Sunday, February 9

நாவலர் மணி மண்டபம்

0

1847ஆம் ஆண்டு சுப்பையா கார்த்திகேசு என்பவரது “அம்மையின் வளவு” எனப் பெயர் கொண்ட ஐந்து பரப்பும் 12குழியும் கொண்ட காணியினை 2000 ரூபாவினை கிரயமாககப் பெற்று அறுதியாக நாவலர் பெருமானுக்கு விற்றுக் கையளித்தார். மேற் குறித்த இடத்தில் ஒரு மண்டபம் நாவலர் காலத்தில் அமைக்கப்பட்டு பூசை, பஜனை, வழிபாடுகள், திருமுறை ஓதுதல் என்பவற்றுடன் மகேசுர பூசையும் நடத்தப்பட்டு வந்தன.

1968ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத்தழிராட்சி மாநாட்டில் நாவலர் பெருமானுக்கான கௌரவம் வழங்கப்படாத நிலையில் ஈழத்தில் நாவலருக்கு சிலையமைத்து கௌரவிப்பதற்காக 1968-06-17ஆம் நாள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் உருவாக்கப்பட்ட நாவலர் சிலையினை 1969ஆம் ஆண்டு ஆனி மாதம் 24ஆம் திகதி கொழும்பில் ஒரு விழாக்கோலம் பூண்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நல்லூர் கந்தனுக்கு அருகாமையில் அமைந்துள்ள நாவலர் மணி மண்டபத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

1985-07-01ஆம் நாள் நாவலர் பணிகளை முன்னெடுத்து வந்த நாவலர் சபையால் நடத்தப்பட்ட ஆலோசனைக்கூட்டத்தில் நாவலர் சிலையை நாவலர் மணிமண்டபத்திலிருந்து அப்புறப்படுத்தும் அநாகரிகத்தர்மானம் அரங்கேறிப் பின் செயலுருப்பெற்றது. அவ்வாறு அப்புறப்படுத்தப்பட்ட நாவலர் சிலையானது 2009ஆம் ஆண்டு நாவலர் மணிமண்டபத்தில் மீளவும் எழுந்தருளியமை குறிப்பிடத்தக்கது.

இம்மண்டபமானது தற்பொழு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக் களத் தின் மேற்பார்வையிலும் பொறுப்பிலும் செயற்பட்டு வருவதுடன் யோகாசனம், மிருதங்கம், வயலின், பண்ணிசை ஆகிய வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதுடன் நல்லூர்க்கந்தனது பெருந்திருவிழா உற்சவ காலத்தின்பொழுது அறநெறிப் பாடசாலை மாணவர்களது கலை நிகழ்வுகளும் சமய சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டு வருவதுடன் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது வரலாற்றைப்பேணும் இடமாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!