
உலக பண்பாட்டுத்தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணப்பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடம் காவேரிக்கலாமன்றத்துடன் இணைந்து நடத்திய “யாழ்மண்ணே வணக்கம்”அறிமுகவிழா அறிக்கை-2024

யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக்கலைக்கூடம் 2024-05-21ஆம் நாள் உலக பண்பாட்டுத்தினத்தினை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் யாழ்ப்பாணப் பண்பாட்டினை எடுத்தியம்பும் வகையில் யாழ்ப்பாணம் சேர்பொன் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள றாஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத் தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் யாழ்ப் பாணப்பெட்டகத்தின் காப்பாளருமாகிய வாழ்நாட்பேராசிரியர் பொன்.பால சுந்தரம்பிள்ளை அவர்கள் தலைமையில் யாழ்ப்பாணப் பெட்டகத்தின் மதியுரைஞர் மூதவை உறுப்பினர் அமரர் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் நினைவரங்கில் பிற்பகல் 3.30 மணியிலிருந்து மாலை 7.00 மணி வரை யாழ்ப்பாணப்பத்தாதி நூல் வெளியிடு, பாடல் இறுவட்டு வெளியிடு, விருது வழங்குதல், கலை நிகழ்வுகள் என கோலாகலமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நிதி அனுசரனையை சுவிற்சர்லாந்து யாழ்ப்பாணப்பெட்டகத்தின் கிளை மதியுரைஞர் மூதவை உறப்பினர்களான தாயகநேயப்பரிதி திருமதி விஜிதாம்பிகை பாலதாஸ் தாயகநேயப்பரிதி திருமதி ஜெயலோகராசா பரமேஸ்வரி, தாயகத்தில் நூலாக்கத்திற்கான நிதி அனுசரனையை காவேரிக்கலாமன்றம் வழங்கியிருந்தது. அதன் இயக்குநர் வணக்கத்திற் குரிய ரீ.எஸ்.ஜோசுவா அவர்களுக்கும் பத்தினியம்மா நிதியம், கிருபா லேணேர்ஸ் சாரதி பயிற்சி நிறுவனம், ரீ.கே.றேடேர்ஸ் பன்னாலை, நாகப்பு கிராமியக்கலைக்கூடம் ஆகியோர்வழங்கியிருந்தனர். மண்டபப்பாவனையை இலவசமாக வழங்கியுதவிய றாஜா கிறீம்ஹவுஸ் உரிமையாளர் தாயகநேயப் பரிதி ஆகியோர்ர்களுக்கு மனமார்ந்த நன்றியினைப் பகர்கின்றேன்.
விழாவினுடைய ஒழுங்குகள் மற்றும் அனைத்து விடயங்களிலும் ஆலோசனை வழங்கி விருந்தினர்கள், விருதுக்குரியவர்களது அங்கீகாரம் என அனைத் திற்கும் ஒத்துழைப்பு வழங்கிய காப்பாளர்கள், மதியுரைஞர் மூதவையினர் கள் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆலோசனை களும் என்றும் மறக்கமுடியாதவை. அத்துடன் நூலாக்கத்தில் தகுந்த ஆலோசனைகளையும் வழிப்படுத்தல்களையும் வழங்கி சிறந்ததொரு ஆக்க மாக வடிவமைப்பதற்கு பெரும்பங்காற்றிய காவேரிக்கலாமன்ற இயக்குநர் வண ரீ.எஸ்.ஜோசுவா அவர்களுக்கும் வாழ்த்துச்செய்திகளை வழங்கியோருக் கும் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.
