்ற உலகப்புகழ் பெற்ற இசை வித்துவான்களுக்கு மிருதங்க பின்னணி இசை வழங்கிய பெருமை பெற்றவர். இவற்றுக்கு மேலாக இந்தியாவின் புகழ் பெற்ற சங்கீத வித்துவானும் திரையிசைப் பாடகியுமாகிய மகதி அவர்களுக்கும், தாராபுரம் சுந்தரராஜன், வயலின் முத்துக்குமார் போன்ற பலருக்கு நாதஸ்வர வித்துவான் அன்பு, பிரபு, ராமு, சங்கீத வித்துவான் கி.கரிகரன், சங்கீத வித்துவான் தாராபுரம் சுந்தரராஜன் போன்ற புகழ் பெற்ற இசைக் கலைஞர்களுக்கு அணிசெய் கலைஞர்களில் மிருதங்க வித்துவானாக விளங்கியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் இசை விழாக்களிலும் தியாகராஜ உற்சவத்திலும் பலமுறை கலந்து மிருதங்க இசை அணிசெய்த பெருமைக்குரியவர்.

தெல்லிப்பளை காசி விநாயகர் ஆலயம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம், ஏழாலை முத்தமிழ் மன்றம், இளங்கலைஞர் மன்றம், நல்லூர் பெருந்திருவிழாக் கால துர்க்கா மணிமண்டபம், இந்து சமயப்பேரவை, திருக்கேதீஸ்வரம், கொழும்பு தமிழ்ச் சங்கம், சரஸ்வதி மண்ணடபம், இராமகிருஸ்ணமி~ன் மன்டபம், முழங்காவில் செல்வயோக சித்தி விநாயகராலய முன்றல், கிளிநொச்சி பண்டிதர் பரந்தாமன் கலைக்கல்லூரி போன்ற பல இடங்களிலும், இந்தியவில் தஞ்சை பெருங்கோயில், சென்னை சங்கீத சபா ஆகிய இடங்களிலும் உலகின் பல பாகங்களிலும் தன் கலைத்திறமையால் இசை அரங்குகளை கட்டிப்போட்டவர்.

நோர்வே மாநகரில் ஆர்யாலயா இசை வளாகம் (The Institude of Aisian Rhythm) என்னும் நிறுவனத்தினை உருவாக்கி

சமூகசேவையில் சக்திதரன்

தனது கலைத்துறைக்கப்பால் தனது வருமானத்தினூடாக சமூகத்திற்கு பல நற்காரியங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் மற்றும் முழங்காவில் ஆகிய இடங்களில் வாழ்ந்து வருகின்ற உதவிதேவையானோருக்கு 100 கோழிக்குஞ்சுகள் வீதம் வழங்கியுள் ளதுடன் பயிர்ச்செய்கையில் இனவிருத்தி நடவடிக்கை, நாற்றுமேடை பராமரிப்பு போன்ற பலவிடயங்களில் தன் பங்களிப்பை வழங்கி வருகின் றார். மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவுடன் இணைந்து முழங்காவில் பிரதேசத்தில் படித்த வாலிபர் திட்டத்தில் குழாய்க்கிணறு அமைப்பதற்கான செயற்திட்டத்தில் பெரும்பங்காற்றியவர். விவசாயம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கு தன்னாலான பங்களிப்பினை இடைவிடாது நல்கி வருபவர்.

வடஇலங்கை சங்கீத சபையின் மிருதங்க கற்கைநெறியில் ஆசிரியர் தராதரம் வரை கற்று மிருதங்கக் கலாவித்திகர் பட்டம் பெற்றுள்ளார். தமிழிற்காகவும், தமிழ் மக்கள் நலனிற்காகவும் நாடு நோக்கிய கலை நிகழ்வுகளில் இன்று வரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் இவர் மிருதங்கம், தபேலா, டோல்கி, மோர்சிங், கடம், கெஞ்சிரா, தவில், உடுக்கு, டோலக், உறுமி, னுசரஅ ஆகிய வாத்தியங்களை வாசிக்கும் அபார திறன் கொண்டவர்.

விருதுகள் கௌரவங்கள்

2002ஆம் ஆண்டு ஏழாலை இந்து சமயப் பேரவையால் நடத்தப்பட்ட சமாதானப்போர் இசை என்ற நிகழ்வில் அமரர் அருட்கவி விநாசித்தம்பி அவர்களால் தெய்வலயசுரபி என்ற பட்டமும், 20215 ஆம் ஆண்டு கொழும்மு லயநாதலயாவின் இயக்குநரான திரு வேணிலான் அவர்களால் லயநாதசுரபி என்ற விருதும் வழங்கப்பட்டது. இவற்றினை விட மிருதங்கமாமணி, தெய்வலயசுரபி, பல்கலைவேந்தர் எனப் பல விருதுகளும் பாராட்டுக்களும்; அணிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மிருதங்க ஆசானாக, நடிகராக, சமூகசேவையாளனாக, ஆவணப்படுத்துனராக, கலைஞர்களைப் போற்றும் மகானாக, கவிஞராக, ஊடகவியலாளராக என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துள்ள சக்திதரன்; அவர்கள் புலம்பெயர் மண்ணில் அவர் ஆற்றி வரும் தாயகப் பணிகளை வியந்து யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக்கலைக்கூடம் 2023ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நடத்திய முப்பெருந்தமிழ் விழாவில்  ‘தாயக நேயப்பரிதி’ என்னும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!