கோவிந்த உடையார் வழித்தோன்றல், பழைய விதானையார் வேலுப்பிள்ளையின் மகன் தம்பாப்பிள்ளையினதும், கொக்குவில் மேற்கு பிரபல கண்டி வர்த்தகர் கண்டிச் சபாபதியின் மகள் தங்கம்மாவினதும் ஏகபுத்திரன் பிரபல விஷேட ஆங்கில புவியியலாசிரியர் த.தங்கராசா அவர்களுக் கும், உரும்பிராய் சிவாத்தும் பரம்பரை அம்பாளாம் ஞானாபரணம் அவர்களுக்கும் கனிஸ்ட புத்திரியாக ஞானகுமாரி என்னும் செல்வ மகள் 1944.12.14 இல் அவதரித்தார்.
கல்விப்பேறு
ஆரம்பம் – யா/சித்தங்கேணி கணேச வித்தியாலயம்
இடைநிலை கண்டி/நுவரெலியா கொன்வென்ற் பாடசாலை
கஃஹற்றன் கைலன்ட்ஸ் கல்லூரி
யா/உடுவில் மகளிர் கல்லூரி
உயர்தரம் – யா/வேம்படி மகளிர் கல்லூரி
1962 : விஞ்ஞானப் பிரிவிலும் சித்தி 1965 : கலைப்பிரிவிலும் சித்தி (இரண்டிலும் பல்கலைக்கழக தகுதி பெற்றார்) 1966 இல் யாழ் இராமநாதன் நுண்கலைப்பீட மாணவியாக இணைந்து 1969 ஆம் ஆண்டு; சங்கீதரத்தினம் பட்டம் பெற்று முதல் மாணவியாகத் தங்கப்பதக்கம் சூடி அங்கு விரிவுரையாளரானார். பின்னர் சங்கீத ஆசிரிய 03.07.1972 மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயம் 01.02.1974 மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்பித்து 22.03.1974 இல் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சிக்கான அனுமதி பெற்று ஆசிரியப் பயிற்சியினை முடித்து 01.01.1976 யாஃபளை மகா வித்தியாலயம்
01.01.1977 யாஃ மானிப்பாய் சென்ற் ஆன்ற்ஸ் R.C.R.M.S
06.02.1979 யா/இந்து மகளிர் கல்லூரி
19.02.1992 யாஃ/மருதனார் மடம் இராமநாதன் கல்லூரி
01.01.1993 ஆசிரிய ஆலோசகர் (வலிகாமம் வலயம்)
01.12.1997 யா/உடுவில் முருகமூர்த்தி மகா வித்தியாலயம்
29.05.2000 யாஃ மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் கற்பித்து 14.12.2002 இல் ஓய்வு பெற்றார்.
மகத்துவம்
சமயம், தமிழ், கிராமியம், நடனம், நாட்டிய நாடகம், இசை நாடகம், கதாப்பிரசங்கம், புராணபடனம், தமிழ் மொழித்தினம், பண்ணிசை என சகல போட்டிகளுக்கும் மாணவர்களைத் தயார் செய்து மாகாண, தேசிய மட்டம் வரை கொண்டு சென்று தான் சார்ந்த அத்தனை நிகழ்ச்சிகளிலும் முத்திரை பதித்து சிறப்பு இடங்களைத் தனதாக்கிக் கொண்டவர்.
இராமநாதன் கல்லூரியிலே நாட்டிய நாடக மேம்பாட்டினிலும், முதன்மைபெறு நிலையிலும் ஞானகுமாரி அம்மா தன்னை வியாபித்து வெற்றிக்கொடி நாட்டியிருந்தார். அத்துடன் கர்நாடக சங்கீத தனிப்பாடல், குழுப்பாடல், பாவோதல், தனிநடனம், குழுநடனம் ஆகிய போட்டிகளில் கனகச்சிதமாகப் பங்காற்றி அனைத்திலும் சாதனை மகுடம் சூட்டி மாணவர்களைப் பேறாக்கிப் பெருமையளித்தார். மேலும், மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருந்து பண்பாட்டுப் போஷகராகக் கடமையாற்றியுள்ளமை சமூகமட்டத்தில் வரலாற்றுப் பதிவாகத் திகழ்கின்றது.