விழா நிகழ்வுகள்
“யாழ்மண்ணேவணக்கம்” அறிமுக விழாவானது 2024-05-21ஆம் நாள்; யாழ்ப்பாணம் சேர் பொன் இராம நாதன் வீதியில் அமைந்துள்ள றாஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் யாழ்ப்பாணப்பெட்டகத்தின் காப்பாளருமாகிய வாழ்நாட் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் தலைமையில் அமரர் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் நினைவரங்கில் பிற்பகல் 3.30 மணியிலிருந்து மாலை 7.00 மணி வரை யாழ்ப்பாணப்பத்தாதி நூல் வெளியிடு, பாடல் இறுவட்டு வெளியீடு, விருதுவழங்குதல், கலைநிகழ்வுகள் என கோலாகலமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த பிரமுகர்கள் அனைவரும் மண்டபவாயிலின் முன்றலில் வட்டுக் கோட்டை சிந்துபுரம் நாகப்பு கிராமியக் கலைக்கூடக்குழுவினரின் புரவியாட் டத்துடன் வரவேற்கப்பட்டு விழா மண்டபத்திற்குள் அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது. தொடர்ந்து செல்வி நந்திக்கா சத்தியன் மற்றும் செல்வன் கெளிரிகாசன் அக்சயன் ஆகியோர் தமிழ்த் தாய்வாழ்த்திசைத்து விழாவின் தொடர்ச்சிக்கு வழிகோலினர் வரவேற்புரையினை யாழ்ப்பாணப் பெட்டகத்தின் மூதவை உறுப்பினர் திருவாட்டி ரஜனி குமாரசிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். யாழ்ப்பாணப்பெட்டகத்தின் உறுப்பினரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற்துறை விரிவுரையாளருமாகிய கலாநிதி வை.விஜய பாஸ்கரன் அவர்கள் அமரர் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் நினைவரங்கின் அரங்கத் திறப்புரையினை வழங்கினார். தலைமையுரையினைத்தொடர்ந்து வாழ்நாட்பேராசிரியர் செ.கிருஸ்ணராசா அவர்களது செயற்திட்ட அறிமுக உரையும், நூலின் வெளியீட்டுரையினை காவேரிக்கலாமன்ற இயக்குநர் ரீ.எஸ். ஜோசுவா அவர்களும் நிகழ்த்தினர். தொடர்ந்து நூலின் வெனியீட்டினை வாழ்நாட் பேராசிரியர் பொன். பால சுந்தரம்பிள்ளை அவர்கள் வெளியிட்டு வைக்க நூலின் முதற்பிரதியினை தாயகநேயப்பரிதி விஜிதாம்பிகை பாலதாஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வாழ்த்துரை வரிசையிலே யாழ்ப்பாணப் பெட்டகத்தின் காப்பாளர்களில் ஒருவராகிய முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களும் யாழ்ப்பாணப்பெட்டகத்தின் மதியுரைஞர் மூதவை உறுப்பினர் வைத்திய கலாநிதி லயன் கருமத்துதி வை.தியாகராஜா, பணித்திருந்தகை வல்வை ந.அனந்தராஜ், ஆகியோர் வழங்கினர்.
எமது மண்ணின் முதுபெரும் ஆளுமைகளான மூவருக்கு 2024ஆம் ஆண்டிற்கான விருது வழங்கி மாண்பேற்றம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
சிவத்தமிழ் ஞாயிறு
சிவப்பணியாற்றி வருவோரை போற்றும் வகையில் சிவத்தமிழ்ஞாயிறு என்னும் விருது செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வாழ்நாட்பேராசிரியர் பொன்.பாலசுந்தரம் பிள்ளை, முன்னாள் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், வைத்திய கலாநிதி லயன் வை.தியாகராசா ஆகியோர் இணைந்து 2024ஆம் ஆண்டுக்கான சிவத்தமிழ் ஞாயிறு விருதினை வழங்கி வைத்தனர்.
பணிநேயப்பரிதி:-
தாம் செய்து வருகின்ற தொழிலுக்கூடாக ஈட்டுகின்ற வருமானத்தின் ஒரு பகுதியை பொதுச்சேவைகளுக்காகவும் பண்பாட்டுப் பணிகளுக்காகவும் வழங்கி வருகின்ற மனிதநேயம்மிக்க அறக்கொடையாளி யான தியாகி அறக்கொடை ஸ்தாபகர் வா மதேவா தியாகேந்திரா அவர்களுக்கு பணிநேயப்பரிதி விருது வழங்கப்பட்டது. வாழ்நாட்பேராசிரியர் கலாநிதி நா.சண் முகலிங்கன், வாழ்நாட் பேராசிரியர் கலாநிதி செ.கிருஸ்ணராசா, ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
பணித்திருந்தகை:-
அரச அலுவலர்களாக பணியாற்றி தமது சேவைக்காலத்தில் மக்கள் பணியினை செவ்வனே நிறைவேற்றியதுடன் எதுவித ஊழல்களற்றவர்களாகவும் மக்கள் பணி யில் நீதியையும் நேர்மையையும் எப் பொழு திலும் கைவிடாது அப்பழுக்கற்ற கரும மாற்றி கல்விப்பணியினை செவ்வனே மேற்கொண்ட பேராசிரியர் எஸ்.சிவலிங்க ராசா அவர்களுக்கு வழங்கப்பட்டது. சுவிற்சர்லாந்துக்கிளையின் மதியுரைஞர் மூதவை உறுப்பினர் தாயகநேயப்பரிதி விஜிதாம்பிகை பாலதாஸ், பணித்திருந்தகை வல்வை ந.அனந்தராஜ், கலைஞர் என்.எம்.பாலச்சந்திரன், பொன்.பாலசுந்தரம்பிள்ளை அவர்களது துணைவியார், கலாநிதி நா.சண்முகலிங்கன் அவர்களது துணைவியார் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
விருது பெறுவோரை யாழ்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வாழ்நாட்பேராசிரியர் கலாநிதி நா.சண்முகலிங்கன் அவர்கள் வாழ்த்தி மாண்பேற்றம் செய்தார். இந்த வகையிலே சைவசமயம் மற்றும் சமூகம்சார்ந்த அறக்கொடைப் பணிகளுக்காக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் சிவத்தமிழ்ஞாயிறு என்னும் விருது வழங்கியும் அறக்கொடைப் பணிகளுக்காக தியாகி அறக்கொடை நிறுவுனர் திருவாளர் வாமதேவா தியாகேந்திரா அவர்களுக்கு பணிநேயப்பரிதி என்னும் விருது வழங்கியும் தமிழ்ப்பணிகளுக்காக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா அவர்களுக்கு பணித் திருந்தகை என்னும் விருது வழங்கியும் மாண்பேற்றம் செய்யப்பட்டனர். கலாசாரஉத்தியோகத்தர்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திருவாட்டி மேகலைச் செல்வி இந்திரகுமார், பத்மராணி சிவஞானராசா ஆகிய இருவரது கலாசாரச் சேவையினை விதந்து கௌரவிக்கப்பட்டனர்.
கலைநிகழ்வுகள் வரிசையில் சிவலீமன் சிலம்பம் பாடசாலை மாணவர்களது சிலம்பாட்டமும் தொல்புரம் கலாலயம் குழுவினரின் லங்கா தகனம் இசை உரைநடை நாடகம், ஆகிய கலை நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. சிலம்பாட்டத்தில் பங்கேற்ற பாடசாலை மாணவர்களது பரிசில்களுக்கான அனுசரனையினை நோர்வேயில் வசிக்கும் யாழ்ப்பாணப்பெட்டகத்தின் மதியுரை ஞர் மூதவை உறுப்பினர் தாயகநேயப்பரிதி சிவப்பிரகாசம் சக்திதரன் அவர்கள் வழங்கியிருந்தார்.