க.பொ.த.சாதாரண தர மாணவர்களின் சங்கீத அடைவுமட்டம் நூறாகும் படியும், க.பொ.த. உயர்தர மாணவர்களை பல்கலைக் கழக அனுமதி பெறும் வகையிலும் சங்கீத பெறுபேற்றினை தான் சார்ந்த பாடசாலைகளில் உரியவாறு மேம்படுத்திய ஆசிரியப் பெருந்தகையாவார். யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும், இராமநாதன் கல்லூரியிலும் இவரது சேவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்;படுமளவிற்கு அயராது அர்ப்பணித்துச் சேவையாற்றியுள்ளார்.
அஞ்சாத பஞ்சரத்தின வாழ்வு
தந்தையாரான தங்கராசா அவர்கள் ஒரு முதுபெருங்கலைஞராக விளங்கியதன் காரணமாக ஞானகுமாரி அம்மா அவர்களும் கலைமகளின் பேற்றுக்குள் திளைத்தார். தந்தையார் ஒரு சிறந்த ஹார்மோனிய, நாடக, வாய்ப்பாட்டுக்கலைஞராவார். மற்றும் தாயாரும் ஒரு வேத மந்திர கீத வாத்திய குடும்ப சூழலில் வாழ்ந்தமையால் தாயாரின் கருவிலிருந்தே “ஞானா” ஞானமோடு கானகுமாரியாக-ஞானகுமாரியாக வளர்க்கப்பட்டார். பாடசாலைக்கல்வி முடிந்த கையோடு, இராமநாதன் அக்கடமியில் நான்கு வருட “சங்கீதரத்தனம்” இசைத்துறையில் கற்கை நெறியினை மேற்கொண்டார். முதல் மாணவியாகப் பட்டம் பெற்றார். பஞ்சரத்தினப் பேறு பெற்றார்.
குருமார்கள்
இணுவைêர் நாதஸ்வரமேதை உருத்திராபதி, இசைமாமேதை என். சண்முகரத்தினம், சங்கீத வித்துவான் ஐயாக்கண்ணு தேசிகர், சங்கீத வித்துவான் எம்.எ. கல்யாணகிருஷ்ணபாகவதர், மகாராஜபுரம் சந்தானம், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை மற்றும், பொன் முத்துக்குமாரு பேராசான், பொன்.தெய்வேந்திரன் பேராசான் ஆகியோரிடம் இசையினை முறையாகப் பயின்றார்.
அரங்கேற்றம்
1969.07.28 ஆம் நாள் உடுவில் கிராமசபைத் திறந்தவெளி அரங்கில் இராமநாதன் அக்கடமியின் தலைவர் எஸ்.ஆர். கனகநாயகம் அவர்கள் தலைவராக கொலுவிருந்து பேராசான் சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, பேராசான் ஜி. என். பாலசுப்பிரமணியம், பேராசான் டி.கே.ரங்காச் சாரியார், வித்துவான் உருத்திராபதி, பேராசான் சண்முகரத்தினம், பேராசான் ஐயாக்கண்ணு தேசிகர், பேராசான் கல்யாணகிருஷ்ணபாகவதர் ஆகிய பேராசான்கள் பாராட்ட அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. அரங்கேற்றத்தின் போது இசை ஞான திலகம் உ. இராதாகிரு~;ணன் அவர்களின் வயலின் அனுசரணையும், மிருதங்கப் பேராசான், ஏ.எஸ்.இராமநாதன் அவர்களின் மிருதங்க லயவாசனையும், தவில் வித்துவான் கணேஷ் அவர்களின் கெஞ்சிரா கமக வாசிப்பும் பக்கவாத்தியங்களாகப் பேறளித்தன.