“யாழ்மண்ணே வணக்கம்” பாடல் இறுவட்டு வெளியீடு
யாழ்ப்பாணப்பெட்டகம்-நிழலுருக்கலைக்கூடம் நம் மண்ணின் கலைஞர்களது அர்ப்பணிப்புடன் உருவாக்கிய ‘யாழ்மண்ணே வணக்கம்” என்னும் பாடல் இறுவட்டு வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. இதன் அறிமுகவுரையினை யாழ்ப்பாணப்பெட்டகத்தின் இயக்குநர் மா.அருள்சந்திரனும் வெளியீட்டுரை யினை தாயகநேயப்பரிதி திருவாட்டி விஜிதாம்பிகை பாலதாஸ் அவர்களும் நிகழ்த்தினர். இறுவட்டின் வெளியீட்டினை பாடலுருவாக்கற் கலைஞர்கள் புடைசூழ தியாகி அறக்கொடை நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரா அவர்களிடம் முதற்பிரதியினை யாழ்ப்பாணப்பெட்டக சுவிற்சர்லாந்துக்கிளை மதியுரைஞர் மூதவை உறுப்பினர் தாயகநேயப்பரிதி திருவாட்டி விஜிதாம்பிகை பாலதாஸ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
| இல | பாடலாக்கம் | பாடல் | பாடியவர் | இசை |
| 01 | திருவாட்டி பாகீரதி கணேசதுரை | யாழ்மண்ணே வணக்கம் | திருவாட்டிஜெயபாரதி கௌசிகன் | சத்யன்,ஷப்தமி கலையகம். |
| 02 | பேராசிரியர் கலாநிதி நா.சண்முகலிங்கன் | மண்ணின் கலைக்கோலங்கள், | பேராசிரியர் கலாநிதி நா.சண்முகலிங்கன் | சத்யன்,ஷப்தமி கலையகம். |
| 03 | பேராசிரியர் கலாநிதி நா.சண்முகலிங்கன் | பசுமை நிறை….. | பேராசிரியர் கலாநிதி நா.சண்முகலிங்கன் | சத்யன்,ஷப்தமி கலையகம். |
| 04 | கவிஞர் இ.த.ஜெயசீலன் | நல்லை நகர் ஆறுமுக நாவலர் | திரு ஆர்.ஜெயகாந்தன் | சத்யன்,ஷப்தமி கலையகம். |
| 05 | திருவாளர் ந.சிறிஸ்கந்தராசா | ஞானிகள் வாழ்ந்த இடம் | செல்வி நந்திக்காசத்யன், செல்வி ஹம்சாஜினி அருள்சந்திரன் | சத்யன்,ஷப்தமி கலையகம். |
| 06 | மாலா மதிவதனன் | எழுவாய் மகனே எழுவாய் | திரு ஆர்.ஜெயகாந்தன் | சத்யன்,ஷப்தமி கலையகம். |
| 07 | தாயகநேயப்பரிதி சு.பா.ஈஸ்வரதாசன் | ஓ நண்பியே… ஓ நண்பனே | திரு ஆர்.ஜெயகாந்தன் | சத்யன்,ஷப்தமி கலையகம். |
| 08 | கலைஞர் என்.எம்.பாலச்சந்திரன் | விழியின்றி கவிபாடி யாழோடு இசைகூட்டி… | கலைஞர் என்.எம்.பாலச்சந்திரன் | சத்யன்,ஷப்தமி கலையகம். |
இறுவட்டில் உள்ள பாடல்களில் ஒருசில பாடல்கள் மண்டபத்தில் பாடப்பட்டதுடன் இறுவட்டில் இணைந்து பயணித்த கலைஞர்கள் வாழ்த்துப்பா வழங்கி கௌரவித்ததுடன் பொதுச்செயலாளரது நன்றியுரையோடு அறிமுக விழா இனிதே இரவு 7.00 மணிக்கு நிறைவேறியது.
மா.அருள்சந்திரன், இயக்குநர், யாழ்ப்பாணப்பெட்டகம்-நிழலுருக்கலைக்கூடம்.











































