மேற்படி குருமார்கள் ஞானகுமாரி அம்மாவுக்கு வாய்த்த பேறதனால், கர்நாடக சங்கீதத்தின் உயிராகவும், உயர்வாகவும், உணர்வாகவும் மதித்துப் போற்றப்படும், கனராக பஞ்சரத்தினங் களான நாட்டை, கௌளை, ஆரபி, ஸ்ரீராகம், வராளி ராக பஞ்சரத்தினங்களை மிகவும் பக்குவமாக உரியவாறு மனனஞ்செய்து சங்கீத உலகில் பிரபல்யமாக்கினார். அதனால் பிரபல்யமானார். பஞ்சரத்தினக் கலாநிதிக்குச் சொந்தக்காரர் இவராவார்.
அரங்க நிகழ்வுகள்
வட இலங்கைச்சங்கீதசபை, யாழ்பல்கலைக்கழக நுண்கலைப்பீடம், நல்லூர் இளங்கலைஞர் மன்றம், அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம், அளவை இசைக்கலை மன்றம், அகில இலங்கைக் கம்பன் கழகம், மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம், மருதடி விநாயகர் ஆலயம், உடுவில் சிவஞானப் பிள்ளையார் ஆலயம், உடுவில் முருகமூர்த்தி ஆலயம், திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம், திருக்கேதீஸ்வரம் பெருங்கோவில், நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயம், தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயம், யாழ் ரஸிகா ரஞ்சன சபா, மண்டைதீவு தமிழிசைச் சங்கம், மன்னார் தமிழ்ச் சங்கம், அளவெட்டி, யாழ் பரமேஸ்வராக் கல்லூரி, கன்னாதிட்டி ஸ்ரீகாளி அம்பாள் ஆலயம், அளவோலை விநாயகர் ஆலயம், வட்டு சித்தங்கேணி கலாநிலையம், இணுவில் கந்தசுவாமி கோவில், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆலயம், சங்குவேலிப்பிள்ளையார் ஆலயம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆகியவற்றில் இசைக்கச்சேரி நிகழ்த்தி இசைக்குப் பேறளித்துள்ளார். ஞானமுத்திரையும் பதித்தார்.
முதல் பெண்மணி
ஐந்து பஞ்சரத்தினங்களையும் இலங்கையில் தலைகரணமாக மனனமுடன் பாடக்கூடிய முதல் பெண்மணி ஞானகுமாரி ஒருவரேயாவார். அவருக்கு அடுத்த படியாக ஒரு சிஷ்யையை உருவாக்கியுள்ளார். அம்மா தன்னுடன் சேர்த்து பாடியும் வந்திருக்கிறார் என்றால் அது யாழ் பல்கலைக்கழக மொழியியல் விரிவுரையாளர், அளவெட்டியைச் சேர்ந்த செல்வி காயத்ரி என்பவராவார்.
மருதநிலமும், மாருதப்புரவீக மார்க்கமும் நிறைந்த புராதன பூமி அளவெட்டியாகும் அளவோலை விநாயகரின் பாதார விந்தங்களை சதா வணங்கும் திரு.திருமதி வைரமுத்து தம்பதிகளின் மகனான திரு சிவநேசன் அவர்களை 1975.08.22ஆம் திகதி கரம்பிடித்து உடுவிலின் வரம் கொண்டவர் ஞானகுமாரி அம்மா. இசைப்பேறுடன் வானுலகில் அரசாள்கிறார்.
கானகுமாரி என்று சிறப்புப் பெயருடன் விளங்கிய ஞானகுமாரி ஈழத்தின் இசைத்துறை யினருக்கு ஓர் மூத்த செந்நெறிப்பாடகராக விளங்கியதுமல்லாமல் இந்தியாவிலே இசையைக் கற்று அங்கு ஒரு மேரைதயாகத் திகழ்ந்து கானகுமாரி, சங்கீத ரத்தினம், கலா வித்தகர் போன்ற பட்டங்களைப் பெற்று 32ஆண்டுகள் இசை ஆசிரியராகத் திகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல எமது மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளமை எமக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம் என்றே கூற வேண்டும். இசைத்துறைப்பரீட்சகராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் விளங்கியதுடன் எல்லோரது அன்புக்கும் ஆதரவுக்கும் ஆளாகி அவர்களின் மனதில் ஓர் உன்னத இடத்தைப் பிடித்துள்ளார்.
மருதநிலமும், மாருதப்புரவீக மார்க்கமும் நிறைந்த புராதன பூமி அளவெட்டியாகும் அளவோலை விநாயகரின் பாதார விந்தங்களை சதா வணங்கும் திரு.திருமதி வைரமுத்து தம்பதிகளின் மகனான திரு சிவநேசன் அவர்களை 1975.08.22ஆம் திகதி கரம்பிடித்து உடுவிலின் வரம் கொண்டவர் ஞானகுமாரி அம்மா. இசைப்பேறுடன் வானுலகில் அரசாள்கிறார்.
கானகுமாரி என்று சிறப்புப் பெயருடன் விளங்கிய ஞானகுமாரி ஈழத்தின் இசைத்துறை யினருக்கு ஓர் மூத்த செந்நெறிப்பாடகராக விளங்கியதுமல்லாமல் இந்தியாவிலே இசையைக் கற்று அங்கு ஒரு மேரைதயாகத் திகழ்ந்து கானகுமாரி, சங்கீத ரத்தினம், கலா வித்தகர் போன்ற பட்டங்களைப் பெற்று 32ஆண்டுகள் இசை ஆசிரியராகத் திகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல எமது மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளமை எமக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம் என்றே கூற வேண்டும். இசைத்துறைப் பரீட்சகராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் விளங்கியதுடன் எல்லோரது அன்புக்கும் ஆதரவுக்கும் ஆளாகி அவர்களின் மனதில் ஓர் உன்னத இடத்தைப் பிடித்துள்ளார்.
வழங்கப்பட்ட கௌரவங்கள்
“ஈழத்துப்பட்டம்மாள்” – 1969இல் இசைப்பேராசான் ரங்காச்சாரியாரால் வழங்கப்பட்டது.
“சங்கீத ரத்தினம்” – 1969 இல் இராமநாதன் நுண்கலைப்பீடத்தினால் வழங்கப்பட்டது.
“சங்கீத கலாவித்தகர்” – 1991 இல் வட இலங்கைச் சங்கீத சபையால் வழங்கப்பட்டது.
“கலைஞானகேசரி” – 2001 இல் இந்து சமய கலாசார அமைச்சினால் வழங்கப்பட்டது.
“கலாபூஷணம்” -இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட கலை, கலாசாரப் பேரவையின் ஆயுட்கால உறுப்பினராக இணைந்து கொண்ட அம்மா அவர்கள் அதன் செயற்குழு உறுப்பினராக இருந்து பல நல்ல செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு துணை நின்றுள்ளார். இசைத்துறையிலும் சமூக நலனிலும் அக்கறை கொண்டவராக, கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டினை நிலை நிறுத்தியவராக வாழ்ந்த அம்மா அவர்கள் 2018-05-08 ஆம் நாள் கலையுலக வாழ்வை நீத்து நிலையுலகம் சென்றார். மேலதிகமான தேடல்களுக்கு இதனை அழுத்தவும். https://studio.youtube.com/video/xZ_3-GS74OE/edit
தாய்தந்தையருடன் ஞானகுமாரி
குடும்பத்தினருடன் முன்னாள்மாண்புமிகு ஜனாதிபதிஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களிடம்
தங்கப்பதக்கம் பெற்றமை கணவருடன்